லியஹோனா
அனைவருக்குமான இரட்சகர், அனைவருக்கும் சுவிசேஷம்
மார்ச் 2024


அனைவருக்குமான இரட்சகர், அனைவருக்கும் சுவிசேஷம், லியஹோனா, மார். 2024.

லியஹோனா மாதாந்தர செய்தி, மார்ச் 2024

அனைவருக்குமானஇரட்சகர், அனைவருக்கும் சுவிசேஷம்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதல் தேவனின் குழந்தைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது.

படம்
கிறிஸ்துவும் முடக்குவாதமுள்ள மனிதனும்

கிறிஸ்துவும் முடக்குவாதமுள்ள மனிதனும் – ஜெ. கிர்க் ரிச்சர்ட்ஸ்,பிரதி எடுக்கப்படக்கூடாது

இந்த பிந்தைய நாட்களில் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷம், முதலும் பிரதானமும் மற்றும் என்றென்றுக்குமாய் அனைவருக்குமான நிலையான மகிழ்ச்சி, உண்மையான சமாதானம் மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக உள்ளது. சுவிசேஷத்திலிருந்தும் கிறிஸ்துவின் எல்லையற்ற கருணையிலிருந்தும் வரும் ஆசீர்வாதங்கள், பூர்வ காலத்திலோ அல்லது இக்காலத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் ஒருபோதும் அறியப்படவில்லை.

நாம் எவ்வளவு குறைவாக உணர்ந்தாலும், இரட்சகரிடமிருந்து நம்மைத் தூர விலக்கக்கூடிய பாவங்கள் சில காலத்திற்கு இருந்தபோதிலும், “அவர் தன் கரங்களை நாள் முழுவதும் [நம்மிடம்] நீட்டுகிறார்,(யாக்கோபு 6:4) நாம் அனைவரும் அவரிடம் வந்து அவருடைய அன்பை உணர வேண்டுமன்று நமக்கு உறுதியளிக்கிறார்.

பூவுலகம் முழுவதிற்கும் சுவிசேஷ ஆசீர்வாதங்கள்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் “இந்த பூமியிலுள்ள அனைத்து தேசம், இனம், மொழி, மற்றும் ஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிந்தைய நாட்களில் மறுஸ்தாபிக்கப்பட்டது1 “அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே” என்பதை கற்பிக்க அனைத்து கலாச்சார எல்லைகளையும், அனைத்து தேசத்தையும் வர்ணங்களையும் கடந்து சுவிசேஷம் செல்கிறது (2 நேபி 26:33) 2இந்த சத்தியத்தின் குறிப்பிடத்தக்க சாட்சியாக மார்மன் புஸ்தகம் உள்ளது.

கிறிஸ்து சகல தேசத்தாரையும் நினைவுகூருகிறார்,2 நேபி 29:7 மேலும் “தன்னில் விசுவாசிக்கிற அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துவார் … [மற்றும்] மனுபுத்திரர் மத்தியில் பலத்த அற்புதங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்கிறார்.” என்று இந்த பெரிய குறிப்பு சாட்சியமளிக்கிறது.2 நேபி 26:13 இந்த மகத்தான அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் சுவிசேஷம் பரவுகிறது. எனவே, நற்செய்தியை சாட்சியளிக்க உலகம் முழுவதும் ஊழியக்காரர்களை அனுப்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். உயிருடன் இருப்பவர்களுக்காகவும் மரித்தவர்களுக்காகவும் மறுஸ்தாபிக்கப்பட்ட ஆசாரியத்துவத்தின் திறவுகோல், சுவிசேஷத்தின் முழுமை, கடந்த கால, நிகழ்கால அல்லது எதிர்கால நமது பரலோக பெற்றோரின் ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் இறுதியாக கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இயேசுவே கிறிஸ்து மற்றும் அவர் அனைவரையும் ஆசீர்வதிக்க வந்தார் என்பதே இந்த சுவிசேஷத்தின் கரு - இப்பணிக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசி மற்றும் அப்போஸ்தலரின் மையச் செய்தி. இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் பரிசுத்தவான்களின் சபை உறுப்பினர்களாக, அவருடைய இரக்கமுள்ள தியாகம் உலகம் முழுவதற்கும் என்று நாங்கள் அறிவிக்கிறோம்.

