2023
உங்களின் வழிகாட்டியாக பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளுங்கள்
அக்டோபர் 2023


“உங்களின் வழிகாட்டியாக பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக, அக். 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, அக்டோபர் 2023

உங்களின் வழிகாட்டியாக பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளுங்கள்

அநித்தியத்தில் நாம் சவால்களும், பாடுகளும், குழப்பங்களும் எதிர்கொள்வோம் என நமது பரலோக பிதா அறிந்தார். நாம் கேள்விகளுடனும், ஏமாற்றங்களுடனும், சோதனைகளுடனும், பலவீனங்களுடனும் போரிடுவோம் என அவர் அறிவார். நமக்கு அநித்திய பெலனும் தெய்வீக வழிநடத்துதலும் கொடுக்க பரிசுத்த ஆவியை அவர் கொடுத்தார்.

கர்த்தரின் ஒளியில் நடக்க தெய்வீக நியமனத்தோடு அவர் உணர்த்துகிறார், சாட்சியளிக்கிறார், போதிக்கிறார், மற்றும் தூண்டுகிறார். நமது வாழ்க்கையில் அவரது செல்வாக்கை அடையாளம் கண்டு கற்கவும், பதிலளிக்கவும் நமக்கு பரிசுத்த பொறுப்பிருக்கிறது.

இதை நாம் எவ்வாறு செய்யலாம்?

முதலாவது, ஆவிக்கு தகுதியாக வாழ நாம் முயலுகிறோம்.

இரண்டாவது, ஆவியைப் பெற நாம் சித்தமாயிருக்க வேண்டும்.

மூன்றாவது, அது வரும்போது, நாம் ஆவியை அடையாளம் காண வேண்டும்.

நான்காவது, நாம் முதல்தூண்டுதலிலேயே செயல்பட வேண்டும்.

“திடன் கொண்டிருங்கள் ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன்” என்ற கர்த்தரின் அழைப்பை முக்கியமானதாக எடுத்துக்கொள்வோமாக.“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:18. அவர் நம்மை பரிசுத்த ஆவியானவர் மூலம் வழிநடத்துகிறார். நமது முதல் தூண்டுதல்கள் தேவனிடமிருந்து வருகின்றன என அறிந்து, விரைவாக செயல்பட்டு, ஆவிக்கு நெருக்கமாக வாழ்வோமாக. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிற, பாதுகாக்கிற, என்றும் நம்மோடு இருக்கிற வல்லமை என நான் சாட்சியளிக்கிறேன்.