2021
நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?
மே 2021


“நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?,” இளைஞர்களின் பெலனுக்காக, மே 2021

ஆசாரியத்துவக் கூட்டம்

நம்முடைய இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார்?

தொகுப்புகள்

படம்
கிறிஸ்துவின் காலியான கல்லறை

நம் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்து என்ன செய்திருக்கிறார்? நம்முடைய பரலோக பிதாவின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை நோக்கி உலக வாழ்க்கை வழியாக நமது பயணத்திற்கு அத்தியாவசியமான அனைத்தையும் அவர் செய்துள்ளார். அந்த திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்களைப்பற்றி நான் பேசுவேன். …

நாம் ஒவ்வொருவரும், நாம் நேசிப்பவர்களும் எதிர்கொள்ளும் பூலோக சவால்களில் நிலைத்திருக்க பார்வையையும் வலிமையையும் உயிர்த்தெழுதல் நமக்கு அளிக்கிறது. பிறக்கும்போதோ அல்லது பூலோக வாழ்க்கையின் போதோ நாம் பெறும் சரீர, மன, அல்லது உணர்ச்சி சம்மந்தமான குறைபாடுகளைக் காண இது ஒரு புதிய வழியை வழங்குகிறது. துக்கங்கள், தோல்விகள் மற்றும் விரக்திகளை சகித்துக்கொள்ள இது நமக்கு பெலத்தை அளிக்கிறது.

நம்முடைய பூலோக வாழ்க்கையின் போது தேவனின் கட்டளைகளைக் கடைபிடிப்பதற்கான ஒரு வல்லமையான ஊக்கத்தையும் உயிர்த்தெழுதல் நமக்கு அளிக்கிறது. …

மனந்திரும்புகிற எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் ஒரு பலியாக ஆக, நம்முடைய இரட்சகரும் மீட்பருமானவர் புரிந்துகொள்ள முடியாத பாடுகளை சகித்தார். இந்த பாவநிவாரண பலியானது, தீமைக்கான இறுதி அளவிற்காக, முழு உலகத்தின் பாவங்களுக்கும், இறுதி நன்மையான, கறை இல்லாத தூய ஆட்டுக்குட்டியை வழங்கியது. …

… இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி இயேசு நமக்குப் போதித்தார். இந்தத் திட்டத்தில் சிருஷ்டிப்பு, வாழ்க்கையின் நோக்கம், எதிர்ப்பின் அவசியம் மற்றும் சுயாதீன வரம் ஆகியவை அடங்கும். நாம் கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகளையும் உடன்படிக்கைகளையும், நம்முடைய பரலோக பெற்றோரிடம் நம்மை அழைத்துச் செல்ல நாம் அனுபவிக்க வேண்டிய நியமங்களையும் அவர் நமக்குக் கற்பித்தார்.

நம்முடைய இரட்சகர் தம்முடைய சோதனைகளையும், நம் போராட்டங்களையும், மன வேதனையையும், நம்முடைய துன்பங்களையும் உணர்கிறார், அறிவார், ஏனென்றால் அவர் அனைத்தையும் அவருடைய பாவநிவர்த்தியின் ஒரு பகுதியாக அவர் மனமுவந்து அனுபவித்தார். … எந்தவிதமான உலகப்பிரகார பலவீனங்களையும் அனுபவிக்கும் அனைவருமே, நம் இரட்சகர் அந்த மாதிரியான வேதனையையும் அனுபவித்ததை நினைவில் கொள்ள வேண்டும், மேலும் அவருடைய பாவநிவர்த்தியின் மூலம் அதை தாங்குவதற்கான பெலத்தை அவர் நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கிறார்.

அச்சிடவும்