“ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்கவும், … துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், … ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும்,” சபையின் உறுப்பினர்கள் உடன்படிக்கை செய்கிறார்கள் (மோசியா 18:8-9). உலகப்பிரகாரத் தேவைகள் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்வது இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியின் ஒரு பகுதியாகும். சபையின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும்போது இந்த பொறுப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.