“பயப்படாதிருங்கள்— கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்,”6 இளைஞரின் பெலனுக்காக, ஜூலை 2022.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜூலை 2022
பயப்படாதிருங்கள்— கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்
பயம் புதிதல்ல. பழங்காலத்திலிருந்தே, பயம் தேவனின் பிள்ளைகளின் கண்ணோட்டத்தை மட்டுப்படுத்தியுள்ளது. 2 இராஜாக்களில், எலிசா தீர்க்கதரிசியைக் கைப்பற்றி கொல்ல சிரியாவின் ராஜா ஒரு படையணியை அனுப்பியிருந்தான்.
“[எலிசாவின்] வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான்.” (2 இராஜாக்கள் 6:15).
அந்த பயம் பேசியது.
எலிசா பதிலளித்தான், “பயப்படாதே, அவர்களோடிருப்பவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.”
“ஆகவே, எலிசா விண்ணப்பம் பண்ணினான் கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும். கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார். இதோ எலிசாவைச் சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.”(2 இராஜாக்கள் 6:16–17)
நம் பயத்தைப் போக்கவும், நம் பேய்களை வெல்லவும் நமக்கு அக்கினி ரதங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் பாடம் தெளிவாக உள்ளது. கர்த்தர் நம்மோடு இருக்கிறார், நம்மை மனதில் வைத்து, அவரால் மட்டுமே செய்யக்கூடிய வழிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
நாம் கர்த்தரிலும் அவருடைய வழிகளிலும் தீவிரமாக நம்பிக்கை வைத்து, அவருடைய வேலையில் ஈடுபட்டிருந்தால், உலகத்தின் போக்குகளுக்கு நாம் பயப்பட மாட்டோம் அல்லது அவற்றால் தொந்தரவு செய்யப்பட மாட்டோம். கர்த்தர் நம்மைக் கண்காணித்து, நம்மைக் கவனித்து, நமக்குத் துணையாக நிற்கிறார்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, July 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18298 418