என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகள்


“வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

““வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

குடும்பம் ஒன்றாகப் படித்தல்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகள்

நீங்கள் வீட்டிலும் சபையிலும் இரட்சகரின் சுவிசேஷத்தைப் படிக்கும்போது, பின்வரும் கேள்விகளைக் கவனியுங்கள்:

  • உங்கள் படிப்பில் ஆவியை எப்படி அழைப்பீர்கள்?

  • உங்கள் படிப்பில் இரட்சகரில் எவ்வாறு கவனம் செலுத்துவீர்கள்?

  • அன்றாட கற்றல் தருணங்களை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ளலாம்?

  • குடும்பம் மற்றும் வகுப்பு உறுப்பினர்களைத் தாங்களாகவே வேதத்தைப் படிக்கவும், அவர்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் எப்படி ஊக்குவிக்கலாம்?

தேவ வார்த்தையின் உங்கள் படிப்பை மேம்படுத்த இதோ சில எளிய வழிகள்.

உணர்த்துதலுக்காக ஜெபிக்கவும்

வேதங்கள் தேவனுடைய வார்த்தை, ஆகவே அவற்றைப் புரிந்துகொள்ள உதவிக்காக அவரைக் கேட்கவும்.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களைத் தேடவும்

சகல காரியங்களும் கிறிஸ்துவைக் குறித்தே சாட்சி பகருகின்றன (2 நேபி 11:4; மோசே 6:63 பார்க்கவும்), ஆகவே, இரட்சகரைக் குறித்து சாட்சியளிக்கும் வசனங்களை குறித்தல் அல்லது அடையாளப்படுத்துதல், அவர் மீதுள்ள உங்கள் அன்பை ஆழப்படுத்தும் மற்றும் எவ்வாறு அவரைப் பின்பற்றுவதென்பதைப் போதிக்கும். சில சமயங்களில் சத்தியங்கள் நேரடியாக கூறப்பட்டுள்ளன, மற்றும் சில சமயங்களில் ஒரு எடுத்துக்காட்டு அல்லது கதை மூலம் அவை குறிப்பிடப்படுகின்றன. “இந்த வசனங்களில் என்ன நித்திய சத்தியங்கள் போதிக்கப்பட்டன?” என உங்களையே கேளுங்கள். இந்த சத்தியங்கள் இரட்சகரைப்பற்றி எனக்கு என்ன போதிக்கின்றன?

பரிசுத்த ஆவிக்குச் செவிகொடுங்கள்

அவை நீங்கள் வாசிப்பனவற்றுக்குத் தொடர்பற்றனவாக இருந்தாலும் கூட, உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். அந்த எண்ணங்கள்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என உங்கள் பரலோக பிதா விரும்புவனவாக இருக்கக்கூடும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.

நீங்கள் படிக்கும்போது, வருகிற எண்ணங்களை பதிவு செய்ய அநேக வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, வேதங்களில் உள்ள சில வார்த்தைகளும் சொற்றொடர்களும் உங்களைக் கவர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்; நீங்கள் அவற்றைக் குறிக்கலாம் மற்றும் உங்கள் எண்ணங்களை உங்கள் வேதங்களில் ஒரு குறிப்பாக பதிவு செய்யலாம். நீங்கள் பெறுகிற உள்ளுணர்வுகள், உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் அடங்கிய குறிப்பிதழை நீங்கள் வைத்திருக்கலாம்.

இளம் பெண் படித்தல்

பிறருடன் நீங்கள் கற்பதை பகிருங்கள்.

உங்கள் தனிப்பட்ட படிப்பிலிருந்து கிடைக்கும் உள்ளுணர்வுகளை கலந்துரையாடுவது மற்றவர்களுக்கு போதிப்பதற்கான சிறந்த முறை மட்டுமன்றி, அது நீங்கள் வாசித்ததைப்பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலையும் பெலப்படுத்த உதவுகிறது. நீங்கள் கற்றுக்கொண்டதை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் (நேரில் அல்லது டிஜிட்டல் முறையில்) பகிர்ந்து, அதையே செய்ய அவர்களை அழைக்கவும்.

உங்கள் வாழ்க்கையோடு வசனங்களை ஒப்பிடவும்

நீங்கள் வாசிக்கிற கதைகளும் போதனைகளும் உங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, “நான் படித்துக்கொண்டிருப்பதைப் போன்ற என்ன அனுபவங்கள் நான் பெற்றேன்?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் படிக்கும்போது கேள்விகளைக் கேட்கவும்

நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, கேள்விகள் உங்கள் மனதுக்கு வரலாம். நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதற்கு அல்லது பொதுவாக உங்கள் வாழ்க்கைக்கு இந்தக் கேள்விகள் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் தொடர்ந்து வேதங்களைப் படிக்கும்போது, இந்த கேள்விகளைப்பற்றி சிந்தித்து, பதில்களைத் தேடவும்.

வாலிபன் வேதங்களை படித்தல்

வேதப் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும்.

நீங்கள் வாசிக்கும் வசனங்களைப்பற்றிய கூடுதல் உள்ளுணர்வுகளைப் பெற, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள், Topical Guide, the Bible Dictionary, the Guide to the Scriptures , மேலும் பிற படிப்பு உதவிகள்.

