நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது
தயவு செய்து உங்கள் குடும்பம், உங்கள் தலைமுறைகள் அனைவரையும் கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.
நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. நாம் நமது கதையை கண்டறியும் போது, நாம் இணைகிறோம், சொந்தமாகிறோம், நாம் ஆகிறோம்.
என் பெயர் கெரிட் வால்டர் காங். கெரிட் ஒரு டச்சு பெயர், வால்டர் (என் தந்தையின் பெயர்) ஒரு அமெரிக்க பெயர், மற்றும் காங் நிச்சயமாக ஒரு சீன பெயர்.
70–110 பில்லியன் மக்கள் பூமியில் வாழ்ந்ததாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஒருவேளை ஒருவருக்கு மட்டுமே கெரிட் வால்டர் காங் என்று பெயரிடப்பட்டிருக்கலாம்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. நான் “என் முகத்தில் மழை மற்றும் காற்று வேகமாக வீசுவதை” விரும்புகிறேன்.1 நான் அண்டார்டிகாவில் பெங்குவின்களுடன் தள்ளாடுகிறேன். குவாத்தமாலாவில் உள்ள அனாதைகள், கம்போடியாவில் தெருக் குழந்தைகள், ஆப்பிரிக்க மாராவில் உள்ள மசாய் பெண்களுக்கு அவர்களின் முதல் சொந்த புகைப்படத்தை நான் தருகிறேன்.
எங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் பிறக்கும்போது நான் மருத்துவமனையில் காத்திருக்கிறேன்,ஒருமுறை மருத்துவர் எனக்கு உதவி செய்தார்.
தேவனை நான் நம்புகிறேன். “[நாம்] சந்தோஷமாயிருக்கவே [நாம்] பிழைத்திருக்கிறோம்” என்று நான் நம்புகிறேன்.2 வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.3
உங்கள் கதை உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பெயரின் அர்த்தம் என்ன? உலக மக்கள்தொகை 1820 ல் 1.1 பில்லியனில் இருந்து 2020 ல் கிட்டத்தட்ட 7.8 பில்லியனாக உயர்ந்தது.4 1820 ம் ஆண்டு வரலாற்றில் ஒரு திருப்பமாகத் தோன்றுகிறது. 1820 க்குப் பிறகு பிறந்த பலர் பல குடும்ப தலைமுறைகளை அடையாளம் காணும் நினைவாற்றலையும் பதிவுகளையும் பெற்றுள்ளனர். தாத்தா பாட்டி அல்லது மற்ற குடும்ப உறுப்பினருடன் ஒரு சிறப்பான, இனிமையான நினைவை நீங்கள் நினைக்க முடியுமா?
பூமியில் வாழ்ந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அது வரையறுக்கப்பட்ட, ஒரு நேரத்தில் ஒரு நபராக கணக்கிடக்கூடியது. நீங்களும் நானும், நாம் ஒவ்வொருவரும் முக்கியம்.
தயவு செய்து இதை கருத்தில் கொள்ளவும்: நாம் அவர்களை அறிந்தோ அறியாமலோ, நாம் ஒவ்வொருவரும் ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பிறந்தவர்கள். மேலும் ஒவ்வொரு தாயும் தந்தையும் ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பிறந்தவர்கள்.5 பிறப்பு அல்லது தத்தெடுக்கப்பட்ட பரம்பரை மூலம், நாம் அனைவரும் இறுதியில் மனித குடும்பத்திலும் தேவனின் குடும்பத்திலும் இணைக்கப்பட்டுள்ளோம்.
கிபி 837 ல் பிறந்த, எனது 30வது தாத்தா, முதல் டிராகன் காங், தெற்கு சீனாவில் எங்கள் குடும்ப கிராமத்தைத் தொடங்கினார். நான் முதன்முறையாக காங் கிராமத்திற்குச் சென்றபோது, மக்கள், “வென்ஹான் ஹுயிலிலே” (“கெரிட் திரும்பி வந்துவிட்டார்”) என்று சொன்னார்கள்.
