“பிற்சேர்க்கை C: மூன்று சாட்சிகள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“பிற்சேர்க்கை C,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020
பிற்சேர்க்கை C
மூன்று சாட்சிகள்
ஜோசப் ஸ்மித்திடம் தூதன் மரோனி முதல் முறையாக வந்த காலத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக, 1829 வரை தங்கத் தகடுகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் ஜோசப் மட்டுமே. அவர் ஜனங்களை ஏமாற்றுகிறார் என்று நம்பியவர்களிடமிருந்து கடுமையான விமரிசனத்திற்கும் துன்புறுத்தல்களுக்கும் இது வழிகோலியது. மார்மனின் புஸ்தகத்தை ஜோசப் மொழிபெயர்த்தபோது கர்த்தர் அந்தத் தகடுகளைப் பார்க்கப் பிறரையும் அனுமதிப்பார் என்றும் அவர்களும் “அந்தப் புஸ்தகம் மற்றும் அதில் உள்ள காரியங்களின் உண்மை குறித்து சாட்சி பகர்வார்கள்” என்றும் அறிந்து கொண்டார், ஆகவே அவர் அடைந்த மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். (2 நேபி 27:12–14: 2 நேபி 11:3; ஏத்தேர் 5:2–4ஐயும் பார்க்கவும்)
ஜூன் 1829ல், ஆலிவர் கௌட்ரி, டேவிட் வெட்மெர், மற்றும் மார்ட்டின் ஹாரிஸ் ஆகியோர் மார்மன் புஸ்தகம் தீர்க்கதரிசனமாக உரைத்த அந்த மூன்று சாட்சிகளாக அவர்களிருக்க அனுமதி கோரினர். கர்த்தர் அவர்களது விருப்பத்தின்படி அருளினார் (கோ& உ 17பார்க்கவும்) ஒரு தூதனை அனுப்பி அவர்களுக்கு தகடுகளைக் காட்டினார். இந்த மூவரும் மூன்று சாட்சிகளாயினர், மேலும் அவர்களது எழுதப்பட்ட சாட்சி மார்மன் புஸ்தகத்தின் ஒவ்வொரு நகலிலும் சேர்க்கப்பட்டது.1
ஏன் இந்த மூன்று சாட்சிகளின் சாட்சியுரை மிகவும் கட்டாயமாயிருக்கிறது என்று தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் விளக்கினார்: “மார்மன் புஸ்தகத்துக்கு இந்த மூன்று சாட்சிகளின் சாட்சியுரை மிகவும் வலிமையாக நிற்கிறது. அது பொய்யாக இருந்திருந்தால் அல்லது ஏதேனும் துல்லியமாக இல்லாதிருந்திருந்தால் விவரங்களை தெரிந்துகொள்ள, மூவர்களில் ஒவ்வொருவரும் தன் சாட்சியை நிராகரிக்க அதிக காரணமும் வாய்ப்பும் இருந்தது, நன்றாகத் தெரிந்தபடி, சபையின் பிற தலைவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் அல்லது பொறாமைகளால், இந்த மூன்று சாட்சிகளும் ஒவ்வொருவராக தங்கள் சாட்சியுரை வெளியிடப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையிலிருந்து சபைவிலக்கம் செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட முயற்சியை ஆதரிக்க ஒரு பொது ஆர்வம் இல்லாமல் மூன்று பேரும் தங்கள் தனித்தனி வழிகளில் சென்றனர். ஆனாலும் தங்கள் வாழ்வின் இறுதிவரை, அவர்களின் சபை விலக்கத்திற்குப் பின் 12லிருந்து 50 வரையான ஆண்டு காலகட்டம், வெளியிடப்பட்ட சாட்சியுரையில் இருந்து ஒரு சாட்சி கூட விலகவுமில்லை அல்லது அதன் சத்தியத்தின் மேல் நிழல் படியுமாறு ஒன்றையும் கூறவுமில்லை”2
தங்கள் வாழ்வின் இறுதிவரை, மூன்று சாட்சிகளும் மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய தங்கள் உண்மையின் மேல் தள்ளாட்டமின்றி இருந்தனர்.
