“டிசம்பர் 30–ஜனுவரி 5: ‘வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மறுஸ்தாபிதம் முன்னேறிச் செல்கிறது’: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தின் மறுஸ்தாபிதம்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தின் மறுஸ்தாபிதம் என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
டிசம்பர் 30–ஜனுவரி 5: “வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மறுஸ்தாபிதம் முன்னேறிச் செல்கிறது”
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தின் மறுஸ்தாபிதம்
உலகை மாற்றிய ஒரு நிகழ்வின் 200 வது ஆண்டு நிறைவை நீங்கள் எவ்வாறு நினைவுகூருகிறீர்கள்? ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனத்திலிருந்து 200 ஆண்டுகளைக் குறிக்கும் ஏப்ரல் 2020 நெருங்கி வந்தபோது, பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் பிரதான தலைமையும் சிந்தித்த கேள்வி இதுதான். “ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டுமா என்று நாங்கள் வியந்தோம்,” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் நினைவு கூர்ந்தார். ஆனால் முதல் தரிசனத்தின் தனித்துவமான வரலாற்று சிறப்பையும் அனைத்துலக தாக்கத்தையும் நாங்கள் கருத்தில்கொண்டபோது, கிரானைட் அல்லது கற்களால் அல்ல, ஆனால் வார்த்தைகளில்… , ‘கற்பலகைகளில்’ செதுக்கப்படவல்ல ஆனால் நமது இருதயங்களின் ‘சதையான பலகைகளில்’ எழுதப்பட ஒரு நினைவிடத்தை உருவாக்க உணர்த்தப்பட்டோம். [2 கொரிந்தியர் 3:3]” (“Hear Him,” Liahona, May 2020, 90).
அவர்கள் உருவாக்கிய வார்த்தைகளின் நினைவிடம் இப்படித் தலைப்பிடப்பட்டது, “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணத்தின் மறுஸ்தாபிதம்: உலகிற்கு இருநூற்றாண்டு பிரகடனம்” ஆகும். இது முதல் தரிசனத்திற்கு நினைவிடம் மட்டுமல்ல, ஆனால் அன்றிலிருந்து இயேசு கிறிஸ்து செய்த—இன்னும் செய்துகொண்டிருக்கும்—அனைத்திற்கும் கூட. ஒருவர் தேவனிடம் திரும்பி அவரிடம் கேட்டபோது அவருடைய சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் தொடங்கியது. அது அப்படியே தொடர்கிறது: ஒரே இருதயம், ஒரே நேரத்தில் ஒரு பரிசுத்தமான அனுபவம்—உங்களுடையது உட்பட.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
“உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலுமுள்ள தமது பிள்ளைகளை தேவன் நேசிக்கிறார்.”
உங்கள் கருத்துப்படி, மறுஸ்தாபிதம் பற்றிய அறிவிப்பு ஏன் தேவனின் அன்பைப் பற்றிய அறிக்கையுடன் தொடங்குகிறது? நீங்கள் பிரகடனத்தைப் படிக்கும்போது, “உலகின் எல்லா தேசங்களிலும் உள்ள அவருடைய பிள்ளைகள்” மீது தேவனுடைய அன்பின் வெளிப்பாடுகளைத் தேடுங்கள். சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் அவருடைய அன்பை உணர உங்களுக்கு எப்படி உதவியது?
See also Gerrit W. Gong, “All Nations, Kindreds, and Tongues,” Liahona, Nov. 2020, 38–41.
மறுஸ்தாபிதம் ஒரு கேள்விக்கான பதிலுடன் தொடங்கியது.
ஒரு கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் இரட்சகர் தம் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தை தொடங்கினார் என்று கூறலாம். தேவன், சுவிசேஷம், “அவரது [அல்லது அவளது] ஆத்துமாவின் இரட்சிப்பு” பற்றிய கேள்விகளைக் கொண்ட ஒரு நபருக்கு மறுஸ்தாபித பிரகடனம் என்ன செய்தியைக் கொண்டுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஜோசப் ஸ்மித்திடம் இருந்து நீங்கள் சுவிசேஷ கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைக் காண நீங்கள் ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:5–20 வரை படிக்கலாம்.