என் அம்மாவின் தரப்பில், எங்கள் உயிரோடிருப்பவர்கள் குடும்ப மரத்தில் ஆயிரக்கணக்கான குடும்பப் பெயர்கள் உள்ளன, மேலும் பலவற்றைக் கண்டறியலாம்.6 நாம் ஒவ்வொருவருக்கும் இணைக்கப்பட வேண்டிய, அதிகமான குடும்பங்கள் உள்ளன. உங்கள் பெரியம்மா உங்கள் குடும்ப வம்சாவளியை முடித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்கள் மற்றும் அவர்களின் சகோதரர்களைக் கண்டறியவும். FamilySearch இப்போது அதன் ஆன்லைன் சேகரிப்பில் உள்ள 10 பில்லியன் தேடக்கூடிய பெயர்கள் மற்றும் அதன் குடும்ப மரத்தில் உள்ள 1.3 பில்லியன் தனிநபர்களுடன் உங்கள் உயிரோடிருப்பவர்களின் நினைவின் குடும்பப் பெயர்களை இணைக்கவும்.7
உயிரோடிருப்பவர்களின் மரத்தை வரைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் கேளுங்கள். தலைவர் ரசல் எம். நெல்சன் போதிப்பது போல், உயிருள்ள மரங்களுக்கு வேர்கள் உண்டு மற்றும்கிளைகள் உண்டு.8 நீங்கள் உங்களின் முதல் தலைமுறையாக இருந்தாலும் சரி அல்லது 10வதாக அறியப்பட்ட தலைமுறையாக இருந்தாலும் சரி, நேற்றை நாளைக்காக இணைக்கவும். உங்கள் உயிரோடிருப்பவர்கள் குடும்ப மரத்தில் வேர்களையும் கிளைகளையும் இணைக்கவும்.9
“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்ற கேள்வி, பரம்பரை, பிறந்த இடம், சொந்த நாடு அல்லது தாயகம் என்று கேட்கிறது. உலகளவில், நம்மில் 25 சதவீதம் பேர் நமது தாயகத்தை சீனாவிலும், 23 சதவீதம் பேர் இந்தியாவிலும், 17 சதவீதம் பேர் மற்ற ஆசியா பசிபிக்கிலும், 18 சதவீதம் பேர் ஐரோப்பாவிலும், 10 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவிலும், 7 சதவீதம் பேர் அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கின்றார்கள்.10
“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்ற கேள்வி, நமது தெய்வீக அடையாளத்தையும் வாழ்க்கையில் ஆவிக்குரிய நோக்கத்தையும் கண்டறிய நம்மை அழைக்கிறது.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், கனடாவின் வின்னிபெக்கில் உள்ள அவர்களது பழைய வீட்டிற்குச் சென்றபோது ஐந்து குடும்பத் தலைமுறைகளை இணைத்தது. இரண்டு ஊழியக்காரர்கள் (அவர் அவர்களை பரலோகத்திலிருந்து தேவதூதர்கள் என்று அழைத்தார்) அவர்களின் குடும்பத்தை நிரந்தரமாக மாற்றிய, இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கொண்டுவந்த நாளைப்பற்றி தாத்தா தனது பேரப்பிள்ளைகளிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்த ஒரு தாய் தன் குழந்தைகளையும் அவர்களது உறவினர்களையும் அவர்களின் கொள்ளுப்பாட்டியிடம் தனது குழந்தைப் பருவ அனுபவங்களைப்பற்றி கேட்க அழைத்தார். கொள்ளுப்பாட்டியின் சாகசங்கள் மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் இப்போது நான்கு தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பொக்கிஷமான குடும்பப் புத்தகம்.
எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் “அப்பா குறிப்பிதழை” தொகுக்கிறான். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை கார் மோதி மரித்தார். இப்போது, தனது தந்தையை அறிய, இந்த தைரியமான இளைஞன் குழந்தை பருவ நினைவுகள் மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களின் கதைகளை பாதுகாத்து வருகிறார்.
வாழ்க்கையில் அர்த்தம் எங்கே வருகிறது என்று கேட்டால், பெரும்பாலான மக்கள் குடும்பத்துக்கு முதலிடம் கொடுக்கிறார்கள்.11 குடும்ப வாழ்க்கை மற்றும் அதற்கு முன் கடந்து சென்றது இதில் அடங்கும். நிச்சயமாக, நாம் மரிக்கும் போது, நாம் இருப்பதை நிறுத்த மாட்டோம். நாம் திரையின் மறுபுறத்தில் தொடர்ந்து வாழ்கிறோம்.
