ஊழிய சேவை என் வாழ்க்கையை என்றென்றும் ஆசீர்வதித்தது
ஊழிய சேவை உங்கள் வாழ்க்கையை என்றென்றும் எவ்வாறு ஆசீர்வதிக்கும் என்பதை வாலிபர்களும் இளம் பெண்களுமாகிய நீங்களும் உங்கள் பெற்றோரும் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தலைவர் நெல்சன், ஊழிய சேவையைப்பற்றிய அந்த அறிவுரையை மீண்டும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
சகோதர சகோதரிகளே, பல ஆண்டுகளுக்கு முன்பு பொது மாநாட்டில் பேசும் போது, திடீரென மாகுலர் டிஜெனரேஷன் எனப்படும் ஏதோவொன்றால் எனது இடது கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது, அது பின்னர் தொடர்ந்து மோசமாகி, அந்த கண்ணில் பயனுள்ள பார்வை இல்லாமல் போனது.
இந்தச் சவாலை நான் கையாண்டதால், பின்னோக்கிப் பார்வை உட்பட பிற வகையான பார்வைகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்தபோது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய சில அனுபவங்களை என்னால் காண முடிந்தது. இங்கிலாந்தில் ஒரு இளைஞனாக எனது முழுநேர ஊழிய சேவை எனது வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதித்தது மற்றும் எனது ஆவிக்குரிய இலக்கை வடிவமைத்தது என்பது அந்த அனுபவங்களில் ஒன்றாகும்.
1930களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையுடன் தொடர்புடைய பொருளாதார சவால்கள் எனது பெற்றோருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்படி துரதிர்ஷ்டவசமான திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை நான் சிந்தித்தேன். இந்த கடினமான காலகட்டத்தில் எனது தந்தை தனது ஆட்டோமொபைல் விற்பனையாளர் தொழிலை காப்பதிலும் குடும்பத்தை ஆதரிப்பதிலும் மிகவும் ஈடுபாடு கொண்டார், என் பெற்றோர் சிறிது காலம் சபைக்குச் செல்லவில்லை.
நாங்கள் குடும்பமாக சபை ஆராதனைகளுக்குச் செல்லவில்லை என்றாலும், என் நண்பர்களுடன் எப்போதாவது கலந்துகொள்வதை அது தடுக்கவில்லை.
அந்த நாட்களில், ஒரு ஊழியத்துக்குச் செல்வது என் பின்மனதில் இருந்தது, ஆனால் அதை என் பெற்றோருடன் பேசவில்லை.
கல்லூரியில் படிக்கும் போது, நானும் பல நண்பர்களும் ஊழிய சேவை செய்ய முடிவு செய்தோம். எனது ஆயருடன் சந்தித்து, எனது பெற்றோர் வெளியூர்களில் இருந்தபோது எனது ஊழிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தேன். என் பெற்றோர் திரும்பி வந்தபோது, கிரேட் பிரிட்டனில் சேவை செய்ய நான் அழைக்கப்பட்டேன் என்ற செய்தி அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த முடிவுக்கு அவர்களது உற்சாகமான ஆதரவிற்கும், சேவை செய்ய எனக்கு உதவிய நல்ல நண்பர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனது ஊழிய சேவை என்னை ஒரு சிறந்த கணவராகவும் தந்தையாகவும் இருக்கவும் வணிகத்தில் வெற்றிபெறவும் தயார்படுத்தியது. அவருடைய சபையில் கர்த்தருக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய அது என்னை தயார்படுத்தியது.
