தேவனின் பணியை நிறைவேற்றுவதில் ஒற்றுமையாக
நமது தெய்வீக திறமையை நிறைவேற்ற மிக ஆக்கபூர்வ வழி, ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு ஒன்றாக உழைப்பதாகும்.
அன்புள்ள அற்புதமான சகோதரிகளே. சகோதரர்களே, உங்களோடு இருப்பது மகிழ்ச்சி. நீங்கள் எங்கு கேட்டுக்கொண்டிருந்தாலும், என் சகோதரிகளுக்கு அணைப்பையும், சகோதரர்களுக்கு உளமார்ந்த கைகுலுக்கல்களையும் கொடுக்கிறேன். கர்த்தரின் பணியில் நாம் இணைந்திருக்கிறோம்.
நாம் ஆதாம் ஏவாளைப்பற்றி நினைக்கும்போது, அடிக்கடி நமது முதல் சிந்தனை, ஏதேன் தோட்டத்தில் அவர்களது சோம்பேறித்தனமான வாழ்க்கையைப்பற்றியே இருக்கிறது. தட்பவெப்பம் எப்போதும் பரிபூரணமாக இருந்தது, மிகுதியான வெப்பமுமில்ல, மிகுதியான குளிருமில்லை, அவர்கள் விரும்பியபோதெல்லாம் உண்ணும்படியாக அருகிலேயே ஏராளமான சுவையான பழங்களும் காய்கறிகளும் வளர்ந்தன என நாம் கற்பனை செய்கிறோம். இது அவர்களுக்கு புதிய உலகமாக இருந்ததால், கண்டுபிடிக்க அதிகம் இருந்தது, ஆகவே தினமும் விலங்குகளோடு தொடர்புகொண்டது ரசிக்கத்தக்கதாக இருந்தது, தங்கள் அழகிய சுற்றுப்புறத்தை ஆராய்ந்தார்கள். கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டன மற்றும் அந்த அறிவுரைகளை அணுக வித்தியாசமான வழிகள் இருந்தன, அது முதலில் அவர்களுக்கு ஆதங்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.1 ஆனால் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிய தீர்மானங்களை அவர்கள் எடுத்தபோது, அவர்களுக்கும் அவரது பிள்ளைகள் அனைவருக்கும், அவர்களுக்காக தேவன் வைத்திருந்த நோக்கங்களை நிறைவேற்ற ஒன்றாக உழைக்கவும் ஒன்றுபட்டிருக்கவும் அவர்கள் கற்றனர்.
இப்போது அநித்தியத்தில் அதே தம்பதியரை கற்பனை செய்யுங்கள். அவர்கள் உணவுக்காக பிரயாசப்பட வேண்டியிருந்தது, சில விலங்குகள் அவர்களை உணவாக கருதின, அவர்கள் ஒன்றாக ஆலோசித்து ஜெபித்தால் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய கடினமான சவால்கள் இருந்தன. அந்த சவால்களை அணுகுவது எப்படியென குறைந்தபட்சம் சில தடவைகளாவது மாறுபட்ட அபிப்பிராயங்கள் பெற்றிருந்தனர். எனினும், வீழ்ச்சி மூலம் ஒற்றுமை மற்றும் அன்பு மூலம் செயல்படுவது முக்கியம் என அவர்கள் கற்றிருந்தனர். தெய்வீக ஆதாரங்களிலிருந்து பெற்ற கற்பித்தலில் அவர்கள் இரட்சிப்பின் திட்டம் மற்றும் திட்டத்தை செயலாக்குகிற இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கைகளும் போதிக்கப்பட்டார்கள். அவர்களது உலக நோக்கமும் நித்திய இலக்கும் ஒத்திருக்கின்றன என அவர்கள் புரிந்ததால், அவர்கள் ஒன்றாக அன்பிலும் நீதியிலும் பிரயாசப்பட கற்றலில் திருப்தியும் வெற்றியும் கண்டனர்.
அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்த பிறகு பரலோக தூதர்களிடமிருந்து அவர்கள் கற்றதை தங்கள் குடும்பத்துக்கு ஆதாமும் ஏவாளும் கற்பித்தனர். இந்த வாழ்க்கையில் அவர்களை மகிழ்ச்சியாக்கும் அந்தக் கொள்கைகளை புரிந்துகொள்ளவும், தழுவிக்கொள்ளவும் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்து, தங்கள் திறமைகளை வளர்த்து, தங்கள் கீழ்ப்படிதலை தேவனிடம் நிரூபித்து, தங்கள் பரலோக பெற்றோரிடம் திரும்பிச் செல்ல ஆயத்தப்படவும் அவர்கள் கவனம் செலுத்தினர். அந்த விதத்தில், தங்கள் வித்தியாசப்படும் பலத்தை பாராட்ட கற்று ஆதாமும் ஏவாளும் தங்கள் குறிப்பிடத்தக்க நித்திய பணியில் ஒருவருக்கொருவரை ஆதரித்தனர்.2
நூற்றாண்டுகளும் ஆயிரம் ஆண்டுகளும் வந்து போகவே, ஆண்கள் மற்றும் பெண்களின் உணர்த்தப்பட்ட தன்னிச்சையான பங்களிப்புக்களின் தெளிவு தவறான தகவல்களாலும் புரிந்துகொள்ளாமையாலும் மறைக்கப்பட்டன. ஏதேன் தோட்டத்தில் அதிசயமான தொடக்கத்துக்கும் இப்போதைக்கும் இடையேயுள்ள நேரத்தில் நமது ஆத்துமாக்களை மேற்கொள்ளும் அவனது முயற்சிகளில் ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தன் இலக்கில் சத்துரு மிகவும் வெற்றியடைந்தான். ஆண்களும் பெண்களும் உணர்கிற ஒற்றுமையை அவனால் சிதைக்க முடியுமானால், நமது தெய்வீக தகுதி மற்றும் உடன்படிக்கை பொறுப்புக்களை அவனால் குழப்ப முடியுமானால், நித்தியத்துக்கு தேவையான அங்கங்களாகிய குடும்பங்களை அழிப்பதிலும் தான் வெற்றி பெற முடியும் என லூசிபர் அறிந்தான்.
உயர்ந்தோர் அல்லது தாழ்ந்தோர் என்ற உணர்வுகளை உருவாக்கவும், ஆண்கள் மற்றும் பெண்களின் உள்ளார்ந்த வித்தியாசங்கள் தேவனால் கொடுக்கப்பட்டவை, சமமாக மதிக்கப்படுகின்றன என்ற நித்திய சத்தியத்தை மறைத்து, சாத்தான் ஒப்பிடுதலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான். குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் பெண்களின் பங்களிப்பை அவமாக்கி, அவ்வாறே நன்மைக்கு ஏதுவான உயர்த்தும் செல்வாக்கை குறைத்து அவன் முயன்றிருக்கிறான். ஒருவரையொருவர் வாழ்த்தும் ஒற்றுமைக்குப் பங்களிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் தனித்துவமான பங்களிப்புக்களை கொண்டாடுவதை விட ஒரு பலப்போராட்டத்தை வளர்ப்பதுதான் அவனது இலக்காக இருந்திருக்கிறது.
ஆகவே பல ஆண்டுகளாகவும் உலகத்தைச் சுற்றியும், தெய்வீகமாக ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் முழுமையான புரிதலும், இருப்பினும் வித்தியாசமான பங்களிப்புக்களும் ஆண்கள் மற்றும் பெண்களின் பொறுப்புக்களும் வெகுவாக மறைந்திருக்கின்றன. அநேக சமுதாயங்களின் பெண்கள் பக்கத்தில் பங்காளிகளாக இருப்பதை விட ஆண்களுக்கு அடங்கியவர்களாகி, அவர்களது செயல்கள் ஒரு குறுகிய பார்வைக்குள் குறைந்துவிட்டது. அந்த இருண்ட காலங்களில் ஆவிக்குரிய முன்னேற்றம் குறைந்து வேகமிழந்தது. உண்மையாகவே அடக்கியாளும் பாரம்பரியங்களில் உயர்ந்து மனங்களிலும் இருதயங்களிலும் குறைவான ஆவிக்குரிய ஒளிதான் ஊடுருவ முடிந்தது.
