தீர்க்கதரிசிகளுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தலும் நமது வாழ்க்கைக்கு தனிப்பட்ட வெளிப்படுத்தலுமாகிய ஆசீர்வாதம்
கரத்தர் ஏற்படுத்தியுள்ள வழிகளின் மூலமாக தொடர்ச்சியான வெளிப்படுத்தல்கள் பெறப்பட்டன மற்றும் பெறப்படுகின்றன.
இன்று நான் தீர்க்கதரிசிகளுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தலும் நமது வாழ்க்கைக்கு தனிப்பட்ட வெளிப்படுத்தலையும்பற்றி பேசுவேன்.
சில சமயங்களில் கர்த்தரின் நோக்கங்களை நாம் அறியவில்லையானாலும் நாம் வெளிப்படுத்தல் பெறுகிறோம். ஜூன் 1994ல் ஒரு அப்போஸ்தலராக மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் அழைக்கப்படுவதற்கு சற்று முன்பு, அவர் அழைக்கப்படுவார் என்ற அழகிய வெளிப்படுத்தலின் அனுபவம் பெற்றேன். நான் ஒரு மண்டல பிரதிநிதியாக இருந்தேன், அந்த அறிவு நான் கொடுக்கப்பட எந்த காரணத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 1960களின் ஆரம்பத்தில் இளம் ஊழியக்காரர்களாக நாங்கள் தோழர்களாக இருந்தோம், அவர் மீது நான் அதிக அன்பு வைத்திருந்தேன். அந்த அனுபவத்தை மென்மையான இரக்கத்தின் அனுபவமாக நான் கருதுகிறேன். அண்மை ஆண்டுகளில், நாங்கள் இளம் ஊழியக்காரர்களாக இருந்தபோது, எனக்கு ஜூனியர் தோழராக இருந்த ஒரு மதிப்புமிக்க ஊழியத் தோழருக்கு பன்னிருவருவரில் நான் ஜூனியராக இருக்க கர்த்தர் ஆயத்தப்படுத்துகிறாரா என நான் வியந்திருக்கிறேன். 1 நான் சில சமயங்களில் தங்கள் ஜூனியர் தோழர்களுடன் தயவாயிருக்கும்படி எச்சரிக்கிறேன், ஏனெனில் எப்போது அவர்கள் உங்கள் சீனியர் தோழராக வருவார்கள் என அவர்கள் ஒருபோதும் அறிவதில்லை.
இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவால் வழிநடத்தப்படுகிறது என்ற உறுதியான சாட்சியை நான் பெற்றிருக்கிறேன். தன் அப்போஸ்தலர்களாக யாரை அழைப்பது, எந்த வரிசையில் அவர்களை அழைப்பது என்பதை அவர் அறிந்திருக்கிறார். தன் சீனியர் அப்போஸ்தலரை தீர்க்கதரிசியாகவும் சபைத் தலைவராகவும் எப்படி ஆயத்தம் செய்வது எனவும் அவர் அறிந்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதத்தைப்பற்றி உலகத்துக்கு ஒரு ஆழ்ந்த இருநூற்றாண்டு அறிவிப்பை நமது அன்பு தீர்க்கதரிசியாகிய தலைவர் ரசல் எம். நெல்சன் கொடுத்ததைக் கேட்க இன்று காலையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம்.2 தலைவர் நெல்சனின் இந்த மூல அறிவிப்பு, இயேசு கிறிஸ்துவின் சபை, இதன் தோற்றம், நிலைமை மற்றும் வருங்காலத்துக்கான வழிநடத்தலுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தலின் கொள்கைக்கு கடமைப்பட்டிருக்கிறது என தெளிவாக்கியது.3 தன் பிள்ளைகளுடன் ஒரு அன்பான தகப்பனின் தொடர்புகொள்ளுதலை புதிய அறிவிப்பு குறிக்கிறது.