வேதங்களின் உள்ளடக்கத்தை கருத்தில் கொள்ளவும்

சூழ்நிலைகள் அல்லது அது வந்த பின்னணியையும் சேர்த்து, அதன் பொருளடக்கத்தை நீங்கள் கருத்தில்கொள்ளும்போது ஒரு வேத பாகத்தைப்பற்றிய அர்த்தமுள்ள உள்ளுணர்வுகளை நீங்கள் காணலாம். உதாரணமாக, தேவன் பேசிய ஜனங்களின் பின்னணியையும் நம்பிக்கைகளையும்பற்றி அறிந்திருந்தல், அவருடைய வார்த்தைகளின் நோக்கத்தை சிறப்பாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். நீங்கள் அவர்களைப் பற்றி Saints, Revelations in Context, கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகளில் உள்ள பிரிவு தலைப்புகள் மற்றும் பிற ஆதாரங்களில் அறிந்து கொள்ளலாம்.

பிற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படிக்கவும்.

வேதங்களில் நீங்கள் காணும் கொள்கைகளைப்பற்றி பிற்கால தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் போதித்திருப்பனபற்றி வாசிக்கவும்.

தாயும் மகனும் ஒன்றாகப் படிக்கிறார்கள்

நீங்கள் கற்பதன்படி வாழுங்கள்

வேதப் படிப்பு நமக்கு உணர்த்துவது மட்டுமன்றி நாம் வாழும் விதத்தை மாற்ற நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் செய்ய வேண்டுமென பரிசுத்த ஆவி தூண்டுவதற்கு செவிகொடுத்து, பின்னர் அந்த தூண்டுதல்களின்படி செயல்படவும்.

இசையைப் பயன்படுத்தவும்

என்னைப் பின்பற்றி வாருங்கள் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களும் குழந்தைகளுக்கான பாடல்களும் காணப்படுகின்றன. ஆவியானவரை அழைக்கவும், உங்கள் நம்பிக்கை மற்றும் சுவிசேஷ சத்தியங்கள் பற்றிய சாட்சியத்தை ஆழப்படுத்தவும் பரிசுத்த இசையைப் பயன்படுத்துங்கள்.

குடும்பம் ஒன்றாகப் பாடுதல்

வேத வசனங்களை மனப்பாடம் செய்யவும்

உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கு அல்லது உங்கள் வகுப்புக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற ஒரு வேத பாகத்தைத் தேர்ந்தெடுத்து, அதை தினமும் திரும்பத் திரும்ப சொல்லி, அல்லது மனப்பாட விளையாட்டை விளையாடி அதை மனப்பாடம் செய்யவும்.

பொருள்சார் பாடங்களைப் பகிர்ந்துகொள்ளவும்

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற அதிகாரங்களுக்கும் வசனங்களுக்கும் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிக்கவும். ஒவ்வொரு பொருளும் வேதத்தில் உள்ள போதனைகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

ஒரு படம் வரையவும், கண்டுபிடிக்கவும் அல்லது எடுக்கவும்

ஒரு சில வசனங்களை வாசித்து, பின்னர், நீங்கள் வாசித்ததற்கு தொடர்புடைய ஒன்றை வரையவும். அல்லது நீங்கள் Gospel Art Book அல்லது Gospel Library எங்காவது ஒரு படத்தை நீங்கள் தேடலாம். நீங்கள் கற்றுக்கொண்டதை விளக்கும் ஒரு படத்தையும் எடுக்கலாம்.

ஒரு கதையை நாடகமாக்குங்கள்

ஒரு கதையை வாசித்த பின்னர், அதை நடித்துக்காட்ட குடும்ப அல்லது வகுப்பு உறுப்பினர்களை அழைக்கவும். அதன் பின்னர், நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற காரியங்களுக்கு கதை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி பேசவும்.

வீட்டில் நெளிவு சுளிவாக இருக்கவும்

குடும்ப வேதப் படிப்பில் பங்கேற்க விருப்பமில்லாத ஒரு குடும்ப உறுப்பினர் உங்களிடமிருந்தால் அவர்களுடன் தொடர்புகொள்ள பிற வழிகளைத் தேடவும். உதாரணமாக, உங்களுடைய உரையாடல்களில் நித்திய சத்தியத்தை இயல்பாக உங்களால் கொண்டுவரமுடியுமா அல்லது பிரசங்கமாகவோ அல்லது பாரமாகவோ தோன்றாத வகையில் அர்த்தமுள்ள ஒரு வசனத்தைப் பகிர்ந்து கொள்ளவும். வேதப் படிப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. நேருக்கு நேர் வேதங்களைப் படித்து சில பிள்ளைகள் சிறப்பாக பதிலளிக்கலாம். ஜெபத்துடன், ஆவியானவரின் உணர்த்துதல்களைப் பின்பற்றவும்.

பெற்றோர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டம். உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கான உங்கள் முயற்சிகளில் கூடுதல் உதவியை நீங்கள் விரும்பினால், உங்கள் தொகுதியில் பெற்றோருக்கான ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்கள் நடக்கிறதா என்பதைக் கண்டறியவும். (see General Handbook, 17.5). இந்தக் கூட்டங்கள் பெற்றோர்கள் தங்கள் கற்பித்தலை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றி ஒன்றாகக் கற்றுக்கொள்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாகும். இரட்சகரின் வழியில் கற்பித்தலில் உள்ள கொள்கைகள், குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான இந்தப் பக்கங்களில் உள்ள யோசனைகள் மற்றும் என்னைப் பின்பற்றி வாருங்கள், முழுவதும் காணப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் பரிந்துரைகள் ஆகியவற்றை அவர்கள் கலந்துரையாடலாம்.