2022
நித்திய உடன்படிக்கை
அக்டோபர் 2022


“நித்திய உடன்படிக்கை”லியஹோனா, அக். 2022.

லியஹோனா மாதாந்தர செய்தி, அக்டோபர் 2022

நித்திய உடன்படிக்கை

தேவனுடன் உடன்படிக்கை செய்த அனைவருக்கும் ஒரு விசேஷமான அன்பும் கருணையும் கிடைக்கும்

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து -டெல் பார்சன்

போர்கள் மற்றும் போர்களின் வதந்திகளால் சிதைந்த இந்த உலகில், உண்மை, ஒளி மற்றும் இயேசு கிறிஸ்துவின் தூய அன்பு ஆகியவற்றின் தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. கிறிஸ்துவின் சுவிசேஷம் மகிமை வாய்ந்தது, அதைப் படித்து அதன் கட்டளைகளின்படி வாழ நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாம் எங்கிருந்தாலும் அதைப் பகிர்ந்துகொள்வதற்கான, அதன் சத்தியங்களை சாட்சியமளிப்பதற்கான வாய்ப்புகளில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்-

ஆபிரகாமிய உடன்படிக்கையயையும் இஸ்ரவேலின் கூடுகையின் முக்கியத்துவத்தையும்பற்றி நான் அடிக்கடி பேசியிருக்கிறேன். நாம் சுவிசேஷத்தை தழுவிக்கொண்டு ஞானஸ்நானம் பெறும்போது, ​​இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை நம்மீது நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஞானஸ்நானம் என்பது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு பூர்வ காலத்தில் தேவன் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளுக்கும் நம்மை கூட்டு சுதந்தரர்களாக மாற வழிவகுக்கும் வாயில்.1

வாழ்ந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் வெவ்வேறு காலங்களில் தேவன் செய்த உடன்படிக்கையின் இரண்டு வழிகளான “புதிய மற்றும் நித்திய உடன்படிக்கை”2 (Doctrine and Covenants 132:6) மற்றும் ஆபிரகாமிய உடன்படிக்கை ஆகியவை அடிப்படையில் ஒரே மாதிரியானவை.

நித்தியத்திற்கும் என்ற பெயர்சொல் இந்த உடன்படிக்கை உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்ததைக் குறிக்கிறது! பரலோகத்தின் மாபெரும் ஆலோசனையில் வகுக்கப்பட்ட திட்டத்தில், நாம் அனைவரும் தேவனின் பிரசன்னத்திலிருந்து துண்டிக்கப்படுவோம் என்ற மிகைப்படுத்தப்படாத உணர்வை உள்ளடக்கியது. இருப்பினும், வீழ்ச்சியின் விளைவுகளை சமாளிக்கும் ஒரு இரட்சகரை வழங்குவதாக தேவன் வாக்குறுதி அளித்தார். ஆதாமின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவனிடம் தேவன் கூறினார்:

“அநாதியாய் என்றென்றைக்கும் நாட்களின் தொடக்கமும் வருஷங்களின் முடிவும் இல்லாதவருமான அவரின் முறைமையின்படி இருக்கிறாய்”

“இதோ, தேவகுமாரனாகிய நீ என்னில் ஒருவனாயிருக்கிறாய்; அப்படியாக யாவரும் என்னுடைய புத்திரர்களாகுகிறார்கள்.”மோசே 6:67-68).

ஆதாமும் ஏவாளும் ஞானஸ்நானத்தின் நியமத்தை ஏற்றுக்கொண்டனர் மற்றும் தேவனுடன் ஒன்றாக இருக்கும் செயல்முறையைத் தொடங்கினர். அவர்கள் உடன்படிக்கையின் பாதையில்பிரவேசித்தார்கள்.

