2021
பொதுமாநாடு: உலகளாவிய சபைக் கூட்டம்
செப்டம்பர் 2021


“பொதுமாநாடு: உலகளாவிய சபைக் கூட்டம்,” லியஹோனா, செப்டம்பர் 2021

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனுவரி 2021

பொதுமாநாடு: உலகளாவிய சபைக் கூட்டம்

பொது மாநாட்டின் போது தீர்க்கதரிசிகள் மற்றும் பிற சபைத் தலைவர்கள் பேச நாம் கேட்கிறோம். நாம் கேட்க தேவன் விரும்புவதை அவர்கள் நமக்குக் கற்பிக்கின்றனர்.

மாநாட்டு மைய வெளிப்புறம்

ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் அக்டோபரிலும், சபை பொது மாநாடு எனப்படும் தொடர் கூட்டங்களை நடத்துகிறது. இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிஷேசம் பற்றி தலைவர்கள் போதித்து, சாட்சியமளிக்கிறார்கள். பொது மாநாடு அமெரிக்காவின், யூட்டா, சால்ட் லேக் சிட்டியில் நடைபெறுகிறது, மேலும் இது 80க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களும் மற்றும் ஆர்வமுள்ள பிறரும் செய்திகளைக் கேட்க அழைக்கப்படுகிறார்கள்.

மாநாட்டு மைய உட்புறம்

முதல் சபை மாநாடுகள்

சபை அதிகாரப் பூர்வமாக ஏப்ரல் 6, 1830ல் ஒரு கூட்டத்தின் போது அமைக்கப்பட்டது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20 பார்க்கவும்). முதல் பொது மாநாடு ஜூன் 9, 1830 அன்று நடைபெற்றது. அப்போதிலிருந்து, உறுப்பினர்கள் கூடும் இடங்களில் சபைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் பொது மாநாடுகள் நடத்தப்பட்டன. 1840களில், தலைவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை மாநாட்டை நடத்தத் தொடங்கினர்.

பீடத்தில் தலைவர் நெல்சன்

இன்று எப்படி மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன

பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமம் மற்றும் பிற சபைத் தலைவர்கள் பொது மாநாட்டின் போது பேசுகிறார்கள். ஆலய சதுக்கத்திலுள்ள டேபர்னக்கிள் பாடகர் குழு மற்றும் பிற சபை பாடகர்கள் இசையை வழங்குகிறார்கள். ஒவ்வொரு மாநாட்டிலும் ஐந்து அமர்வுகள் உள்ளன: மூன்று சனிக்கிழமை மற்றும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை. ஏப்ரலில், சனிக்கிழமையன்று மூன்றாவது அமர்வு ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவக் குழுமங்களின் உறுப்பினர்களுக்கானது. அக்டோபரில், இது ஒத்தாசை சங்க உறுப்பினர்கள் மற்றும் இளம் பெண்களுக்கானது.

தலைவர்களின் போதனைகள்

மாநாட்டுக்கு முந்தைய மாதங்களில், சபைத் தலைவர்கள் என்ன கற்பிக்க வேண்டும் என்று ஜெபம் செய்கிறார்கள். அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய கர்த்தர் அவர்களுக்கு உணர்த்துகிறார். அவர்கள் சுவிசேஷ சத்தியங்களை போதிக்கிறார்கள் மற்றும் தேவனின் கட்டளைகளை கடைபிடிக்க நம்மை அழைக்கிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறார்கள் மற்றும் அவரைப் பின்பற்றும்படி நம்மை ஊக்குவிக்கிறார்கள்.

பொது மாநாட்டிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

பொது மாநாட்டிற்கு முன், கர்த்தர் நாம் கற்றுக்கொள்ள விரும்புவதை கேட்க நாம் ஜெபிக்கலாம். நாம் செய்திகளைக் கேட்கும்போது, நாம் தெரிந்து கொள்ள வேண்டியதை ஆவி நமக்குக் கற்பிக்கும். மாநாட்டிற்குப் பிறகு, செய்திகள் ChurchofJesusChrist.org, Gospel Library app மற்றும் லியஹோனாவில் வரும். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிஷேசம் பற்றி மேலும் அறிய நாம் ஜெபத்துடன் செய்திகளைப் படிக்கலாம்.

வேதங்களிலிருந்து

நாம் அடிக்கடி ஒன்றாக சந்திக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து போதித்தார் (3 நேபி 18:22 பார்க்கவும்).

சபையார் ஒன்றாக ஆராதிக்கும்போது, கர்த்தர் அவர்களுடன் இருப்பார் (மத்தேயு 18:20 பார்க்கவும்).

சபையார் ”ஒருவருக்கொருவர் அறிவுறுத்தவும் தெளிவுபடுத்தவும்” கர்த்தர் கட்டளையிட்டார்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:8).

சபையார் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் காண்பிப்பதால், அவர்கள் சந்திக்கும் போது அவருடைய ஆவி அவர்களுடன் இருக்கும் (கோட்பாடும் உடன்படிக்கைககளும் 44:2 பார்க்கவும்).