பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான அதிகமான வளங்கள்
பிற்சேர்க்கை A: தேவனுடைய உடன்படிக்கை பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல்


“பிற்சேர்க்கை A: பெற்றோருக்காக—தேவனுடைய உடன்படிக்கை பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல், என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“பிற்சேர்க்கை A,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024

பிற்சேர்க்கை A

பெற்றோருக்காக—தேவனுடைய உடன்படிக்கை பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல்

அவர் உங்களை நேசிப்பதால், உங்களை நம்புவதால், உங்கள் திறனை அறிந்திருப்பதால், நித்திய ஜீவனுக்கான பாதையான தமது உடன்படிக்கையின் பாதையில் உங்கள் பிள்ளைகள் நுழைவதற்கும் முன்னேறுவதற்கும் பரலோக பிதா உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–28 பார்க்கவும்). ஞானஸ்நானம் மற்றும் ஆலயத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் போன்ற பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து கடைபிடிக்க ஆயத்தப்பட அவர்களுக்கு உதவுவது இதில் அடங்கும். இந்த உடன்படிக்கைகளின் மூலம், உங்கள் பிள்ளைகள் தங்களை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுடன் பிணைத்துக் கொள்வார்கள்.

உடன்படிக்கை பாதையில் இந்த பயணத்திற்கு உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்த பல வழிகள் உள்ளன, அவர்களுக்கு உதவ சிறந்த வழியை கண்டறிய பரலோக பிதா உங்களுக்கு உதவுவார். நீங்கள் உணர்த்துதல் தேடும்போது, திட்டமிடப்பட்ட பாடங்களின் போதுமட்டுமே அனைத்து கற்றுக்கொள்ளுதலும் நடக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள். உண்மையில், வீட்டில் கற்றுக்கொள்ளுதலை மிகவும் வல்லமை வாய்ந்ததாக ஆக்குவதில் ஒரு பகுதி, உதாரணம் மூலமாகவும், சிறிய, எளிய தருணங்கள் மூலமாகவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகும், இது அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் இயற்கையாகவே நிகழ்கிறது. உடன்படிக்கைப் பாதையைப் பின்பற்றுவது ஒரு நிலையான, வாழ்நாள் செயல்முறையாக இருப்பதைப் போலவே, உடன்படிக்கைப் பாதையைப்பற்றி கற்றுக்கொள்வதும் இருக்கிறது.

தாயும் குழந்தையும்

தேவனுடைய உடன்படிக்கையின் பாதையில் உங்கள் பிள்ளைகளை அவர்களின் பயணத்திற்கு ஆயத்தப்படுத்த பல வழிகள் உள்ளன.

மேலும் உணர்த்துதலுக்கு வழிவகுக்கும் சில ஆலோசனைகள் கீழே உள்ளன. “பிற்சேர்க்கை B: ஆரம்ப வகுப்புக்காக—தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதுக்குமாக பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல்” என்பதில் ஆரம்ப வகுப்பு வயது குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான கூடுதல் யோசனைகளை நீங்கள் காணலாம்.

ஞானஸ்நானமும் திடப்படுத்தலும்

“[நாம்] பிரவேசிக்கவேண்டிய வாசல்” உடன்படிக்கைப் பாதை “மனந்திரும்புதலும், தண்ணீரினால் பெறுகிற ஞானஸ்நானமுமாயிருக்கிறது” என நேபி போதித்தான். (2 நேபி 31:17) உங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு ஆயத்தமாகுவதற்கு உதவுவதற்கான உங்கள் முயற்சிகள், அந்தப் பாதையில் அவர்களின் கால்களை உறுதியாக வைக்கலாம். இந்த முயற்சிகள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலைப்பற்றி கற்பிப்பதில் ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வாரமும் திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் நமது ஞானஸ்நான உடன்படிக்கைகளை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறோம் என்பதைப்பற்றிய போதனையும் அவற்றில் அடங்கும்.