நீங்களும் நானும் அந்தப் பாதையில் பிரவேசிக்கும் போது, ​​நமக்கு ஒரு புதிய வாழ்க்கை முறை உள்ளது. இதன் மூலம் நாம் தேவனுடன் ஒரு உறவை உருவாக்குகிறோம், அது அவர் நம்மை ஆசீர்வதிக்கவும் மாற்றவும் இடங்கொடுக்கிறது. உடன்படிக்கையின் பாதை நம்மை மீண்டும் அவரிடம் அழைத்துச் செல்கிறது. நம் வாழ்வில் தேவனை மேலோங்க அனுமதித்தால், அந்த உடன்படிக்கை நம்மை அவருக்கு நெருக்கமாகவும், மிக நெருக்கமாகவும் வழிநடத்தும். அனைத்து உடன்படிக்கைகளும் பிணைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். அவைகள் நித்திய இணைப்புகளுடன் ஒரு உறவை உருவாக்குகின்றன

ஒரு விசேஷித்த அன்பும் இரக்கமும்

நாம் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தவுடன், நாம் எப்போதும் மத்தியஸ்தலத்தை விட்டுவிடுகிறோம். தம்முடன் அப்படிப்பட்ட பிணைப்பை ஏற்படுத்தியவர்களுடனான உறவை தேவன் கைவிடமாட்டார். உண்மையில், தேவனுடன் உடன்படிக்கை செய்த அனைவருக்கும் ஒரு விசேஷமான அன்பும் இரக்கமும் கிடைக்கும் எபிரேய மொழியில், அந்த அன்பின் உடன்படிக்கை ஹஸெட் என்று அழைக்கப்படுகிறதுחֶסֶד).3

ஹஸெட் வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை வேதாகம கிங் ஜேம்ஸ் பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்கள்ஹஸெட்வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் சிரமப்பட்ட்டிருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் “அன்புக்கனிவு” வார்த்தையை தேர்ந்தெடுத்தனர் இது ஹஸெட் வார்த்தையின் பெரும்பாலான அர்த்தங்களை கொண்டுள்ளது ஆனாலும் அனைத்து அர்த்தங்களையும் அல்ல “இரக்கம்” மற்றும் “தயவு” போன்ற பிற மொழிபெயர்ப்புகளிலும் வழங்கப்பட்டன. ஹஸெட் என்பது ஒரு உடன்படிக்கை உறவை விவரிக்கும் ஒரு தனித்துவமான சொல், இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும்.

சிலஸ்டியல் திருமணம் என்பது அத்தகைய உடன்படிக்கையின் உறவு. ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும் உண்மையுடனும் இருக்க தேவனுடன் உடன்படிக்கை செய்கிறார்கள்

ஹஸெட் என்பது தேவனிடம் உடன்படிக்கை செய்தவர்களுக்கு அவரிடமிருந்து வரும் உணர்வுபூர்வமான விசேஷித்த அன்பும் இரக்கமும் ஆகும். நாம் அவரிடம் அந்த ஹஸெட்டை திருப்பி கொடுக்கிறோம்

ஆலயத்திற்கு வெளியே புதிதாக திருமணமான தம்பதிகள்

நீங்களும் நானும் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தவுடன், அவருடனான நமது உறவு நமது உடன்படிக்கைக்கு முன்பை விட மிகவும் நெருக்கமாகிறது இப்போது நாம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம்.

புகைப்படம்-ஜெர்ரி எல். கார்ன்ஸ்

தேவன் தம்முடன் உடன்படிக்கை செய்தவர்களுக்காக ஹஸெட்டை கொடுக்கிறார், அவர் அவர்களை நேசிப்பார். அவர் அவர்களுடன் தொடர்ந்து ஊழியம்செய்வார் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவார். அவர்கள் மனந்திரும்பும்போது அவர்களை அவர் மன்னிப்பார். அவர்கள் வழிதவறிச் சென்றால், தம்மிடம் திரும்பி வருவதற்கு அவர் அவர்களுக்கு உதவுவார்.

நீங்களும் நானும் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தவுடன், அவருடனான நமது உறவு நமது உடன்படிக்கைக்கு முன்பை விட மிகவும் நெருக்கமாகிறது இப்போது நாம் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். தேவனுடனான நமது உடன்படிக்கையின் காரணமாக, அவர் நமக்கு உதவி செய்யும் முயற்சிகளில் சோர்வடைய மாட்டார், மேலும் அவருடைய இரக்கமுள்ள பொறுமையை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். நம் ஒவ்வொருவருக்கும் தேவனின் இருதயத்தில் ஒரு தனி இடம் உண்டு. அவர் நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு தேவன் வழங்கிய வரலாற்றுச் சிறப்புடைய பிரகடனத்தை நீங்கள் அறிவீர்கள் இது வெளிப்பாட்டால் வந்தது. கர்த்தர் ஜோசப்பிடம் கூறினார் , “இந்த வாக்குத்தத்தம் உனக்கும்கூட, ஏனெனில் நீ ஆபிரகாமுடையவன், வாக்குத்தத்தம் ஆபிரகாமிற்கு செய்யப்பட்டது;” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:31)