இன்னும் உயிருடன் இருக்கும் நம் முன்னோர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.12 வாய்வழி வரலாறுகள், குலப் பதிவுகள் மற்றும் குடும்பக் கதைகள், நினைவுச் சின்னங்கள் அல்லது நினைவு இடங்கள், புகைப்படங்கள், உணவுகள் அல்லது அன்புக்குரியவர்களை நினைவூட்டும் பொருட்களுடன் கொண்டாட்டங்கள் மூலம் நமது பாரம்பரியத்தை நினைவில் கொள்கிறோம்.
நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்,உங்கள் நாடும் சமூகமும் முன்னோர்கள், குடும்பம், சேவை செய்த மற்றும் தியாகம் செய்த மற்றவர்களை எப்படி நினைவுகூருகிறது மற்றும் மதிக்கிறது என்பது அற்புதம் அல்லவா? எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தின் சவுத் மவுல்டன், டெவன்ஷையரில் இலையுதிர்கால அறுவடையின் நினைவாக, சகோதரி காங் மற்றும் நானும் எங்கள் பாவ்டன் முன்னோர்களின் தலைமுறைகள் வாழ்ந்த சிறிய சபையையும் சமூகத்தையும் கண்டுபிடிப்பதை விரும்பினோம். ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியின் மூலம் பரலோகங்களைத் திறப்பதன் மூலம் நமது தலைமுறைகளின் சங்கிலி,15 மற்றும் வெல்டிங் இணைப்பாக மாறுவதன் மூலம்14 நம் முன்னோர்களை மதிக்கிறோம்.13
“நான் என்னைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்ற இந்த யுகத்தில், தலைமுறைகள் அர்த்தமுள்ள வழிகளில் இணையும்போது சமூகங்கள் பயனடைகின்றன. உண்மையான உறவுகள், அர்த்தமுள்ள சேவை, விரைவான சமூக ஊடக தாக்குதல்களுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையாகிய இறக்கைகளைப் பெறுவதற்கு நமக்கு வேர்கள் தேவை.
மூதாதையர்களுடன் இணைந்திருப்பது நம் வாழ்க்கையை ஆச்சரியமான வழிகளில் மாற்றும். அவர்களின் சோதனைகள் மற்றும் சாதனைகளிலிருந்து, நாம் விசுவாசமும் வலிமையையும் பெறுகிறோம்.16 அவர்களின் அன்பு மற்றும் தியாகங்களிலிருந்து, மன்னித்து முன்னேற கற்றுக்கொள்கிறோம். நம் பிள்ளைகள் நெகிழ்ச்சியடைகிறார்கள். நாம் பாதுகாப்பையும் சக்தியையும் பெறுகிறோம். முன்னோர்களுடனான உறவுகள் குடும்ப நெருக்கம், நன்றியுணர்வு, அற்புதங்கள் ஆகியவற்றை அதிகரிக்கின்றன. இத்தகைய உறவுகள் திரையின் மறுபக்கத்திலிருந்து உதவியைக் கொண்டுவரும்.
குடும்பத்தில் எப்படி சந்தோஷம் வருகிறதோ, அதே போல துக்கங்களும் வரலாம். எந்த தனிமனிதனும் அல்லது எந்த குடும்பமும் சரியானவை அல்ல. நம்மை நேசிக்கவும், போஷிக்கவும், பாதுகாக்கவும் வேண்டியவர்கள் அதைச் செய்யத் தவறினால், நாம் கைவிடப்பட்டதாக உணர்கிறோம், வெட்கப்படுகிறோம், புண்படுகிறோம். குடும்பம் ஒரு வெற்று ஓடு ஆகலாம். ஆனாலும், பரலோகத்தின் உதவியோடு, நாம் நம் குடும்பத்தைப் புரிந்துகொண்டு ஒருவரையொருவர் சமாதானப்படுத்தலாம்.17
சில சமயங்களில் உறுதியான குடும்ப உறவுகளுக்கு அசைக்க முடியாத ஒப்புக்கொடுத்தல் கடினமான காரியங்களைச் சாதிக்க உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில், சமூகம் குடும்பமாக மாறுகிறது. அடிக்கடி இடம்பெயர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க இளம் பெண்ணின் குழப்பமான குடும்பம், அவள் எங்கு போஷித்து, அவளுக்கு இடமளிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அன்பான சபைக் குடும்பத்தைக் கண்டாள். மரபியல் மற்றும் குடும்ப முறைகள் நம்மில் செல்வாக்கு பெறுகின்றன, ஆனால் நம்மை தீர்மானிக்கவில்லை.
