2021
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அவரில் விசுவாசம் மலைகளை நகர்த்தும்
மே 2021


லியஹோனா மாதாந்தர செய்தி, மே 2021

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அவரில் விசுவாசம் மலைகளை நகர்த்தும்

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், இந்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற மிகப்பெரிய வல்லமை. நம்புகிறவர்களுக்கு அனைத்தும் சாத்தியம்.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில் உங்களோடு பேசுவதற்கு கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 1 பாவநிவாரண பலியும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் நம் ஒவ்வொருவரின் வாழக்கையையும் என்றென்றும் மாற்றின. அவரை நாம் நேசிக்கிறோம், அவரையும் நமது பரலோக பிதாவையும் நாங்கள் நன்றியுடன் தொழுகிறோம்.

கடந்த ஆறு மாதங்களில், ஒரு உலகளாவிய தொற்று நோயால் நாம் தொடர்ந்து பிடிக்கப்பட்டிருக்கிறோம், நோய், இழப்பு மற்றும் தனிமையின் முன்பாக, உங்களுடைய மீட்பின் தன்மையையும் ஆவிக்குரிய வலுமையையும்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். இதன் அனைத்தின் மூலமாக, உங்கள் மேலுள்ள கர்த்தருடைய தவறாத அன்பை நீங்கள் உணருவீர்கள் என நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன். ஒரு வலுவான சீஷத்துவத்துடன் உங்களுடைய சோதனைகளுக்கு நீங்கள் பதிலளித்திருந்தால், இந்த கடந்த ஆண்டு வீணாய் இல்லாதிருந்திருக்கும்.

இந்தக் காலையில், பூமியிலுள்ள ஜனத்தொகை அதிகரித்த கண்டங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து வந்த சபைத் தலைவர்கள் உரையாற்றக் கேட்டோம். உண்மையில், சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்கள்ஒவ்வொரு இனத்திற்கும், பாஷைக்காரர்களுக்கும், ஜனங்களுக்கும் உரியது. இயேசு கிறிஸ்துவின் சபைஉலகளாவிய சபை. இயேசு கிறிஸ்து நமது தலைவர்.

நன்றி பாராட்டும் விதமாக, அவருடைய சத்தியத்தின் முன்னேற்றத்தை நிதானமாக்க ஒரு தொற்றுநோயால் கூட முடியவில்லை. இந்த குழப்பமான, சர்ச்சைக்குரிய ,சோர்வுற்ற உலகத்தில், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நிச்சயமாக தேவையானது.

இயேசு கிறிஸ்துவின் குணமாக்குதலின், மீட்பின் செய்தியை கேட்கவும் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புக்கு தேவனின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தகுதியானவர்கள். இப்போதைக்கும் என்றென்றைக்கும் நமது சந்தோஷத்திற்கு வேறு எந்த செய்தியும் மிக முக்கியமானதல்ல.2 வேறு எந்த செய்தியும் நம்பிக்கையால் அதிகம் நிரப்பப்படவில்லை. நமது சமூகத்திலுள்ள பிணக்கை வேறு எந்த செய்தியும் நீக்குவதில்லை.

இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் எல்லா நம்பிக்கையின் அஸ்திபாரமாகவும், தெய்வீக வல்லமையின் வழியாகவும் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலின்படி, “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம், ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”3

வாழ்க்கையில் நல்லவை ஒவ்வொன்றும், நித்திய முக்கியத்துவத்தின் ஒவ்வொரு சாத்தியமான ஆசீர்வாதமும் விசுவாசத்துடன் ஆரம்பமாகிறது. தேவன் நம் வாழ்வில் வெற்றிபெற அனுமதிப்பது, நமக்கு வழிகாட்ட அவர் விருப்பமுள்ளவராயிருக்கிறார் என்ற விசுவாசத்துடன் ஆரம்பமாகிறது. நம்மை சுத்தப்படுத்தவும், குணமாக்கவும், பெலப்படுத்தவும் இயேசு கிறிஸ்துவுக்கு வல்லமையிருக்கிறது என்ற விசுவாசத்துடன் உண்மையான மனந்திரும்புதல் ஆரம்பமாகிறது.4

“தேவ வல்லமையை மறுதலிக்கவேண்டாம், ஏனெனில், மனுபுத்திரரின் விசுவாசத்திறகுத்தக்கதாக அவர் வல்லமையால் கிரியை செய்கிறார்”5 என தீர்க்கதரிசி மரோனி அறிவித்தான் நமது வாழ்க்கையில் தேவனின் வல்லமை திறக்கிற இது நமது விசுவாசம்.