உங்களுக்கு உதவுவதற்கு இங்கே சில வளங்கள் உள்ளன: 2 நேபி 31

  • பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மீதான உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தும் அனுபவம் உங்களுக்கு ஏற்படும் போதெல்லாம், அதை உங்கள் பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விசுவாசம் என்பது வாழ்நாள் முழுவதும் மென்மேலும் வலுவாக வளரக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள அவன் அல்லது அவளுக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு கிறிஸ்துவில் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள என்னென்ன சில காரியங்களைச் செய்யலாம்?

  • உங்கள் பிள்ளை தவறான தேர்ந்தெடுப்பை எடுக்கும்போது, மனந்திரும்புதலின் வரத்தைப்பற்றி மகிழ்ச்சியுடன் பேசுங்கள். நீங்கள் ஒரு தவறான தேர்ந்தெடுப்பை செய்யும் போது, நீங்கள் மனந்திரும்பும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு மரித்ததால், மாறுவதற்கான வல்லமையை அவர் நமக்குக் கொடுத்தார் என்று சாட்சி கூறுங்கள். உங்கள் பிள்ளை மன்னிப்பு கேட்கும்போது, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மன்னியுங்கள்.

  • உங்களுடைய ஞானஸ்நானத்தைப்பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லுங்கள். படங்களைக் காட்டி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள், இயேசு கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள உங்கள் ஞானஸ்நான உடன்படிக்கைகள் உங்களுக்கு எப்படி உதவியது, அவை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு தொடர்ந்து ஆசீர்வதிக்கின்றன என்பதைப்பற்றி பேசுங்கள். கேள்விகள் கேட்க உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்.

  • உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் தொகுதியில் ஞானஸ்நானம் நடக்கும்போது, அதைப் பார்க்க உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள். நீங்களும் உங்கள் பிள்ளையும் பார்த்த மற்றும் உணர்ந்ததைப்பற்றி ஒன்றுகூடிப் பேசுங்கள். முடிந்தால், ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட நபரிடம் பேசி, பின்வருவனவற்றைப் போன்ற கேள்விகளைக் கேளுங்கள்: “நீங்கள் எப்படி இந்த முடிவை எடுத்தீர்கள்? நீங்கள் எவ்வாறு ஆயத்தமானீர்கள்?”

  • உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் செய்வதாக உறுதியளித்த ஒன்றைச் செய்வதை நீங்கள் கவனிக்கும் போதெல்லாம், மனதாரப் பாராட்டுங்கள். ஒப்புக்கொடுத்தலை கடைப்பிடிப்பது, நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது நாம் செய்யும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு ஆயத்தமாகுவதற்கு உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது தேவனுக்கு நாம் என்ன வாக்குறுதி அளிக்கிறோம்? அவர் நமக்கு என்ன வாக்களிக்கிறார்? (மோசியா 18:8–10, 13 பார்க்கவும்).

  • நீங்களும் உங்கள் பிள்ளையும் ஒன்றாக பரிசுத்தமான அனுபவத்தை அனுபவிக்கும் போது (சபையில், வேதங்களைப் படிக்கும் போது அல்லது ஒருவருக்கு சேவை செய்யும் போது போன்ற), உங்களுக்கு ஏற்படும் ஆவிக்குரிய உணர்வுகள் அல்லது எண்ணங்களைப்பற்றி அவனிடம் அல்லது அவளிடம் சொல்லுங்கள். அவன் அல்லது அவள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள உங்கள் பிள்ளையை அழைக்கவும். ஆவியானவர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேசும் விதங்கள் உட்பட, மக்களிடம் பேசக்கூடிய பல்வேறு வழிகளைக் கவனியுங்கள். உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் பரிசுத்த ஆவியின் செல்வாக்கை அனுபவிக்கும் தருணங்களை அடையாளம் காண உதவுங்கள்.

