2021
கர்த்லாந்து ஆலயம்
செப்டம்பர் 2021


“கர்த்லாந்து ஆலயம்,” நண்பன், செப். 2021.

Monthly Friend Message, September 2021

கர்த்லாந்து ஆலயம்

படம்
தரிசனத்தில் கர்த்லாந்து ஆலயத்தை ஜோசப் ஸ்மித் பார்த்தல்

ஒரு ஆலயம் கட்டுமாறு தேவன் ஜோசப் ஸ்மித்திடம் சொன்னார். ஒரு வெளிப்பாடு அது எப்படி தோற்றமளிக்கும் என்பதைக் காட்டியது. அது தேவனின் வீடாக இருக்கும்.

படம்
கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுதல்

பரிசுத்தவான்கள் ஆலயம் கட்ட உதவ ஒன்றிணைந்து வேலை செய்தனர். ஆண்கள் உயரமான சுவர்களைக் கட்டினார்கள். பெண்கள் திரைச்சீலைகள் மற்றும் தரைவிரிப்புகளை செய்தனர். தொழிலாளர்களுக்கு கருவிகள் மற்றும் தண்ணீர் கொண்டு வர குழந்தைகள் உதவினார்கள்.

படம்
ஜனங்கள் பாடுதல்

ஆலயம் கட்டி முடிந்ததும், பரிசுத்தவான்கள் உள்ளே சென்றனர். அவர்கள் ஒரு பாடலைப் பாடி, “ஓசன்னா!” என குரலெழுப்பினர். ஜோசப் ஆலயத்தை பிரதிஷ்டை செய்ய (ஆசீர்வதிக்க) ஒரு ஜெபம் செய்தார்.

படம்
இயேசு கிறிஸ்து கர்த்லாந்து ஆலயத்துக்கு வருதல்

ஒரு வாரம் கழித்து, இயேசு கிறிஸ்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரியைச் சந்தித்தார். இயேசு ஆலயத்தை தனது வீடாக ஏற்றுக்கொண்டதாக கூறினார்.

படம்
ஆலய சதுக்கத்தில் பிள்ளைகள்

இன்று உலகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன! ஒவ்வொரு ஆலயமும் ஒரு பரிசுத்தமான இடம். ஒருநாள் நான் உள்ளே சென்று தேவனிடம் வாக்குத்தத்தங்கள் செய்வேன்.

வண்ணமிடும் பக்கம்

ஆலயம் ஒரு பரிசுத்தமான இடம்.

படம்
ஒரு பிள்ளை மற்றொன்றுடன் நண்பன் பத்திரிக்கையை பகிர்தல்

பதிவிறக்கம் செய்ய படத்தில் கிளிக் செய்யவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்

ஆலயம் ஏன் விஷேசமானது?

அச்சிடவும்