ஒரு ஆரம்ப நாளில் இன்று எனக்கிருக்கிற உணர்வுகளை தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் தெரிவித்தார். அவர் சொன்னார்: “உண்மையாகவே பரலோகங்கள் திறந்திருக்கின்றன மற்றும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை வெளிப்படுத்தலின் கன்மலை மீது கட்டப்பட்டுள்ளது என்பதற்காக நாம் எல்லா காரியங்களுக்காகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான வெளிப்படுத்தல் உண்மையாகவே, ஜீவிக்கிற கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் உயிரோட்டமாகும்.”3
நாம் வாழ்கிற நாட்களை தீர்க்கதரிசி ஏனோக்கு முன்அறிவித்தான். இருக்கப்போகிற பெரும் துன்மார்க்கத்தைப்பற்றி ஏனோக்கு சொன்னதை கர்த்தர் ஏற்றுக்கொண்டார் மற்றும் வரப்போகிற “பெரும் துன்புறுத்தல்களைப்பற்றி” தீர்க்கதரிசனம் சொன்னார். இருப்பினும் கர்த்தர் வாக்களித்தார், “ஆனால் ஜனங்களை நான் காப்பேன்.”4 “நான் பரலோகத்திலிருந்து நீதியை அனுப்புவேன், என் ஒரே பேறானவரைப்பற்றி சாட்சி சொல்ல பூமியிலிருந்து சத்தியத்தை அனுப்புவேன்.”5
மார்மன் புஸ்தகம் நமது மார்க்கத்தின் திறவுக்கல், ஏனோக்குக்கு கர்த்தர் அறிவித்ததின் நிறைவேறுதலாக பூமியிலிருந்து வந்தது என மிகுந்த வல்லமையுடன் தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் போதித்தார். பிதாவும் குமாரனும் தூதர்களும் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குத் தோன்றி, ராஜ்யத்துக்குத் தேவையான வல்லமைகளை மறுஸ்தாபிதம் செய்ய பரலோகத்தால் நடத்தப்பட்டார்கள். 6
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்தல் மேல் வெளிப்படுத்தல் பெற்றார். இந்த மாநாட்டில் சில சொல்லப்பட்டன. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் பெறப்பட்ட அனேக வெளிப்படுத்தல்கள் நமக்காக கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைசி ஊழியக்காலத்தில் நமக்காக கர்த்தரின் மனதும் சித்தமும் சபையின் தரமான புஸ்தகங்கள் அனைத்திலும் அடங்கியிருக்கின்றன.7
இந்த அடிப்படை வேதங்களுடன் கூடுதலாக, ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தல்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். தீர்க்கதரிசிகள் அவருக்காக பேச அதிகாரமளிக்கப்பட்ட, கர்த்தரின் ஆணைகொடுக்கப்பட்ட முகவர்கள்.8
சில வெளிப்படுத்தல்கள் பிரமாண்டமான முக்கியத்துவம் கொண்டுள்ளன, பிற, முக்கிய தெய்வீக சத்தியங்களைப்பற்றிய நமது புரிதலையும், நமது நாளுக்காக வழிகாட்டுதலையும் கொடுக்கிறது.9
ஜூன் 8, 1978ல் சபையின் அனைத்து தகுதியான ஆண் அங்கத்தினர்களுக்கும் ஆசாரியத்துவத்தையும் ஆலய ஆசீர்வாதங்களையும் கொடுத்த, தலைவர் ஸ்பென்சர் டபிள்யு. கிம்பலின் வெளிப்படுத்தலுக்காக நாம் மதிப்பற்ற நன்றியுணர்வுடனிருக்கிறோம்.10
அந்த அருமையான வெளிப்படுத்தலைப் பெற்றபோது அங்கிருந்த மற்றும் பங்கேற்ற பன்னிருவரில் அநேகருடன் நான் சேவை செய்துள்ளேன். தலைவர் கிம்பலும் அவர்களும் அனுபவித்த வல்லமைமிக்க மற்றும் ஆவிக்குரிய வழிநடத்துதலை தனிப்பட்ட உரையாடலில் அவர்கள் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தினர். அந்த நேரத்துக்கு முன்னும் பின்னும் அவர்கள் பெற்றதில் மிக வல்லமைமிக்க வெளிப்படுத்தலாக அது இருந்தது என அவர்களில் அனேகர் சொன்னார்கள்.11
பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் தற்போது சேவை செய்துகொண்டிருக்கும் நாங்கள், அண்மைக்கால தீர்க்கதரிசிகள் மூலம் குறிப்பிடத்தக்க வெளிப்படுத்தல்கள் வந்திருக்கிறபடியால், நமது நாளில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.12 விசேஷமாக தங்கள் வீடுகளில் விசுவாசத்தின் சரணாலயங்களைக் கட்ட குடும்பங்களுக்கு வெளிப்படுத்தல்கள், திரையின் இருமருங்கிலும் சிதறுண்ட இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தல், மற்றும் பரிசுத்த ஆலய நியம விஷயங்களில் தரிப்பிக்கப்பட்ட அங்கத்தினர்களை ஆசீர்வதித்தல் சம்மந்தப்பட்டவற்றுக்கு தலைவர் ரசல் எம். நெல்சன் கர்த்தரால் முகவராக ஆணையிடப்பட்டிருக்கிறார்.
