நண்பன்
தேவன் ஆல்மாவையும் அமுலேக்கையும் விடுவித்தல்
ஜூன் 2024


“தேவன் ஆல்மாவையும் அமுலேக்கையும் விடுவித்தல்,” நண்பன், ஜூன் 2024, 26–27.

மாதாந்தர நண்பன் செய்தி, ஜூன் 2024

தேவன் ஆல்மாவையும் அமுலேக்கையும் விடுவித்தல்

படம்
ஆல்மாவும் அமுலேக்கும் பிரசங்கித்தல்.

விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி

ஆல்மாவும் அமுலேக்கும் அம்மோனிகா என்ற பட்டணத்திற்கு சென்றனர். இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் மக்களுக்குப் போதித்தார்கள். ஆனால் அவர்கள் கற்பித்ததைக் கண்டு மக்கள் கோபமடைந்தனர். அவர்கள் ஆல்மாவையும் அமுலேக்கையும் சிறையில் அடைத்தனர்.

படம்
சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும் கட்டப்பட்டனர்

மக்கள் அல்மாவையும் அமுலேக்கையும் காயப்படுத்தினர். அவர்கள் பல நாட்கள் சிறையில் இருந்தார்கள்.

படம்
ஆல்மா மற்றும் அமுலேக்கைச் சுற்றி இடிந்து விழும் சிறைச் சுவர்கள்

ஆல்மாவும் அமுலேக்கும் ஜெபம் செய்து பலம் கேட்டனர். அவர்களுக்கு தேவனில் விசுவாசம் இருந்தது. அவர்களுடைய மணிக்கட்டில் இருந்த கயிற்றை அறுக்கும் வல்லமையை அவர்களுக்குக் கொடுத்தார்.

படம்
ஆல்மாவும் அமுலேக்கும் கயிறு இல்லாமல் இடிபாடுகளுக்குள் நிற்றல்

பின்பு பூமி குலுங்கியது. சிறைச் சுவர்கள் இடிந்து விழுந்தன! தேவன் ஆல்மாவையும் அமுலேக்கையும் விடுவிக்க உதவினார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்க அம்மோனிகாவை விட்டு அவர்கள் வெளியேறினர்.

வண்ணமிடும் பக்கம்

அவர் என்னை நேசிக்கிறார் என நான் அறிவேன்!

படம்
இயற்கை, வேதம் மற்றும் ஆலயத்தால் சூழப்பட்ட இரண்டு குழந்தைகள்

பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்

இயேசு கிறிஸ்துவின் அன்பை என்ன விஷயங்கள் உங்களுக்கு நினைவூட்டுகின்றன?

அச்சிடவும்