இருப்பினும் விசுவாசத்தைப் பயன்படுத்துதல் உணர்ச்சியூட்டுவதாகத் தோன்றலாம். நமக்கு மிகவும் தேவைப்படும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு போதுமான விசுவாசத்தை நம்மால் திரட்ட முடியுமா என்று சில சமயங்களில் நாம் ஆச்சரியப்படலாம். எப்படியாயினும், மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி ஆல்மாவின் வார்த்தைகள் மூலம், அந்த பயங்களைக் கரத்தர் அமைதிப்படுத்தினார்.

படம்
கடுகு விதை தானியம்

வார்த்தைகளை வைத்து சோதனை செய்யவும் “ஆம், ஒருவேளை விசுவாசிக்க வாஞ்சிப்பதைக் காட்டிலும் உங்களால் ஏதும் செய்யக்கூடாமற் போனால் கொஞ்ச விசுவாசத்தைப் பிரயோகிக்கவும், ஆல்மா நம்மைக் கேட்கிறான்.6 கொஞ்ச விசுவாசம் என்ற சொற்றொடர், “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்,” [உங்களால்] கூடாத காரியம் ஒன்றுமிராது .”7 என்ற கர்த்தருடைய வேதாகம வாக்களிப்பு எனக்கு நினைவுக்கு வருகிறது.

படம்
கடுகு விதைகளுக்கு நடுவே பறவை

நமது பூலோக பெலவீனத்தை கர்த்தர் புரிந்திருக்கிறார். சிலநேரங்களில் நாம் அனைவரும் தடுமாறுகிறோம். ஆனால், நமது பெரும் திறன்களையும் அவர் அறிகிறார். கடுகு விதை சிறியதாகத் தொடங்குகிறது, ஆனால் அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டும் அளவுக்கு பெரிய மரமாக அது வளர்கிறது. கடுகு விதை ஒரு சிறிய ஆனால் வளர்ந்துவரும் விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது.8

அவருடைய பரிபூரண வல்லமையை அணுகுவதற்கு நம்மிடம் பரிபூரண விசுவாசம் கர்த்தருக்குத் தேவையில்லை. ஆனால் நம்புவதற்கு அவர் நம்மைக் கேட்கிறார்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க இன்று ஆரம்பியுங்கள் என்பதே இந்த ஈஸ்டர் காலையில் உங்களுக்கு எனது அழைப்பு. உங்கள் தனிப்பட்ட சவால்கள், எவரெஸ்ட் மலையைப் போல மிகப் பெரிதாக இருந்தாலும்கூட, இயேசு கிறிஸ்து மீதுள்ள உங்களுடைய விசுவாசத்தின் மூலம் உங்களுடைய வாழ்க்கையிலுள்ள மலைகளை நகர்த்த உங்களுடைய திறன் அதிகரிக்கும்.9

தனிமை, சந்தேகம், நோய், அல்லது பிற தனிப்பட்ட பிரச்சினைகள் உங்கள் மலைகளாய் இருக்கக்கூடும். உங்கள் மலைகள் மாறலாம், இருப்பினும், உங்கள் ஒவ்வொருவரின் சவால்களும் உங்கள் விசுவாசத்தை அதிகரிப்பதுவே. அதற்கு முயற்சிக்க வேண்டும். சோம்பேறியாக கற்பவர்களும் தளர்வான சீஷர்களும் விசுவாசத்தின் ஒரு துகளைக் கூட சேகரிக்க எப்போதும் போராடுவார்கள்.