ஏப்ரல் 1985 பொது மாநாட்டில், ஆசாரியத்துவ கூட்டத்தில் பேசுவதற்கு நான் பணிக்கப்பட்டேன். எனது கருத்துக்களை இளைஞர்களுக்கு திருப்பினேன். ஊழிய சேவை செய்ய ஆயத்தமாவதைப்பற்றிப் பேசினேன். நான் சொன்னேன், “எனது சபை பணிகளில் நான் பெற்ற அனைத்து பயிற்சிகளிலும், பத்தொன்பது வயது மூப்பராக முழுநேர ஊழியத்தில் நான் பெற்ற பயிற்சியை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமானதாக இல்லை.”1
“கர்த்தர் உங்களை அறிகிறார். நீங்கள் உங்கள் ஊழியத்தைச் செய்யும்போது, அவரை நன்கு அறிந்துகொள்ள உதவும் அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். அவருக்கு சேவை செய்வதில் நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளர்வீர்கள். அவருடைய நாமத்தில், மற்றவர்களுக்கு சேவை செய்ய நீங்கள் பணிக்காக அனுப்பப்படுவீர்கள். பரிசுத்த ஆவியின் தூண்டுதலுடன் அவர் உங்களுக்கு அனுபவத்தைத் தருவார். கர்த்தர் அவருடைய நாமத்தினாலே போதிக்க உங்களுக்கு அதிகாரம் அளிப்பார். அவர் உங்களை நம்பவும் உங்களை சார்ந்திருக்கவும் முடியும் என்பதை நீங்கள் அவருக்குக் காட்டலாம்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் தீவுகளில் ஊழியக்காரர்களாகப் பணியாற்றிய மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் மற்றும் மூப்பர் க்வென்டின் எல். குக் ஆகியோர் அந்த அழகான தேசத்தில் அங்கத்தினர்கள் மற்றும் ஊழியக்காரர்களுடன் சந்திக்க என்னுடன் சேர்ந்தார்கள். அங்கு இருந்தபோது, ஒரு இளம் ஊழியக்காரனாக என்னுடைய அனுபவங்களைப்பற்றி சிந்தித்தேன். என் பரலோக பிதாவும் என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் என்னை அறிந்திருக்கிறார்கள், நேசிக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டதுதான் என்னுடைய ஊழியம் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
செல்வாய் ஜே. போயர் மற்றும் ஸ்டெய்னர் ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு அற்புதமான ஊழியத் தலைவர்கள் மற்றும் அவர்களது அர்ப்பணிப்புள்ள தோழர்களான கிளாடி போயர் மற்றும் ஜேன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் என்னை நம்பினார்கள், என்னை நேசித்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியும் அவர்கள் எனக்கு சுவிசேஷம் கற்பித்தார்கள். என்னிடம் நிறைய எதிர்பார்த்தார்கள். அவர்கள் எனக்கு பல சவாலான பணிகளையும் தலைமைத்துவ வாய்ப்புகளையும் அளித்து, நான் வளரவும், சேவை வாழ்க்கைக்குத் தயாராகவும் உதவினார்கள்.
எனது அன்பான மனைவி பார்பரா மற்றும் எங்கள் குழந்தைகளுடன் கனடா டொராண்டோ ஊழியத்திற்கு தலைமை தாங்க தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் அழைப்பு விடுத்ததையும் நினைத்துப் பார்த்தேன். ஏப்ரல் 1974 ல், “உலகம் எப்போது மனமாற்றப்படும்” என்ற தலைப்பில் ஊழியச் செய்தியின் தூண்டுதலால் செய்யப்பட்ட செய்தியை வழங்கிய சிறிது நேரத்திலேயே, தலைவர் கிம்பல் எங்களை சேவை செய்ய அழைத்தார்.2 அந்தச் செய்தியில், சுவிசேஷம் எப்படி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் என்பது குறித்த தனது பார்வையை தலைவர் கிம்பல் விளக்கினார். உலகம் முழுவதிலுமிருந்து இன்னும் பல ஊழியக்காரர்களை அவர் அழைத்தார். “ஒவ்வொரு மனிதனும் … பூமியின் குடிகளுக்கு எச்சரிக்கைக் குரலை எழுப்ப வேண்டும்” என்ற கர்த்தரின் எதிர்பார்ப்பை அவர் நமக்கு நினைவூட்டினார்.3 இளைஞர்கள் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புபற்றி தலைவர் கிம்பலின் போதனை உலகெங்கிலும் உள்ள வீடுகளில் உரையாடலின் தலைப்பாக மாறியது. அந்த எதிர்பார்ப்பு மாறவில்லை. தலைவர் நெல்சன் இன்று காலை கர்த்தரின் எதிர்பார்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
வாலிபர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான ஊழிய வயதைக் குறைப்பதாக தலைவர் தாமஸ் எஸ். மான்சன் அறிவித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது.4 எனது பார்வையில், இந்த மாற்றத்திற்கான முதன்மைக் காரணம், நமது இளைஞர்களுக்கு ஊழியக்காரர்களாக சேவை செய்வதற்கான வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பை வழங்குவதாகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக, நான் இப்போது உங்களை இளைஞர்களே, மற்றும் ஒரு ஊழியம் செய்ய விரும்பும் இளம் பெண்களை, உங்கள் பெற்றோரிடம் ஒரு ஊழியம்பற்றி பேசுவதற்கு இப்போதே தொடங்குமாறு அழைக்கிறேன். ஒரு ஊழிய சேவையைப்பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசவும் உங்களை அழைக்கிறேன், மேலும் உங்கள் நண்பர்களில் ஒருவருக்கு சேவை செய்வதுபற்றி உறுதியாக தெரியவில்லை என்றால், அவர்களின் ஆயருடன் பேச அவர்களை ஊக்குவிக்கவும்.