See also Topics and Questions, “Seeking Answers,” Gospel Library.
இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை மறுஸ்தாபிதம் செய்தார்.
இரட்சகர் ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்த “கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு சபை” பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இந்த வசனங்களைப் படிப்பதையும் அவருடைய சபையின் சில அம்சங்களைப் பட்டியலிடுவதையும் கருத்தில் கொள்ளுங்கள்:
அடுத்து, ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்து தனது சபையின் அம்சங்களை எவ்வாறு மறுஸ்தாபிதம் செய்தார் என்பதை விவரிக்கும் கீழே உள்ள வசனங்களுடன் மேலே உள்ள வசனங்களை நீங்கள் பொருத்தலாம்:
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்திற்காக நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டும் அவரது மனைவியும் ஒருமுறை சபை மறுஸ்தாபிதம் செய்யப்படுவதற்கு முன்பு எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்ய முயன்றனர். “நாம் என்ன பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டனர். “A Perfect Brightness of Hope” (Liahona, May 2020, 81–82)இல் அவர்களுடைய அனுபவங்கள்பற்றி வாசியுங்கள். உங்கள் ஆவிக்குரிய நம்பிக்கைகளை நிறைவேற்ற மறுஸ்தாபிதம் எவ்வாறு உதவியது?
See also Topics and Questions, “Apostasy and the Restoration of the Gospel,” Gospel Library.
“வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மறுஸ்தாபிதம் முன்னேறிச் செல்கிறது.”
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் ஒரு பகுதியாக உங்களையே நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? தலைவர் டியட்டர் எப். உக்டர்ப்பின் இந்த வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்: “சில சமயங்களில் நாம் நினைக்கிறோம், சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் முழுமையாயிற்று மற்றும் ஏற்கனவே நமக்குப் பின்னால் உள்ளது. … உண்மையில், மறுஸ்தாபிதம் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்; நாம் இப்போது அதில் வாழ்கிறோம்” (“Are You Sleeping through the Restoration?,” Liahona, May 2014, 59).
1800 களில் சுவிசேஷம் எவ்வாறு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பதைப் படிக்க நீங்கள் தயாராகும் போது, உங்கள் வாழ்க்கையில் அது எவ்வாறு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் சிந்திக்கத் தொடங்கலாம். இது போன்ற கேள்விகளை மனதில் கொண்டு மறுஸ்தாபித பிரகடனத்தைப் படியுங்கள்: இது உண்மை என்பதை நான் எப்படி அறிந்துகொண்டேன்? இன்று நான் எவ்வாறு மறுஸ்தாபிதத்தில் பங்கேற்கிறேன்?
“பரலோகங்கள் திறந்திருக்கின்றன.”
“பரலோகங்கள் திறந்திருக்கின்றன” என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது? மறுஸ்தாபித பிரகடனத்திலும், இன்று சபையிலும், வேதங்களிலும், உங்கள் வாழ்விலும் —என்ன ஆதாரத்தை நீங்கள் காண்கிறீர்கள்— பரலோகங்கள் உண்மையிலேயே திறந்திருக்கின்றன என்பதற்கு?
உங்கள் படிப்பின் பகுதியாக “The Morning Breaks” (Hymns, no. 1) இதையும் நீங்கள் சேர்க்கலாம். “பரலோகங்கள் திறந்திருக்கின்றன” என்ற சொற்றொடரைப் பற்றிய உங்கள் புரிதலுக்குச் சேர்க்கும் இந்தப் பாடலில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
See also Quentin L. Cook, “The Blessing of Continuing Revelation to Prophets and Personal Revelation to Guide Our Lives,” Liahona, May 2020, 96–100.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
“நாங்கள் பரிசுத்தமாய் பிரகடனம் செய்கிறோம்.”