எதையும் சிறப்பாகச் செய்ய முயற்சி தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள சீஷராக மாறுவதற்கு இது விதிவிலக்கல்ல. உங்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் அவரில் நம்பிக்கை வைப்பதற்கும் முயற்சி தேவைப்படுகிறது. அந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் மேம்படுத்த உங்களுக்குதவ, ஐந்து ஆலோசனைகளை நான் வழங்குகிறேன்.

முதலாவதாக, படியுங்கள். ஈடுபாடுடன் கற்பவராக மாறுங்கள். கிறிஸ்துவின் பணியையும் ஊழியத்தையும் சிறப்பாகப் புரிந்துகொள்ள வேதங்களில் உங்களை மூழ்கடியுங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு அதன் வல்லமையைப் புரிந்துகொள்ளும்படியாக, கிறிஸ்துவின் கோட்பாட்டை அறிந்துகொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி உங்களுக்கு பொருந்துகிறதென்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் துயரத்தை, உங்கள் தவறுகளை உங்கள் பெலவீனத்தை உங்கள் பாவங்களை அவர் தம்மீது எடுத்துக்கொண்டார். ஈடு செய்யும் கிரயத்தை அவர் செலுத்தி, நீங்கள் எதிர்கொள்ளுகிற ஒவ்வொரு மலையையும் நகர்த்த வல்லமையை உங்களுக்கு வழங்குகிறார். உங்கள் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அவரைப் பின்பற்ற விருப்பத்துடன் அந்த வல்லமையை நீங்கள் பெறுகிறீர்கள்.

உங்கள் மலைகளை நகர்த்துதலுக்கு ஒரு அற்புதம் தேவைப்படலாம். அற்புதங்களைப்பற்றி கற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் மீதுள்ள உங்களுடைய விசுவாசத்திற்கு ஏற்றார்போல அற்புதங்கள வருகிறது. அந்த விசுவாசத்தின் மையமானது அவருடைய சித்தத்தையும், நீங்கள் விரும்புகிற அற்புதமான உதவியை அவர் எப்படி, எப்போது ஆசீர்வதிப்பார் என்ற கால அட்டவணையையும் நம்புவதாகும். உங்களுடைய அவநம்பிக்கை மட்டுமே உங்கள் வாழ்க்கையில் மலைகளை நகர்த்த அற்புதங்களுடன் உங்களை ஆசீர்வதிப்பதிலிருந்து தேவனைத் தடுக்கும்.10

இரட்சகரைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்ளுகிறீர்களோ, அவ்வளவாய், அவருடைய கருணை, அவருடைய எல்லையற்ற அன்பு மற்றும் அவருடைய பெலப்படுத்துதல், குணப்படுத்துதல் மற்றும் மீட்பதற்கான வல்லமையை நம்புவது எளிதாக இருக்கும். விசுவாசத்துடன் நீங்கள் எதிர்கொள்ளும்போது அல்லது ஒரு மலைமீது ஏறும்போதைவிட இரட்சகர் ஒருபோதும் உங்களுக்கு நெருக்கமாக இருப்பதில்லை.

இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க தேர்ந்தெடுங்கள். பிதாவாகிய தேவன், அவருடைய நேச குமாரன் அல்லது, மறுஸ்தாபிதத்தின் நம்பகத்தன்மை அல்லது ஒரு தீர்க்கதரிசியாக ஜோசப் ஸ்மித்தின் தெய்வீக அழைப்பின் உண்மைத்தன்மையைப்பற்றி உங்களுக்கு சந்தேகங்களிருந்தால், நம்புவதற்கு தேர்ந்தெடுத்து 11 விசுவாசமுள்ளவர்களாய் நிலைத்திருங்கள். கர்த்தரிடத்திலும், உண்மையுள்ள பிற ஆதாரங்களிடத்திலும் உங்கள் கேள்விகளை எடுத்துச் செல்லுங்கள். ஒரு தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் ஒரு குறைபாட்டை, அல்லது வேதங்களில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையைவிட, நம்புவதற்குள்ள விருப்பத்துடன் படியுங்கள். பிற சந்தேகப்படுபவர்களுடன் அவைகளை ஒத்திகை பார்ப்பதில் உங்கள் சந்தேகங்களை அதிகரித்தலை நிறுத்துங்கள். ஆவிக்குரிய கண்டுபிடிப்பின் உங்கள் பயணத்தில் வழிநடத்த கர்த்தரை அனுமதியுங்கள்.