எல்லையற்ற மற்றும் நித்திய பாவநிவர்த்திக்கான தேவை

உலகில் எங்கு சென்றாலும் அதிகமான ​​சபை உறுப்பினர்களுடன் நான் நேர்காணல்களை நடத்துகிறேன். சில கடந்தகால பாவங்களை அவர்கள் ஒப்புக்கொண்டாலும் கூட, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கேட்க நான் உணர்த்தப்பட்டேன் அவருடைய பாவநிவர்த்தியின் சுத்தப்படுத்தும் ஆறுதல் நம் அனைவருக்கும் எப்போதும் கிடைப்பது எவ்வளவு அற்புதமானது!

“ஒரு பாவநிவர்த்திசெய்யப்பட வேண்டும், இல்லையெனில் மனுஷகுலம் யாவும் தவிர்க்க முடியாமல் அழிய வேண்டும்” என்று அமுலேக் அறிவித்தான். “எல்லையற்ற மற்றும் நித்திய தியாகமான பாவ நிவர்த்தி இன்றி-நாம் என்றென்றும் “வீழ்ந்து … தொலைந்து போவோம், ஏனெனில், “உலகத்தினுடைய பாவங்களுக்கு ஈடான முடிவற்ற பாவநிவர்த்தியைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது” (ஆல்மா 34:9, 10, 12)

மகத்தான தீர்க்கதரிசியான யாக்கோபு, “மரணம் எல்லா மனுஷர் மீதும் கடந்து சென்றிருக்கிறபடியால்,, … தேவனின் பிரசன்னத்திற்கு நம்மை கொண்டுசெல்வதற்கு உயிர்த்தெழுதலின் வல்லமை தேவையாயிருக்கிறது” என்று போதித்தார்(2 நேபி 9:6)

பாவம் மற்றும் மரணம் இரண்டையும் வெல்ல வேண்டும். இது இரட்சகரின் பணியாகும், இதை அவர் தேவனின் பிள்ளைகள் அனைவருக்குமாய் துணிவுடன் நிறைவுசெய்தார்.

படம்
கெத்செமனேயில் கிறிஸ்து

கெத்செமனே - ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ், பிரதி எடுக்கப்படக்கூடாது

நமது இரட்சகரின் தியாகம்

பூவுலகில் இருந்த கடைசி இரவில், இயேசு கிறிஸ்து கெத்செமனே தோட்டத்திற்குள் நுழைந்தார். அங்கே, ஒலிவ மரங்களுக்கு நடுவே மண்டியிட்டு, நீங்களும் நானும் அறியாத வேதனையின் ஆழத்தில் மூழ்கத் தொடங்கினார்.

அங்கு, அவர் உலகின் பாவங்களைத் தம்மீது சுமக்கத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு வலியையும், மனவேதனையையும், துக்கத்தையும் உணர்ந்தார், மேலும் நீங்கள், நான் மற்றும் இதுவரை வாழ்ந்த அல்லது எப்போதும் வாழப்போகும் ஒவ்வொரு ஆன்மாவும் அனுபவித்த எல்லா வேதனையையும் துன்பங்களையும் அவர் தாங்கினார். இந்த பெரிதான மற்றும் எல்லையற்ற துன்பம் “[அவரை], … சகலத்திற்கும் மேலானவரை, வலியின் காரணமாக நடுங்கவும், ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து”பாடுபடவைத்தது(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18) அவரால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும்.

வேறு எவரும் இல்லை

பாவங்களின் விலையை செலுத்த அவருக்கு நிகரில்லை

அவரால் மட்டுமே பரலோக வாயிலைத் திறக்க

மற்றும் நம்மை உள்ளே அனுமதிக்க முடிந்தது3

இயேசு கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், இந்த உலக வரலாற்றில் மிகவும் சோகமான அநீதியான தருணத்தில், அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவரிடமிருந்து அவரது உயிரை யாரும் எடுக்க முடியாது. ஒரே பேரான தேவ குமாரனாக, அவருக்கு சரீர மரணத்தின் மீது அதிகாரம் இருந்தது. அவர் தனது பிதாவிடம் ஜெபித்திருக்க முடியும், மேலும் அவரை துன்புறுத்துபவர்களை தோற்கடிக்கவும், எல்லாவற்றின் மீதும் அவருடைய ஆதிக்கத்தை நிரூபிக்கவும் தேவதூதர்களின் படைகள் வந்திருக்கும். அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். (மத்தேயு 26:54).

