லியஹோனா
வனாந்தரத்தில் நமது ஒளி
ஜனுவரி 2024


“வனாந்தரத்தில் நமது ஒளி,” லியஹோனா, ஜனு. 2024.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனுவரி 2024

வனாந்தரத்தில் நமது ஒளி

மார்மன் புஸ்தகத்தை உண்மையாகப் படித்து, அதன் கொள்கைகளின்படி வாழ்ந்து, அதன் உண்மைத்தன்மையைப் பற்றி ஜெபிப்பவர்கள் பரிசுத்த ஆவியை உணர்ந்து, இரட்சகரின் மீதான நம்பிக்கையிலும், சாட்சியிலும் வளர்வார்கள்.

படம்
ஒளிரும் கற்களுடன் யாரேதின் சகோதரன்

ஒளிரும் கற்களுடன் யாரேதின் சகோதரனின் உருவம் - நார்மண்டி பவுல்டர்

ஒரு சிறுவனாக இருந்தபோதும், மார்மன் புஸ்தகத்தின் சாட்சி என்னிடம் இருந்தது. “வாக்குத்தத்தத்தின் தேசம்” நோக்கிய பயணத்தில் யாரேதின் சகோதரன் மற்றும் அவரது ஜனங்கள் பற்றிய கதையால் நான் குறிப்பாக கவரப்பட்டேன். (ஏத்தேர் 2:9).

ஒளியில்லாத படகுகளில் பயணம் செய்யும் வாய்ப்பை எதிர்கொண்டபோது, யாரேதின் சகோதரன் கேட்டான், “இதோ, கர்த்தாவே நாங்கள் இந்த பெரும் தண்ணீரைக் காரிருளிலே கடக்க நீர் அனுமதிப்பீரோ?” அதற்கு பதிலாக கர்த்தர் சொன்னார், “உங்களுடைய மரக்கலங்களில் ஒளி உண்டாயிருக்க நான் என்ன செய்யவேண்டுமென நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள்?” (ஏத்தேர் 2:22, 23).

கர்த்தர் வல்லமையுள்ளவர் என்பதை யாரேதின் சகோதரன் அறிந்தான். எல்லா ஒளிக்கும் கர்த்தர் தான் ஆதாரம் என்பதை அவன் அறிந்தான். தேவைப்படும் நேரத்தில் தம்மைக் கூப்பிடுமாறு கர்த்தர் தன் மக்களுக்குக் கட்டளையிட்டிருப்பதை அவன் அறிந்தான். எனவே, கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து, யாரேதின் சகோதரன் 16 சிறிய கற்களை தயார் செய்தான். அப்போது அவன் கர்த்தரிடம் கற்களைத் தன் விரலால் தொடச் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா, “அவைகள் காரிருளிலே பிரகாசிக்கும்படிக்கு.” (ஏத்தேர் 3:4).

அந்தக் கதையைப் படித்ததில் இருந்தே அந்தக் கற்களைத் தொடும் கர்த்தரின் உருவம் என் மனதில் பதிந்துவிட்டது. அந்த காட்சி என் கண் முன்னே நடப்பது போல் நான் பார்க்க முடியும். ஒரு வேளை, ஒளியால் இருளின் பிம்பம் அகற்றப்படும் என்பது என்னைப்பொருத்தவரை நிஜமாக இருப்பதால் இருக்கலாம்.

நான் பரிசுத்த ஆவியை உணராதபோது, கர்த்தருடைய ஆவியிலிருந்து நான் சற்று விலகி இருக்கும்போது, நான் இருளை உணர்கிறேன். ஆனால் நான் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது, வெளிச்சம் திரும்புகிறது. மார்மன் புஸ்தகம் கர்த்தரால் தொடப்பட்ட ஒரு ஒளிரும் கல் போல எனக்கு இருந்தது. அது என் வாழ்க்கைப் பயணத்தை ஒளிரச் செய்தது.

என்றென்றைக்குமான ஒரு ஒளி

பண்டைய அமெரிக்காவிற்கு கர்த்தரின் கரத்தால் கொண்டு வரப்பட்டதைப் போல, வாக்குறுதியளிக்கப்பட்ட மேன்மையின் தேசத்திற்கான பயணத்தின் போது நாம் அனைவரும் புயல்களையும் இருண்ட நாட்களையும் எதிர்கொள்கிறோம். ஆனால் கர்த்தர் யாரேதியர்களுக்கும் நேபியர்களுக்கும் செய்ததை நமக்கும் செய்வார். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர்மீது விசுவாசம் வைத்து, அவருடைய உதவிக்காக மன்றாடினால், அவர் நம்மை வழிநடத்துவார், நம் வழியை ஒளிரச் செய்வார்.

