பொது மாநாடு
மிகவும் முக்கியமானதைச் செய்யுங்கள்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


10:46

மிகவும் முக்கியமானதைச் செய்யுங்கள்

நம் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் மீது மையமாக வைத்துக்கொள்ளும்போது, நாம் ஆவிக்குரிய பலம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்படுவோம்.

சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு அன்பான சிநேகிதி தனது தொகுதியிலுள்ள ஒரு பெண்ணைச் சந்திக்க உணர்த்தப்பட்டாள். அவள் தூண்டுதலை விலக்கினாள், ஏனென்றால் அவளை அவள் சிறிதே அறிந்திருந்தாள், அது பொருட்டாக இல்லை. ஆனால் அந்த எண்ணம் அவளுக்கு தொடர்ந்து வந்ததால், அவள் தூண்டுதலின் பேரில் செயல்பட முடிவு செய்தாள். தாமதமாகும் சந்திப்பைப்பற்றி அவள் ஏற்கனவே அசௌகரியமாக உணர்ந்ததால் சகோதரிக்கு ஏதாவது எடுத்துச் செல்வது அவளுடைய கவலையைக் குறைக்க உதவும் என்று அவள் தீர்மானித்தாள். நிச்சயமாக அவளால் வெறுங்கையுடன் செல்ல முடியாது! எனவே அவள் ஒரு ஐஸ்கிரீம் பெட்டியை வாங்கி, ஒரு மோசமான சந்திப்பாக இருக்குமோ என்று அவள் கவலைப்பட்டதைத் தொடங்கச் சென்றாள்.

அவள் அந்தப் பெண்ணின் வீட்டின் கதவைத் தட்டினாள், சிறிது நேரத்தில் சகோதரி கதவைத் திறந்தாள். ஒரு பிரவுன் பேப்பர் பையிலிருந்த ஐஸ்கிரீமை அவளிடம் என் சிநேகிதி கொடுத்தாள், உரையாடல் தொடங்கியது. இந்த சந்திப்பு ஏன் தேவை என்பதை உணர என் சிநேகிதிக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவர்கள் முன் அறையில் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, ​​அந்தப் பெண் தான் எதிர்கொள்ளும் சவால்களை தெரிவித்தாள். சூடான கோடை காலநிலையில் ஒரு மணி நேரம் பேசியபின்பு, பிரவுன் பேப்பர் பையில் ஐஸ்கிரீம் உருகுவதை என் சிநேகிதி கவனித்தாள்.

அவள் உரக்கச் சொன்னாள், “உங்கள் ஐஸ்கிரீம் உருகியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்!”

அந்தப் பெண் இனிமையாக பதிலளித்தாள், “பரவாயில்லை! எனக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லை!”

ஒரு சொப்பனத்தில், கர்த்தர் தீர்க்கதரிசி லேகியிடம் கூறினார், “லேகி நீ செய்த காரியங்களினிமித்தம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருக்கிறாய்.”1

இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருப்பதற்கு விசுவாசம் அல்லது நம்பிக்கையை விட அதிகமாய் தேவைப்படுகிறது. இது முயற்சி, இயக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கோருகிறது. “கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயிருப்பதால்,”2 நாம் எதையாவது செய்ய வேண்டியதிருக்கிறது.

உருகிய ஐஸ்கிரீம் விஷயத்தில், மிகவும் முக்கியமானது எது? ஐஸ்கிரீமா? அல்லது என் சிநேகிதி ஏதாவது செய்தாளா?

ஒரு அன்பான இளம் பெண்ணுடன் எனக்கு ஒரு இனிமையான அனுபவம் கிடைத்தது, அவள் மிகவும் நேர்மையான ஒரு கேள்வியைக் கேட்டாள்: “சகோதரி க்ரேவென், சபை உண்மை என்ற எதாவது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் நான் எதையும் உணரவில்லை.”

பதில் சொல்லும் முன், முதலில் நான் அவளிடம் சில கேள்விகளைக் கேட்டேன். “உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள்.”

“நான் வேதங்களைப் படிப்பதில்லை” என்று அவள் பதிலளித்தாள்.