இதன்மூலம், இந்த நித்திய உடன்படிக்கை சுவிசேஷ முழுமையின் மாபெரும் மறுஸ்தாபத்தின் ஒரு பகுதியாக மீட்டெடுக்கப்பட்டது. அதைப்பற்றி சிந்தியுங்கள்! ஆலயத்தில் செய்யப்படும் திருமண உடன்படிக்கை அந்த ஆபிரகாமிய உடன்படிக்கையுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோரின் விசுவாசமுள்ள சந்ததியினருக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் புதுமண தம்பதியருக்கு அறிமுகம் செய்துவைக்கப்படுகிறது.

ஆதாமைப் போலவே, நீங்களும் நானும் தனிப்பட்ட முறையில் ஞானஸ்நானத்தில் உடன்படிக்கையின் பாதையில் பிரவேசித்தோம். பின்னர் நாம் ஆலயத்தில் முழுமையாக பிரவேசிக்கிறோம். ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆலயங்களில் வழங்கப்படுகின்றன இந்த ஆசீர்வாதங்கள் நம்மை, உயிர்த்தெழுதலுக்கு பின்பு; சிங்காசனங்களையும், ராஜ்யங்களையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும், ஆளுகைகளையும், சகல காரியங்களிலும் மேன்மையடைதலுக்கும், மகிமைக்கும் சுதந்தரித்துக் கொள்ள வழிவகுக்கும்.[கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:19].”4

பழைய ஏற்பாட்டின் இறுதி வாசகத்தில், எலியா “பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவார்” என்ற மல்கியாவின் வாக்குத்தத்தைப்பற்றி வாசிக்கிறோம்(மல்கியா 4:6). பூர்வகால இஸ்ரவேலில், பிதாக்களைப்பற்றிய இத்தகைய குறிப்புகளில் பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர் அடங்குவர். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு, மரோனி மேற்கோள் காட்டிய இந்த வசனத்தின் வெவ்வேறு பதிப்பைப் படிக்கும்போது இந்த வாக்குத்தத்தம் தெளிவுபடுத்தப்படுகிறது: “அவர் [எலியா] பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும்”(ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:39). அந்த பிதாக்களில் நிச்சயமாக ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் அடங்குவர். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:9-10 பார்க்கவும்.)

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து அவற்றைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நித்திய ஜீவனும் மேன்மையடைதலும் வாக்களிக்கப்படுகிறது. அந்த உடன்படிக்கைகளுக்கு இயேசு கிறிஸ்து உத்தரவாதம் அளிப்பவர்

கிறிஸ்துவும் இளம் ஐஸ்வர்யவானும் – ஹெய்ன்ரிச் ஹோப்மலிருந்து விவரம்

இயேசு கிறிஸ்து: உடன்படிக்கையின் மையமானவர்

இரட்சகரின் பாவநிவாரண பலி பிதா தனது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவியது இயேசு கிறிஸ்துவே “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்,”அதினாலே “[அவராலே] அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). நம்முடைய இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் காரணமாக ஆபிரகாமிய உடன்படிக்கையின் நிறைவேற்றம் சாத்தியமாகிறது. ஆபிரகாமிய உடன்படிக்கையின் மையமானவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

பழைய ஏற்பாடு என்பது வேதப் புஸ்தகம் மட்டுமல்ல; இது ஒரு வரலாற்று புஸ்தகமும் கூட. சாராய் மற்றும் ஆபிராம் திருமணத்தைப்பற்றி படித்தது நினைவிருக்கலாம். அவர்களுக்குக் குழந்தை இல்லாததால், கர்த்தருடைய வழிகாட்டுதலின்படி சாராய் தன் வேலைக்காரியாகிய ஆகாரையும் ஆபிராமின் மனைவியாகக் கொடுத்தாள். ஆகார் இஸ்மவேலைப் பெற்றெடுத்தாள்.5 ஆபிராம் இஸ்மவேலை நேசித்தான், ஆனால் அவன் உடன்படிக்கையை கடத்துகிற குழந்தையாக இருக்கக்கூடாது. (ஆதியாகமம் 11:29-30; 16:1,3,11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:34 பார்க்கவும்.)