தம்முடைய பிதாவினடத்தில் பரிபூரணக் கீழ்ப்படிதலினாலும், நம்மீதுள்ள பரிபூரண அன்பினாலும்-இயேசு தம்முடைய ஜீவனை மனப்பூர்வமாகக் கொடுத்து, தம்முடைய எல்லையற்ற மற்றும் நித்திய பாவ நிவாரண பலியை நிறைவு செய்தார், அது காலத்தின் முன்னும் பின்னுமாய் நித்தியம் முழுவதும் அடையும்.

நமது இரட்சகரின் வெற்றி

இயேசு தம்முடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய வேலையைத் தொடரும்படி அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அவர்களில் பலர் எளிமையான மீனவர்கள் மட்டுமே, யாரும் ஊழியத்திற்காக ஜெப ஆலயங்களில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அந்த காலத்தில், கிறிஸ்துவின் சபை அழிந்து போவதாகத் தோன்றியது. ஆனால் அப்போஸ்தலர்கள் தங்கள் அழைப்பை ஏற்று உலக வரலாற்றை வடிவமைக்கும் வலிமையை பெற்றனர்.

இத்தகைய வெளிப்படையான பலவீனத்திலிருந்து வல்லமை வரக் காரணம் என்ன? ஆங்கிலிகன் சபைத் தலைவரும் அறிஞருமான ஃபிரடெரிக் ஃபாரர் கூறினார்: “இறந்தவர்களிடமிருந்து உயிர்த்தெழுதல் என்பது ஒரே ஒருவரால் மட்டுமே சாத்தியம். இந்த நிலையான எழுச்சி அனைத்தும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஏற்பட்டது.4 உயிர்த்தெழுந்த கர்த்தரின் சாட்சிகளாக, இந்த பணி முன்னேறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தனர். ஆரம்பகால சபை அனைத்து முரண்பாடுகளையும் முறியடித்ததால், அவர்களின் சாட்சி வல்லமையை நிலைநிறுத்துவதற்கான ஆதாரமாக இருந்தது.

இந்த ஈஸ்டர் பருவத்தில், ஒரு அழகான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பலப்படுத்தவும், அனைவரின் மரணத்தின் கட்டை உடைக்கவும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று அவருக்கு நியமிக்கப்பட்ட சாட்சிகளில் ஒருவராக நான் அறிவிக்கிறேன். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்! அவரால், மரணம் ஒரு முடிவு அல்ல. உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் கிறிஸ்துவின் உலகளாவிய இலவச பரிசு.

படம்
கல்லறையில் கிறிஸ்துவும் மகதலீன் மரியாளும்

கல்லறையில் கிறிஸ்துவும் மரியாளும் - ஜோசப் பிரிக்கே

கிறிஸ்துவண்டை வாருங்கள்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் பாவநிவர்த்தி அனைவருக்கும்-அதாவதுஒவ்வொருவருக்கும் இரட்சகரின் பாவ நிவாரண பலியின் முழு ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்ள ஒரே வழி, “என்னிடம் வாருங்கள்” (மத்தேயு 11:28).என்ற அவருடைய அழைப்பை தனித்தனியாக ஏற்றுக்கொள்வதுதான்.

நாம் கிறிஸ்துவில் விசுவாசித்து மனந்திரும்பினால் அவரிடம் வருவோம். நாம் அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறும்போது அவரிடம் வருகிறோம். கட்டளைகளைக் கடைப்பிடித்து, நியமங்களைப் பெற்று, உடன்படிக்கைகளை மதிப்பது, ஆலய அனுபவங்களை பற்றிக் கொள்வது, போன்ற கிறிஸ்துவின் சீடர்கள் வாழும் விதத்தில் வாழ்ந்தால் நாம் அவரிடம் வருவோம்.