ஆலிவர் கௌட்ரி
தன் மரணத்துக்கு சிறிது காலம் முன்னர் சபைக்குள் மறு ஞானஸ்நானம் பெற்றுவந்த ஆலிவர், மிசௌரி, ரிச்மண்ட் வழியாக ஊழிய சேவை செய்ய இங்கிலாந்து சென்று கொண்டிருந்த மூப்பர் ஜேக்கப் கேட்ஸ் என்ற இன்னொரு ஊழியரை சந்தித்தார். அவரது மார்மன் புஸ்தகத்தின் சாட்சியைப்பற்றி ஆலிவரிடம் மூப்பர் கேட்ஸ் கேட்டார். ஆலிவரின் பதிலைப்பற்றி மூப்பர் கேட்டின் மகன் கூறினார்:
இவ்வாறு அவரைக் கேட்டது ஆலிவரை ஆழமாகத் தொட்டது போலத் தோன்றியது. அவர் ஒரு வார்த்தையும் பதில் கூறவில்லை, ஆனால் தன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தார், புஸ்தக அலமாரியிடம் சென்றார், மார்மன் புஸ்தகத்தின் முதல் பதிப்பு ஒன்றை எடுத்தார், மூன்று சாட்சிகளின் சாட்சியுரையைப் புரட்டினார், பின் இருபது வருடங்களுக்கு முன்னர் தம் பெயரில் பதிவுசெய்திருந்த வார்த்தைகளை மிகவும் பவித்திரமான முறையில் வாசித்தார். என் தகப்பனாரைப் பார்த்து அவர் கூறினார்: ‘ஜேக்கப், நான் உன்னிடம் கூறுவதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் நான் மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒரு மனிதன், உங்களிடம் ஒரு பொய்யைக் கூறினால் எனக்கு கிடைக்கும் நன்மை என்ன? ‘அதாவது இந்த மார்மன் புஸ்தகத்தின் தேவனுடைய வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்க்கப்பட்டது என எனக்குத் தெரியும்,’ என அவர் கூறினார். என் கண்கள் கண்டன, என் காதுகள் கேட்டன, என் புரிந்துகொள்ளுதல் தொடப்பட்டது, மேலும் நான் சத்தியத்துக்கு சாட்சி பகர்ந்தேன் என்று எனக்குத் தெரியும். அது கனவல்ல, மனதின் வீணான கற்பனையுமல்ல-அது உண்மையானது.’”3
டேவிட் விட்மெர்
அவரது கடைசி காலத்தில், மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய தன் சாட்சியைத் தாம் மறுத்துவிட்டதாக எழுந்த வதந்திகளைப்பற்றி டேவிட் விட்மெர் அறிந்தார் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, ஒரு கடிதத்தில் டேவிட் தனது சாட்சியை மறுபடியும் உறுதிப்படுத்தினார், அது உள்ளூர் செய்தித் தாள் ஒன்றில் வெளியிடப்பட்டது, the Richmond Conservator:
“உலகம் சத்தியத்தை அறிவதற்காக, வாழ்க்கையின் சூரியமறைவில் நின்றுகொண்டு , எப்போதுமுள்ள தேவ பயத்தோடு, அனைவருக்கும் ஒரு முறை இதைப் பொது அறிவிப்பாகச் செய்ய இப்போது நான் விரும்புகிறேன்:
“மூன்று சாட்சிகளில் ஒருவராக, வெகு காலத்திற்கு முன் புஸ்தகத்தோடு வெளியிடப்பட்ட அந்த சாட்சியையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ நான் ஒருபோதும் எந்நேரத்திலும் மறுத்தது இல்லை. அந்த சாட்சியில் நான் எப்போதும் உறுதியாக இருந்ததை என்னை நன்கு அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள். அதைப்பற்றிய என்னுடைய தற்போதைய எண்ணத்தைப்பற்றி யாரும் தவறாக வழிநடத்தப்படவோ அல்லது சந்தேகப்படவோ கூடாது என்பதற்காக, நான் அப்போது எழுதி வெளியிடப்பட்டபடியே என் அனைத்துக் கூற்றுகளின் உண்மையையும் மறுபடியுமாக உறுதி செய்கிறேன்.
