“வாழும் தீர்க்கதரிசிகளால் வழிநடத்தப்படுதல்,”லியஹோனா, செப். 2022.
லியஹோனா மாதாந்தர செய்தி, செப்டம்பர் 2022
வாழும் தீர்க்கதரிசிகளால் வழிநடத்தப்படுதல்
தீர்க்கதரிசிகள் பரலோக பிதாவால் அவருக்காகப் பேச அழைக்கப்பட்ட மனிதர்கள். அவர்கள்இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளித்து அவருடைய சுவிசேஷத்தைப் போதிக்கிறார்கள். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளை நம்புகிறார்கள்.
தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார்
தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து வெளிப்படுத்துதலைப் பெறுகிறார்கள். தீர்க்கதரிசிகள் நமக்குக் கற்பிக்க உணர்த்தப்பட்டால், அது தேவன் நம்மிடம் பேசுவதைப் போன்றதாகும் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38 பார்க்கவும்). தேவனால் நாம் தெரிந்துகொள்ள விரும்புவதை அவர்கள் சொல்கிறார்கள் என்று நாம் நம்பலாம்.
தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறார்கள்.
அனைத்து தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிசாடசியமளிக்கிறார்கள். அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் நமக்குப் போதிக்கிறார்கள் அவருடைய வாழ்க்கை, எடுத்துக்காட்டு மற்றும் பாவநிவர்த்தியைப்பற்றி அவர்கள் நமக்குப் போதிக்கின்றனர். அவரைப் பின்பற்றுவது மற்றும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எப்படி என்பதை அவர்கள் நமக்குக் காட்டுகின்றனர்.
தீர்க்கதரிசிகளின் பொறுப்புகள்
தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போதிக்கிறார்கள். கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும், கடைப்பிடிக்காவிடில் நாம் பெறும் விளைவுகளையும் அவர்கள் விளக்குகிறார்கள். சில சமயங்களில், எதிர்கால நிகழ்வுகளைப்பற்றி நம்மிடம் சொல்ல அவர்கள் உணர்த்தப்படலாம்.
பூர்வகால தீர்க்கதரிசிகள்
ஆதியிலிருந்தே தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் மக்களுக்குப் போதித்துள்ளார். பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளில் ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசே, ஏசாயா மற்றும் பலர் அடங்குவர். மார்மன் புஸ்தகத்தின் மக்களிடையேயும் தீர்க்கதரிசிகள் இருந்தனர். இந்த தீர்க்கதரிசிகளில் லேகி, மோசியா, ஆல்மா மற்றும் மரோனி ஆகியோர் அடங்குவர். அவர்கள் போதித்ததை வேதங்களை வாசிப்பதின் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்.
தற்கால தீர்க்கதரிசிகள்
ஜோசப் ஸ்மித் தற்காலத்தின் முதல் தீர்க்கதரிசி ஆவார். அவர் இயேசு கிறிஸ்துவின் சபையை பூமியில் மறுஸ்தாபிதம் செய்தார். தலைவர் ரசல் எம். நெல்சன் இன்று நமது தீர்க்கதரிசியும் தலைவருமாவார். பிரதான தலைமையிலுள்ள அவருடைய ஆலோசகர்கள் மற்றும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகள் ஞானதிருஷ்டிக்காரர்கள், மற்றும்வெளிப்படுத்துபவர்கள்
தீர்க்கதரிசிக்கு செவிகொடுத்தல்
பொது மாநாட்டின் போதும் மற்ற நேரங்களிலும் தீர்க்கதரிசி நம்மிடம் பேசுகிறார். தேவன் நாம் தெரிந்துகொள்ள விரும்புவதும் இந்நாட்களில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதும் எப்படி என்று அவர் நமக்குப் போதிக்கிறார். நாம் அவரது போதனைகளை லியஹோனாமற்றும் ChurchofJesusChrist.org யிலும் காணலாம்
தீர்க்கதரிசியை பின்பற்றுவதின் ஆசீர்வாதங்கள்
தீர்க்கதரிசியின் போதனைகளைப் பின்பற்றினால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். நாம் தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போது, தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதைச் செய்கிறோம் என்பதை அறியலாம். நம் வாழ்வில் சமாதானத்தை உணரலாம் மற்றும் இயேசு கிறிஸ்துவை கிட்டி சேரலாம்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, September 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18299 418