அக்டோபர் 2018 பொது மாநாட்டில் நமது குடும்பங்களை ஆசீர்வதிக்க முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டபோது, நான் சாட்சியளித்தேன் “ஆலயத்தில் பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழும ஆலோசனைக்குழுவில் ஆலோசனைகளில், … வெளிப்படுத்தலுக்காக கரத்தரிடம் நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி விண்ணப்பம் செய்த பிறகு … ஒரு வல்லமையான உறுதி எல்லோராலும் பெறப்பட்டது.”13
அப்போது, பரிசுத்த ஆலயம் சம்மந்தப்பட்ட பிற வெளிப்படுத்தல்களும் பெறப்பட்டன், ஆனால் அறிவிக்கப்படவோ, அமுலாக்கப்படவோ இல்லை.14 இந்த வழிகாட்டுதல் தலைவர் ரசல் எம். நெல்சனுக்கு தனிப்பட்ட தீர்க்கதரிசன வெளிப்படுத்தலாகவும் அந்த முறையில் பங்கேற்றவர்களுக்கு வல்லமையான உறுதிப்படுத்தலாகவும் தொடங்கியது. ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள் மற்றும் ஆரம்ப வகுப்பு அமைப்புக்களுக்குத் தலைமை தாங்குகிற சகோதரிகளை தலைவர் நெல்சன் குறிப்பாக ஈடுபடுத்தினார். இறுதி வழிகாட்டுதல், ஆலயத்தில், பிரதான தலைமைக்கும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்துக்கும் ஆழ்ந்த ஆவிக்குரிய வல்லமைமிக்கதாயிருந்தது. கர்த்தரின் மனதையும், சித்தத்தையும், குரலையும் நாங்கள் அனைவரும் பெற்றதை நாங்கள் அனைவரும் அறிந்தோம்.15
கரத்தர் ஏற்படுத்தியுள்ள வழிகளில் தொடர்ச்சியான வெளிப்படுத்தல்கள் பெறப்பட்டன மற்றும் பெறப்படுகின்றன என எல்லா பயபக்தியுடனும் நான் அறிவிக்கிறேன். இன்று காலையில் தலைவர் நெல்சன் வெளியிட்ட புதிய பிரகடனம் எல்லா ஜனங்களையும் ஆசீர்வதிக்க வெளிப்படுத்தல் என நான் சாட்சியளிக்கிறேன்.
