2022
ரூத்தும் நகோமியும்
ஜூன் 2022


“ரூத்தும் நகோமியும்,” மாதாந்தர Friend செய்திகள், ஜூன் 2022

“ரூத்தும் நகோமியும்”

மாதாந்தர Friend செய்தி, ஜூன் 2022

ரூத்தும் நகோமியும்

நகோமி குடும்பத்தில் ரூத் திருமணம் செய்து கொள்கிறாள்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

பஞ்சத்தினிமித்தம் நகோமியும் அவளுடைய குடும்பமும் ஒரு புதிய தேசத்திற்குள் வந்தார்கள். ரூத் என்ற பெயருடைய ஒரு இளம் பெண்ணை அவர்கள் சந்திக்கிறார்கள். நகோமியின் மகனை ரூத் திருமணம் செய்து கொள்கிறாள்.

மரித்துக்கொண்டிருக்கும் கணவனுடன் ரூத்

பின்னர் நகோமியின் கணவன் மரித்தான். ரூத் மிகவும் துக்கப்பட்டாள்.

நகோமி

நகோமியும் மிகவும் துக்கப்பட்டாள். அவளைக் கவனித்துக் கொள்ள குடும்பம் எதுவும் இல்லை. தான் வந்த தேசத்திற்குத் திரும்பிச் செல்ல அவள் முடிவு செய்தாள்.

நகோமியும் ரூத்தும்

ரூத்தை அவளுடைய குடும்பத்தினிடத்திற்குத் திரும்பிப் போகுமாறு நகோமி சொன்னாள். ஆனால் ரூத் நகோமியை நேசித்தாள். நகோமியுடன் வந்து அவளைக் கவனித்துக்கொள்வதாக அவள் உறுதியளித்தாள்.

ரூத் தானியம் பொறுக்கிக் கொண்டிருத்தல்

ரூத்தும் நகோமியும் ஏழைகளாயிருந்தனர். ஆகவே, அவர்களுடைய உணவுக்காக ரூத் கடினமாக உழைத்தாள்.

போவாஸூம் ரூத்தும் வயல்வெளியில்

ஒரு நாள் போவாஸ் என்ற பெயருள்ள ஒருவன் தனது வயல்கள் ஒன்றில் எஞ்சிய தானியங்களை ரூத் சேகரித்து வருவதைக் கண்டான்.

போவாஸ் வேலைக்காரனுடன்

போவாஸ் இரக்கமுள்ளவனாயிருந்தான். மிகைப்படியான தானியங்களை ரூத்துக்காக விட்டுச் செல்லும்படி அவன் வேலைக்காரர்களிடம் சொன்னான்.

ரூத், போவாஸ் மற்றும் நகோமி ஒரு குழந்தையுடன்

பின்னர், ரூத்தும் போவாஸும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனைக் கவனித்துக்கொள்ள நகோமி உதவினாள்.

குடும்பம் உணவு பரிமாறுதல்

மற்றவர்களைக் கவனித்துக்கொள்ள என்னால் உதவமுடியும். தேவையிலிருப்போரிடம் நான் இரக்கமாயிருக்க முடியும்.

வண்ணமிடும் பக்கம்

மற்றவர்களை என்னால் கவனித்துக் கொள்ள முடியும்

தாத்தாவுடன் பிள்ளைகள்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

யாருக்கு நீங்கள் உதவ முடியும்?