2022
திருவிருந்து: இரட்சகரை நினைவுகூருவதற்கான ஒரு வழி
ஏப்ரல் 2022


“திருவிருந்து: இரட்சகரை நினைவுகூருவதற்கான ஒரு வழி,” லியஹோனா, ஏப்ரல் 2022.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2022

திருவிருந்து: இரட்சகரை நினைவுகூருவதற்கான ஒரு வழி

placeholder altText

கடைசி இராப்போஜனம்–சைமன் டிவே

இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப்படுவதற்கு முந்திய இரவில், கடைசி இராப்போஜனத்தில் அவருடைய அப்போஸ்தலர்களை அவர் சந்தித்தார். அங்கே முதன் முறையாக அவர்களுக்கு அவர் திருவிருந்தைக் கொடுத்தார். அவரை நினைவுகூருவதற்கு அவர்களுக்கு இது ஒரு வழி என அவர் விவரித்தார். திருவிருந்து ஒரு நியமம் அதில் கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை நினைவுகூர, அப்பத்திலும் தண்ணீரிலும் நாம் பங்கேற்கிறோம். அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தையும், தண்ணீர் அவருடைய இரத்தத்தையும் குறிக்கிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிருந்துக் கூட்டத்தின்போது நாம் திருவிருந்தில் பங்கேற்கிறோம். ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் அப்பத்தை சிறுதுண்டுகளாக பிட்கும்போது நாம் ஒரு துதிப்பாடலைப் பாடுகிறோம்.

அப்பத்தைப் பிட்கும் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் விசேஷித்த ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79ல் இந்த ஜெபங்கள் காணப்படுகின்றன. பரலோக பிதாவிடம் நாம் வாக்களித்ததையும், நமக்கு அவர் வாக்களித்ததையும் ஜெபங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கும் பிறர், தொகுதி அல்லது கிளை உறுப்பினர்களுக்கு திருவிருந்தை பரிமாறுகிறார்கள். திருவிருந்தில் நாம் பங்கேற்கும்போது, இரட்சகரையும் நமக்காக அவர் செய்த தியாகத்தையும்பற்றி நாம் நினைவுகூருகிறோம். பரலோக பிதாவிடம் நாம் செய்த உடன்படிக்கைகளை (வாக்குத்தத்தங்களை) கைக்கொள்ள நாம் மீண்டும் ஒப்புக்கொடுக்கிறோம்.

திருவிருந்து கூட்டத்தின்போது சிறுமி அப்பத்தில் பங்கேற்றல்

திருவிருந்து ஆசீர்வதிக்கப்பட்டு பரிமாறப்படும்போது நாம் பயபக்தியுடனிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாவநிவர்த்தியைப்பற்றி நினைக்க இது ஒரு நேரம். அவருடைய எடுத்துக்காட்டை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும் என்பதைப்பற்றியும் நாம் சிந்திக்கமுடியும்.