2022
தேர்ந்தெடுக்கவும்
ஜூன் 2022


“தேர்ந்தெடுக்கவும்,” இளைஞரின் பெலனுக்காக, ஜூன் 2022.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜூன் 2022

தேர்ந்தெடுக்கவும்

கர்த்தரைப் பின்பற்றும் சரியான தேர்ந்தெடுப்பைச் செய்யுமாறு தனது மக்களை யோசுவா வலியுறுத்தினான்.

தேர்ந்தெடுக்கவும்

நமக்காகத் தேர்ந்தெடுத்துச் செயல்படும் நமது திறன் சுயாதீனம் எனப்படும். இது, பரலோக பிதாவின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். நாம் அவரைப் போலவே ஆக முடியும்படியாக, இந்த வாழ்க்கையின் ஒரு நோக்கம், நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுப்பதைக் காண்பிப்பதாகும். நாம் நமது தேர்ந்தெடுப்புகளின்படி தீர்ப்பளிக்கப்படுவோம். (2 நேபி 2:27; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:78; ஆபிரகாம் 3:25 பார்க்கவும்.)

இந்த நாள்

“இந்த நாளை,” அல்லது இப்போதே தெரிந்துகொள்ள யோசுவா தனது மக்களை வலியுறுத்தினான். முக்கியமான தேர்ந்தெடுப்புகளை நாம் ஒருமுறை செய்யலாம், பிறகு அவற்றில் ஒப்புக்கொடுத்தலுடன் இருக்க முயற்சி செய்யலாம். (சங்கீதம் 37:5 பார்க்கவும்.)

சேவித்தல்

இந்த வசனத்தில், சேவை செய்வது என்பது ஒருவரை ஆராதித்தல், உதவுதல், கீழ்ப்படிதல் மற்றும் உங்களையே அர்ப்பணித்தல் என்பதாகும். நாம் கர்த்தரையே சேவிக்க வேண்டும் (மோசே 1:15 பார்க்கவும்).

தேவர்கள்

உண்மையான தேவனாகிய, ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவை மட்டுமே சேவிக்க இஸ்ரவேலர் கட்டளையிடப்பட்டிருந்தனர் (யாத்திராகமம் 20:2–5 பார்க்கவும்). தனது மக்கள் ஆராதிக்கக் கூடாத மற்ற தேவர்களின் உதாரணங்களை யோசுவா கொடுத்தான். நம் வாழ்வில் உள்ள மற்ற தேவர்களில், உடைமைகள், மற்றவர்களின் கருத்துக்கள், பிற ஆர்வங்கள், கர்த்தரிடமிருந்து நம்மை தூர விலக்கும் எதையும் உள்ளடக்கலாம்.

நானும் என் வீட்டாரும்

யோசுவா தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பேசினான். அவர்கள் கர்த்தரையே சேவிப்பதாக அவன் சொன்னான். அவனுடைய குடும்பத்தினரை நீதியில் நடத்தவும், கர்த்தரைப் பின்பற்ற அவர்களுக்கு கற்பிக்கவும் அவன் விரும்பினான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:40 பார்க்கவும்).