கர்த்தர் நேபியிடம் சொன்னார், “நான் வனாந்தரத்தில் உங்களுக்கு ஒளியாயிருப்பேன்; நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களெனில், நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்; ஆகையால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளும் அளவில், நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நடத்திச் செல்லப்படுவீர்கள்; மேலும் என்னால் நடத்திச் செல்லப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்” (1 நேபி 17:13).

நேபியின் சகோதரனான யாக்கோபிடம் கர்த்தர் சொன்னார், “என்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்களுக்கு, நான் என்றென்றைக்கும் ஒளியாய் இருப்பேன்.” (2 நேபி 10:14).

இரட்சகர்பற்றி, தீர்க்கதரிசி அபிநாதி சாட்சியளித்தான், “அவரே உலகத்தின் ஒளியாயும், ஜீவனுமாயிருக்கிறார்; ஆம், அந்த ஒளி நித்தியமானதாயும், ஒருபோதும் அந்தகாரமடையாததாயும் இருக்கிறது.” (மோசியா 16:9).

தம்மைக்குறித்து இரட்சகர் சாட்சியளித்தார், “நானே உலகத்தின் ஒளியும், ஜீவனுமாயிருக்கிறேன்.” அவர் மேலும் சொன்னார், “இதோ, நானே ஒளியாயிருக்கிறேன்; நான் உங்களுக்காக உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்” (3 நேபி 9:18; 18:16).

படம்
தலைவர் ரசல் எம். நெல்சன் நடக்கிறார்

ஒளியை உணர்தல்

நான் நமது தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனை நேசிக்கிறேன். அவர் பக்கத்தில் பணியாற்றும் பாக்கியம் எனக்கு உண்டு. அவர் ஒரு அறைக்குள் நுழைந்தால், அந்த அறை உடனடியாக பிரகாசமாக உணரப்படுகிறது. அவர் கிறிஸ்துவின் ஒளியை தன்னுடன் எடுத்துச் செல்கிறார்.

கிறிஸ்துவின் ஒளி உண்மையானது. அது “கிறிஸ்து மூலம் தேவனிடமிருந்து வரும் தெய்வீக ஆற்றல், வல்லமை அல்லது செல்வாக்கு மற்றும் எல்லாவற்றுக்கும் வாழ்வையும் ஒளியையும் தருகிறது.” இது ஒரு போற்றுதலுக்குரிய ஆவிக்குரிய வரம், இது தேவனின் குழந்தைகளை பரிசுத்த ஆவியானவர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு இட்டுச் செல்லும்.1 மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது அந்த ஒளியை பலப்படுத்துகிறது.

சில சமயங்களில் நம் பயணத்தில் நமக்கு எப்படி உதவியது என்பதை நினைவில் கொள்ள நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டும். நாம் திரும்பிப் பார்க்கும்போது, மீட்பரின் செல்வாக்கை நாம் மீண்டும் உணர முடியும். “நினைவுகூருங்கள், நினைவுகூருங்கள்” (ஏலமன் 5:12),என வேதங்கள் சொல்லும்போது, அவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், “நீங்கள் ஒருமுறை அறிந்த அல்லது உணர்ந்ததை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள்; மாறாக, அந்த ஒளியை மீண்டும் உணருங்கள்.”

சிலருக்கு, ஆவிக்குரிய ஒளியை உணர்வது எளிதாக வருகிறது. தனிப்பட்ட போராட்டங்கள் அல்லது உலகப்பிரகார திசைதிருப்பல்கள் காரணமாக மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஒளியை உணர்வது கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் விசுவாசத்துடன் இருந்தால், எதிர்பாராத விதத்தில் ஒளி வரும்.

