“ஞாயிறு சபைக் கூட்டங்களில் என்ன நடக்கிறது?,” லியஹோனா, ஜூன் 2022.
லியஹோனா மாதாந்தர செய்தி, ஜூன் 2022
ஞாயிறு சபைக் கூட்டங்களில் என்ன நடக்கிறது?
தேவனை ஆராதிக்கவும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒருவருக்கொருவர் போதிக்கவும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுகிறார்கள். கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள், உறுப்பினர்கள் விரும்பினால் ஜெபிக்கவும், உரையாற்றவும், பாடங்களைக் கற்பிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் . விசுவாசத்தில் ஒருவருக்கொருவர் பெலப்படவும், “அவர்களுடைய உள்ளங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டு அன்பாயிருக்கவும்” (மோசியா 18:21) இந்த கூட்டங்கள் உறுப்பினர்களுக்கு உதவுகின்றன.
திருவிருந்து கூட்டம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிருந்துக் கூட்டத்திற்காக தொகுதி அல்லது கிளையின் உறுப்பினர்கள் கூடுகிறார்கள். (நமது விசுவாசத்தைச் சாராதவர்களும்கூட கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.) இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும்படியாக இந்த கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு திருவிருந்து வழங்கப்படுகிறது (திருவிருந்தைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு April 2022 Gospel Basics article பார்க்கவும்). ஜெபங்கள், ஆராதனை இசை மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி உறுப்பினர்கள் வழங்கும் உரைகளும் கூட்டத்தில் அடங்கும்.
பிற கூட்டங்கள்
திருவிருந்துக் கூட்டத்திற்குப் பிறகு, உறுப்பினர்கள் வகுப்புகள் மற்றும் குழுமங்களாக பிரிக்கப்படுகிறார்கள். 18 மாதங்கள் முதல் 11 வயது வரையிலான பிள்ளைகள் ஆரம்ப வகுப்பில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஞாயிறு பள்ளியில் கலந்துகொள்கின்றனர். இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள் அல்லது ஆசாரியத்துவக் குழும கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
ஜெபங்கள்
சபைக் கூட்டங்களில் உறுப்பினர்களால் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. ஜெபங்கள் எளிமையாகவும் பரிசுத்த ஆவியால் வழிகாட்டப்படுவதாகவுமிருக்கிறது. பரலோக பிதாவுக்கான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் ஜெபிக்கிறார்கள். அவரை நோக்கி ஜெபிக்கும்போது, நீர், உமது, உம்முடைய மற்றும் நீர் போன்ற பிரதி பெயர்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
செய்திகள்
திருவிருந்துக் கட்டத்தில் உரைகளை வழங்குமாறு, ஆயத்துவம் அல்லது கிளைத் தலைமை உறுப்பினர்களில் ஒருவர் உறுப்பினர்களைக் கேட்கிறார். இந்த செய்திகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மையப்படுத்துகின்றன. தங்களுடைய செய்திகளை அவர்கள் தயாரிக்கும்போது, வேதங்களையும் சபைத் தலைவர்களின் வார்த்தைகளையும் செய்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். தங்கள் வாழ்க்கையில் சுவிசேஷ கொள்கைகளி்ன் ஆசீர்வாதங்களைப்பற்றியும் அவர்கள் சாட்சியளிக்கின்றனர்.
பாடங்கள்
திருவிருந்துக் கூட்டத்திற்குப் பின்னர், சுவிசேஷத்தைப்பற்றி சிறிய வகுப்புகளில் உறுப்பினர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வேதங்கள், பொது மாநாட்டின் போதனைகள் அல்லது பிற பாடங்களைப்பற்றியதாக பாடங்கள் இருக்கலாம். ஆசிரியர் பாடம் நடத்தினாலும் அது ஒரு விரிவுரை அல்ல. வகுப்பின் அனைத்து உறுப்பினர்களும் தலைப்பைப்பற்றிய தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
சாட்சி
மாதத்திற்கு ஒருமுறை, திருவிருந்துக் கூட்டத்தில் ஒரு சாட்சி கூட்டமும் அடங்கும். வழக்கமாக இது மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையாயிருக்கும். இந்தக் கூட்டத்தின் போது, உறுப்பினர்கள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றிய தங்கள் சாட்சியங்களையும் பகிரலாம். சாட்சி கொடுப்பது என்பது பரிசுத்த ஆவியால் உணர்த்தப்பட்ட சுவிசேஷ சத்தியங்களை அறிவிப்பதாகும்.
ஆயத்தம்
ஜெபித்து, வேதங்களைப் படித்து, பரிசுத்த ஆவியின் உணர்த்துதலைப் பெறுவதற்கு ஆயத்தமாயிருந்து ஞாயிறு கூட்டங்களுக்கு உறுப்பினர்கள் தயாராகிறார்கள். உரையாற்ற அல்லது பாடம் கற்பிக்கும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் எப்படி சுவிசேஷக் கொள்கைகளை கற்பிக்கலாம் என்று ஜெபத்துடன் சிந்தியுங்கள். வேதங்களைப் பயன்படுத்துங்கள். சத்தியத்தின் சாட்சியைப் பகிருங்கள். தேவைப்பட்டால், ஆயத்தப்படுத்த உங்கள் சபைத் தலைவர்கள் உங்களுக்கு உதவமுடியம்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, June 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18315 418