  • கர்த்தருடைய ஊழியர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கும் வெவ்வேறு வழிகளைப்பற்றி ஒன்றாகப் பேசுங்கள். இரட்சகரின் குரலை அவர் எப்படிக் கேட்கிறார் என்பதைப்பற்றி படம் வரைய அல்லது காணொலி எடுக்க உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவளை அழைக்கவும்.

  • பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் உறுப்பினராக இருப்பது உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தது என்பதைப்பற்றி பேசுங்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்த போதும், மற்றவர்கள் உங்களுக்குச் சேவை செய்த போதும் பரலோக பிதாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் எப்படி நீங்கள் நெருங்கி வந்தீர்கள்? சபையின் உறுப்பினராக மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் பலப்படுத்துவதற்கும் வழிகளைப்பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.

  • திருவிருந்தை உங்கள் குடும்பத்தில் பரிசுத்தமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வாக ஆக்குங்கள். திருவிருந்தின்போது இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துவதற்கான வழிகளைத் திட்டமிட உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். திருவிருந்து நமக்குப் பரிசுத்தமானது என்பதை எப்படி நாம் காட்டுவோம்?

  • உங்களுடன் படித்து மகிழ சிலவற்றை உங்கள் பிள்ளை தேர்ந்தெடுக்கட்டும்.

    சிறுவன் ஞானஸ்நானம் கொடுக்கப்படுதல்

    “[நாம்] பிரவேசிக்கவேண்டிய வாசல்” உடன்படிக்கைப் பாதை “மனந்திரும்புதலும், தண்ணீரினால் பெறுகிற ஞானஸ்நானமுமாயிருக்கிறது” என நேபி போதித்தான். (2 நேபி 31:17)

ஆசாரியத்துவ வல்லமை, அதிகாரம், மற்றும் திறவுகோல்கள்

ஆசாரியத்துவம் என்பது தேவனின் அதிகாரமும் வல்லமையும் ஆகும், இதன் மூலம் அவர் தனது பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். தேவனின் ஆசாரியத்துவம் இன்று பூமியில் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையிலுள்ளது. தங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடிக்கும் அனைத்து சபை உறுப்பினர்களும் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பிள்ளைகள் உட்பட பலப்படுத்த தங்கள் வீடுகளில் தேவனின் ஆசாரியத்துவ வல்லமையால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த வல்லமை உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திலும் தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான வேலையைச் செய்ய உதவும்.

ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் நாம் நியமங்களைப் பெறுகிறோம். ஆண்களும் பெண்களும் சபை அழைப்புகளில் சேவை செய்யும்போது, அவர்கள் ஆசாரியத்துவ அதிகாரத்துடன், ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அதைச் செய்கிறார்கள். அவருடைய மகன்கள் மற்றும் அவருடைய மகள்களான பரலோக பிதாவின் எல்லாப் பிள்ளைகளும் ஆசாரியத்துவத்தை நன்றாகப் புரிந்துகொள்ளும்போது அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

ஆசாரியத்துவத்தைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள , ரசல் எம். நெல்சன், ஆவிக்குரிய பொக்கிஷங்கள்,” லியஹோனா, நவ. 2019, 76–79ஐப் பார்க்கவும்.

  • ஆசாரியத்துவ நியமங்களை உங்கள் குடும்ப வாழ்க்கையின் நிலையான பகுதியாக ஆக்குங்கள். உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் ஆவிக்குரிய ரீதியில் திருவிருந்திற்கு ஆயத்தமாக உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் நோயுற்றிருக்கும்போது அல்லது ஆறுதல் அல்லது வழிகாட்டுதல் தேவைப்படும்போது ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை நாட ஊக்குவியுங்கள். ஆசாரியத்துவ வல்லமையின் மூலம் கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும் வழிகளைச் சுட்டிக்காட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

  • நீங்கள் ஒன்றுசேர்ந்து வேதங்களை வாசிக்கும்போது, தேவன் தம்முடைய வல்லமையின் மூலம் மக்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பதைப்பற்றி விவாதிக்க வாய்ப்புகளைப் பாருங்கள். தேவன் தனது ஆசாரியத்துவத்தின் மூலம் உங்களை ஆசீர்வதித்தபோதுள்ள உங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆசாரியத்துவ அதிகார வரிசையை அறிந்துகொள்ளுங்கள். LineofAuthority@ChurchofJesusChrist.org; ChurchofJesusChrist.org.) ஆசாரியத்துவ அதிகாரம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தே வருகிறது என்பதை அறிவது ஏன் முக்கியம் என்பதைப்பற்றி பேசுங்கள். அவர் ஏன் இதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்?