“ஒவ்வொரு நாளும் ஜெபத்துடன் மார்மன் புஸ்தகத்தை படிக்க வேண்டும்,”2 என நமக்கு ஆலோசனை வழங்கிய தலைவர் நெல்சன், மார்மன் புஸ்தகம் எவ்வாறு கர்த்தரிடம் நெருங்கிவர நமக்கு உணர உதவும், சுவிசேஷத்தின் ஒளியை உணர, சுவிசேஷ சத்தியங்களை பற்றிக்கொள்ளவும் வழிகாட்டும் சில வழிகளைப் பகிர்ந்துள்ளார்.

மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றிய நமது புரிதலும், அதற்கான மதிப்பும் அதிகரிக்கும் என்று தலைவர் நெல்சன் கூறினார்.

“மீண்டும் பிறக்க வேண்டும்’ (மோசியா 27:25) என்ற விருப்பம் வரும், இந்த புஸ்தகம் நம் இருதயத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு உதவும்.”

இஸ்ரவேலின் கூடுகையைப் பற்றிய மார்மன் புஸ்தகத்தைப் படித்துப் படிக்கும்போது, ​​நம் மரித்தோரைத் தேடுவதற்கும், ஆலயத்தில் அவர்களுக்கு இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்களைச் செய்வதற்கும் நாம் அதிக ஆசைப்படுவோம்.

நமது கேள்விகளுக்கான பதில்களையும், முடிவுகளை எடுப்பதில் வழிகாட்டுதலையும், மனந்திரும்புவதற்கும், தீமையைத் தாங்கும் வலிமையைப் பெறும்போதும் நாம் இலகுவாக உணர்வோம்.

மேலும் மார்மன் புஸ்தகத்தில் காணப்படும் சத்தியங்களை நாம் படிக்கும்போது, நம் ஆத்துமாவுக்கு குணப்படுத்துதல், ஆறுதல், மறுஸ்தாபிதம், உதவி, பலம், ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியை உணர்வோம்.3

“அப்படியென்றால், இது நிஜமன்றோ?” சத்தியம், அறிவு மற்றும் சாட்சியத்தின் விரிவடைந்து, முளைக்கும் விதை பற்றி ஆல்மா கேட்டான். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம் அது ஒளியாயிருப்பதினிமித்தமே; ஒளியாயிருக்கிற எதுவும் பகுத்தறியக்கூடியதாய் இருப்பதால், நல்லதாயிருக்கிறது. ஆதலால் அது நல்லதென்று நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்; ” (ஆல்மா 32:35).

படம்
இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

கிறிஸ்துவின் உருவம் – ஹெய்ன்ரிச் ஹோப்மான்

இருளில் இரட்சகரைக் கண்டுபிடியுங்கள்

எனது தோழி கம்ரினுக்கு 10 வயதாக இருந்தபோது, அவளுக்கு ஒரு அரிதான ஆனால் நிரந்தரமான கண் நோய் ஏற்பட்டது, அது அவளுடைய வலது கண்ணின் விழி வெண்படலத்தை பாதித்தது.4 சில சமயங்களில், அதன் தொடர்புடைய வலி நிலையானதாகவும் தாங்க முடியாததாகவும் மாறியபோது, கம்ரினால் எந்த ஒளியையும் தாங்க முடியவில்லை. அவள் பார்வையற்றவளாகிவிடுவாளா என்று கவலைப்பட்ட அவளுடைய பெற்றோர், அவளை வசதியாக வைத்திருக்க முயற்சிப்பதற்காக அவளது படுக்கையறையின் ஜன்னல்களை இருட்டாக்கி விடுவார்கள். கம்ரினின் தாயார் ஜன்னா நினைவு கூர்ந்தார்:

“அவளது நோயறிந்த சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, நான் அவளுடைய இருண்ட அறைக்குள் சென்றேன். என் கண்கள் சரிசெய்துகொண்டபோது, ​​காம்ரின் அவள் படுக்கையில் கரு நிலையில் சுருண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவள் மிகவும் வேதனையில் இருந்தாள், நான் உள்ளே வந்ததைக் கேட்டதும் அவள் அசையவில்லை அல்லது அழவில்லை. அவள் கண்கள் இரண்டும் வீங்கிய நிலையில் அப்படியே படுத்திருந்தாள்.