மூன்றாவதாக, விசுவாசத்தில் செயல்படுங்கள். உங்களிடம் அதிக விசுவாசமிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைப்பற்றி சிந்தியுங்கள். அதைப்பற்றி எழுதுங்கள். பின்னர், அதிக விசுவாசம் தேவைப்படுகிற ஒன்றைச் செய்வதால் அதிக விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நான்காவதாக, தகுதியுள்ளவராக பரிசுத்த நியமங்களில் பங்கெடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு, தேவனுடைய வல்லமையை நியமங்கள் திறக்கின்றன.12

ஐந்தாவதாக, உதவிக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் பரலோக பிதாவைக் கேளுங்கள்.

விசுவாசத்திற்கு வேலை தேவை. வெளிப்படுத்தலைப் பெற வேலை தேவை. “ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்: தேடுகிறவன் கண்டடைகிறான்: தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” 13. உங்கள் விசுவாசம் வளர எது உங்களுக்குதவும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். கேளுங்கள், பின்னர் மீண்டும் கேளுங்கள்.

விசுவாசம் பெலவீனர்களுக்கே என ஒரு அவிசுவாசி சொல்லக்கூடும். ஆனால், விசுவாசத்தின் வல்லமையை இந்த கூற்று கவனிப்பதில்லை. இரட்சகரின் அப்போஸ்தலர்கள் அவரை சந்தேகித்திருந்தால், அவர்கள் வாழ்க்கையின் பேராபத்தில், அவருடைய மரணத்திற்குப் பின்னர் அவருடைய கோட்பாட்டை அவர்கள் தொடர்ந்து போதித்திருப்பார்களா?14 கர்த்தருடைய மறுஸ்தாபித சபை உண்மையானதென்ற ஒரு நிச்சயமான சாட்சி, ஜோசப் ஸ்மித்துக்கும் ஹைரம் ஸ்மித்துக்கும் இல்லாதிருந்தால் அதைக் காத்த அவர்கள் இரத்த சாட்சியின் மரணத்தில் பாடுபட்டிருப்பார்களா? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மறுஸ்தாபிக்கப்பட்டதென்று அவர்களுக்கு விசுவாசமில்லாதிருந்தால், சுமார் 2000 பரிசுத்தவான்கள் முன்னோடி பாதையில் மரித்திருப்பார்களா?15 உண்மையில், விசுவாசம் என்பது சாத்தியமற்றதை நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இல்லாததை செயல்படுத்துகிற வல்லமை.

ஏற்கனவே உங்களுக்கிருக்கிற விசுவாசத்தை குறைக்காதீர்கள். சபையில் சேரவும் உண்மையுள்ளவராக நிலைத்திருப்பதற்கும் விசுவாசம் தேவை. பண்டிதர்கள் மற்றும் பிரபலமான கருத்துக்களைவிட தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற விசுவாசம் தேவை. தொற்று நோயின்போது ஊழியம் செய்வதற்கு விசுவாசம் தேவை. தேவனுடைய கற்புடமை பிரமாணம் இப்போது காலாவதியானது என உலகம் கூச்சலிடும்போது கற்புடமை வாழ்க்கையை வாழ விசுவாசம் தேவை. ஒரு மதச் சார்பற்ற உலகத்தில் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தைக் கற்றுக்கொடுக்க விசுவாசம் தேவை. அன்புக்குரியவரின் வாழ்க்கைக்காக மன்றாடுவதற்கு விசுவாசமும், ஏமாற்றமளிக்கும் பதிலை ஏற்க இன்னும் அதிகமான விசுவாசமும் தேவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரி நெல்சனும் நானும் சமோவா, டோங்கா, பிஜி மற்றும் டஹிட்டிக்குச் சென்றோம். அந்த தீவு நாடுகள் ஒவ்வொன்றிலும் பல நாட்களாக பலத்த மழை பெய்தது. மழையிலிருந்து தங்களுடைய வெளிப்புறக் கூட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென உறுப்பினர்கள் உபவாசமிருந்து ஜெபித்தார்கள்.