  • ஞானஸ்நானத்திற்குப் பிறகு, ஞானஸ்நான உடன்படிக்கையைக் கைக்கொள்ளுவதன் மூலம் அவன் அல்லது அவள் ஆசாரியத்துவ வல்லமையைப் பெற முடியும் என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். தலைவர் ரசல் எம். நெல்சனின்செய்தியை “ஆவிக்குரிய பொக்கிஷங்கள் ஒன்றுகூடி மதிப்பாய்வு செய்யவும்” (லியஹோனா, நவ. 2019, 76–79). ஆசாரியத்துவ நியமங்கள் எவ்வாறு தேவனின் வல்லமையை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்தன என்பதை உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.

  • “கர்த்தருடைய வேலைக்காரன் எப்படிப்பட்டவன்?” என்ற கேள்வியைப்பற்றி விவாதிக்கவும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:36–42ஐ ஒன்று சேர்ந்து வாசித்து பதில்களைத் தேடவும். உங்கள் பிள்ளை (அல்லது வேறு யாராவது) இந்த வசனங்களில் உள்ள கொள்கைகள் அல்லது பண்புகளில் ஒன்றைப் பயன்படுத்துவதை நீங்கள் கவனிக்கும் போதெல்லாம், அதைச் சுட்டிக்காட்டுங்கள்.

  • நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை கதவைத் திறக்க அல்லது காரை ஓட்டத் தொடங்க திறவுகோலைப் பயன்படுத்தும் போது, அந்த திறவுகோலை ஆசாரியத்துவத் தலைவர்கள் வைத்திருக்கும் திறவுகோல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க சிறிது நேரம் எடுக்கவும். ஆசாரியத்துவத் திறவுகோல்கள் நமக்கு எதை “திறக்க” அல்லது “தொடங்க” செய்கின்றன?

  • நீங்கள் அழைப்பிற்காக பணிக்கப்படும்போது, சாத்தியமானால், உங்கள் பிள்ளையை உடனிருக்க அழைக்கவும். உங்கள் அழைப்பை நீங்கள் நிறைவேற்றுவதை உங்கள் பிள்ளை பார்க்கட்டும். அவன் அல்லது அவள் உங்களுக்கு உதவக்கூடிய பொருத்தமான வழிகளைக் கூட நீங்கள் தேடலாம். உங்கள் அழைப்பில் கர்த்தருடைய வல்லமையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்கவும்.

ஆலயத்திற்குச் செல்வது—மரித்தவர்களுக்கான ஞானஸ்நானங்களும் திடப்படுத்தல்களும்

ஆலயங்கள் பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆலயங்களில், நாம் பரிசுத்த நியமங்களில் பங்குகொள்ளும்போது பரலோக பிதாவுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்கிறோம், இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகின்றன. பரலோக பிதா தம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் உடன்படிக்கைகளைச் செய்வதற்கும், இந்த வாழ்க்கையில் அவற்றைப் பெறாதவர்கள் உட்பட நியமங்களில் பங்கேற்கவும் ஒரு வழியை வழங்கியுள்ளார். அவன் அல்லது அவள் 12 வயதை அடையும் ஆண்டின் ஆரம்பத்தில், மரித்த மூதாதையர்களுக்காக ஞானஸ்நானம் பெறவும் திடப்படுத்தவும் உங்கள் பிள்ளைக்கு, போதிய வயது உள்ளது.