கர்த்தரின் பந்தியில் விருந்துண்ண அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
தங்கள் சாட்சிகளோடு போராடிக்கொண்டிருப்பவர்கள், ஆர்வம் குறைந்தவர்கள், தங்கள் பெயர்கள் சபை பதிவேடுகளிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு மீண்டும் இணைய எங்கள் இதயபூர்வ வாஞ்சையை நாங்கள் அறிவிக்கிறோம். நாமனைவரும் செய்ய வேண்டிய காரியங்களைக் கற்றுக்கொள்ள, கர்த்தரின் பந்தியில், கிறிஸ்துவின் வார்த்தைகளைப்பற்றி உங்களுடன் விருந்துண்ண நாங்கள் வாஞ்சிக்கிறோம்.16 நீங்கள் எங்களுக்குத் தேவை! நீங்கள் சபைக்குத் தேவை! நீங்கள் கர்த்தருக்குத் தேவை! உலகத்தின் இரட்சகரை ஆராதிக்க நீங்கள் எங்களோடு சேர வேண்டும் என்பதே நமது இதயபூர்வ ஜெபமாகும். உங்களில் சிலர் குற்றப்படுத்தப்பட்டு, தயவற்ற அல்லது கிறிஸ்துபோலல்லாத பிற நடத்தைகளை பெற்றிருக்கலாம் என நாங்கள் அறிகிறோம். முழுவதும் பாராட்டப்படாத, புரிந்துகொள்ளப்படாத, அல்லது தீர்க்கப்படாத தங்கள் விசுவாசத்துக்கு சவால்களை சிலர் சந்தித்தீர்கள் என நாங்கள் அறிகிறோம்.
நமது அதிக பலமிக்க விசுவாசமிக்க சில அங்கத்தினர்கள் சிறிது காலத்துக்கு தங்கள் விசுவாசத்துக்கு சவாலை எதிர்கொண்டார்கள். சபையைக் கைவிட்டு, மிசௌரி நீதிமன்றத்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு எதிராக சாட்சியளித்த டபிள்யு. டபிள்யு. பெல்ப்ஸின் உண்மையான விவரத்தை நான் விரும்புகிறேன். மனந்திரும்பிய பிறகு, அவர் ஜோசப்புக்கு எழுதினார், “என் சூழ்நிலையை நான் அறிவேன், நீங்கள் அறிவீர்கள், தேவன் அறிவார், என் நண்பர்கள் உதவினால் நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்.”17 ஜோசப் அவரை மன்னித்தார், அவரை திரும்ப பணிபுரியச் செய்தார், அன்போடு எழுதினார், “முதலில் நண்பர்கள், கடைசியில் திரும்பவும் நண்பர்கள்.”18
சகோதர சகோதரிகளே, உங்களுடைய சூழ்நிலையை பொருட்படுத்தாமல், சபையும் அதன் அங்கத்தினர்களும் நீங்கள் திரும்ப வருவதை வரவேற்பார்கள் என்பதை தயவுசெய்து அறியுங்கள்!
நமது வாழ்க்கைக்கு வழிகாட்ட தனிப்பட்ட வெளிப்படுத்தல்
கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை தாழ்மையாக நாடுபவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் கிடைக்கிறது. அது தீர்க்கதரிசன வெளிப்படுத்தல் போலவே முக்கியமானது. பரிசுத்த ஆவியிடமிருந்து தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய வெளிப்படுத்தல், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஞானஸ்நானம் பெற்று அங்கத்தினர்களாக திடப்படுத்தப்பட தேவையான மில்லியன் கணக்கானோர் சாட்சி பெறுவதில் முடிந்திருக்கிறது.
நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதினாலே சுத்திகரிக்கப்படும்போது,19 ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து பெறப்படுகிற ஆழ்ந்த ஆசீர்வாதம் தனிப்பட்ட வெளிப்படுத்தல் ஆகும். எனக்கு 15 வயதிருக்கும்போது, ஒரு விசேஷித்த ஆவிக்குரிய வெளிப்படுத்தலைப்பற்றி என்னால் நினைவுகொள்ள முடியும். என் சகோதரன் ஊழியம் செய்ய விரும்பாத எங்கள் அன்பு அப்பாவுக்கு எப்படி பதிலளிப்பது என என் அருமை சகோதரன் கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை நாடிக்கொண்டிருந்தான். நானும் உண்மையான நோக்கத்தோடு ஜெபித்து, சுவிசேஷத்தின் உண்மைத்தன்மையைப்பற்றி தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெற்றேன்.