தேவனின் ஆசீர்வாதமாகவும், சாராயின் விசுவாசத்திற்குப் பிரதிபலனாகவும்6 அவள் முதிர்வயதில் கருவுற்றாள், அதனால் உடன்படிக்கை அவளுடையமகன் ஈசாக்கின் வழியாக செல்லும் ( ஆதியாகமம் 17:19ஐப் பார்க்கவும்). அவர் உடன்படிக்கையில் பிறந்தார்.

தேவன் சாராய் மற்றும் ஆபிராமுக்கு புதிய பெயர்களைக் கொடுத்தார்-சாராள் மற்றும் ஆபிரகாம் (ஆதியாகமம் 17:5, 15 பார்க்கவும்). அந்த புதிய பெயர்கள் வழங்கப்பட்டதன் மூலம் இந்த குடும்பத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை மற்றும் ஒரு புதிய நியதியின் தொடக்கமாக அமைந்தது.

ஆபிரகாம், இஸ்மவேல் மற்றும் ஈசாக்கை நேசித்தார். இஸ்மவேல் பெருகி ஒரு பெரிய தேசமாக மாறுவார் என்று தேவன் ஆபிரகாமிடம் கூறினார்(ஆதியாகமம் 17:20 பார்க்கவும்). அதே நேரத்தில், நித்திய உடன்படிக்கை ஈசாக்கின் மூலம் நிறைவேற்றப்படும் என்று தேவன் தெளிவுபடுத்தினார்(ஆதியாகமம் 17:19 பார்க்கவும்).

சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ஆபிரகாம் வம்சத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். கலாத்தியரில் நாம் வாசிக்கிறோம்:

“ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்கள். …

“… நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.” (கலாத்தியர் 3:27--29).

எனவே, நாம் பிறப்பு அல்லது தத்தெடுப்பு மூலம் உடன்படிக்கைக்கு சுதந்தரர்களாக முடியும்.

ஞானஸ்நான சேவைக்காக ஜனங்கள் கூடினர்

நாம் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தவுடன், நாம் எப்போதும் மத்தியஸ்தலத்தை விட்டுவிடுகிறோம். தம்முடன் அப்படிப்பட்ட பிணைப்பை ஏற்படுத்தியவர்களுடனான உறவை தேவன் கைவிடமாட்டார்.

ஈசாக்கு மற்றும் ரெபெக்காவின் மகன் யாக்கோபு உடன்படிக்கையில் பிறந்தான். கூடுதலாக, அவன் தனது சொந்த விருப்பப்படி பிரவேசிக்க தேர்ந்தெடுத்தான். உங்களுக்குத் தெரியும், யாக்கோபின் பெயர் இஸ்ரவேல்என்று மாற்றப்பட்டது(ஆதியாகமம் 32:28 பார்க்கவும்), அதின் அர்த்தம் “தேவன் மேலோங்கட்டும்” அல்லது “தேவனோடு மேலோங்குபவர்.”7

யாத்திராகமத்தில் “தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்” என்று வாசிக்கிறோம்.(யாத்திராகமம் 2:24) தேவன் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் (யாத்திராகமம் 19:5).

“சம்பத்தாயிருப்பீர்கள்” என்ற சொற்றொடர் எபிரேய பாஷை செகுல்லாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, அதின் அர்த்தம் மிகவும் மதிப்புமிக்க உடைமை – “சம்பத்து.”8

உபாகம புஸ்தகம் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்கள் இந்த உடன்படிக்கையை அறிந்திருந்தனர். பேதுரு ஆலய படிக்கட்டுகளில் இருந்த ஒரு முடவனைக் குணப்படுத்திய பிறகு, இயேசுவைப்பற்றி அங்கிருந்தவர்களுக்கு போதித்தான். பேதுரு கூறினான், “ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய மேன்மையடைதலும் குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்”(அப்போஸ். 3:13).

நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று பேதுரு தனது செய்தியை பார்வையாளர்களிடம் சொல்லி முடித்தான்(அப்போஸ். 3:25). கிறிஸ்துவின் ஊழியத்தின் ஒரு பகுதி தேவனின் உடன்படிக்கையை நிறைவேற்றுவது என்று பேதுரு அவர்களுக்கு தெளிவுபடுத்தினான்.