சமோவா, பிஜி, மற்றும் டஹிட்டியில் கூட்டங்கள் ஆரம்பித்தபோது மழை நின்றுபோனது. ஆனால் டோங்காவில் மழை நிற்கவில்லை. இருப்பினும் 13,000 உண்மையுள்ள பரிசுத்தவான்கள், இடம் பிடிப்பதற்காக பல மணி நேரங்களுக்கு முன்பே வந்து, விடாத பெரு மழையில் பொறுமையாக காத்திருந்து, பின்னர் இரண்டு மணிநேர கூட்டத்தில் ஈரமான இருக்கையில் அமர்ந்தனர்.

படம்
டோங்கா பரிசுத்தவான்கள் மழையில்

அந்த தீவுவாசிகள் ஒவ்வொருவரிடமும் மழையைத் தடுக்க போதுமான நம்பிக்கை விசுவாசம் மற்றும் மழை நிறுத்தப்படாதபோது விடாமுயற்சியுடன் விசுவாசமான துடிப்பான விசுவாசத்தை நாங்கள் கண்டோம்.

நம் வாழ்க்கையின் மலைகள் எவ்வாறு அல்லது எப்போது விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து எப்போதும் நகருவதில்லை. ஆனால் நமது விசுவாசம் எப்போதும் நம்மை முன்னோக்கிச் செலுத்தும். தெய்வீக வல்லமைக்கு விசுவாசம் எப்போதும் நமது அணுகுதலை அதிகரிக்கிறது.

தயவுசெய்து இதை அறிந்து கொள்ளுங்கள்: உலகத்தில் நீங்கள் நம்புகிற எல்லாமும் எல்லோரும் தவறினாலும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சபையும் ஒருபோதும் உங்களைத் தவறவிடாது. அவர் தூங்குகிறதுமில்லை, அவர் உறங்குகிறதுமில்லை.16 அவர் “நேற்றும் இன்றும் [நாளையும்] மாறாதவராயிருக்கிறார்.” 17 அவருடைய உடன்படிக்கைகளையும்,18 அவருடைய வாக்களிப்புகளையும் அல்லது அவருடைய ஜனங்களுக்காக அவருடைய அன்பையும் அவர் கைவிடமாட்டார். இன்று அவர் அற்புதங்களைச் செய்கிறார், நாளை அவர் அற்புதங்களைச் செய்வார். 19

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், இந்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற மிகப்பெரிய வல்லமை. நம்புகிறவர்களுக்கு சகல காரியங்களும் சாத்தியமாகும். 20

அவரில் உங்களுடைய வளரும் விசுவாசம் மலைகளை நகர்த்தும், அது, பூமியை அழகுபடுத்தும் பாறைகளுள்ள மலைகளல்ல, உங்கள் வாழ்க்கையின் துயரத்தின் மலைகள். சவால்களை இணையற்ற வளர்ச்சியாகவும், வாய்ப்பாகவும் மாற்ற, உங்களுடைய செழித்து வளரும் விசுவாசம் உங்களுக்குதவும்.