“’காதுள்ளவன் கேட்கக்கடவன்,’ அது ஒரு மாயை அல்ல! எழுதப்பட்டது எழுதப்பட்டதே, வாசிக்கிறவன் புரிந்துகொள்ளட்டும்.”4
மார்ட்டின் ஹாரிஸ்
ஆலிவர் கௌட்ரியைப் போலவே, மார்ட்டின் ஹாரிஸூம் சபையை விட்டு சிலகாலம் விலகி இருந்தார், ஆனால் இறுதியாக மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். தமது கடைசிக் காலங்களில், அவர் தமது கரங்களில் மார்மன் புஸ்தகத்தின் ஒரு நகலை வைத்துக்கொண்டு அதன் உண்மையைக் குறித்து காது கொடுத்து கேட்டவர்கள் எல்லோரிடமும் சாட்சிபகர்ந்தார் என்பது யாவரும் அறிந்த செய்தியே: “மார்மன் புஸ்தகம் மெய்யாகவே உண்மையானது என்பதை நான் அறிவேன். அந்த புஸ்தகத்தின் உண்மையை எல்லோரும் மறுத்தாலும், நான் மறுக்கத் துணிய மாட்டேன். என்னுடைய இருதயம் உறுதியாக இருக்கிறது ஓ தேவனே, என்னுடைய இருதயம் உறுதியாக இருக்கிறது! எனக்குத் தெரிந்ததை விட மிக உண்மையாக அல்லது நிச்சயமாக என்னால் எதையும் அறிய முடியாது.”5
மார்ட்டினை நன்கு அறிந்த ஜார்ஜ் காட்ஃபிரே எழுதினார்: “அவர் இறப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் … மார்மன் புஸ்தகம் வெளிவருவதைப்பற்றி எழுதப்பட்ட மற்றும் கூறப்பட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் ஒரு துளியாவது ஏமாற்றோ பொய்மையோ உள்ளது என்று நீங்கள் உணரவில்லையா என்று நான் [மார்ட்டினிடம்] கேட்டேன் … மேலும் அவர் கூறினார்: ‘மார்மன் புஸ்தகம் போலியானது அல்ல. எனக்குத் தெரிந்ததை நான் அறிவேன் நான் பார்த்தவற்றை நான் பார்த்தேன் மற்றும் நான் கேட்டவற்றை நான் கேட்டேன். எந்த தங்கத் தகடுகளிலிருந்து மார்மன் புஸ்தகம் எழுதப்பட்டதோ அவற்றை நான் பார்த்தேன். ஒரு தூதன் எனக்கும் மற்றவர்களுக்கும் முன்தோன்றி பதிவின் உண்மைத்தன்மைக்கு சாட்சி அளித்தான், பொய்சாட்சி கூறி நான் இப்போது தாங்கி நிற்கும் சாட்சிக்கு எதிராகத் தவறாக வாக்குமூலம் அளிக்க விரும்பியிருந்தால் நான் பணக்காரனாக இருந்திருப்பேன், ஆனால் நான் கூறியவற்றிற்கு மற்றும் இப்போதும் செய்து வருவதற்கு மாறாக எதையும் சாட்சி பகர்ந்திருக்க முடியாது ஏனெனில் இந்த காரியங்கள் உண்மையானவைகள்.’”6
“எத்தனை அதிகமான சாட்சிகள் இருந்தாலும் அவைகள் அவரை நல்லவராகவே காண்கின்றன”
சபைக்கு உள்ளும் வெளியேயும் ஏற்பட்ட அனுபவத்தைக் கணக்கில் கொள்ளும்போது மூன்று சாட்சிகளின் சாட்சியுரைகள் குறிப்பிடத்தக்க அளவில் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன.7 இவை எல்லாவற்றின் மூலமாகவும், ஆலிவர், டேவிட் மற்றும் மார்ட்டின் தங்களுக்குக் கிடைத்த அனுபவத்தைப்பற்றி சாட்சி பகர்வதை ஒரு போதும் நிறுத்தவில்லை மேலும் மார்மன் புஸ்தகம் தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்க்கப்பட்டது என்பதற்கு சாட்சிகளாக விளங்கினர். மேலும் அவர்கள் மட்டுமே அல்ல.