  • உங்கள் சூழ்நிலை அனுமதிக்கும் அளவுக்கு அடிக்கடி ஆலயத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் ஏன் செல்கிறீர்கள் என்பதையும், பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நெருக்கமாக உணர ஆலயம் உங்களுக்கு எப்படி உதவுகிறது என்பதையும்பற்றி உங்கள் பிள்ளையிடம் பேசுங்கள்.

  • ஆலயப் பரிந்துரை கேள்விகளை ஒன்றுசேர்ந்து மதிப்பாய்வு செய்து விவாதிக்கவும். ஆலயப் பரிந்துரை நேர்காணலில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள். ஆலயப் பரிந்துரையை வைத்திருப்பது உங்களுக்கு ஏன் முக்கியம் என்பதைப் பகிரவும்.

  • மல்கியா 4:6 ஒன்றுகூடி படியுங்கள். உங்கள் இருதயங்கள் உங்கள் மூதாதையர்களிடம் எவ்வாறு திரும்பலாம் என்பதைப்பற்றி பேசுங்கள். FamilySearch.org உங்கள் குடும்ப வரலாற்றை ஒன்றுகூடி ஆராய்வதன் மூலம் உங்கள் மூதாதையர்களைப்பற்றி மேலும் அறியவும். ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தப்பட வேண்டிய மூதாதையர்களைத் தேடுங்கள். ஒரு தொகுதி ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர் உங்களுக்கு உதவ முடியும்.

  • சுவிசேஷ நூலகத்தின் பிள்ளைகள் பிரிவில் “ஆலயம்” என்ற தலைப்பில் உள்ள சில ஆதாரங்களை ஒன்றுகூடி மதிப்பாய்வு செய்யவும்.

கோத்திரப் பிதா ஆசீர்வாதம் பெறுதல்

கோத்திரப் பிதா ஆசீர்வாதம் வழிகாட்டுதல், ஆறுதல் மற்றும் உணர்த்துதலின் ஆதாரமாக இருக்கும். பரலோக பிதாவிடமிருந்து நமக்குத் தனிப்பட்ட ஆலோசனைகள் இதில் அடங்கியுள்ளன, மேலும் நமது நித்திய அடையாளத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. கோத்திரப் பிதா ஆசீர்வாதங்களின் முக்கியத்துவத்தையும் பரிசுத்த தன்மையையும் கற்பிப்பதன் மூலம் உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவளுக்கு கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தைப் பெற ஆயத்தமாக உதவுங்கள்.

  • கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தைப் பெற்ற உங்கள் அனுபவத்தை உங்கள் பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப் பெற நீங்கள் எப்படி ஆயத்தமானீர்கள், தேவனிடம் நெருங்கி வர அது உங்களுக்கு எப்படி உதவியது, உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் போன்ற காரியங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். தங்களுடைய கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தைப் பெற்ற மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கும் உங்கள் பிள்ளையை நீங்கள் அழைக்கலாம்.

  • கோத்திரப் பிதா ஆசீர்வாதங்களைப் பெற்ற மூதாதையர்கள் உங்களிடம் இருந்தால், அவற்றில் சிலவற்றை உங்கள் பிள்ளையுடன் படிப்பது உணர்த்துதலாயிருக்கலாம். மரித்த மூதாதையர்களின் ஆசீர்வாதங்களைக் கோர, ChurchofJesusChrist.org ல் உள்நுழைந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள கணக்கு ஐகானைக் கிளிக் செய்து, “Patriarchal Blessing” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உங்கள் பிள்ளை கோத்திரப் பிதா ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகு, அவர்களின் உணர்வுகளைப் பதிவுசெய்து உங்கள் பிள்ளையுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ள, அங்கிருந்த எந்தக் குடும்ப உறுப்பினர்களையும் அழைக்கவும்.