பரிசுத்த ஆவியின் பாத்திரம்
தனிப்பட்ட வெளிப்படுத்தல் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெறப்பட்ட ஆவிக்குரிய சத்தியங்களின் அடிப்படையிலானது.20 பரிசுத்த ஆவியானவர் விசேஷமாக இரட்சகரைப்பற்றிய எல்லா சத்தியங்களின் வெளிப்படுத்துபவர் மற்றும் சாட்சி கொடுப்பவர். பரிசுத்த ஆவி இல்லாமல் இயேசுவே கிறிஸ்து என நாம் உண்மையாகவே அறிய முடியாது. அவரது அடிப்படை பாத்திரம், பிதா மற்றும் குமாரன் மற்றும் அவர்களது பெயர்கள் மற்றும் அவர்களது மகிமையைப்பற்றி சாட்சியமளிப்பதுவே.
பரிசுத்த ஆவியானவர் வல்லமையான விதமாக ஒவ்வொருவர் மேலும் செல்வாக்கு ஏற்படுத்தலாம்.21 ஒருவர் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறவில்லையானால், இந்த செல்வாக்கு தொடர்ந்திருக்காது. மனந்திரும்புதல் மற்றும் மன்னித்தல் முறையில் ஒரு சுத்திகரிக்கும் முகவராகவும் பரிசுத்த ஆவியானவர் சேவைசெய்கிறார்.
அற்புதமான வழிகளில் ஆவியானவர் தொடர்புகொள்கிறார். இந்த அழகான விளக்கத்தை கர்த்தர் பயன்படுத்தினார்:
“உங்கள் மேல் வந்து, உங்கள் இருதயங்களில் தரித்திருக்கப்போகிற பரிசுத்த ஆவியானவரால் உங்கள் மனதிலும் உங்கள் இருதயத்திலும் சொல்வேன்.
இப்போது, இதோ, இதுவே வெளிப்படுத்தலின் ஆவி.22
அதன் தாக்கம் மதிப்புமிக்க வல்லமையானதாக இருந்தாலும், அது அடிக்கடி அமர்ந்த மெல்லிய சத்தமாக வருகிறது.23 நமது மனங்களில் சமாதானம் பேசுவது உள்ளிட்ட பரிசுத்த ஆவி எப்படி நமது மனங்களில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கு அநேக உதாரணங்கள் வேதங்களில் அடங்கியுள்ளன.24நமது மனங்களை அபகரித்து,25நமது மனங்களை தெளிவுபடுத்தி, 26 நமது மனங்களுக்கு குரலாகக்கூட.27
வெளிப்படுத்தல் பெற நம்மை ஆயத்தம் செய்கிற சில கொள்கைகளில் அடங்குவன:
-
ஆவிக்குரிய வழிகாட்டுதலுக்காக ஜெபித்தல். பயபக்தியாகவும் தாழ்மையாகவும் நாம் நாடி கேட்க வேண்டும்28 பொறுமையாகவும் தாழ்மையோடும் இருக்க வேண்டும்.29
-
உணர்த்துதலுக்காக ஆயத்தம் செய்தல் இதற்கு கர்த்தரின் போதனைகளுடனும், அவரது கட்டளைகளுடனும் இணங்கி இசைந்திருத்தல் தேவைப்படுகிறது.
-
தகுதியோடு திருவிருந்தில பங்கேற்றல் நாம் இதைச் செய்யும்போது, நாம் நம்மீது அவரது பரிசுத்த குமாரனின் நாமத்தை தரித்துக்கொண்டு, அவரை நினைவுகூர்ந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதாக சாட்சியளித்து தேவனோடு உடன்படிக்கை செய்கிறோம்.