“நான் அவளது படுக்கையில் மண்டியிட்டு, அவள் கையை என் கையில் எடுத்து மூன்று முறை அழுத்தினேன்-’ஐ லவ் யூ’ என்பதற்கான எங்கள் ரகசிய குறியீடு. பொதுவாக அவள் ‘ஐ லவ் யூ மோர்’ என்று நான்கு முறை பின்னுக்குத் தள்ளுவாள், ஆனால் அவள் பதிலளிக்கவில்லை. அவள் அதிக வலியில் இருந்தாள். என் கன்னங்களில் கண்ணீர் வழிய, நான் ஒரு பந்தாக நொறுங்கிய என் 10 வயது குழந்தையைப் பார்த்தேன். என் இருதயம் நொருங்கியது.

ஜன்னா ஒரு அமைதியான, இதயப்பூர்வமான ஜெபத்தில் கூறினார்.

“பரலோக பிதாவுக்கு நன்றாகத் தெரியும் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னேன், ஆனால் ‘தயவுசெய்து அவளுக்கு உதவுங்கள்’ என்று ஜெபித்தேன். நான் அங்கே அமர்ந்து ஜெபம் செய்தபோது, ஒரு இதமான அலை என்னைக் கழுவியது. இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியபோது நான் அமைதியாக உணர்ந்தேன்: ‘அவரே ஒளி. இருளில் அவரைக் கண்டுபிடி.’”

ஜன்னா தன் தலையை உயர்த்தி கம்ரினின் காதில் கிசுகிசுத்தார்: “நீ இரட்சகரை இருளில் கண்டுபிடிக்க வேண்டும்.”

அதன்பிறகு, சபையின் நூலக செயலியில் பாடல்கள் மற்றும் வேதங்களைக் கேட்டு கம்ரின் தூங்கினாள்.

படம்
கண் பட்டை அணிந்த சிறுமி

அவளது கண் தொற்று அதிகரித்தபோது, கம்ரின் இரட்சகரை இருளில் காண்கிறாள்.

கம்ரின் குடும்பத்தின் புகைப்படம் உபயம்

கம்ரினின் நோய் பெரும்பாலான நேரங்களில் செயலற்ற நிலையில் இருக்கும், ஆனால் அவள் தாக்குதலால் பாதிக்கப்படும் போது, ஜன்னாவும் அவள் கணவர் டேரினும் அவளை ஆறுதல்படுத்தி, மீண்டும் அவளது படுக்கையறை ஜன்னல்களுக்கு மேல் போர்வைகளைப் போட்டனர். அந்த வேதனையான சமயங்களில், “நான் இரட்சகரை இருளில் காண்கிறேன்” என்று கம்ரின் கூறுகிறாள்.5

“வாழ்க்கை மந்தாரமான இருண்ட வனாந்தரமாக” தோன்றும்போது (1 நேபி 8:4), நாமும் இரட்சகரை இருளில் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். மார்மன் புஸ்தகம், “இயேசுவே கிறிஸ்து, நித்திய தேவன்”6 என்பதற்கான சாட்சியுடன், நம்மை அவரிடம் அழைத்துச் செல்லும் என்று நான் சாட்சி கூறுகிறேன். மார்மன் புஸ்தகத்தை உண்மையாகப் படித்து, அதன் கொள்கைகளின்படி வாழ்ந்து, அதன் உண்மைத்தன்மையைக் குறித்து ஜெபிப்பவர்கள் பரிசுத்த ஆவியை உணர்ந்து, இரட்சகரின் மீதான நம்பிக்கையையும், சாட்சியையும் அதிகரிப்பார்கள் என்பதை நான் அறிவேன்.

இந்த “மிகச் சரியான” புஸ்தகம்7 வாசிப்பதன் மூலமும், பொக்கிஷமாக வைப்பதன் மூலமும், உலகத்தின் வெளிச்சத்தில் நம்முடைய நம்பிக்கையையும் மற்றவர்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தப் பயன்படுத்துவதன் மூலமும் அதற்கு நன்றியைக் காட்டுவோம்.

குறிப்புகள்

  1. See Topics and Questions, “Light of Christ,” topics.ChurchofJesusChrist.org.

  2. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?,” Liahona, Nov. 2017, 62–63.

  3. See Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?,” 62, 63.

  4. Herpes simplex virus keratitis.

  5. தங்கள் கதையைப் பகிர்ந்ததற்காக ஜன்னா கேனனுக்கும் அவரது மகள் கம்ரினுக்கும் நன்றி.

  6. மார்மன் புஸ்தக தலைப்புப் பக்கம்.

  7. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 64.

அச்சிடவும்