2022
உடன்படிக்கைகள் நம்மை தேவனோடு இணைக்கின்றன
பெப்ருவரி 2022


“உடன்படிக்கைகள் நம்மை தேவனோடு இணைக்கின்றன,” Liahona, February 2022

லியஹோனா மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2022

உடன்படிக்கைகள் நம்மை தேவனோடு இணைக்கின்றன

உடன்படிக்கைகளை செய்துகொள்வதும் கடைபிடிப்பதும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.

உடன்படிக்கை என்பது பரலோக பிதாவுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே ஒரு வாக்குத்தத்தம் ஆகும். அவருடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளுக்கு அவர் நிபந்தனைகளை வகுக்கிறார். அவர் கேட்பதை நாம் செய்யும்போது, பல ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நாம் பூமியில் ஆசீர்வாதங்களை மட்டும் பெறுவதில்லை, நாம் உடன்படிக்கைகளை செய்து கடைபிடிக்கும்போது, ஒரு நாள் பரலோகத்தில் தேவனுடனும் நமது குடும்பங்களுடனும் வாழத் திரும்புவோம்.

ஞானஸ்நானம்

உடன்படிக்கைகளும் நியமங்களும்

சில நியமங்களின் போது நாம் உடன்படிக்கைகளை செய்கிறோம். நாம் தேவனோடு வாழ திரும்ப அந்த நியமங்களைப் பெற்று அந்த உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆசாரியத்துவ அதிகாரத்தால் நியமங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த நியமங்களில் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் (ஆண்களுக்காக) பெறுதல் மற்றும் ஆலயத்தில் நாம் பெறும் நியமங்கள் ஆகியவை அடங்கும். நியமங்களின்போது, சபை உறுப்பினர்கள் தேவனுக்கு அளித்த வாக்குறுதிகளை புதுப்பிக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்).

திருவிருந்து

உடன்படிக்கைகள் நாம் நீதியாக வாழ உதவுகின்றன

ஞானஸ்நானத்தின் போது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகவும், அவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகவும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாகவும் வாக்களிக்கிறோம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 பார்க்கவும்). பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று தேவன் வாக்களிக்கிறார்.

ஆண்கள் ஆசாரியத்துவத்தைப் பெறும்போது, அவர்கள் தேவனின் ஆசாரியத்துவ வல்லமைக்கு தகுதியானவர்களாக வாழ்வதாக உறுதியளிக்கிறார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:33–40 பார்க்கவும்.)

பிரேசில் ரெசிபி ஆலயம்

ரெசிபி பிரேசில் ஆலயத்தின் பட விளக்கம்-ஜேம்ஸ் பார்ட்டர்

ஆலயத்தில் நாம் செய்யும் உடன்படிக்கைகள்

சபை உறுப்பினர்கள் ஆலயத்தில் தங்களுடைய தரிப்பித்தலைப் பெறும்போது, அவர்கள் நீதியாக வாழ்வதாகவும், சுவிசேஷத்துக்காக தியாகம் செய்வதாகவும் வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேவனிடமிருந்து வல்லமையை வாக்களிக்கப்படுகிறார்கள் (கோட்பாடு்ம் உடன்படிக்கைகளும் 38:32; 109:22 பார்க்கவும்).

ஆலய முத்திரித்தலின் போது, ஒரு கணவனும் மனைவியும் நித்தியமாக திருமணம் செய்துகொண்டு, ஒருவருக்கொருவர் மற்றும் தேவனுக்கு உண்மையாக இருப்பதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தம்மிடம் திரும்பி வந்து குடும்பங்களாக என்றென்றும் வாழ முடியும் என்று தேவன் உறுதியளிக்கிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:19–20 பார்க்கவும்.)

ஊழியக்காரர்கள்

நாம் உடன்படிக்கையின் ஜனம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேருபவர்கள் தேவனின் உடன்படிக்கை ஜனமாகிறார்கள். ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களையும் பொறுப்புகளையும் அவர்கள் பெறுகிறார்கள் (கலாத்தியர் 3:27–29 பார்க்கவும்). தேவனின் உடன்படிக்கை ஜனத்தின் ஒரு பகுதியாக இருப்பது என்பது நாம் கிறிஸ்துவை நெருங்கி வரும்போது ஒருவருக்கொருவர் உதவுவதாகும். பூமியிலுள்ள தேவனின் சபையைப் பலப்படுத்த நாம் பணியாற்றுகிறோம் என்பதும் இதன் பொருள். நாம் நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளும்போது, தேவனிடமிருந்து வல்லமையையும் பலத்தையும் காணலாம்.