நம் குடும்பங்கள் மகிழ்ச்சியாக, என்றென்றைக்குமாய் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் ஒருவரையொருவர் துக்கமடையச் செய்தால் என்றென்றும் என்பது மிக நீண்டதாக இருக்கும். நேசத்துக்குரிய உறவுகள் இந்த வாழ்க்கையுடன் நின்றுவிட்டால் மகிழ்ச்சி மிகவும் குறுகியது. பரிசுத்த உடன்படிக்கைகள் மூலம், அவருடைய அன்பையும், வல்லமையையும், கிருபையையும் நம்மை மாற்றவும்18 மற்றும் நமது உறவுகளை குணப்படுத்தவும் இயேசு கிறிஸ்து கொடுக்கிறார். அன்புக்குரியவர்களுக்கு தன்னலமற்ற ஆலய சேவை நம் இரட்சகரின் பாவநிவர்த்தியை அவர்களுக்கும் நமக்கும் உண்மையானதாக ஆக்குகிறது. பரிசுத்தப்படுத்தப்பட்டு, குடும்பங்கள் நித்தியமாக ஒன்றுபட்டவர்களாக நாம் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பலாம்.19
கற்பனைக்கு அப்பாற்பட்ட சாத்தியக்கூறுகளை நாம் கண்டுபிடித்து, உருவாக்கி, மாறும்போது, நம் ஒவ்வொரு கதையும் இன்னும் நடந்துகொண்டிருக்கும் பயணமாகும்.
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கூறினார், “இது நாம் பேசும் மிகவும் தைரியமான கோட்பாடாக சிலருக்கு தோன்றலாம்—பூமியில் பதிவுசெய்யும் அல்லது பிணைக்கும் மற்றும் பரலோகத்தில் பிணைக்கும் ஒரு வல்லமை.”20 இங்கு நாம் உருவாக்கும் சமூகம் அங்கு நித்திய மகிமையுடன் இருக்க முடியும்.21 உண்மையில், “[நமது குடும்ப உறுப்பினர்கள்] இல்லாமல் நாம் பரிபூரணமாக்கப்பட முடியாது; நாம் இல்லாமல் அவர்களால் பூரணப்படுத்தப்பட முடியாது, அதாவது, “ஒரு முழுமையான மற்றும் பரிபூரண இணைப்பில்.”22
இப்போது நாம் என்ன செய்ய முடியும்?
முதலில், நித்தியத்தின் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே உங்கள் உருவம் முன்னும் பின்னுமாக பிரதிபலிப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு விதத்தில், உங்களை மகள், பேத்தி, கொள்ளுப் பேத்தி என்று சித்தரித்துக் கொள்ளுங்கள்; மறுபுறம், அத்தை, அம்மா, பாட்டி என்று உங்களைப் பார்த்து புன்னகைக்கவும். காலம் எவ்வளவு விரைவாக கடந்து செல்கிறது! ஒவ்வொரு நேரத்திலும் பாத்திரத்திலும், உங்களுடன் யார் இருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களின் புகைப்படங்கள், குறிப்பிதழ்களை சேகரிக்கவும்; அவர்களின் நினைவுகளை நிஜமாக்குங்கள். அவர்களின் பெயர்கள், அனுபவங்கள், முக்கிய தேதிகளை பதிவு செய்யவும். அவர்கள் உங்கள் குடும்பம், உங்களுக்கு இருக்கும் குடும்பம் மற்றும் நீங்கள் விரும்பும் குடும்பம்.