சில நேரங்களில், நீங்கள் மனச்சோர்வையும் ஏமாற்றத்தையும் சந்திப்பீர்கள். உங்களுக்காக அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்காக உங்கள் இருதயம் உடைந்து போகலாம். மற்றவர்களின் பாவங்களால் நீங்கள் இறுக்கப்படலாம் நீங்கள் செய்த ஒருவேளை தீவிரமான தவறுகளால் —அமைதியும் மகிழ்ச்சியும் உங்களை என்றென்றும் விட்டுச் சென்றுவிட்டதாக நீங்கள் பயப்படக்கூடும். அப்படிப்பட்ட சமயங்களில், இரட்சகர் பாவத்தின் பாரத்தை மட்டும் நீக்காமல், “சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும், சோதனைகளையும் உங்களுடையதையும் அனுபவிப்பார்.” (ஆல்மா 7:11) என்பதை நினைவில் வையுங்கள்! உங்களுக்காக அவர் பெற்ற அனுபவத்தின் காரணமாக, “என்னிடம் வாருங்கள்” என்ற அவருடைய வாழ்க்கையை மாற்றும் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் எப்படி உதவுவது என்று அவருக்குத் தெரியும்.

அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்

பரலோகப் பிதாவின் பிள்ளைகள் அனைவருக்கும் அவருடைய நற்செய்தி மற்றும் பாவ நிவர்த்தியின் ஆசீர்வாதங்களில் சம உரிமை உண்டு என்பதை இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தியுள்ளார். “யாவரும் சிலாக்கியம் பெற்றவர்களே. ஒருவனும் விலக்கப்பட்டவனல்ல.”(2 நேபி 26:28)என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.

“அவர்கள் அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார். தம்மிடம் வரும் ஒருவரையும் வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் மறுப்பதில்லை.” (2 நேபி 26:33).

“அவர் அனைவரையும் அழைக்கிறார்” - அதாவது நம் அனைவரையும்! மேம்போக்கான முத்திரைகள் மற்றும் செயற்கையாக வேறுபடுத்துதலை நம்மீது அல்லது பிறர் மீது வைக்கக் கூடாது. இரட்சகரின் அன்பிற்கு நாம் ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தக்கூடாது, நாமோ அல்லது மற்றவர்களோ அவருடைய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணங்களை ஏற்படுத்தக்கூடாது. நான் முன்பே கூறியது போல், “கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் எல்லையற்ற ஒளியால் பிரகாசிப்பதை காட்டிலும் கீழே மூழ்குவது [யாராலும்] சாத்தியமில்லை5

சகோதரி ஹாலன்டும் நானும் அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு போதித்த படி, “தயாளம் இருத்தல் வேண்டுமென ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளார். அந்த தயாளத்துவமென்பது அன்பு”(2 நேபி 26:30) 6இதுவே இரட்சகர் நமக்குக் காட்டும் அன்பு, “அவர் உலகத்தின் நன்மைக்கு ஏதுவானவையே அல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யார்; எல்லா மனுஷரையும் தம்மிடம் அழைத்துக்கொள்ள தன் சொந்த ஜீவனைக் கொடுக்குமளவிற்கு அவர் இந்த உலகத்தை நேசித்தார்.”(2 நேபி 26:24)

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமும் பாவநிவிர்த்தியும் அனைத்து மக்களுக்கும் என்று நான் சாட்சியளிக்கிறேன். அவர் தரும் ஆசீர்வாதங்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்று வேண்டுகிறேன்.

குறிப்புகள்

  1. Howard W. Hunter, “The Gospel—A Global Faith,” Ensign, Nov. 1991, 18.

  2. Howard W. Hunter, “All Are Alike unto God” (Brigham Young University fireside, Feb. 4, 1979), 1–5, speeches.byu.edu.பார்க்கவும்

  3. There Is a Green Hill Far Away,” Hymns, no. 194.

  4. Frederic W. Farrar, The Life of Christ (1994), 656.

  5. Jeffrey R. Holland, “The Laborers in the Vineyard,” Liahona, May 2012, 33.

  6. Jeffrey R. and Patricia T. Holland, “A Future Filled with Hope” (worldwide devotional for young adults, Jan. 8, 2023), broadcasts.ChurchofJesusChrist.org. பார்க்கவும்.

அச்சிடவும்