பின்பு, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷ ஒளி “சூரியனின் பிரகாசத்துக்கும் மேலாக” 3பிரகாசித்தது, அப்போது பிதாவாகிய தேவனும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நியூயார்க்கின் நகர்ப்புற பரிசுத்த தோப்பில் 1820ன் முன் வசந்த காலத்தில் சிறுவனாகிய ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமாயினர். அந்த நிகழ்ச்சி பரலோகத்திலிருந்து வெளிப்படுத்தலின் தற்காலப் பொழிவை தொடங்கியது. கிறிஸ்துவின் முதல் சபையின் முதல் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட மூலக்கூறுகளில் ஒன்று, தேவனின் ஆசாரியத்துவத்தின் அதிகாரமாகும். மறுஸ்தாபிதம் தொடர்ந்து வெளிவந்த போது, அவரால் இந்த பரிசுத்த பிரயாசத்தில் அதிகாரமளிக்கப்பட்டு, வழிகாட்டப்பட்ட பங்காளிகளாக உழைப்பதன் முக்கியத்துவத்தையும் திறமையையும் ஆண்களும் பெண்களும் உணரத் தொடங்கினார்கள்.
1842ல், இப்பணியில் உதவ முளைத்த சபையின் பெண்கள் ஒரு அதிகார பூர்வ அமைப்பை விரும்பியபோது, ஆசாரியத்துவத்தின் கீழ் ஆசாரியத்துவ மாதிரியில் அவர்களை ஸ்தாபிக்க தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் உணர்த்தப்பட்டார்.4 அவர் சொன்னார், “தேவ நாமத்தில் நான் இப்போது இந்த திறவுகோலை உங்களுக்குத் தருகிறேன், … இது சிறந்த நாட்களின் ஆரம்பம்.”5 அத்திறவுகோல் கொடுக்கப்பட்டதிலிருந்து, பெண்களுக்கு கல்வி, அரசியல், மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உலக முழுவதிலும் மெதுவாக விரிவடையத் தொடங்கியது. 6
ஒத்தாசைச் சங்கம் எனப் பெயரிடப்பட்ட, பெண்களுக்கான் இந்த புதிய சபை ஸ்தாபனம், அதை விடுத்து, சபையின் அமைப்புக்குள் பெண்களுக்கு அதிகாரமும், பரிசுத்த பொறுப்புக்களும், அலுவல் பதவிகளும் கொடுக்க ஆசாரியத்துவ அதிகாரத்தோடு செயல்பட்ட தீர்க்கதரிசியால் ஸ்தாபிக்கப்பட்டதால், அந்நாளின் பிற பெண்கள் சங்கங்கள் போலில்லை.7
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் நாளிலிருந்து நம் நாள்வரை தொடர்கிற அனைத்தின் மறுஸ்தாபிதமும், தங்கள் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவுவதில் ஆசாரியத்துவத்தின் அதிகாரத்திலும் வல்லமையிலும் தேவையில் தெளிவைக் கொண்டு வந்திருக்கிறது. அண்மையில் தங்கள் அழைப்புக்களில் ஆசாரியத் திறவுகோல்கள் தரித்த ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் பணிக்கப்பட்ட பெண்கள் ஆசாரியத்துவ அதிகாரத்துடன் செயல்படுகிறார்கள் என போதிக்கப்பட்டோம். 8
ஆலயத்தில் தரிப்பிக்கப்பட்ட பெண்கள் தேவனுடன் தாங்கள் செய்த பரிசுத்த உடன்படிக்கைகளைக் காத்துக்கொண்டால், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் வீடுகளிலும் ஆசாரியத்துவ வல்லமை பெற்றிருக்கிறார்கள், என அக்டோபர் 2019ல் தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்.9 ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற ஆண்களுக்கு அவைகளிருப்பதைப்போல, தங்களுடைய ஆசாரியத்துவ உடன்படிக்கைகளிலிருந்து வழிந்தோடுகிற தேவனின் வல்லமையோடு தரிப்பிக்கப்பட்ட பெண்களுக்கு பரலோகங்கள் திறந்திருக்கின்றன என அவர் விளக்கினார். “உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் உதவ இரட்சகரின் வல்லமையை தாராளமாக பெற உங்களுக்கு உரிமையிருக்கிறது” என ஒவ்வொரு சகோதரியையும் அவர் ஊக்குவித்தார்.10
ஆகவே உங்களுக்கும் எனக்கும் அதன் அர்த்தம் என்ன? ஆசாரியத்துவ அதிகாரத்தையும் வல்லமையையும் புரிதல் எவ்வாறு நமது வாழ்க்கையை மாற்றும்? நாம் தனியாக வேலை செய்வதைவிட ஆண்களும் பெண்களும் ஒன்றாக பணிசெய்யும்போது, நாம் பெருமளவில் சாதிக்கிறோம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய திறவுகோல்களில் ஒன்று 11. நமது பங்குகள் போட்டி என்பதைவிட பாராட்டப்படுவதுதான். முன்பு குறிப்பிட்டதைப்போல, பெண்கள் ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படவில்லையானாலும், அவர்கள் தங்கள் உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளும்போது, ஆசாரியத்துவ வல்லமையால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், ஒரு அழைப்புக்கு பணிக்கப்படும்போது, அவர்கள் ஆசாரியத்துவ அதிகாரத்தோடு செயல்படுகிறார்கள்.
