2021
ஆசாரியத்துவம் தேவனின் வல்லமை
ஆகஸ்ட் 2021


“ஆசாரியத்துவம் தேவனின் வல்லமை,” லியஹோனா, ஆகஸ்ட் 2021

லியஹோனா மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2021

ஆசாரியத்துவம் தேவனின் வல்லமை

ஆசாரியத்துவ வல்லமையின் மூலம் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் எல்லோருக்கும் கிடைக்கும்.

ஆசாரியத்துவம் தேவனுடைய வல்லமையாகும். அவர் தனது பிள்ளைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்கும், அவருடன் வாழத் திரும்பவர உதவுவதற்கும் இந்த வல்லமையைப் பயன்படுத்துகிறார். தேவன் பூமியில் தம் பிள்ளைகளுக்கு ஆசாரியத்துவத்தின் வல்லமையை வழங்கியுள்ளார். இந்த வல்லமையுடன், ஆசாரியத்துவ தலைவர்கள் சபையை வழிநடத்த முடியும், மேலும் ஆசாரியத்துவம் தரித்தவர்கள் தேவனிடம் நெருக்கமாக வர உதவக்கூடிய ஞானஸ்நானம் போன்ற பரிசுத்த நியமங்களை நிறைவேற்ற முடியும். ஆசாரியத்துவ நியமங்களை தகுதியுடன் பெற்று, உடன்படிக்கைகளை (பரிசுத்த வாக்குறுதிகள்) காத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தேவ வல்லமையைப் பெறலாம்.

படம்
திருவிருந்து

ஜோசப் ஸ்மித்துக்கு ஆசாரியத்துவ வல்லமை கொடுக்கப்பட்டது

இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது ஆசாரியத்துவ வல்லமையால் அவர் தம் சபையை நடத்தினார். இந்த வல்லமையை அவர் தனது அப்போஸ்தலர்களுக்கும் கொடுத்தார். அவர்கள் இறந்த பிறகு பல நூற்றாண்டுகளில், பல உறுப்பினர்கள் சபையிலிருந்து விலகிவிட்டார்கள். அவர்கள் சுவிசேஷத்தையும் சபை செயல்படும் முறையையும் தவறாக மாற்றினர். தேவனின் ஆசாரியத்துவம் இனிமேலும் பூமியிலில்லை. 1829ல், ஜோசப் ஸ்மித்துக்கு ஆசாரியத்துவத்தை வழங்க இயேசு யோவான் ஸ்நானனையும் அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானையும் அனுப்பினார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய அதிகாரத்துடன் இருக்கும் ஒரே அமைப்பு.

படம்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதம்

பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானின் குரல்–லின்டா கர்லி கிறிஸ்டென்சன்னும் மைக்கேல் டி. மால்மும்

ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள்

ஆசாரியத்துவத் திறவுகோல்கள் நியமங்களைகளைச் செய்ய அனுமதி வழங்குதல் போன்ற, ஆசாரியத்துவத்தின் பயன்பாட்டை வழிநடத்தும் அதிகாரமாகும். ஆசாரியத்துவத்தின் அனைத்து திறவுகோல்களையும் இயேசு கிறிஸ்து தரித்திருக்கிறார். முழு சபையையும் வழிநடத்த ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பயன்படுத்தக் கூடிய பூமியிலுள்ள ஒரே நபர் சபையின் தலைவர்தான். அவருடைய வழிகாட்டுதலின் கீழ், பிறர் தேவனின் பணியைச் செய்ய சில திறவுகோல்களைப் பயன்படுத்தலாம். ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் போன்ற தலைவர்கள் தங்கள் தொகுதிகளையும் பிணையங்களையும் வழிநடத்த ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பயன்படுத்துகிறார்கள். சேவை செய்வதற்கான அழைப்புகள் ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொண்ட தலைவர்களிடமிருந்து வருவதால், அழைப்புகளில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் தங்கள் கடமைகளைச் செய்யும்போது ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவம்

ஆசாரியத்துவத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன: மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவம். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் மூலம், சபையின் தலைவர்கள் சபையின் ஆவிக்குரிய பணிகளான ஊழிய மற்றும் ஆலயபணி போன்றவற்றை இயக்குகிறார்கள். ஆரோனிய ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது. ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து போன்ற நியமங்களைச் செய்ய இது பயன்படுகிறது.

படம்
ஞானஸ்நானம்

ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்கள்

உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களின் மூலம், தேவன் தனது எல்லா பிள்ளைகளுக்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் கிடைக்கச் செய்கிறார். இந்த ஆசீர்வாதங்களில் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம், திருவிருந்து மற்றும் ஆலய நியமங்கள் ஆகியவை அடங்கும். ஆலயத்தில் தரிப்பித்தல் பெற்ற ஆண்களும் பெண்களும் தங்கள் உடன்படிக்கைகளின் மூலம் தேவனின் ஆசாரியத்துவ வல்லமையின் வரத்தைப் பெறுகிறார்கள். குணப்படுத்துதல், ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகிய ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களையும் நாம் பெறலாம்.

படம்
ஆலயத்தில் புதிதாக திருமணமானோர்

ஆசாரியத்துவம் பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?

பூர்வ காலத்தில் இருந்த அதே ஆசாரியத்துவம் இப்போதும் இருக்கிறது ( மோசே 6:7 பார்க்கவும்).

கர்த்தருடைய பணியை நாம் ஒழுங்கான முறையில் நிறைவேற்றுகிறோம் என்பதை உறுதிப்படுத்த ஆசாரியத்துவ திறவுகோல்கள் உதவுகின்றன(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:11 பார்க்கவும்).

ஆசாரியத்துவத்தை வைத்திருக்கும் ஆண்கள் அதை “நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே” பயன்படுத்த முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:36).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–67ல் ஆசாரியத்துவம் தரித்தவர்களின் கடமைகளில் சில விவரிக்கப்பட்டுள்ளன.

அச்சிடவும்