ஊழியம் செய்தலின் கொள்கைகள், அக்டோபர் 2019
ஊழியம் செய்தலின் இந்த முக்கிய பகுதியை நீங்கள் தவறவிடுகிறீர்களா?
ஊழியம் செய்தல் என்பது சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுவதைப் போலவே அழுகிறவர்களுடனே அழுவதாகும். (ரோமர் 12:15)
ஊழியம் செய்தலைப்பற்றி நாம் சிந்திக்கும்போது தேவையிலிருப்போருக்கு உதவுவதைப்பற்றி சிந்திப்பது எளிதாயிருக்கும். விதவைக்காக தோட்டமிடுதலைப்பற்றி, சுகவீனத்திலிருப்போருக்கு இரவு உணவு கொண்டுவருவதைப்பற்றி அல்லது போராடிக்கொண்டிருப்போருக்கு உதவுதல் பற்றி நாம் பேசுகிறோம். “அழுகிறவர்களுடன் அழும்படியான” பவுலின் ஆலோசனையை நாம் நினைவுகூருகிறோம் ஆனால் “சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படும்படியான” அந்த வசனத்தின் முதல் பகுதிக்கு போதுமான கவனம் செலுத்துகிறோமா”? (ரோமர் 12:15). இரட்சகர் போல நாம் ஊழியம் செய்கிறவர்களுடன் அவர்களுடைய வெற்றியைக் கொண்டாடுவது அல்லது கஷ்டமான நேரங்களில் மகிழ்ச்சியைக் காண அவர்களுக்கு உதவுதல் என அர்த்தமாகிறது.
தேவன் நமது வாழ்க்கையில் வைத்திருக்கிற நன்மையானவற்றில் கவனம் செலுத்த நாம் பார்க்கும்போது உதவக்கூடிய மூன்று கருத்துக்கள் உள்ளன (ஒன்று தவிர்க்க).
1. கவனமாயிருங்கள்
நாம் ஊழியம் செய்கிறவர்களின் பாரங்களையும் போராட்டங்களையும் மட்டுமே பார்க்காமல் அவர்களுடைய பலங்களையும், திறமைகளையும் சாதனைகளையும் நாம் பார்க்க வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள இளம் பெண்கள் பொதுத் தலைவர் போனி ஹெச்.கார்டன் நமக்குதவுகிறார். “அவர்களுடைய சூழ்நிலைகளைப்பற்றி அறிந்தவராக, அவர்களுடைய நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளில் அவர்களுக்கு உதவுபவராக இருக்கிற ஒருவராக நாம் ஒரு வீரனாகவும் நம்பத்தக்கவராகவும்” இருக்கவேண்டுமென அவர் சொன்னார்.1
செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளின் உவமையில் அவருடைய வலது பக்கத்தில் காணப்பட்டவர்கள், “ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மை பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனம் கொடுத்தோம், எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
“எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மை சேர்த்துக்கொண்டோம்?” எனக் கேட்பார்கள் என இரட்சகர் சொன்னார். (மத்தேயு 25:37-38).
“சகோதர சகோதரிகளே முக்கிய வார்த்தை கண்டோம் ஆகும்”என சகோதரி கார்டன் சொன்னார். “அவர்கள் பார்த்துக்கொண்டும் கவனித்துக்கொண்டுமிருந்ததால் தேவையிலிருப்போரை நீதிமான்கள் கண்டார்கள். உதவவும், ஆறுதலளிக்கவும், கொண்டாடவும், கனவுகாணவும்கூட நாமும் ஒரு விழிப்புடைய கண்ணோடிருக்கலாம்.”2
2. கொண்டாடுவதற்கு காரணங்களைக் கண்டுபிடிக்கவும்
பெரியதோ அல்லது சிறியதோ வெற்றிகளைக் கொண்டாடுங்கள். இது புற்று நோயிலிருந்து விடுபட்டதாயிருக்கலாம், ஒரு பிரிவு சமாளிக்கப்பட்டதாயிருக்கலாம், ஒரு புதிய வேலையைக் கண்டுபிடிப்பதாக, காணாமற்போன ஒரு காலணியைக் கண்டுபிடிப்பதாயிருக்கலாம், அன்புக்குரியவரின் இழப்பிற்குப் பின்னர் ஒரு மாதம் பிழைத்திருப்பது அல்லது சர்க்கரை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழுவதாயிருக்கலாம்.