ஒரு அழகிய ஆகஸ்ட் நாளில், இந்த பிற்காலத்தில் ஆரோனிய ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே, பென்சில்வேனியாவின், ஹார்மனியில், ஜோசப் மற்றும் எம்மா ஸ்மித்தின் மீண்டும் கட்டப்பட்டுள்ள வீட்டில் தலைவர் ரசல் எம். நெல்சனின் அருகில் அமரும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. எங்கள் உரையாடலில் மறுஸ்தாபிதத்தில் பெண்கள் ஆற்றிய முக்கிய பங்கைப்பற்றி தலைவர் நெல்சன் பேசினார்.
தலைவர் நெல்சன்: “இந்த ஆசாரியத்துவ மறுஸ்தாபித இடத்துக்கு நான் வந்தபோது, நான் நினைவூட்டப்பட்ட மிக முக்கிய அம்சங்களில் ஒன்று, மறுஸ்தாபிதத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு.
“மார்மன் புஸ்தகத்தை ஜோசப் முதலில் மொழிபெயர்க்கத் தொடங்கியபோது, அதை யார் எழுதினார்? அவர் கொஞ்சம் செய்தார், ஆனால் அதிகமில்லை. எம்மா உள்ளே வந்தார்.
“பல்மைரா நியூயார்க்கில் தங்கள் வீட்டுக்கு அருகில் ஜெபிக்க எவ்வாறு காட்டுக்குள் ஜோசப் சென்றார் என நான் யோசிக்கிறேன். அவர் எங்கு போனார்? அவர் பரிசுத்த தோப்புக்கு சென்றார். அவர் ஏன் அங்கு சென்றார்? ஏனெனில் அவருடைய தாய் ஜெபிக்க விரும்பியபோது அவர் அங்குதான் சென்றார்.
“ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதத்திலும், சபையின் மறுஸ்தாபிதத்திலும், முக்கிய பங்காற்றிய பெண்களில் அவர்கள் இருவருமிருந்தனர். சந்தேகமில்லை, அவர்கள் அப்போதிருந்ததுபோல, நமது மனைவிகளும் இன்று முக்கியமானவர்கள் என நாம் சொல்ல முடியும். உண்மையாகவே அவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள்.”
எம்மா, லூசி மற்றும் ஜோசப்பைப் போல, ஒருவருக்கொருவரிடமிருந்து கற்க ஆயத்தமாயிருக்கும்போதும், இயேசு கிறிஸ்துவின் சீஷராக நமது இலக்கில் இணைந்திருக்கும்போதும், பாதையில் பிறருக்கு உதவும்போதும், நாம் மிகவும் சக்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.