என்னுடைய ஆழமான அன்பின் உணர்வுகளுடனும் நன்றியுணர்வுடனும், இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில், இயேசு கிறிஸ்து உண்மையில் உயிர்த்தெழுந்தார் என நான் என்னுடைய சாட்சியை அறிவிக்கிறேன். அவருடைய சபையை நடத்த அவர் உயிர்த்தெழுந்தார். தேவனுடைய பிள்ளைகள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஆசீர்வதிக்க அவர் உயிர்த்தெழுந்தார். அவர்மீது விசுவாசத்துடன், நமது வாழ்க்கையில் மலைகளை நம்மால் நகர்த்த முடியும். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

Placeholder Image Credit

குறிப்புகள்

  1. ஈஸ்டர் காலையில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுவதற்கு உலகத்தின் சில பகுதிகளில் மக்கள் ஒரு தனித்துவமான விசேஷித்த வழியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய உள்ளூர் மொழியில் வாழ்த்துபவர் சொல்வார், “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” வாழ்த்து பெற்ற நபர் பின்னர் பதிலளிக்கிறார், “உண்மையாக! அவர் உயிர்த்தெழுந்தார்!” உதாரணமாக, ஈஸ்டர் வாழ்த்துக்கள் பரிமாற்றம் “Христос воскрес” (கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் [உயிர்த்தெழுந்தார்]!),என்பதுடன் ரஷியா உரையாற்றுபவர்களால் ஆரம்பிக்கிறது, “Воистину! воскрес!” என்பதால் பதிலளிக்கப்படுகிறது. (உண்மையாக! அவர் உயிர்த்தெழுந்தார்!).

  2. மோசியா 2:41 பார்க்கவும்.

  3. எபிரெயர் 11:6. “சகல காரியங்கள் மீதும், வல்லமை, ஆளுகை, அதிகாரமுள்ள விசுவாசம், முதல் பெரிய ஆளுகையின் கொள்கை” என விசுவாசத்தைப்பற்றிய விரிவுரைகள் உரைக்கிறது.

  4. மத்தேயு 11:28–30, ஆல்மா 7:12–13, ஏத்தேர் 12:27 பார்க்கவும்.

  5. மரோனி 10:7; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  6. ஆல்மா 32:27; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  7. மத்தேயு 17:20,முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது ஏலமன் 12:9, 13ஐயும் பார்க்கவும்.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:17–18 பார்க்கவும். ஜென்ம சுபாவ மனிதனைத் தள்ளி வைப்பதற்கான வெகுமதி “கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் ஒரு பரிசுத்தராக” மாறுவது” (மோசியா 3:19).

  9. 1 நேபி 7:12 பார்க்கவும்.

  10. மார்மன் 9:19–21; ஏத்தேர் 12:30 பார்க்கவும்.

  11. 2 நேபி 33:10–11 பார்க்கவும்.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 பார்க்கவும்.

  13. மத்தேயு 7:8.

  14. விசுவாசத்தின் வல்லமையில்லாமல், உண்மை என்று தனக்குத் தெரிந்ததை மறுக்க மறுத்ததற்காக அபிநாதி நெருப்பால் மரணத்தை அனுபவித்திருப்பானா? (மோசியா 17:7–20 பார்க்கவும்). அந்த வல்லமையில்லாமல், ஏத்தேர் கன்மலை இடுக்கில் ஒளிந்திருப்பானா (ஏத்தேர் 13:13–14 பார்க்கவும்), மரோனி, பல ஆண்டுகளாக தனிமையை சகித்திருப்பானா, (மரோனி 1:1–3 பார்க்கவும்) அவர்கள் நம்பியதை அவர்கள் மறுத்திருந்தால் அவர்களுடைய வாழ்க்கை மிக வசதியாக இருந்திருக்குமில்லையா?

  15. Melvin L. Bashore, H. Dennis Tolley, and the BYU Pioneer Mortality Team, “Mortality on the Mormon Trail, 1847–1868,” BYU Studies, vol. 53, no. 4 (2014), 115 பார்க்கவும்.

  16. சங்கீதம் 121:4 பார்க்கவும்.

  17. மார்மன் 9:9.

  18. ஏசாயா 54:10; 3 நேபி 22:10 பார்க்கவும்.

  19. (மார்மன் 9:10–11, 15 ) பார்க்கவும்.

  20. மாற்கு 9:23 பார்க்கவும்.

அச்சிடவும்