“வீழ்ச்சி, தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாயிருந்தது” லியஹோனா, ஜனுவரி 2022
லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனுவரி 2022
வீழ்ச்சி தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாயிருந்தது
வீழ்ச்சியினிமித்தம், நாம் பூமிக்கு வரவேண்டியதிருந்தது, ஒரு நாள் பரலோகத்தில் நம் பிதாவுடன் வாழ திரும்ப முடியும்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப புசிக்கவேண்டாமென ஏதேன் தோட்டத்தில், தேவன், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிட்டார். ஆயினும், நீயே அதைத் தெரிந்துகொள்ளலாம்,… ஆனால் அதை நான் தள்ளிவைத்திருக்கிறேன் என்பதை நினைவுகூரு(மோசே 3:17) என பின்னர் அவர்களுக்கு அவர் கூறினார். அவ்விருட்சத்தின் கனியைப் புசிக்குமாறு சாத்தான் ஏவாளைத் தூண்டினான். “நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (மோசே 4:11) என அவளுக்கு அவன் சொன்னான். அவள் கனியைப் புசித்து, ஆதாமுக்கும் அதைக் கொடுத்தாள். தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.
வீழ்ச்சி
ஆதாமும் ஏவாளும் தோட்டத்தை விட்டு நீங்கியதும், அவர்கள் இனி ஒருபோதும் தேவனின் சமூகத்திலில்லை. தேவனிலிருந்து இந்த நீக்கமே ஆவிக்குரிய மரணம் என அழைக்கப்படுகிறது. தோட்டத்தை விட்டு ஆதாமும் ஏவாளும் அநித்தியமானவர்கள் ஆனதால் அவர்களால் மரணிக்கமுடியும். ஆதாமும் ஏவாளும் இனி தேவனுடன் இல்லை என்றாலும், இப்போது அநித்தியமானவர்களாக இருந்தாலும், அவர்களால் முன்னேற முடியும் என்பதைக் கண்டபோது அவர்கள் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தனர். (மோசே 5:10–11). “மனுஷன் பிழைத்திருக்கவே ஆதாம் வீழ்ந்து போனான், சந்தோஷமாக இருக்கவே மனுஷன் பிழைத்திருக்கிறான்.” (2 நேபி 2:25).
சோதனைக் காலம்
வீழ்ச்சிக்குப் பின்னர் ஆதாமும் ஏவாளும் செய்ததைப் போலவே, நாம் பிறந்ததும் நாம் தேவனை விட்டு விலகி வாழ்கிறோம். மோசமான தேர்ந்தெடுப்புகளைச் செய்ய, சாத்தான் நம்மை சோதிக்கிறான். இந்தத் தூண்டுதலால் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் தேர்ந்தெடுக்க சோதிக்கப்படுகிறோம் (ஆல்மா 12:24 பார்க்கவும்). ஒவ்வொரு முறையும் நாம் பாவஞ்செய்து மனந்திரும்பாதிருந்தால் பரலோக பிதாவிடமிருந்து மேலும் விலகிச் செல்ல வளர்கிறோம். ஆனால் நாம் மனந்திரும்பினால், பரலோகத்திலிருக்கும் நமது பிதாவுடன் நாம் நெருக்கமாக வளர்கிறோம்.
சரீர மரணம்
இந்தப் பூமி நமக்காய் சிருஷ்டிக்கப்பட்டதாகும் (1 நேபி 17:36). பிள்ளைகளைப் பெற்று, மாம்ச சரீரத்தில் பூமிக்கு வர நம்மை அனுமதித்து, தேவனுடைய கட்டளையை மேற்கொள்ள ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சாத்தியப்படுத்தியது. ஒரு நாள் நம் சரீரங்கள் மரிக்கும் ஆனால் நமது ஆவிகள் தொடர்ந்து வாழும். நாம் உயிர்த்தெழும்போது, நம் சரீரங்களும் ஆவிகளும் மீண்டும் இணையும்.
இயேசு கிறிஸ்துவால் இரட்சிக்கப்படுதல்
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையால் சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்தை நாம் மேற்கொள்ள முடியும். கிறிஸ்து உயிர்த்தெழுந்தபடியால், இப்பூமியில் பிறந்த அனைவரும் உயிர்த்தெழுந்து என்றென்றைக்குமாய் வாழ்வார்கள். நமது பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் பாடனுபவித்தபடியால், பரலோகத்திலுள்ள நமது பிதாவுடன் மீண்டும் நாம் வாழும்படியாக நாம் மனந்திரும்பி, மன்னிக்கப்படுவோம்.
© 2021 by Intellectual Reserve, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுபவை. அ.ஐ.நாட்டால் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, January 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18295 418