“நாம் ஏன் தசமபாகம் செலுத்துகிறோம்,” லியஹோனா, டிசம். 2022.
லியஹோனா மாதாந்தர செய்தி, டிசம்பர் 2022
நாம் ஏன் தசமபாகம் செலுத்துகிறோம்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை சபைக்கு செலுத்துகிறார்கள். இது தசமபாகம் என அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமிலுள்ள சபையின் பணிகளை மேற்கொள்ள பணம் பயன்படுத்தப்படுகிறது.
தசமபாகம் என்றால் என்ன?
நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கான தசமபாகத்தை அவருடைய சபைக்கு செலுத்த வேண்டும் என்பது தேவனின் கட்டளைகளில் ஒன்றாகும். நாம் தசமபாகம் செலுத்தும்போது, நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நம் நன்றியைக் காட்டுகிறோம். நாம் கர்த்தரை நம்புகிறோம் என்பதையும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிய ஆயத்தமாக இருக்கிறோம் என்பதையும் நாம் காட்டுகிறோம்.
பழைய ஏற்பாட்டு கதைகள்
பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே தேவனுடைய மக்கள் தசமபாகம் கொடுத்திருக்கிறார்கள் உதாரணமாக, ஆபிரகாம் தசமபாகத்தை செலுத்தினான் (ஆதியாகமம் 14:18–20 பார்க்கவும்) மோசே, மல்கியாவையும் உள்ளடக்கி பூர்வகால தீர்க்கதரிசிகளாலும் தசமபாக நியாயப்பிரமாணம் போதிக்கப்பட்டது (லேவியராகமம் 27:30–34; நெகேமியா 10:35–37; மல்கியா 3:10 பார்க்கவும்).
தசமபாக நியாயப்பிரமாணம் மறுஸ்தாபிக்கப்படுதல்
சபை உறுப்பினர்கள் எவ்வாறு தசமபாகத்தைச் செலுத்தவேண்டுமென 1838 ம் ஆண்டில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கர்த்தரிடம் கேட்டார். உறுப்பினர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை சபைக்கு கொடுக்க வேண்டும் என்ற தேவனின் பதில் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. (வசனம் 4 பார்க்கவும்). “ஆர்வம்” என்றால் வருமானம் என சபைத் தலைவர்கள் போதித்திருக்கிறார்கள்.
தசமபாகத்தை எவ்வாறு செலுத்துவது
donations.ChurchofJesusChrist.orgல் ஆன்லைன் நன்கொடை படிவத்தை நிரப்புவதன் மூலம் தசமபாகம் செலுத்தலாம். அல்லது ஒரு காகிதப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆயத்துவம் அல்லது கிளைத் தலைமை பதவியில் உள்ள ஒருவருக்கு பணத்தைக் கொடுக்கலாம். அனைத்து பணமும் சபைத் தலைமையகத்திற்கு அனுப்பப்படுகிறது, அங்கு சபைத் தலைவர்கள் (பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் மற்றும் ஆயத்துவ தலைமை) அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஜெபத்துடன் தீர்மானிக்கிறார்கள்.
ஆசீர்வாதங்கள்
தசமபாகம் செலுத்துபவர்கள் உலகப்பிரகார ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் அவரைப்பற்றி அறிந்து கொள்ளவும், சுவிசேஷத்தில் வளரவும் தசமபாகம் வாய்ப்பளித்து ஆசீர்வதிக்கிறது.
தசமபாக நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது
தசமபாக பணம் உலகம் முழுவதும் கர்த்தருடைய சபையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் மற்றும் பிற சபை கட்டமைப்புகளை கட்டுதல், வேதங்கள் மற்றும் பிற பொருட்களை அச்சிடுதல், சபைக்கு சொந்தமான பள்ளிகளுக்கு நிதியளித்தல் மற்றும் குடும்ப வரலாறு மற்றும் ஊழியப் பணிகளுக்கு உதவுதல் ஆகியவை இதில் அடங்கும்.
தசமபாக அறிவிப்பு
ஆண்டிற்கு ஒருமுறை, சபை உறுப்பினர்கள் தங்கள் ஆயரை (அல்லது கிளைத் தலைவர்) சந்தித்து, தாங்கள் முழு தசமபாகம் செலுத்துபவர்களா என்று அவரிடம் கூறுவார்கள்.
தசமபாகம் என்ன வழங்குகிறது
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, December 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18318 418