நான் கேட்டேன், “உங்கள் குடும்பம் என்ன செய்கிறார்கள்? என்னைப் பின்பற்றி வாருங்களை நீங்கள் ஒன்றுசேர்ந்து படிக்கிறீர்களா?”

“இல்லை” என அவள் சொன்னாள்.

நான் அவளுடைய ஜெபங்களைப்பற்றி கேட்டேன், “நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”

அவளுடைய பதில், “நான் ஜெபிப்பதில்லை.”

அவளுக்கு என் பதில் எளிமையானது, “நீங்கள் எதையாவது தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்.”

நாம் கற்றுக்கொள்ள அல்லது அறிய விரும்பும் எதற்கும் அதுதான் உண்மையல்லவா? ஜெபிப்பது, படிப்பது, மற்றவர்களுக்கு சேவை செய்வது மற்றும் கர்த்தரில் நம்பிக்கை வைப்பது போன்ற இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி செய்ய ஆரம்பிக்க எனது புதிய சிநேகிதியை அழைத்தேன். எதையும் செய்யாத போது மனமாற்றம் வராது. நாம் கேட்பதாலும், தேடுவதாலும் மற்றும் தட்டுவதன் மூலம் தெரிந்துகொள்ள, மனமுவந்து முயற்சி செய்யும்போது அது பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் வருகிறது. செய்வதால் அது வருகிறது.3

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில், கர்த்தர் எப்போதாவது கூறுகிறார், “இது ஒரு பொருட்டல்ல.”4 சில காரியங்கள் முக்கியமில்லையென்றால் அல்லது குறைவாக இருந்தால், மிக முக்கியமான காரியங்கள் இருக்க வேண்டும் என்று என்னை சிந்திக்க வைக்கிறது எதையாவது செய்ய வேண்டும் அல்லது எதையும் செய்ய வேண்டும் என்ற நமது முயற்சிகளில், “எது மிகவும் முக்கியமானது?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.

அவர்கள் விற்கும் தயாரிப்பு நமது மகிழ்ச்சிக்கு அல்லது நல்வாழ்வுக்கு அவசியம் என்று நம்புவதற்கு நம்மை ஈர்க்கும் நம்பிக்கையில் விளம்பரதாரர்கள் பெரும்பாலும் “அத்தியாவசியம்” அல்லது “வைத்திருக்க வேண்டும்” போன்ற வாசகங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் விற்பனை செய்வது உண்மையில் அத்தியாவசியமானதா? நாம் உண்மையில் அதை வைத்திருக்க வேண்டுமா? இது உண்மையாகவே முக்கியமா?

கருத்தில்கொள்ள இங்கே சில யோசனைகள். எது மிகவும் முக்கியமானது?

  • நமது சமூக ஊடக இடுகைகளில் எத்தனை “விருப்பங்கள்” பெறுகிறோம்? அல்லது நம்முடைய பரலோக பிதாவால் நாம் எவ்வளவு நேசிக்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம்?

  • ஆடைகளில் தற்போதைய பாங்கு ஆடையணிதலா? அல்லது அடக்கமாக உடை அணிவதன் மூலம் நம் உடலுக்கு மரியாதை காட்டுவதா?

  • இணைய தேடல் மூலம் பதில்களைக் கண்டறிதலா? அல்லது பரிசுத்த ஆவியின் மூலம் தேவனிடமிருந்து பதில்களைப் பெறுதலா?

  • இன்னும் அதிகம் வேண்டுமா? அல்லது நமக்குக் கொடுக்கப்பட்டதில் திருப்தி அடைவதா?

தலைவர் ரசல் எம். நெல்சன் போதிக்கிறார்:

“பரிசுத்த ஆவியானவரை உங்கள் துணையாகக் கொண்டு, நமது சமூகத்தை தாக்கிய பிரபல கலாச்சாரத்தின் மூலம் நீங்கள் சரியாகப் பார்க்க முடியும். முந்தைய தலைமுறையினரை விட நீங்கள் புத்திசாலியாக இருக்க முடியும். …

“ எஞ்சிய உலகுக்கு ஒரு தரத்தை அமைக்கவும்!”5

நீடித்த மகிழ்ச்சிக்கு உண்மையிலேயே இன்றியமையாதவற்றில் கவனம் செலுத்துவதற்கு முயற்சி தேவை. விலைமதிப்பற்ற நேரத்தை, திறமைகளை அல்லது ஆவிக்குரிய பலத்தை முக்கியமில்லாத காரியங்களில் வீணாக்குவதற்கு நம்மை நடத்தி, சாத்தான் நம் நித்திய நற்பண்புகளை தவறாக வைப்பதைத் தவிர வேறு எதையும் விரும்ப மாட்டான். மிகவும் முக்கியமானதைச் செய்வதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் காரியங்களை ஜெபத்துடன் பரிசீலிக்க நான் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.