முற்காலத்தில், நேபி அறிவித்தார், “கர்த்தராகிய தேவன் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளை வெளியே கொண்டுவரும்படி புறப்படுவார். அவருக்கு நன்மையாய்ப்படுகிறபடியே அநேக சாட்சிகளின் வாயினாலே அவர் தம் வார்த்தையை ஸ்தாபிப்பார்” (2 நேபி 27:14). ஜோசப் ஸ்மித் மற்றும் மூன்று சாட்சிகள் தவிர, தகடுகளைக் காண கர்த்தர் மேலும் எட்டு சாட்சிகளைத் தேர்ந்தெடுத்தார். மார்மன் புஸ்தகத்தின் ஒவ்வொரு நகலிலும் அவர்களது சாட்சி சேர்க்கப்பட்டுள்ளது. ஆலிவர், டேவிட் மற்றும் மார்ட்டினைப் போலவே, எட்டு சாட்சிகளும் மார்மன் புஸ்தகத்தைப்பற்றியும் தாங்கள் தங்கத் தகடுகளைக் கண்டதைப்பற்றியும் உண்மையுள்ளவர்களாக நிலைத்தனர்.
முதன்முதலில் மனமாற்றம் அடைந்து சபையில் இணைந்தவர்களில் ஒருவரான வில்லியம் இ. மெக்லெல்லின் மார்மன் புஸ்தகத்தின் பல சாட்சிகளை அறிந்திருந்தார். முடிவில் வில்லியம் சபையை விட்டு விலகிவிட்டார் என்றாலும் சாட்சிகளிடம் இருந்து தாம் கேட்ட வலிமைவாய்ந்த சாட்சிகளினால் ஆழமாகப் பாதிக்கப்பட்டவராகவே இருந்து வந்தார்.
“தமது வாழ்வின் கடைசியில் மெக்லெல்லின் எழுதினார்”, இப்போது நான் கேட்கலாம், “அறிவுக்குகந்த ஆனால் பயபக்தியான சாட்சியைத் தாங்கி நிற்கும் மேகம்போன்ற உண்மை சாட்சிகளை நான் என்ன செய்வேன்? இவர்கள் தங்கள் வாழ்க்கையின் உச்ச கட்டத்தில், தேவதூதனின் தரிசனத்தைப் பெற்றார்கள், மேலும் ஜனங்கள் அனைவருக்காகவும் சாட்சிகளாக நின்றார்கள். மேலும் எட்டு பேர் தகடுகளைக் கண்டார்கள், அவற்றைக் கையாண்டார்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் தாங்கள் அறிவித்த காரியங்கள் நிச்சயமாக உண்மை என்று அறிந்திருந்தனர். அதுவும் அவர்கள் இளமையாக இருந்த காலத்தில், மேலும் அதே விஷயங்களை இன்றும் வயதான பின்னும் அறிவிக்கிறார்கள்.”8
மூன்று சாட்சிகள் பார்த்தது போல தங்கத் தகடுகளை நாம் பார்க்கவில்லை என்றாலும், அவர்களின் சாட்சியில் இருந்து நாம் பலம் பெறலாம். சாட்சியின் காரணமாக நன்மதிப்புக்கு சவால் நேர்ந்தபோதும் பாதுகாப்புக்கும் உயிருக்கும் ஆபத்து வந்த போதும், நேர்மையான அந்த மனிதர்கள் துணிச்சலாகவும் தங்கள் சாட்சிக்கு உண்மையாகவும் இறுதிவரை நின்றார்கள்.