பொது மாநாடு
பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் சுயசார்பைப்பற்றி கற்பித்தல்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


10:11

பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் சுயசார்பைப்பற்றி கற்பித்தல்

நம் வாழ்நாள் முழுவதும் சுயசார்புடன் இருப்பதன் மூலம் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் பின்பற்றி, இதை நம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிப்போமாக.

சுயசார்பைப்பற்றியும் அதை பிள்ளைகளுக்கும் இளைஞருக்கும் எவ்வாறு கற்பிப்பதென்பதைப்பற்றியும் நான் பேசப்போகிறேன். சுயசார்பு என்பது வயதுவந்தவர்களுக்கு ஒரு பொருள்சார் காரியமாக கருதப்படலாம். வயதுவந்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் போதிக்கப்பட்டு, வீட்டில் குழந்தைப் பருவம் மற்றும், இளமைப் பருவத்திலிருந்தே அதன் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்கும் போது, அவர்கள் சுயசார்பை நோக்கிச் சிறந்த பாதையில் செல்ல முடியும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

ஒரு நிஜ வாழ்க்கையின் சிறந்த எடுத்துக்காட்டு ஒரு சிறந்த விளக்கமாகும். வில்பிரைட் வானி, அவரது ஏழு உடன்பிறப்புகள் மற்றும் அவரது தாயார், அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது ஐவரி கோஸ்ட்டில் உள்ள அபிட்ஜானிலுள்ள சபையில் சேர்ந்தனர். எட்டு வயதில் அவர் ஞானஸ்நானம் பெற்றார். வில்பிரைட்டுக்கு பதினோரு வயதாயிருந்தபோது குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவரான அவருடைய தகப்பன் மரித்தார்.

குடும்ப சூழ்நிலையால் துக்கப்பட்டாலும், வில்பிரைட் தனது தாயின் ஊக்கத்துடனும் சபை ஆதரவுடனும் பள்ளியில் தொடர முடிவு செய்தார். அவர் இடைநிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார் மற்றும் கானா கேப் கோஸ்ட் ஊழியத்தில் முழுநேர ஊழியம் செய்தார், அங்கு அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அவரது ஊழியத்திற்குப் பிறகு, அவர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கணக்குப்பதிவியல் மற்றும் நிதியியல் துறையில் பட்டயம் பெற்றார். இந்தத் துறையில் வேலை கிடைப்பது கடினமாக இருந்தாலும், அவருக்கு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வேலை கிடைத்தது.

அவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாளராகத் தொடங்கினார், ஆனால் மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வம் அவரை அங்கு இருமொழி வரவேற்பாளராக மாறும் வரை மேலும் கற்றுக்கொள்ளத் தூண்டியது. ஒரு புதிய ஹோட்டல் திறக்கப்பட்டதும், அவர் இரவு நேர தணிக்கையராக பணியமர்த்தப்பட்டார். பின்னர், அவர் பி.ஒய்.யூ– உலகளாவிய பாத்வேயில் சேர்ந்தார் மற்றும் தற்போது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை சான்றிதழ் பெறுவதற்கான படிப்பை படித்து வருகிறார். ஒரு நாள் உயர்தர ஹோட்டலுக்கு மேலாளராக வரவேண்டும் என்பது அவரது ஆசை. வில்பிரைட் தனது நித்திய துணை மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியும், அத்துடன் அவரது தாய் மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கும் உதவ முடியும். அவர் தற்போது சபையில் பிணைய உயர் ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றுகிறார்.

சுயசார்பு என்பது “தனக்கும் குடும்பத்திற்கும் வாழ்க்கையின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார தேவைகளை வழங்குவதற்கான திறன், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி” என வரையறுக்கப்படுகிறது.1 சுயசார்பாக இருக்க முயற்சிப்பது உடன்படிக்கை பாதையில் நமது பணியின் ஒரு பகுதியாகும். அது நம்மை பரலோக பிதாவிடமும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் வழிநடத்துகிறது. இது, இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை வலுப்படுத்தி, இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களில் அவருடன் மகிழ்ச்சியுடன் நாம் பிணைக்கப்படுவோம். சுயசார்பு என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒரு கோட்பாடே தவிர ஒரு திட்டம் அல்ல. இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு செயல்முறை, ஒரு நிகழ்வு அல்ல.