பூர்வகால அமெரிக்க ஜனங்களுக்கு தேவன் இதே போன்ற பிரசங்கத்தை வழங்கினார். அங்கே, உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவர்கள் உண்மையில் யார் என்று அந்த ஜனங்களுக்குச் சொன்னார். அவர் சொன்னார்,

இதோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்; நீங்கள் இஸ்ரவேல் வீட்டாரைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள்; பிதா ஆபிரகாமை நோக்கி: உன் சந்ததியாலே உலகத்தின் சகல இனத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, உங்கள் பிதாக்களிடத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையைச் சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள்.

முதலில் நான் உங்களுக்குள் வரவேண்டுமென்று பிதா என்னை எழப்பண்ணி, உங்களில் ஒவ்வொருவனையும் தன் தன் அக்கிரமங்களிலிருந்து விலகிப்போகப்பண்ணி, உங்களை ஆசீர்வதிக்கும்படி என்னை அனுப்பினார்; இது நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாய் இருப்பதினாலேதான். (3 நேபி 20:25-26)

இதன் முக்கியத்துவத்தைப் பார்க்கிறீர்களா? தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் பாவத்தை எதிர்க்கும் ஆத்துமாக்களாக மாறுவார்கள்! தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் உலகின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்க்கும் வலிமையைப் பெறுவார்கள்.

திருவிருந்தில பங்குபெறும் ஆண்

தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் பாவத்தை எதிர்க்கும் ஆத்துமாக்களாக மாறுவார்கள்! தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் உலகின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்க்கும் வலிமையைப் பெறுவார்கள்.

ஊழியப் பணி: உடன்படிக்கையைப் பகிர்தல்

நாம் சுவிசேஷத்தைப் பரப்பவும் உடன்படிக்கையைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். அதனால்தான் நமக்கு ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். இரட்சகரின் சுவிசேஷத்தைத் தேர்ந்தெடுக்கவும், உடன்படிக்கைப் பாதையில் செல்லவும் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். தேவன் ஆபிரகாமுடன் பூர்வகாலத்தில் செய்த உடன்படிக்கைக்கு எல்லா ஜனங்களையும் இணைக்க விரும்புகிறார்.

எனவே, ஊழியப்பணி இஸ்ரவேலின் கூடுகையில் இன்றியமையாத பகுதியாகும் “அந்த கூடுகையே இன்று பூமியில் நடக்கும் மிக முக்கியமான பணி. வேறு எதுவும் பெரிய அளவில் ஒப்பிட முடியாது. முக்கியத்துவம் என்று வேறு எதையும் ஒப்பிட முடியாது. தேவனுடைய சீஷர்களான அவருடைய ஊழியக்காரர்கள் இன்று பூமியில் மிகப் பெரிதான சவாலான, மிகப் பெரிதான காரணத்திற்காக, மிகப் பெரிதான ஊழியத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆனால் இன்னும் சில கூடுதல் காரியங்கள் உள்ளன. திரையின் மறுபக்கத்தில் உள்ள ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான மிகப்பெரிய தேவை உள்ளது. திரையின் இருபுறமும் உள்ள அனைவரும் அவருடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உடன்படிக்கையின் பாதை அனைவருக்கும் திறந்திருக்கிறது. அந்த வழியில் எங்களுடன் நடக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். வேறெந்தப் பணியும் உலகளவில் அனைவரையும் உள்ளடக்கியது இல்லை ஏனெனில், தங்கள் இருதயத்தின் உண்மையோடு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை அழைக்கிற யாவருக்கும், அவர் இரக்கமுள்ளவராயிருப்பார் (ஏலமன் 3:27)

மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதால் உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் பெண்களும் ஆண்களும் சுவிசேஷத்தின் அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற முடியும்”கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:18; வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).