ஆலயத்திற்குச் செல்லுதல், தரிப்பித்தல்

தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் தரிப்பிக்க, அல்லது ஆசீர்வதிக்க “உன்னதத்திலிருந்து வல்லமையை” வழங்க விரும்புகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:8). ஒரே ஒரு முறை மட்டுமே நம் சொந்த தரிப்பித்தலைப் பெற, நாம் ஆலயத்திற்குச் செல்கிறோம், ஆனால் தேவனுடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளும், அவர் நமக்கு அளிக்கும் ஆவிக்குரிய வல்லமையும் தரிப்பித்தலின் ஒரு பகுதியாக நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நம்மை ஆசீர்வதிக்கும்.

  • உங்கள் வீட்டில் ஆலயத்தின் படத்தைக் காட்சியாக வைக்கவும். ஆலயத்தில் நீங்கள் அனுபவிக்கும் உணர்வுகளைப்பற்றி உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள். கர்த்தர் மீதும் அவருடைய வீடு மீதும் உங்களுக்குள்ள அன்பைப்பற்றியும், அங்கு நீங்கள் செய்துள்ள உடன்படிக்கைகளைப்பற்றியும் அடிக்கடி பேசுங்கள்.

  • temples.ChurchofJesusChrist.org. உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் ஆலயத்தைப்பற்றி ஏதேனும் கேள்விகளைக் கேட்கட்டும். ஆலயத்திற்கு வெளியே எதைப்பற்றிப் பேசலாம் என்பதற்கான வழிகாட்டுதலுக்கு மூப்பர் டேவிட் எ.பெட்னாரின் செய்தி “அவசியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக்கு” (என்சைன் அல்லது லியஹோனா, மே 2019, 101–4 ஐ முக்கியமாக “வீட்டை மையமாகக்கொண்ட மற்றும் சபை ஆதரிக்கப்பட்ட கற்றல் மற்றும் ஆலய ஆயத்தமாகுவதற்கு) தலைப்பிலுள்ள பகுதியைப் பார்க்கவும்.

  • நீங்களும் உங்கள் பிள்ளையும் மற்ற நியமங்களில் பங்கேற்கும்போது அல்லது சாட்சியாக இருக்கும்போது (திருவிருந்து அல்லது குணப்படுத்தும் ஆசீர்வாதம் போன்றவை), நியமத்தில் ஈடுபட்டிருக்கிற அடையாளத்தைப்பற்றி விவாதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். அடையாளங்கள் எதைக் குறிக்கின்றன? இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவைகள் எவ்வாறு சாட்சியமளிக்கின்றன? இது உங்கள் பிள்ளைக்கு ஆலய நியமங்களின் அர்த்தத்தைப்பற்றி சிந்திக்க ஆயத்தமாகுவதற்கு உதவும், இது இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் சாட்சியமளிக்கிறது.

  • மோசியா 18:8-10, 13ல் விவரிக்கப்பட்டுள்ள ஞானஸ்நான உடன்படிக்கையை அவன் அல்லது அவள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவளை கர்த்தர் எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பதை கவனிக்க உதவுங்கள். உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும் திறனில் உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவளுடைய தன்னம்பிக்கையை வளர்க்கவும்.

  • உங்கள் ஆலய உடன்படிக்கைகள் உங்கள் தேர்ந்தெடுப்புகளை எவ்வாறு வழிநடத்துகின்றன மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் நீங்கள் நெருக்கமாக வளர உதவுகின்றன என்பதைப்பற்றி வெளிப்படையாகவும் அடிக்கடியும் பேசுங்கள்.

ஊழியம் செய்தல்

மூப்பர் டேவிட் எ. பெட்னார் கற்பித்தார்: “சேவை செய்வதற்கான அழைப்புக்கு ஆயத்தமாக நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் ஒரு ஊழியத்திற்குச் செல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு ஊழியக்காரராக மாறுவதுதான். … பிரச்சினை ஒரு ஊழியத்திற்கு செல்வதில் இல்லை, பிரச்சினை ஒரு ஊழியக்காரராகி, நம் வாழ்நாள் முழுவதும் நமது முழு இருதயத்துடனும், வலிமையுடனும், மனதுடனும், பெலத்துடனும் சேவைசெய்தல் ஆகும். உங்கள் பிள்ளை ஒரு ஊழியக்காரராக மாறிய அனுபவங்கள், அவன் அல்லது அவள் ஒரு ஊழியக்காரராக பணியாற்றும் காலத்திற்கு மட்டுமல்ல, அவன் அல்லது அவளை நித்தியமாக ஆசீர்வதிக்கும்.

இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள, ரசல் எம். நெல்சன், “சமாதானத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்,” லியஹோனா, மே 2022, 6–7; எம். ரசல் பல்லார்ட், “ஊழிய சேவை என் வாழ்க்கையை என்றென்றும் ஆசீர்வதித்தது,” லியஹோனா, மே 2022, 8–10;ஐயும் பார்க்கவும் .

  • இயற்கையான வழிகளில் சுவிசேஷத்தை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். பரலோக பிதா மற்றும் இரட்சகரைப்பற்றிய உங்கள் உணர்வுகளையும் அவருடைய சபையின் உறுப்பினராக நீங்கள் பெறும் ஆசீர்வாதங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். சபை மற்றும் குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் உங்கள் குடும்பத்தில் சேர மற்றவர்களை அழைக்கவும்.

  • உங்கள் குடும்பம் ஊழியக்காரர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். உங்கள் நண்பர்களுக்கு கற்பிக்க அவர்களை அழைக்கவும் அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கற்பிக்க அவர்களை அனுமதிக்கவும். ஊழியக்காரர்களின் அனுபவங்களைப்பற்றியும் ஊழிய சேவை எவ்வாறு இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை நெருங்க உதவுகிறது என்பதைப்பற்றியும் அவர்களிடம் கேளுங்கள். ஊழியக்காரர்களாக இருக்க ஆயத்தமாகுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் (அல்லது அவர்கள் என்ன செய்திருக்க விரும்புகிறார்கள்) என்று கேளுங்கள்.

  • நீங்கள் ஊழியம் செய்திருந்தால், உங்கள் அனுபவங்களைப்பற்றி வெளிப்படையாகவும் அடிக்கடியும் பேசவும். அல்லது ஊழியம் செய்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடைய அனுபவத்தைப்பற்றி பேச அழைக்கவும். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்ட விதங்களைப்பற்றியும் நீங்கள் பேசலாம். அவன் அல்லது அவள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப்பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.

  • சுவிசேஷத்தின் கொள்கைகளை உங்கள் குடும்பத்துக்கு கற்பிக்க உங்கள் பிள்ளைக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். உங்கள் பிள்ளையான அவன் அல்லது அவள் தனது நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் பயிற்சி செய்யலாம். எடுத்துக்காட்டாக, “மார்மன் புஸ்தகத்தைப்பற்றி கேள்விப்படாத ஒருவருக்கு எப்படி நாம் அதை அறிமுகப்படுத்துவது?” அல்லது “கிறிஸ்தவர் அல்லாத ஒருவருக்கு இரட்சகரின் தேவையை நாம் எப்படி விவரிப்போம்”? போன்ற கேள்விகளை நீங்கள் கலந்துரையாடலாம்.

  • உங்கள் பிள்ளை மக்களுடன் பேச வசதியாக இருக்க உதவுங்கள். உரையாடலைத் தொடங்க சில நல்ல வழிகள் யாவை? மற்றவர்கள் சொல்வதை எப்படிக் கேட்பது, அவர்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கக்கூடிய சுவிசேஷத்தின் உண்மைகளைப் பகிர்ந்துகொள்வது எப்படி என்பதை அறிய உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும்.

  • உங்கள் பிள்ளை மற்ற கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைப்பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். மற்றவர்களின் நம்பிக்கைகளில் உள்ள நல்ல மற்றும் உண்மையான கொள்கைகளை அடையாளம் கண்டு மதிக்க அவன் அல்லது அவளுக்கு உதவுங்கள்.