இந்த கொள்கைகள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலையும், வழிகாட்டுதலையும் பெறவும், அடையாளம் காணவும், பின்பற்றவும் நம்மை ஆயத்தப்படுத்துகின்றன. “சந்தோஷமும் … நித்திய ஜீவனும் கொண்டுவருகிற சமாதானமான காரியங்கள்” இதில் அடங்கும்.30
நாம் வழக்கமாக வேதங்களையும் சத்தியங்களையும் படித்து நாம் நாடுகிற வழிநடத்துதல்களை நமது மனங்களில் சிந்திக்கும்போது, நமது ஆவிக்குரிய ஆயத்தம் மிகவும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் கர்த்தரின் நேரத்துக்கு பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் பொறுத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். “நமக்கு கற்பிக்க வெளிப்படையாக அவர் தெரிந்துகொள்ளும்போது”, அனைத்துமறிந்த கர்த்தரால் வழிநடத்துதல் கொடுக்கப்படுகிறது.31
நமது அழைப்புக்களிலும் நியமிப்புகளிலும் வெளிப்படுத்தல்
நமது அழைப்புக்களிலும் நியமிப்புகளிலும் கூட பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தல் கொடுப்பார். என் அனுபவத்தில், நமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் பிறரை ஆசீர்வதிக்க நாம் முயற்சிக்கும்போது, குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய வழிநடத்தல் அடிக்கடி வருகிறது.
ஒரு வியாபார பணிக்காக நான் விமானத்தைப் பிடிக்கும் சிறிது நேரத்துக்கு முன் ஒரு இளம் ஆயராக, ஒரு திருமணமான தம்பதியிடமிருந்து விரக்தியுடன் அழைப்பை பெற்றதை நினைவுகூர்கிறேன். அவர்களை நான் எப்படி ஆசீர்வதிக்க முடியும் என அவர்கள் வருவதற்கு முன் நான் கர்த்தரிடம் ஜெபித்தேன். அந்தப் பிரச்சினையின் தன்மை மற்றும் நான் கொடுக்க வேண்டிய பதில் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. மிக குறுகிய நேரம் இருந்தாலும், ஆயராக என் அழைப்பின் பரிசுத்த பொறுப்பை நிறைவேற்ற வெளிப்படுத்தும் வழிநடத்துதல் என்னை அனுமதித்தது. உலகெங்கிலுமுள்ள எல்லா ஆயர்களும் என்னுடன் இதே மாதிரியான அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பிணைய தலைவராக நான் முக்கிய வெளிப்படுத்தல் மட்டுமின்றி, கர்த்தரின் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான தனிப்பட்ட திருத்தத்தை பெற்றேன்.
வெளிப்படுத்தும் வழிகாட்டுதல், கர்த்தரின் திராட்சைத்தோட்டத்தில் நாம் தாழ்மையாக பிரயாசப்படும்போது, நம் ஒவ்வொருவராலும் பெறப்படமுடியும் என நான் உறுதியளிக்கிறேன். நமது வழிநடத்துதலின் அதிகமானவை பரிசுத்த ஆவியிடமிருந்தே வருகிறது. சில சமயங்களிலும் சில நோக்கங்களுக்காகவும் அது கர்த்தரிடமிருந்து நேரடியாக வருகிறது. இது உண்மை என நான் தனிப்பட்ட விதமாக சாட்சியளிக்கிறேன். முழு சபையாக வழிநடத்துதல் சபையின் தலைவரும் தீர்க்கதரிசியுமானவருக்கு வருகிறது.
நாம் தற்கால அப்போஸ்தலர்களாக, நமது தற்காலத் தீர்க்கதரிசியாகிய தலைவர் நெல்சனுடன் பணியாற்றவும் பயணம் செய்யவும் சிலாக்கியம் பெறுகிறோம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தைப்பற்றி வில்போர்ட் உட்ரப் சொன்னதை நான் சுருக்கி சொல்கிறேன். தலைவர் நெல்சனுக்கும் இது பொருந்தும். “தேவனின் ஆவி அவரிடத்தில் கிரியை செய்வதையும், அவருக்கு இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்களையும் அந்த வெளிப்படுத்தல்கள் நிறைவேறுவதையும்” நான் பார்த்திருக்கிறேன், 32
நமது வாழ்க்கையை வழிநடத்த நாம் ஒவ்வொருவரும் தொடர்ச்சியான வெளிப்படுத்தலை நாடும்போதும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவாகிய தேவனை நாம் ஆராதிக்கும்போது, ஆவியைப் பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ஆகும், அவரைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.