எங்கள் மூத்த மகனின் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் தனது வகுப்பில் “உங்கள் மூளைக்கு எஜமானாயிருங்கள்” என்று கற்பித்தார். அவர்கள் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள், அதனால் அவர்கள் செய்வதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவருடைய இளம் மாணவர்களுக்கு இது நினைவூட்டுவதாக இருந்தது. முக்கியமற்ற காரியங்களை நோக்கி நான் நகர்வதைக் கண்டால் “என் மூளைக்கு எஜமானாயிரு” என்பதை எனக்கு நான் நினைவூட்டுகிறேன்.

பின்னர் மனந்திரும்புவதற்கான ஒரு முடிவுசெய்த திட்டத்துடன், கட்டளைகளை புறக்கணிப்பது, சபையின் சில இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டது என ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் சமீபத்தில் என்னிடம் கூறினார். “இது ஒரு வகையான மரியாதைக்குரிய பதக்கம்” என்று என்னிடம் கூறப்பட்டது. நிச்சயமாக, “உண்மையான நோக்கத்துடன்”6 மனத்தாழ்மையுடன் மனந்திரும்புபவர்களை கர்த்தர் தொடர்ந்து மன்னிப்பார். ஆனால் இரட்சகரின் இரக்கமுள்ள பாவநிவர்த்தி ஒருபோதும் அத்தகைய கேலிக்குரிய விதத்தில் பயன்படுத்தப்படக்கூடாது. காணாமற்போன ஆட்டைப்பற்றிய உவமை நமக்குத் தெரியும். நிச்சயமாக, ஒரு மேய்ப்பன் மற்ற 99 ஆடுகளை விட்டுவிட்டு வழிதவறிய ஆட்டைக் கண்டுபிடிப்பான். ஆனால் 99 ஆக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நல்ல மேய்ப்பனுக்கு கொண்டுவரும் மகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஒன்றாக ஒட்டிக்கொண்டு, தங்கள் உடன்படிக்கைகளின்படி வாழ ஒருவருக்கொருவர் உதவுபவர்கள்? கீழ்ப்படிந்து இருப்பது மிகவும் பிரபலமான காரியமாக இருந்தால், உலகம், அல்லது உங்கள் பள்ளி, அல்லது உங்கள் வேலை அல்லது உங்கள் வீடு எப்படி இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இது வாழ்க்கையைப் பரிபூரணமாகச் செய்வது அல்ல, இது, கர்த்தருடன் நாம் செய்து கொண்ட உடன்படிக்கைகளின்படி வாழ நம்மால் இயன்றதைச் செய்யும்போது மகிழ்ச்சியைக் கண்டறிவதைப்பற்றியது.

உலகம் தேவனைப்பற்றி அதிக சந்தேகத்தை வெளிப்படுத்தி, குழப்பங்களும் அழுத்தங்களும் அதிகரித்து வருவதால், நாம் தீர்க்கதரிசியுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய நேரம் இது. அவர் கர்த்தரின் வாயாக இருப்பதால், அவர் நம்மை வலியுறுத்துவதும், அறிவுரை கூறுவதும், மன்றாடுவதும் மிக முக்கியமானவை என்று நாம் நம்பலாம்.