ஆவிக்குரிய பலத்தில் வளர்வதில், உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் மேம்படுவதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைத் தேடுதல் மற்றும் தற்காலிகமாகத் தயாராக இருப்பதன் மூலம் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சுயசார்புடன் இருக்கிறோம்.2 இந்த பணி நம் வாழ்நாளில் முடிந்துவிட்டதா? இல்லை, இது கற்றுக்கொள்ளுதல், வளர்ச்சி மற்றும் வேலையின் வாழ்நாள் செயல்முறையாகும். இது ஒருபொழுதும் முடியப்போவதில்லை; இது ஒரு தொடர்ச்சியான, தினசரி செயல்முறை.

நம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் சுயசார்பின் கோட்பாடு மற்றும் கொள்கைகளை எவ்வாறு கற்பிக்க முடியும்? பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டத்தின் கொள்கைகளை தொடர்ந்து பிரயோகிப்பது ஒரு முக்கியமான வழி. பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்கிறார்கள், சேவை மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்கிறார்கள், மேலும் ஒவ்வொரு பிள்ளையின் தனிப்பட்ட வளர்ச்சியான நான்கு பரிமாணங்களில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இது இனிமேலும் அனைவருக்கும் ஒரே பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருக்காது.

“உங்கள் வயதில் இயேசு இருந்தபோது அவர் கற்றுக்கொண்டு வளர்ந்தார், என பிள்ளைகளின் வழிகாட்டிப்புத்தகம் சொல்கிறது. நீங்களும் கற்றுக்கொண்டே வளர்கிறீர்கள். வேதம் சொல்கிறது: ‘இயேசுவானவர், ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்’ (லூக்கா 2:52).”3 இந்த வசனம் ஆவிக்குரிய அம்சத்தில் வளர்ச்சி மற்றும் கற்றல், தேவனின் தயவைக் குறிக்கிறது; சமூக அம்சம், மனிதனிடம் தயவு; உடல் அம்சம், அந்தஸ்து; மற்றும் அறிவுசார் அம்சம், ஞானத்தைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சிப் பகுதிகள் நம் வயதைப் பொருட்படுத்தாமல் நம் அனைவருக்கும் பொருந்தும். நாம் எப்போது அவர்களுக்குக் கற்பிக்கிறோம்? உபாகமம் 6:6–7 ல் நாம் வாசிக்கிறோம்:

“இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது:

“நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.”

நம்முடைய நல்ல முன்மாதிரியின் மூலம், அவர்களுடன் வேலை செய்து சேவை செய்வதன்மூலம், வேதங்களைப் படித்து, தீர்க்கதரிசிகள் கற்பித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதன்மூலம் பிள்ளைகளுக்கு இந்த காரியங்களைக் கற்பிக்கிறோம்.

பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டத்தில், பிள்ளைகள் வளர்ச்சியின் நான்கு பரிமாணங்களில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் தங்கள் சொந்த இலக்குகளை உருவாக்குவது முக்கியம். பெற்றோர்களும் தலைவர்களும் கற்பிக்கவும், ஆலோசனை வழங்கவும், ஆதரவளிக்கவும் முடியும்.

உதாரணமாக, எங்கள் பேத்தி மிராண்டா தினசரி அதிகாலை வேதபாட வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் ஆவிக்குரிய ரீதியில் வளர மிகவும் தூண்டப்பட்டவள். அவள் தனது தொகுதியில் உள்ள மற்ற வேத பாட வகுப்பு மாணவர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைக் கேட்டு ஆர்வமாக இருந்தாள். வகுப்பிற்கு அவளை அவளுடைய அம்மா எழுப்ப வேண்டியதில்லை. அவளாகவே, காலை 6:20க்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அவள் எழுந்து, காணொலி மூலம் இணைக்கப்பட்டிருக்கிறாள், ஏனென்றால் அவள் அவ்வாறு செய்ய உதவும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டாள். மிராண்டா இப்போது சுயசார்பில் வளர்ந்ததால், அவர்களைச் சந்திக்கும்போது அதிகம் பேசுகிறாள் என என் பெற்றோர் சமீபத்தில் என்னிடம் சொன்னார்கள். கவனிக்கத்தக்க விளைவுகளுடன் இவை வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கான படிப்பினைகள்.

பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, தலைவர்கள் மற்றும் நண்பர்கள் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுகிறார்கள். முழு ஈடுபாடுள்ள ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள், ஆசாரியத்துவம் மற்றும் தொகுதியின் அமைப்புத் தலைவர்களுடன் சேர்ந்து ஆதரவை வழங்குகிறார்கள். “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்” சொல்கிறது: “தந்தையர்‌ தங்கள்‌ குடும்பங்களை அன்பிலும்‌, நீதியிலும்‌ வழிநடத்த வேண்டுமென்பதும்‌ வாழ்க்கைக்கான தேவைகளையும்‌, தங்களது குடும்பங்களுக்கான பாதுகாப்பையும்‌, அளிக்க பொறுப்புள்ளவர்களாய்‌ இருக்க வேண்டுமென்பதும்‌, தெய்வீகத்‌ திட்டமாகும்‌. தாய்மார்களின்‌ பிரதான பொறுப்பு, அவர்களது பிள்ளைகளைப்‌ போஷித்து வளர்ப்பதாகும்‌. இந்தப்‌ புனிதமான பொறுப்புகளில்‌ தாய்தந்தையர்‌ ஒருவருக்கொருவர்‌ சமபங்குடையவர்களாக உதவுவது கட்டாயமானது. … பிற உறவினர்கள்‌, தேவைப்படும்பொழுது ஆதரவு அளிக்க வேண்டும்‌.”4 மற்றவர்களுக்கு மத்தியில் கடைசி வரி தாத்தா பாட்டியைக் குறிக்கிறது.

நாங்கள் மேற்கு ஆபிரிக்காவில் சேவை செய்யும்போது, ஊழியமும் செய்து, கடல் கடந்த எங்கள் குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கிற ஒரு குறிப்பிடத்தக்க வேலையை என் மனைவி நூரியா செய்துள்ளார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை அவள் செய்கிறாள். அவள் இளைய பேரக்குழந்தைகளுக்கு புத்தகங்களைப் படிக்கிறாள். எங்கள் குடும்பத்தின் கதை, அறிவியல், போர்ட்டோ ரிக்கோவின் வரலாறு, விசுவாசப் பிரமாணம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் போன்ற தலைப்புகளை மூத்த பேத்திகளுக்கு அவள் கற்பிக்கிறாள். தற்காலத்தில் தொலைவு என்பது நம் குடும்பங்களின் வளர்ந்து வரும் தலைமுறையினரை இணைப்பது, சொந்தமாயிருப்பது, ஊழியம் செய்வது மற்றும் கற்பிப்பதை மட்டுப்படுத்துவதில்லை. எங்கள் விலைமதிப்பற்ற பேரக்குழந்தைகளுக்கு கற்பிக்கவும், அவர்களை நேசிக்கவும், அவர்களுக்கு செல்லம்கொடுத்து சிரிக்க வைக்கவும் என்னால் முடிந்தால், நூரியாவுடன் நானும் இணைகிறேன்.

பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டத்திற்கும் சுயசார்பை வளர்ப்பதற்கும் இடையே உள்ள உணர்த்தப்பட்ட ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒவ்வொன்றின் நான்கு மேம்பாட்டு பரிமாணங்களும் மிகவும் ஒத்தவை. சுயசார்பில் ஆவிக்குரிய பலம் பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் ஆவிக்குரிய தொடர்புடையது. சுயசார்பில் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம், பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் உடல் மற்றும் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பில் தற்காலிகத் தயார்நிலை ஆகியவை பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டத்தில் உள்ள அறிவுசார்பைப் போன்றது.

முடிவில், நம் வாழ்நாள் முழுவதும் சுயசார்புடன் இருப்பதன் மூலம் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் பின்பற்றுவோம், இதை நம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிப்போம். இவைகளால் நாம் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்:

  1. பிறருக்குச் சேவை செய்வதில் சிறந்த முன்மாதிரியாக இருத்தல்,

  2. சுயசார்பின் கோட்பாடு மற்றும் கொள்கைகளின்படி வாழுதலும் போதித்தலும்,

  3. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பகுதியாக சுயசார்பை வளர்க்க கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:15–16 சொல்கிறது:

“என்னுடைய பரிசுத்தவான்களுக்கு அளிப்பது என்னுடைய நோக்கமாயிருக்கிறது, ஏனெனில் சகலமும் என்னுடையவைகள்.

“ஆனால் அது என்னுடைய சொந்த வழியில் செய்யப்படவேண்டும்; தரித்திரர் மேன்மைப்படுத்தப்பட்டு ஐஸ்வர்யவான்கள் தாழ்த்தப்படும்படியாக இதோ, இந்த வழியிலேயே, கர்த்தராகிய நான் என்னுடைய பரிசுத்தவான்களுக்கு அளிக்க கட்டளையிட்டேன்.”

இது இயேசு கிறிஸ்துவின் சபை. அவருடைய சுவிசேஷம் இங்கே பூமியிலும் நித்திய காலங்கள் முழுவதிலும் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறது. நாம் நித்திய குடும்பங்களாக மாற முயற்சி செய்யும்போது அது நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகிறது. அது உண்மையென நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.