“ரூத்தும் நகோமியும்,” மாதாந்தர Friend செய்திகள், ஜூன் 2022
“ரூத்தும் நகோமியும்”
மாதாந்தர Friend செய்தி, ஜூன் 2022
ரூத்தும் நகோமியும்
பஞ்சத்தினிமித்தம் நகோமியும் அவளுடைய குடும்பமும் ஒரு புதிய தேசத்திற்குள் வந்தார்கள். ரூத் என்ற பெயருடைய ஒரு இளம் பெண்ணை அவர்கள் சந்திக்கிறார்கள். நகோமியின் மகனை ரூத் திருமணம் செய்து கொள்கிறாள்.
பின்னர் நகோமியின் கணவன் மரித்தான். ரூத் மிகவும் துக்கப்பட்டாள்.
நகோமியும் மிகவும் துக்கப்பட்டாள். அவளைக் கவனித்துக் கொள்ள குடும்பம் எதுவும் இல்லை. தான் வந்த தேசத்திற்குத் திரும்பிச் செல்ல அவள் முடிவு செய்தாள்.
ரூத்தை அவளுடைய குடும்பத்தினிடத்திற்குத் திரும்பிப் போகுமாறு நகோமி சொன்னாள். ஆனால் ரூத் நகோமியை நேசித்தாள். நகோமியுடன் வந்து அவளைக் கவனித்துக்கொள்வதாக அவள் உறுதியளித்தாள்.
ரூத்தும் நகோமியும் ஏழைகளாயிருந்தனர். ஆகவே, அவர்களுடைய உணவுக்காக ரூத் கடினமாக உழைத்தாள்.
ஒரு நாள் போவாஸ் என்ற பெயருள்ள ஒருவன் தனது வயல்கள் ஒன்றில் எஞ்சிய தானியங்களை ரூத் சேகரித்து வருவதைக் கண்டான்.
போவாஸ் இரக்கமுள்ளவனாயிருந்தான். மிகைப்படியான தானியங்களை ரூத்துக்காக விட்டுச் செல்லும்படி அவன் வேலைக்காரர்களிடம் சொன்னான்.
பின்னர், ரூத்தும் போவாஸும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனைக் கவனித்துக்கொள்ள நகோமி உதவினாள்.
மற்றவர்களைக் கவனித்துக்கொள்ள என்னால் உதவமுடியும். தேவையிலிருப்போரிடம் நான் இரக்கமாயிருக்க முடியும்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, June 2022ன் மொழிபெயர்ப்பு Tamil. 18315 418