1836 ல் கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையின் போது, தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ், எலியா தோன்றினான். அவனது நோக்கம்? “பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும் திருப்ப”கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:15 எலியாசும் தோன்றினான் அவரது நோக்கம்? “எங்களாலும் எங்களுடைய சந்ததியாலும் சகல தலைமுறைகளும் ஆசீர்வதிக்கப்படும் என எங்களிடம் சொல்லி ஆபிரகாமின் காலத்தில் கொடுக்கப்பட்ட அதே சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தை” ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரியிடம் ஒப்படைத்தான்.கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:12 இவ்வாறு, எஜமானர், ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தையும், ஆபிரகாமிய உடன்படிக்கையின் தனித்துவமான ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் உரிமையையும் வழங்கினார்9

சபையில், தனித்தனியாகவும் கூட்டாகவும் உடன்படிக்கையின் பாதையில் பயணிக்கிறோம் திருமணங்களும் குடும்பங்களும் ஒரு தனித்துவமான பக்கவாட்டு பந்தத்தைப் பகிர்ந்துகொண்டு ஒரு சிறப்பு அன்பை உருவாக்குகிறது, அதுபோலவே நாம் நம் தேவனுடன் செங்குத்தாக உடன்படிக்கையின் மூலம் நம்மைப் பிணைக்கும்போது புதிய உறவு உருவாகிறது!

தம்மை அவர்களுடைய தேவனாகக் கொண்டவர்களை அவர் நேசிக்கிறார். என்று நேபி கூறியதன் அர்த்தம் இதுவாக இருக்கலாம் 1 நேபி 17:40 அதனால்தான், உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, தேவனுடனான இந்த பிணைப்பு மற்றும் நெருக்கமான உறவில் பிரவேசிக்கும் அனைவருக்கும், “ஆயிரம் தலைமுறைமட்டும்” ஒரு விசேஷித்த இரக்கமும் அன்பும், அல்லது ஹஸெட் கிடைக்கின்றன.உபாகமம் 7:9

தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்வது அவருடனான நமது உறவை என்றென்றும் மாற்றுகிறது. இது கூடுதல் அளவு அன்பு மற்றும் இரக்கத்துடன் நம்மை ஆசீர்வதிக்கிறது10 இது நாம் யார் என்பதையும், நாம் என்னவாக முடியுமோ அதுவாக மாறுவதற்கு தேவன் நமக்கு எப்படி உதவுவார் என்பதையும் நிர்ணயிக்கிறது. நாமும் அவருக்கு ஒரு “விசேஷமான சம்பத்தாக” இருக்க முடியும் என்று வாக்களிக்கப்பட்டுள்ளோம்(சங்கீதம் 135:4).

வாக்குத்தத்தங்களும் சிலாக்கியங்களும்

பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து அவற்றைக் கடைப்பிடிப்பவர்களுக்கு தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரமான நித்திய ஜீவனும் மேன்மையடைதலும் வாக்களிக்கப்படுகிறது.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7). அந்த உடன்படிக்கைகளுக்கு இயேசு கிறிஸ்து உத்தரவாதம் அளிப்பவர்( எபிரெயர் 7:22; 8:6 பார்க்கவும்). தேவனை நேசிக்கும் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றிலும் அவரை மேலோங்க அனுமதிக்கிறவர்கள் தேவனை மிகவும் வல்லமையான ஆற்றலுள்ளவர்களாக அவர்களின் வாழ்க்கையில் வைக்கிறார்கள்.

நம் நாளில், கோத்திர தலைவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும், பூர்வகால கோத்திர தலைவனுக்கும் நமக்குள்ள தொடர்பை அறிந்து கொள்வதற்கும் பாக்கியம் பெற்றுள்ளோம். அந்த ஆசீர்வாதங்களும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதைப்பற்றிய ஒரு காட்சியை அளிக்கிறது.

இயேசு பேதுருவுடன் பேசுதல்

தேவனுடனான நமது உடன்படிக்கையின் காரணமாக, அவர் நமக்கு உதவி செய்யும் முயற்சிகளில் சோர்வடைய மாட்டார், மேலும் அவருடைய இரக்கமுள்ள பொறுமையை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.

இவர்களை விட நீ என்னை விரும்புகிறாயா? -டேவிட் லிண்ட்ஸ்லி

உடன்படிக்கையின் இஸ்ரவேல் என நாம் அழைப்பது, சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தேவனுடன் உடன்படிக்கை செய்வதோடு தொடர்புடைய சந்தோஷத்தையும், அதிகாரங்களையும் உணர்ந்து கொள்வதை உறுதி செய்வதாகும். ஒவ்வொரு உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் ஆண் மற்றும் பெண், சிறுவன் மற்றும் சிறுமி, தங்கள் செல்வாக்குக்குரியவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் அழைப்பு இது நமது ஊழியக்காரர்களை ஆதரிப்பதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் ஒரு அழைப்பு, அவர்கள் ஞானஸ்நானம் கொடுப்பதற்கும் இஸ்ரவேலைக் கூட்டுவதற்கு உதவுவதற்கும் அறிவுறுத்தல்களுடன் அனுப்பப்படுகிறார்கள், இதனால் நாம் ஒன்றாக தேவனின் ஜனங்களாகவும் அவர் நம் தேவனாகவும் இருப்பார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:9).