நீங்கள் ஒரு ஊழியம் செய்வீர்கள் என்றும், இந்த நேரத்திலிருந்து உங்கள் இருதயங்களையும், கைகளையும், மனங்களையும் சுத்தமாகவும் தகுதியுடனும் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள் என்றும் உங்களுக்கும் பரலோக பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கவும். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் உறுதியான சாட்சியைப் பெற உங்களை அழைக்கிறேன்.
இந்த அற்புதமான இளைஞர்களின் தந்தைகள் மற்றும் தாய்மார்களே, இந்த ஆயத்த செயல்பாட்டில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஊழிய சேவை பற்றி உங்கள் குழந்தைகளுடன் பேச இன்றே தொடங்குங்கள். நமது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஆயத்தப்படுத்துவதில் குடும்பம் மிகவும் ஆழமான செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம்.
நீங்கள் இன்னும் ஊழிய சேவைக்கான வயது வரம்பில் இருந்தால், தொற்றுநோய் அல்லது பிற காரணங்களால் இதுவரை சேவை செய்யவில்லை என்றால், இப்போது சேவை செய்ய உங்களை அழைக்கிறேன். உங்கள் ஆயருடன் பேசுங்கள், கர்த்தருக்கு சேவை செய்ய தயாராகுங்கள்.
ஊழிய வயதை நெருங்கிய அனைத்து வாலிபர்களும் இளம் பெண்களும் சேவை செய்ய ஆயத்தப்பட உதவுமாறு ஆயர்களாகிய உங்களை நான் ஊக்குவிக்கிறேன், மேலும், போதிய வயதாகியும் இன்னும் சேவை செய்யாதவர்களை அடையாளம் காண ஆயர்களாகிய உங்களையும் ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு இளைஞனையும் ஒரு ஊழியனாக அழைக்கவும், அதே போல் சேவை செய்ய விரும்பும் ஒவ்வொரு இளம் பெண்ணையும் அழைக்கவும்.
தற்போது சேவை செய்யும் ஊழியக்காரர்களுக்கு, நாங்கள் நன்றி கூறுகிறோம். உலகளாவிய தொற்றுநோய்களின் போது உங்கள் ஊழியம் இருந்தது. இதன் விளைவாக, உங்கள் ஊழிய அனுபவம் எனது ஊழிய அனுபவம் அல்லது 2020க்கு முன்பு பணியாற்றிய எந்த ஊழியக்காரர்களின் அனுபவங்களைப் போலல்லாமல் இருந்தது. அது எளிதாக இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த கடினமான நேரங்களிலும், கர்த்தர் உங்களுக்காக ஒரு பணியை வைத்திருந்தார், அதை நீங்கள் அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம்பற்றி அறியத் தயாராக இருப்பவர்களைக் கண்டறிய புதிய வழிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் மற்றும் உங்கள் திறமைக்கு ஏற்ப சேவை செய்ததால், உங்கள் முயற்சியில் கரத்தர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நான் அறிவேன். உங்கள் சேவை உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் என்பதை நான் அறிவேன்.
உங்கள் ஊழியத்திலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டால், சபையின் செயல்பாட்டிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஊழியத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களைக் கட்டியெழுப்பவும், உங்கள் சாட்சியை தொடர்ந்து பலப்படுத்தவும், கடினமாக உழைக்கவும், ஜெபிக்கவும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தும் இருங்கள். நீங்கள் செய்த உடன்படிக்கைகளை மதிக்கவும். தொடர்ந்து மற்றவர்களை ஆசீர்வதித்து சேவை செய்யுங்கள்.
ஊழிய சேவை உங்கள் வாழ்க்கையை என்றென்றும் எவ்வாறு ஆசீர்வதிக்கும் என்பதை வாலிபர்களும் இளம் பெண்களுமாகிய நீங்களும் உங்கள் பெற்றோரும் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். மோசியாவின் மகத்தான ஊழியக்கார மகன்களுக்கு கர்த்தர் கொடுத்த அழைப்பின் வல்லமையை உங்கள் மனதில் அறிந்து, உங்கள் இருதயங்களில் உணருங்கள். அவர் சொன்னார், “போய் … என் வார்த்தையை நிலவரப்படுத்துங்கள், நீங்கள் என்னில் … நல் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்கு இருக்கும்படிக்கு, நீடிய சாந்தமாயும், உபத்திரவத்தில் பொறுமையாயும் இருங்கள், அனேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாக கொண்டுவர என் கரங்களில் உங்களை கருவியாக்குவேன்.”5
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் இன்று காலை நான் சமர்ப்பிக்கும் என்னுடைய தாழ்மையான ஜெபமே, சபையின் இளைஞர்களை ஆயத்தப்படுத்தவும், அவருக்கு சேவை செய்யவும் தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.