-
மறுஸ்தாபித பிரகடனத்தின் சில பகுதிகளை உங்கள் குழந்தைகளுடன் படிக்கும்போது (அல்லது தலைவர் நெல்சன் அதைப் படிக்கும் காணொலி பார்க்கும்போது), “நாங்கள் அறிவிக்கிறோம்,” “நாங்கள் பிரகடனம் செய்கிறோம்” அல்லது “நாங்கள் சாட்சியமளிக்கிறோம்” போன்ற சொற்றொடர்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள். நமது தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் என்ன உண்மைகளை அறிவிக்கிறார்கள்? ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் இதே சத்தியங்களில் சிலவற்றைப் பற்றிய உங்கள் சொந்த சாட்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
“ஜோசப் ஸ்மித்திடம் … கேள்விகளிருந்தன.”
-
இரட்சகரின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்துக்கு வழிவகுத்த ஜோசப் ஸ்மித்தின் சில கேள்விகளை ஆராய்வது உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமாக இருக்கலாம். ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:10, 29, 68 இல் சில உதாரணங்களைக் காண அவர்களுக்கு உதவுங்கள். ஜோசப் ஸ்மித்தின் கேள்விகளுக்கு தேவன் பதிலளித்ததால் இன்று நாம் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்?
-
உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களிடம் உள்ள கேள்விகளைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்கலாம். பதில்களைக் கண்டுபிடிப்பது பற்றி ஜோசப் ஸ்மித்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:8–17 பார்க்கவும்; வசனங்கள் 3 மற்றும் 4ஐயும் பார்க்கவும் “This Is My Beloved Son,” Children’s Songbook, 76)
“பரலோக தூதுவர்கள் ஜோசப்புக்கு அறிவுறுத்த வந்தார்கள்.”
-
“ஜோசப்புக்கு அறிவுரை கூற வந்த பரலோக தூதுவர்கள்” யார்? Gospel Art Book (see nos. 91, 93, 94, 95)இல் உங்கள் பிள்ளைகள் அவர்களின் படங்களைப் பார்த்து மகிழ்வார்கள். இந்த தூதுவர்கள் ஒவ்வொருவரும் “இயேசு கிறிஸ்துவின் சபையை மீண்டும் ஸ்தாபிக்க” எப்படி உதவினார்கள்? இந்த வார நிகழ்ச்சி பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வசனங்கள் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவும்.
இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை மறுஸ்தாபிதம் செய்தார்.
-
இரட்சகரின் சபை மறுஸ்தாபிதம் செய்யப்படுவதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? அவர்கள் ஒரு எளிய கோபுரத்தை கட்டைகள் அல்லது கோப்பைகளுடன் உருவாக்கலாம் மற்றும் “மறுஸ்தாபிதம் செய்யலாம்” அல்லது மீண்டும் கட்டலாம். அல்லது, உங்கள் பிள்ளைகள் எப்போதாவது எதையாவது தொலைத்துவிட்டதாலோ அல்லது சேதப்படுத்தியிருந்தாலோ, அதை திரும்பவும் வைத்திருந்தால், அந்த அனுபவத்தை இரட்சகர் அவருடைய சபையை மறுஸ்தாபிதம் செய்வதற்கு ஒப்பிடலாம். இரட்சகர் மறுஸ்தாபிதம் செய்த மறுஸ்தாபித பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட விஷயங்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்.
“பரலோகங்கள் திறந்திருக்கின்றன.”
-
“பரலோகங்கள் திறந்திருக்கின்றன” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன என்பதை விளக்குவதற்கு, நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஒரு செய்தியைப் பகிரலாம், முதலில் ஒரு மூடிய கதவுக்குப் பின்னால் பின்னர் திறந்த கதவு வழியாக. அவர்களும் மாறி மாறி ஒரு செய்தியைப் பகிரட்டும். இயேசு கிறிஸ்து நமக்காக என்ன செய்திகளை வைத்திருக்கிறார்? பரலோகங்கள் நமக்குத் திறக்கப்பட்டுள்ளன என்பதை அறிய என்ன அனுபவங்கள் நமக்கு உதவியுள்ளன?