“சிறப்பான உங்களை உருவாக்குதல்,” இளைஞரின் பெலனுக்காக, செப். 2021, 6–7.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, செப்டம்பர் 2021
சிறப்பான உங்களை உருவாக்குதல்
மகிழ்ச்சியான மற்றும் இன்பமான வாழ்க்கையை உருவாக்க ஐந்து வழிகள்.
கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டும்படி ஜோசப் ஸ்மித்துக்குக் கர்த்தர் கட்டளையிட்டபோது, அதை எப்படி அவராகவே செய்வது என்று கண்டுபிடிக்க அவரை அவர் விட்டுவிடவில்லை. வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு திட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
“வீடு கட்டப்படுவதாக, உலகத்தின் விதமாக அல்ல” என்று கர்த்தர் அறிவித்தார். “நான் காண்பிக்கும் விதத்தில் அது கட்டப்படுவதாக” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:13–14; 95:13–14). பின்னர் ஆலயத்தை எப்படி கட்டுவது என்று தேவன் அறிவுறுத்தினார்((கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:15–17 பார்க்கவும்).
நன்றி கூறும் விதமாக, ஆலயங்களை எப்படி கட்டுவது என்பதை விட அதிகமாக தேவன் நமக்குக் காட்டியுள்ளார். நம்மால் இயன்றவாறு நாம் சிறந்தவராக மாறுவதற்கு அவர் நமக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். நாம் அவைகளைப் பின்பற்றும்போது, நம் வாழ்க்கையை “உலகப் பிரகாரமாக அல்ல,” மாறாக கர்த்தர் வடிவமைத்த வழியில் உருவாக்குவோம்.
இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட மகிழ்ச்சியான மற்றும் இன்பமான வாழ்க்கையை உருவாக்க ஐந்து வழிகள் இங்கே உள்ளன.
உறுதியான அடித்தளத்தை கட்டுங்கள்
எந்த கட்டிடத்திற்கும் ஒரு உறுதியான அடித்தளம் அவசியம் என்று எந்த கட்டிடக் கலைஞரும் அல்லது கட்டுபவரும் உங்களுக்குச் சொல்வார்கள். “தேவ குமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலை,” நமது வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளம் என்று ஏலமன் கற்பித்தான்.(ஏலமன் 5:12). அவரிடம் வந்து அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் கிறிஸ்துவை நம் அடித்தளமாக்க முடியும். கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையின் அடித்தளமாக்க நீங்கள் செய்கிறதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
பிறருக்கு சேவை செய்யுங்கள்
நமது வாழ்க்கையை கட்டியெழுப்ப மற்றொரு சிறந்த வழி, தலைவர் டியட்டர் எப். உக்டர்ப், பிரதான தலைமையின் இரண்டாவது ஆலோசகர், “நாம் தேவனைச் சேவித்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சேவை செய்ய நாம் நமது பாதங்களில் நிற்கிறோம்”.1 நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, இயேசு செய்ததை நீங்கள் செய்கிறீர்கள், மேலும் அவரைப் போல் ஆக கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் சேவை செய்யும் மக்களின் வாழ்க்கையை நீங்கள் ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், நீங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
ஜெபம் மற்றும் வேதப் படிப்பின் ஒழுங்கான வழக்கத்தை உருவாக்கவும்
மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க மற்றொரு வழி பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் ஒரு உறவை உருவாக்குவது. அதற்கு ஒரு சிறந்த வழி ஜெபம் மற்றும் வேதப்படிப்பு.
தலைவர் உக்டர்ப் சொன்னார்: “தேவனுடனான நமது உறவை வலுப்படுத்த, அவருடன் தனியாக சில அர்த்தமுள்ள நேரம் நமக்கு தேவை. தினசரி தனிப்பட்ட ஜெபம் மற்றும் வேத படிப்பில் அமைதியாக கவனம் செலுத்துவது … நம் காலத்தின் சில புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் நமது பரலோகபிதாவிடம் நெருங்குவதற்கான முயற்சிகளுமாகும்.”2
ஜெபம் என்பது பரலோகத்தில் உள்ள நமது பிதாவுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார், நம்மிடமிருந்து கேட்க விரும்புகிறார்! நாம் உண்மையாக ஜெபிக்கும்போது, நம் நன்றியைத் தெரிவித்து, நமக்குத் தேவையானவற்றைக் கேட்கும்போது, அவர் செவிகொடுக்கிறார், எப்போதும் அவரது சொந்த வழியில் மற்றும் நேரத்தில் பதிலளிக்கிறார்.
வேதம் படிப்பதைப் பொறுத்தவரை, அதைச் செய்ய ஒரே சரியான வழி இல்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அதைச் செய்யுங்கள்! தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “தேவனின் வார்த்தையில் தினசரி மூழ்குவது ஆவிக்குரிய பிழைத்திருத்தலுக்கு முக்கியமானது.”3 வேதத்தில் ஒவ்வொரு நாளும் நேரத்தை செலவிடுவது, சந்தேகமின்றி, விசுவாசம் மற்றும் வலிமையின் வாழ்க்கையை உருவாக்க உதவும்.
நன்மை செய்ய ஊக்குவிப்பவர்களுடன் உங்களைச் சூழச் செய்யுங்கள்.
பரலோக பிதா நாம் மற்றவர்களுடன்— குறிப்பாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொண்டு உறவுகளை உருவாக்க விரும்புகிறார். நாம் யாரோடு நேரத்தை செலவழிக்கிறோமோ பெரும்பாலும் அவர்களால் வடிவமைக்கப்படுகிறோம். அவர்கள் சபையின் உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சுவிசேஷத்தின்படி வாழவும், தரத்தை கடைபிடிக்கவும், சிறந்த நபராகவும் ஆக உங்களுக்கு உதவும் நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய நீங்கள் உதவலாம். நீதியின்படி உங்கள் அடித்தளத்தை உருவாக்க உங்கள் நண்பர்களில் யார் உங்களுக்கு உதவுகிறார்கள்?
உங்கள் அடித்தளத்தை உருவாக்குவதில் இன்பம் காணுங்கள்
ஆவிக்குரிய ரீதியாக வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உங்கள் வாழ்க்கையை நீங்கள் உருவாக்க பல வழிகள் உள்ளன, இதில் சபைக்குச் செல்வது மற்றும் திருவிருந்தில் பங்கேற்பது, உடன்படிக்கைகளை செய்து, காத்துக் கொள்ளுதல் மற்றும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவது உட்பட.
இவை அனைத்தும் வேலை மற்றும் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எப்போதும் கட்டுதலும் கற்றலும் செய்யப்பட வேண்டும், ஆனால் நீங்கள் அதைத் தனியாக செய்ய வேண்டியதில்லை. நீங்களும் அவரும் பெருமைப்படக்கூடிய ஒரு வாழ்க்கையை உருவாக்க உங்களால் முடிந்தவரை முயற்சிக்கும்போது கர்த்தர் உங்களுக்கு உதவுவார், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
© 2021 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ. நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, செப்டம்பர் 2021. மொழிபெயர்ப்பு. Tamil. 17473 418