இது எளிதானது அல்ல என்றாலும், சரியானதைச் செய்வதற்கு எப்போதும் ஒரு வழி இருக்கிறது. பள்ளியில் நண்பர்கள் குழுவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சபையின் தரத்தை விமர்சிப்பதாக உரையாடல் திரும்பியபோது அவளுடைய இருதயம் தளர்ந்ததாக ஒரு இளம் பெண் உணர்ந்தாள். அவளால் அமைதியாக இருக்க முடியாது என்பதை அவள் உணர்ந்தாள், அவள் ஏதாவது செய்ய வேண்டும். பரலோக பிதாவின் அன்பைப்பற்றியும், அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கவும் பாதுகாக்கவும் அவர் ஏற்படுத்திய கட்டளைகள் எப்படி இருக்கின்றன என்பதைப்பற்றியும் மரியாதையுடன் அவள் பேசினாள். எதுவும் செய்யாமல் இருப்பது அவளுக்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் மிகவும் முக்கியமானது எது? கூட்டத்துடன் கலப்பதா? “சதா காலங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும்7 தேவனின் சாட்சியாக தனித்து நிற்பதா?

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபை இருளில் இருந்து வெளியே வரப் போகிறது என்றால், நாம் இருளிலிருந்து வெளியே வர வேண்டும். உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் பெண்களாக, நாம் ஒரு படி எடுத்துவைத்து, தனித்து நின்று உலகம் முழுவதும் நமது சுவிசேஷத்தின் ஒளியைப் பிரகாசிக்க வேண்டும். தேவனின் குமாரத்திகளாக நாம் இதை ஒன்றுகூடிச் செய்கிறோம், 11 வயதும் அதற்கும் அதிகமான 8.2 மில்லியன் பெண்களைக் கொண்ட ஒரு ஆற்றல் மற்றும் அவர்களின் வேலை அதுவாகவே உள்ளது. இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் நாம் பங்குகொள்ளும் போது, இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கிறோம்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ முயற்சிப்பது, தேவையிலுள்ள மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது, சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைப்பது, குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைப்பது.8 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் செயலின் சுவிசேஷம் மற்றும் மகிழ்ச்சியின் சுவிசேஷம்! மிகவும் முக்கியமான காரியங்களைச் செய்வதற்கான நமது திறனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். நம்முடைய தெய்வீகப் பாரம்பரியம் நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது, நம்முடைய அன்பான பரலோக பிதா நாம் என்னவாக இருக்க முடியும் என்று அறிந்திருக்கிறாரோ, அதையெல்லாம் நாம் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்கான இளைஞர் கருப்பொருள் நீதிமொழிகள் 3:5–6லிருந்து:

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

“உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”.

நம்மிடம் எல்லா பதில்களும் இல்லாவிட்டாலும் அவர் நம்மை வழிநடத்துவார் என்று நம்பி முன்னேறிச் செல்வது தேவன் மீது நம்பிக்கை வைப்பதன் ஒரு முக்கிய அங்கம்.

சகோதரிகளே, இது ஐஸ்கிரீமைப் பற்றியது அல்ல. இது அதிகமாகச் செய்வதைப்பற்றியது அல்ல. இது முக்கியமானதைச் செய்வதைப்பற்றியது. நாம் அவரைப் போல் ஆக முயற்சி செய்யும்போது, கிறிஸ்துவின் கோட்பாட்டை நம் வாழ்வில் பயன்படுத்துவதிலிருக்கிறது.

உடன்படிக்கையின் பாதையில் உறுதியாக நிலைத்திருக்க நாம் எவ்வளவாய்ச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசம் வளரும். நம்முடைய விசுவாசம் எவ்வளவு அதிகமாக வளர்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் மனந்திரும்ப விரும்புவோம். மேலும் நாம் எவ்வளவு அதிகமாக மனந்திரும்புகிறோமோ, அவ்வளவாய் தேவனுடான நமது உடன்படிக்கை உறவை பலப்படுத்துவோம். அந்த உடன்படிக்கை உறவு நம்மை ஆலயத்திற்கு இழுக்கிறது, ஏனென்றால் ஆலய உடன்படிக்கைகளை கைக்கொள்ளுவது என்பது நாம் இறுதிவரை எப்படி நிலைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

நம் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் மீது மையமாக வைத்துக்கொள்ளும்போது, மிகவும் முக்கியமானதைச் செய்ய நாம் வழிநடத்தப்படுவோம். மேலும் நாம் ஆவிக்குரிய பலம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்படுவோம்! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.