பாராட்ட அழையுங்கள், வாழ்த்து மடல் ஒன்றை அனுப்புங்கள், அல்லது மதியஉணவுக்கு வெளியே செல்லுங்கள். நம்முடைய ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துகொள்வதாலும், நன்றிஉணர்வோடு வாழுவதாலும், மற்றவர்களின் ஆசீர்வாதங்களையும் வெற்றிகளையும் கொண்டாடுவதாலும் நம்முடைய “சகோதரரின் சந்தோஷத்தில் நாம் களிகூருகிறோம்” (ஆல்மா 30:34).
3. கர்த்தருடைய கரத்தைக் காணுங்கள்
சிலநேரங்களில், என்ன கஷ்டங்கள் அல்லது மகிழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் பிரவேசித்தாலும் மற்றவர்களுடன் களிகூருதல் என்பது களிகூருதலுக்கானக் காரணங்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுதல் என்பதே. பரலோக பிதா நம்மை அறிந்திருக்கிறார், நம்மை உயர்த்த ஆயத்தமாயிருக்கிறார் என்ற எளிய உண்மை சந்தோஷத்தின் வியக்கத்தக்க ஆதாரமாயிருக்கலாம்.
இதை நீங்கள் எவ்வாறு உங்களுடைய சொந்த வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுவதால் அவர்களுடைய வாழ்க்கையில், கர்த்தருடைய கரத்தைக் காண நீங்கள் மற்றவர்களுக்குதவலாம். உங்களுடைய சவால்களில் பரலோக பிதா எவ்வாறு உங்களுக்குதவினார் என்பதைப் பகிர்ந்து கொள்ள போதுமானபடி தயாராயிருங்கள். அவர்களுக்கு அவர் எவ்வாறு உதவினார் என்பதை அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும் இந்த சாட்சி மற்றவர்களுக்கு உதவும் (மோசியா 24:14பார்க்கவும்).
4. களிகூருவதற்கான உங்களுடைய திறனை கட்டுப்படுத்தாதிருங்கள்
துரதிருஷ்டவசமாக, குறிப்பாக நாம் என்ன கொடுக்கவேண்டும் அல்லது வாழ்க்கையில் நாம் எங்கிருக்கிறோம் என்பதைப்பற்றி பாதுகாப்பாயில்லை என உணரும்போது சிலசமயங்களில் மற்றவர்களோடு களிகூர நமது திறனை நாம் கட்டுப்படுத்துவோம். மற்றவர்களின் சந்தோஷத்தில் மகிழ்ச்சியைக் காண்பதற்குப் பதிலாக ஒப்பிடுவதின் பொறியில் நாம் விழுவோம். பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் க்வென்டின் எல்.குக் போதித்ததைப் போல, “ஆசீர்வாதங்களை ஒப்பிடுதல் கிட்டத்தட்ட நிச்சயம் மகிழ்ச்சியை விரட்டுவதாகும். ஒரே நேரத்தில் நாம் நன்றியுள்ளவர்களாயும் பொறாமையுள்ளவர்களாயுமிருக்க முடியாது.”3
“கிட்டத்தட்ட ஒவ்வொருவரிடமும் பொதுவாயிருக்கிற அத்தகைய போக்கை நாம் எவ்வாறு ஜெயிக்கமுடியும்?” என பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் கேட்டார். “… நம்முடைய அநேக ஆசீர்வாதங்களை நாம் எண்ண முடியும், மற்றவர்களின் சாதனைகளை நம்மால் பாராட்ட முடியும். எல்லாவற்றிலும் சிறப்பாக, இருதயத்திற்கு எப்போதுமே பரிந்துரைக்கப்படுகிற நேர்த்தியான செயல், நம்மால் மற்றவர்களுக்கு சேவை செய்யமுடியும்.”4 ஒப்பிடுவதற்குப் பதிலாக நாம் ஊழியம் செய்கிறவர்களை நாம் பாராட்டலாம். அவர்களை அல்லது அவர்களுடைய குடும்பத்தினரை நீங்கள் பாராட்டுவதை தாராளமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
பவுல் நமக்கு நினைவூட்டியதைப்போல நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள், “ஒரு அவயவம் மகிமைப்பட்டால், எல்லா அவயவங்களும் சந்தோஷப்படும்” (1கொரிந்தியர் 12:26). பரலோக பிதாவின் உதவியுடன் மற்றவர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ளலாம், பெரிய, சிறிய சாதனைகளை கொண்டாடலாம், கர்த்தருடைய கரத்தை அடையாளம் காண அவர்களுக்குதவலாம், மற்றவர்களின் ஆசீர்வாதங்களில், திறமைகளில், சந்தோஷத்தில் உண்மையாக நாம் ஒன்று சேர்ந்து களிகூரும்படியாக பொறாமையை நாம் மேற்கொள்ளலாம்.
© 2019 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/18. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/18. Ministering Principles, October 2019 மொழிபெயர்ப்பு. Tamil. 15771 418