ஆசாரியத்துவ நியமங்களை தகுதியுடன் பெற்று, உடன்படிக்கைகளை கடைபிடிக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தேவ வல்லமையைப் பெறலாம். தேவனின் நாமத்தை நாம் தனி நபர்களாக எடுத்துக்கொள்கிறோம். ஜனங்களாவும் நாம் அவருடைய நாமத்தை எடுத்துக்கொள்கிறோம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பது, ஒருமித்த ஜனங்களாக நாம் அவருடைய பெயரை நம்மீது எடுத்துக்கொள்வதற்கான ஒரு முக்கிய வழியாகும். உண்மையாகவே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் ஒவ்வொரு நன்மையான செயலும் தேவனின் ஹஸெட்.

இஸ்ரவேல் ஏன் சிதறடிக்கப்பட்டது? ஏனென்றால் ஜனங்கள் கட்டளைகளை மீறினார்கள் மேலும், தீர்க்கதரிசிகள் மீது கல்லெறிந்தார்கள். ஒரு அன்பான ஆனால் துக்கமடைந்த பிதா இஸ்ரவேலை தூரமாகவும் பரந்ததாகவும் சிதறடிப்பதன் மூலம் பிரதியுத்தரமளித்தார்11

இருப்பினும், ஒரு நாள் இஸ்ரவேல் மீண்டும் தம்முடைய மந்தையில் சேர்க்கப்படும் என்ற வாக்குறுதியுடன் அவர் அவர்களை சிதறடித்தார்.

தேவனின் முதல் வருகைக்கு உலகை தயார்படுத்தும் பொறுப்பு யூதாவின் கோத்திரத்திற்கு வழங்கப்பட்டது. அந்த கோத்திரத்திலிருந்து, மரியாள் தேவகுமாரனின் தாயாக அழைக்கப்பட்டார்.

யோசேப்பின் கோத்திரம், அவர் மற்றும் ஆஸ்நாத்தின் வழிவந்த மகன்களான எப்பிராயீம் மற்றும் மனாசே (ஆதியாகமம் 41:50-52;46:20 பார்க்கவும்) மூலம், தேவனின் இரண்டாம் வருகைக்கு உலகை தயார்படுத்துவதற்கு இஸ்ரவேலின் கூடுகைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய காலவரம்பற்ற ஹஸெட் உறவில், தேவன் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க விரும்புவது இயற்கையானது. அவர் நமது பரலோக பிதா. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் பண்ணப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியை திரையின் இருபுறமும் உள்ள அவரது பிள்ளைகள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

அன்பின் பாதை

உடன்படிக்கையின் பாதை அன்பின் பாதையாகும்-அது வியக்கத்தக்க ஹஸெட், மனதுருக்கமுள்ள அக்கறை மற்றும் ஒருவருக்கொருவர் அணுகுதலாகும். அன்பு விடுதலையும், எழுச்சியும் தருவதாக உணர்கிறேன். தேவன் மீதும் அவருடைய அனைத்து பிள்ளைகள் மீதும் நீங்கள் அன்பு செலுத்தும்போது நீங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

தேவனை, யாரையும் விட அல்லது எதையும்விட அதிகமாக நேசிப்பதே உண்மையான சமாதானத்தையும், ஆறுதலையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

உடன்படிக்கையின் பாதை என்பது தேவனுடனான நமது உறவைப் பற்றியது அவருடனான நமது ஹஸெட் உறவு. நாம் தேவனுடன் ஒரு உடன்படிக்கையில் பிரவேசிக்கும்போது, ​​அவருடைய வார்த்தையை எப்போதும் கடைப்பிடிப்பவருடன் நாம் உடன்படிக்கை செய்துள்ளோம். நம்முடைய சுயாதீனத்தை மீறாமல், நம்முடையதைத் தக்க வைத்துக் கொள்ள அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