குடும்ப அங்கத்தினர்களுக்காக நீங்கள் ஆலய நியமங்களைச் செய்யும்போது, “குடும்பத்தின் தெய்வீகத் தன்மைக்கு சாட்சியாக இருக்கும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடான”,23 எலியாவின் ஆவி, உங்கள் தகப்பன்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இருதயங்களை அன்பில் ஒன்றாக இணைக்கும்.24
இரண்டாவதாக, குடும்ப வரலாற்றின் சாகசம் மனமுவந்ததாக மற்றும் தன்னிச்சையாக இருக்கட்டும். உங்கள் பாட்டியை அழைக்கவும். அந்தப் புதிய குழந்தையின் கண்களை ஆழமாகப் பாருங்கள். உங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரத்தை, நித்தியத்தைக் கண்டறியவும். உங்கள் குடும்ப பாரம்பரியத்தை நன்றியுணர்வு மற்றும் நேர்மையுடன் கற்று, ஏற்றுக் கொள்ளுங்கள். கொண்டாடுங்கள் மற்றும் நேர்மறையாக மாறுங்கள், தேவைப்படும் இடங்களில், எதிர்மறையை கடந்து செல்லாமல் இருக்க முடிந்த அனைத்தையும் தாழ்மையுடன் செய்யுங்கள். நல்ல விஷயங்கள் உங்களிடமிருந்து தொடங்கட்டும்.
மூன்றாவதாக, FamilySearch.org பார்க்கவும். கிடைக்கக்கூடிய கைபேசி செயலிகளைப் பதிவிறக்கவும். அவை இலவசம் மற்றும் வேடிக்கையானவை. கண்டறியுங்கள், இணைந்திருங்கள், சொந்தமாகுங்கள். ஒரு அறையில் உள்ளவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்; உங்கள் உயிரோடிருப்பவர்களின் குடும்ப மரத்தில் பெயர்களைச் சேர்ப்பது, உங்கள் வேர்கள் மற்றும் கிளைகளைக் கண்டுபிடித்து ஆசீர்வதிப்பது எவ்வளவு எளிதானது மற்றும் பலனளிக்கிறது.
நான்காவதாக, குடும்பங்களை நித்தியமாக ஒன்றுபடுத்த உதவுங்கள். சொர்க்கத்தின் மக்கள்தொகையை நினைவில் கொள்ளுங்கள். இந்த பக்கத்தை விட திரையின் மறுபக்கத்தில் பலர் உள்ளனர். மேலும் பல ஆலயங்கள் நமக்கு அருகில் வருவதால், ஆலய நியமங்களுக்காக காத்திருப்போருக்கு அவற்றைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கவும்.
ஈஸ்டர் மற்றும் எப்போதும் வாக்குறுதி என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும், அவர் மூலமாகவும், நாம் நமது சிறந்த கதையாக மாற முடியும், மேலும் நமது குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும், என்றென்றும் இருக்க முடியும். நம்முடைய எல்லா தலைமுறைகளிலும், இயேசு கிறிஸ்து மனம் உடைந்தவர்களைக் குணப்படுத்துகிறார், சிறைப்பட்டவர்களை விடுவிக்கிறார், நசுக்கப்பட்டவர்களை விடுதலை செய்கிறார்.25 தேவன் மற்றும் ஒருவருக்கொருவர் சொந்தமாகுதலின்,26 உடன்படிக்கை, உயிர்த்தெழுதலில் நமது ஆவியும் உடலும் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை அறிந்துகொள்வதும், நமது மிகவும் விலைமதிப்பற்ற உறவுகள் மரணத்திற்கு அப்பாலும் மகிழ்ச்சியின் முழுமையுடன் தொடரலாம்.27
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. உங்களுடையதைக் கண்டறிய வாருங்கள். அவரில் உங்கள் குரல், உங்கள் பாடல், உங்கள் இணக்கத்தை கண்டுபிடிக்க வாருங்கள். தேவன் வானத்தையும் பூமியையும் படைத்து, அவை நல்லவை என்று கண்டதன் நோக்கம் இதுதான்.28
தேவனின் மகிழ்ச்சியின் திட்டம், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, அவருடைய சுவிசேஷம் மற்றும் சபையின் தொடர்ச்சியான மறுஸ்தாபிதம் ஆகியவற்றைப் பாராட்டுங்கள். தயவு செய்து உங்கள் குடும்பம், உங்கள் தலைமுறைகள் அனைவரையும் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த, புனித நாமத்தில், ஆமென்.