ஆலயத்திற்குச் செல்லுதல்— முத்திரித்தல்

ஆலயத்தில் கணவனும் மனைவியும் நித்தியமாக திருமணம் செய்து கொள்ளலாம். இது முத்திரித்தல் எனப்படும் ஒரு நியமத்தில் நிகழ்கிறது. உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ பல ஆண்டுகள் தள்ளி இந்த நியமம் இருந்தாலும், அந்த ஆண்டுகளில் நீங்கள் ஒன்றுகூடிச் செய்யும் சிறிய, எளிமையான, சீரான காரியங்கள் இந்த அற்புதமான ஆசீர்வாதத்திற்கு அவன் அல்லது அவள் ஆயத்தமாகுவதற்கு உதவலாம்.

  • ChurchofJesusChrist.orgல் “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” ஒன்றாக வாசிக்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான திருமணங்களைப்பற்றி இந்த பிரகடனம் என்ன கற்பிக்கிறது? உங்கள் பிள்ளையுடன், படிப்பதற்கு பிரகடனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கொள்கைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் குடும்பத்தில் அந்தக் கொள்கையை இன்னும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு நீங்கள் இலக்குகளை அமைக்கலாம். உங்கள் இலக்குகளில் நீங்கள் வேலை செய்யும்போது, அந்தக் கொள்கைபடி வாழ்வது குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒன்றுகூடி விவாதிக்கவும்.

  • பொருட்கள் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் போது நீங்கள் எப்படி அதை வித்தியாசமாக கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பற்றி பேசுங்கள். திருமணத்தையும் குடும்ப உறவுகளையும் நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைப்பற்றி இது என்ன ஆலோசனையளிக்கிறது? பலமான திருமணங்களையும் குடும்பங்களையும் கட்டியெழுப்புவதற்கு இரட்சகர் எவ்வாறு நமக்கு உதவ முடியும் என்பதைப்பற்றி தலைவர் உக்டர்ப்பின் செய்தியிலிருந்து நாம் வேறு என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • நீங்கள் திருமணமானவராக இருந்தால், தம்பதிகளாக நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும் காரியங்கள், நீங்கள் கற்றுக்கொண்ட காரியங்கள் மற்றும் மேம்படுத்த முயற்சிக்கும் வழிகளைப்பற்றி உங்கள் பிள்ளையுடன் வெளிப்படையாக இருங்கள். நீங்களும் உங்கள் மனைவியும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டிருந்தால், ஒருவருக்கொருவர் மற்றும் கர்த்தருடன் உங்கள் உடன்படிக்கைகளை எப்படிக் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைக்கு உதாரணமாகக் காட்டுங்கள். பரலோக பிதாவையும் இரட்சகரையும் உங்கள் உறவின் மையமாக மாற்ற நீங்கள் எவ்வாறு பாடுபடுகிறீர்கள் என்பதையும் அவர்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதையும் உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.

  • குடும்ப முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் போது, குடும்ப ஆலோசனைகளையும் விவாதங்களையும் நடத்துங்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு மதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப உறவுகளில் ஆரோக்கியமான தகவல்தொடர்பு மற்றும் தயவு மாதிரியாக இருக்க, எல்லோரும் காரியங்களை ஒரே மாதிரியாக பார்க்காவிட்டாலும் கூட, இந்த விவாதங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தவும்.

  • குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்படும் போது, பொறுமை மற்றும் மனதுருக்கம் காட்டவும். கிறிஸ்துவைப் போன்ற வழிகளில் பிரச்சினைகளைக் கையாள்வது, மகிழ்ச்சியான திருமணத்திற்கு ஆயத்தமாகுவதற்கு அவன் அல்லது அவளுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் பார்க்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41–42, ஒன்றுகூடி வாசித்து, இந்த வசனங்களிலுள்ள கொள்கைகள் எவ்வாறு திருமணத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்பதைப்பற்றி பேசுங்கள்.