மார்மன் புஸ்தகம் இந்த நித்திய உடன்படிக்கையைக் குறிப்பிடுவதன் மூலம் தொடங்குகிறது மற்றும் முடிவடைகிறது அதன் முன்னுரை பக்கத்திலிருந்து மார்மன் மற்றும் மரோனியின் இறுதி சாட்சியங்கள் வரை, மார்மன் புஸ்தகம் உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது (மார்மன் 5:20;9:37 பார்க்கவும்). “கர்த்தர் இஸ்ரவேலைச் சேர்க்கவும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு செய்த உடன்படிக்கைகளை நிறைவேற்றவும் துவங்கிவிட்டார் என்பதற்கு மார்மன் புஸ்தகம் வெளிவருதல் ஓர் அறிகுறி”12

என் அன்பான சகோதர சகோதரிகளே, நித்திய உடன்படிக்கையின் அழகையும் வல்லமையையும் உலகிற்கு போதிக்க பூமியின் வரலாற்றில் இந்த முக்கிய நேரத்தில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய பரலோக பிதா இந்தப் பெரிய பணியைச் செய்ய நம்மை உளமார நம்புகிறார்.

இந்தச் செய்தி மார்ச் 31, 2022 அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டத்திலும் வழங்கப்பட்டது.

குறிப்புகள்

  1. ரசல் எம். நெல்சன், “Children of the Covenant,” Ensign, May 1995, 34: பார்க்கவும்.

  2. புதிய மற்றும் நித்திய உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமை நம் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்து நியமங்களும் உடன்படிக்கைகளும் இதில் அடங்கும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66:2 பார்க்கவும்). கர்த்தர் அவைகளை புதுப்பிக்கும்போதோ அல்லது மறுஸ்தாபிக்கும்போதெல்லாம் அது “புதியது”, மேலும் அது மாறாததால் “நித்தியமானது”.

  3. ஹஸெட் மற்றும் நித்திய உடன்படிக்கைபற்றிய விரிவான கலந்துரையாடல் கெர்ரி முஹ்லஸ்டீனில் காணப்படுகிறது தேவன் மேலோங்குவார்: பூர்வகால உடன்படிக்கைகள், நவீன ஆசீர்வாதங்கள் மற்றும் இஸ்ரவேலின் கூடுகை. (2021)

  4. ரசல் எம். நெல்சன், “கிறிஸ்துவின் சிறப்பு சாட்சிகள்” .லியஹோனா,ஏப். 2001, 7

  5. இஸ்மவேல் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் “தேவன் கேட்கிறார்”(Bible Dictionary, “Ishmael”)

  6. “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்”எபிரெயர் 11:11)

  7. Bible Dictionary, “Israel பார்க்கவும்.

  8. Bible Dictionary, “Peculiarபார்க்கவும்.”; “Hebrew and Chaldee Dictionary,” Strong’s Exhaustive Concordance of the Bible (1984), 82, word 5459.

  9. ரசல் எம். நெல்சன், “உடன்படிக்கைக்கு நன்றி” பார்க்கவும் (Brigham Young University devotional, Nov. 22, 1988), 4, speeches.byu.edu.

  10. “தேவனுடன் செய்யும் ஒவ்வொரு உடன்படிக்கையும் அவருடன் நெருங்கி வருவதற்கான வாய்ப்பாகும். தேவனின் அன்பைப்பற்றி தாங்கள் ஏற்கனவே உணர்ந்ததை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும், அந்த பிணைப்பை வலுப்படுத்துவதும், அந்த உறவை நெருக்குவதும் தவிர்க்க முடியாத வாய்ப்பாகும்”(Henry B. Eyring, “Making Covenants with God” [Brigham Young University fireside, Sept. 8, 1996], 3, speeches.byu.edu).

  11. “கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ஜனங்களை உலக நாடுகளுக்குள் சிதறடித்து அந்த தேசங்களை ஆசீர்வதிக்க பயன்படுத்தினார்” (Guide to the Scriptures, “Israel,” scriptures.ChurchofJesusChrist.org; see also Jacob 5:1-8, 20).

  12. ரசல் எம். நெல்சன், “The Future of the Church: Preparing the World for the Savior’s Second Coming,” Liahona, Apr. 2020, 9.