“அவரண்டை வாருங்கள்,” இளைஞரின் பெலனுக்காக, மார்ச் 2023.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, மார்ச் 2023
அவரண்டை வாருங்கள்.
இரட்சகர் நம் பாரங்களை அவர் மீது சுமத்த நம்மை அழைக்கிறார்.
என்னண்டை வாருங்கள்.
இரட்சகரின் நற்செய்தியைக் கற்று, அவர்மீது விசுவாசம் வைத்து, மனந்திரும்பி, உடன்படிக்கைகளை ஏற்படுத்தி, கடைப்பிடித்து, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் நாம் இரட்சகரண்டை வரலாம்.
உழைப்பு … கனமான பாரம்
உடல் உழைப்பு மற்றும் உடல் சுமைகள் நம்மை சோர்வடையச் செய்யலாம், மன, உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய காரியங்களும் சோர்வடையலாம் நாம் எந்த வகையான சுமைகளைச் சுமந்தாலும் இரட்சகர் தம்முடைய சமாதானத்தை நமக்கு வழங்குகிறார்.
நுகம்
ஒரு நுகம் என்பது இரண்டு விலங்குகளை ஒன்றாக இணைப்பதற்கான ஒரு கருவியாகும், இதனால் அவை கலப்பை அல்லது வண்டி போன்ற சுமைகளை ஒன்றாக இழுக்க முடியும். நுகத்தடியில் பொதுவாக ஒவ்வொரு விலங்கின் தோள்பட்டையின் மீதும் ஒரு மரக் கற்றை சுமையை பகிரும் விதத்தில் இருக்கும்.
கற்றுக்கொள்ளவும்
இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் அவருடைய முன்மாதிரியையும் கற்றுக்கொள்வதின் மூலமும், அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பதன் மூலமும் நாம் அவரைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.
இளைப்பாறுதல்
இரட்சகரில் இளைப்பாறுதல் என்பது அவரது சமாதானம், இது நம் மனதையும் ஆவியையும் அமைதிப்படுத்துகிறது. அவர் உலக கவலைகளை சமாளிக்க உதவுகிறார், நாம் பலவீனமாக உணரும்போது ஆவிக்குரிய பலத்தை அளிக்கிறார்.
மெதுவாக … இலகு
இரட்சகரின் நுகத்தை நம்மீது எடுத்துக்கொள்வது என்பது உடன்படிக்கைகள் மூலம் நம்மை அவருடன் பிணைத்துக்கொள்வதாகும். அவருக்கும் அவருடைய ஊழியத்திற்க்கும் நம் இருதயங்களைக் கொடுப்பதை இது குறிக்கிறது. நாம் இதைச் செய்யும்போது, அவர் நமக்கு உதவி செய்வதால் நமது சுமைகள் இலகுவாகின்றன.
© 2023 Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, March 2023 மொழிபெயர்ப்பு. Language. 18905 418