காணொலி: “அவர் முன்பே பார்த்த பெண்கள் நீங்களே”
1979 ம் ஆண்டு தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் மருத்துவமனையில் இருந்தார், பொது பெண்கள் கூட்டத்தில் அவரது உரையை வாசிக்கும்படி அவரது மனைவி கமிலாவிடம் கூறினார்.
சகோதரி கமிலா கிம்பல்: “கடைசி நாட்களில் சபைக்கு வரவிருக்கும் பெரும் வளர்ச்சி வரும், ஏனென்றால் (அவர்களில் ஆவிக்குரிய விதமாக உள் உணர்வு பெரும்பாலும் உள்ள) உலகின் பல நல்ல பெண்கள் சபைக்கு அதிக எண்ணிக்கையில் ஈர்க்கப்படுவார்கள். சபையின் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நீதியையும் தெளிவான தன்மையையும் பிரதிபலிக்கும் அளவிற்கு இது நடக்கும், மேலும் சபையின் பெண்கள் உலகப் பெண்களிடமிருந்து வித்தியாசமாகவும் மகிழ்ச்சியான வழிகளிலும் காணப்படுகிறார்கள்.”1
தலைவர் ரசல் எம். நெல்சன்: “என் அன்புச் சகோதரிகளே, இந்த கடைசிக் காட்சியின் போது எங்களின் முக்கியக் கூட்டாளிகளாகிய உங்களைப்பற்றி, தலைவர் கிம்பல் முன்னறிவித்த நாள் இன்று. அவர் முன்பே பார்த்த பெண்கள் நீங்களே! உங்கள் நல்லொழுக்கம், ஒளி, அன்பு, அறிவு, தைரியம், பண்பு, நம்பிக்கை மற்றும் நீதியான வாழ்க்கை ஆகியவை உலகின் நல்ல பெண்களை, அவர்களது குடும்பங்களுடன், எப்போதுமில்லாத எண்ணிக்கையில் சபைக்கு ஈர்க்கும்!
உங்கள் பலம், உங்கள் மனமாற்றம், உங்கள் ஒப்புக்கொடுத்தல், வழிநடத்தும் உங்கள் திறமை, உங்கள் ஞானம், மற்றும் உங்கள் குரல்கள் எங்களுக்குத் தேவை.” பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைபிடிக்கும் பெண்கள், தேவனின் வல்லமை மற்றும் அதிகாரத்துடன் பேசக்கூடிய பெண்கள் இல்லாமல் தேவ ராஜ்யம் முழுமையடையாது!
“என் அன்பு சகோதரிகளே, உங்கள் அழைப்பு எதுவானாலும், உங்கள் சூழ்நிலைகள் எதுவானாலும், உங்கள் எண்ணங்கள், உங்கள் உள்ளுணர்வுகள், உங்கள் உணர்த்துதல் எங்களுக்குத் தேவை. நீங்கள் பேச வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், தொகுதி பிணைய ஆலோசனைக்குழுக்களில் பேசுங்கள். உங்கள் வீட்டை ஆளுகை செய்வதில் உங்கள் கணவரோடு நீங்கள் இணையும்போது, பங்களிக்கும் முழு பங்குதாரராக, ஒவ்வொரு திருமணமான சகோதரியும் பேசுவது எங்களுக்குத் தேவை. மணமான அல்லது தனியான சகோதரிகளே, தேவனிடமிருந்து நீங்கள் வரமாகப் பெற்ற தனிப்பட்ட திறமைகளையும் விசேஷ உள்ளுணர்வுகளையும் வைத்திருக்கிறீர்கள். உங்கள் தனித்துவமான செல்வாக்கை சகோதரர்களாகிய நாங்கள் பெற முடியாது.
“அனைத்து படைப்புகளின் உச்சக்கட்ட செயல் பெண்ணின் படைப்பு என்பதை நாங்கள் அறிவோம்! உங்கள் பெலன் எங்களுக்குத் தேவை! …
“… என் அன்புச் சகோதரிகளே, இந்த பரிசுத்தப் பணியில் நாம் கைகோர்த்து நடக்கும்போது, உங்கள் படைப்பின் அளவை நிறைவேற்ற, உங்கள் முழு உயரத்துக்கு உயர உங்களை ஆசீர்வதிக்கிறேன் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தப்படுத்த நாம் ஒன்றாக உதவுவோம்”2