“தேவ பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணற்ற விதங்களில் ஆசாரியத்துவம் ஆசீர்வதிக்கிறது, … [சபை] அழைப்புக்களிலும், ஆலய நியமங்களிலும், குடும்ப உறவுகளிலும், அமைதியான தனிப்பட்ட ஊழியத்திலும், பிற்காலப் பரிசுத்தவான் பெண்களும் ஆண்களும், ஆசாரியத்துவ வல்லமையுடனும் அதிகாரத்துடனும் முன்னேறுகிறார்கள். அவரது வல்லமை மூலம் தேவனின் பணியை நிறைவேற்றுவதில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒருவரையொருவர் சார்ந்திருத்தல், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு மையமாக இருக்கிறது.”12 என நாம் போதிக்கப்பட்டுள்ளோம்,
நாம் செய்ய சிலாக்கியம் பெற்று அழைக்கப்பட்டுள்ள தெய்வீகப் பணிக்கு ஒற்றுமை அத்தியாவசியம், ஆனால் அது சாதாரணமாக நடப்பதில்லை. உண்மையாகவே ஒன்றாக ஆலோசனை பண்ண, ஒருவருக்கொருவர் கேட்க, பிறரின் கருத்துக்களைக் கேட்க, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சியும் நேரமும் தேவை, ஆனால் அந்த முறை அதிக உணர்த்தப்பட்ட தீர்மானங்களில் முடிகிறது. நமது வித்தியாசமான ஆனால் பாராட்டும் பங்குகளில் அவரது ஆசாரியத்துவ வல்லமை மற்றும் அதிகாரத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டு, ஒன்றாக உழைப்பது, வீட்டில் அல்லது நமது வீட்டு பொறுப்புக்களிலும், நமது தெய்வீக திறமையை நிறைவேற்ற மிக ஆற்றல் மிக்க வழி,
இன்று உடன்படிக்கையின் பெண்களின் வாழ்க்கையில், அந்த பங்காளியாயிருப்பது எப்படி இருக்கிறது? நான் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அலிசனும் ஜானும் ஒரு தனித்துவமான பங்காளிகளாக இருந்தனர். குறுகிய மற்றும் நெடுந்தூர போட்டிகளில் அவர்கள் இரட்டை சைக்கிள் ஓட்டினர். அந்த வாகனத்தில் வெற்றிகரமாக போட்டிபோட அவர்கள் இருவரும் இசைவுடன் ஓட்ட வேண்டும். சரியான நேரத்தில் ஒரே திசையில் அவர்கள் சாய வேண்டும். ஒருவரை மற்றவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது, அவர்கள் தெளிவாக தொடர்புகொண்டு, அவன் அல்லது அவளது பங்கை செய்ய வேண்டும். எப்போது நிறுத்துவது எப்போது நிற்பது என்பதில் முன்னால் இருக்கும் தலைவர் கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும். பின்னாலிருப்பவர், என்ன நடக்கிறது மற்றும் சிறிது பிந்தினால் சிறிது அழுத்தவும் அல்லது பிற சைக்கிள்களுக்கு அருகில் வந்தால், இலகுவாக்கவும் தயாராக இருக்க வேண்டும். முன்னேறவும், இலக்கை அடையவும் அவர்கள் ஒருவருக்கொருவரை ஆதரிக்க வேண்டும்.
அலிசன் விளக்கினாள், முதலில் கொஞ்ச நேரம், தலைவர் இடத்தில் இருப்பவர், தேவைப்படும்போது நில் என சொல்ல வேண்டும், ப்ரேக்கிங் சொன்னால் பெடலை நிறுத்த வேண்டும். சிறிது நேரத்துக்குப்பிறகு பின்னால் இருப்பவர் எப்போது நிற்க வேண்டும், எப்போது ப்ரேக் போட வேண்டும் என சொல்ல அறிந்துகொள்கிறார், வார்த்தைகளில் சொல்லத் தேவையில்லை. ஒருவருக்கொருவர் எப்படி இருக்கிறார்கள், ஒருவர் கஷ்டப்படும்போதும், வேகம் குறைவதை அதிகரிக்கவும் இசைந்திருக்க வேண்டும். இது உண்மையிலேயே நம்பிக்கை மற்றும் ஒன்றுபட்டு உழைப்பதைப் பொறுத்தது.13
ஜானும் அலிசனும் சைக்கிள் ஓட்டும்போது மட்டுமல்ல, தங்கள் திருமணத்திலும் ஒன்றுபட்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவன் அல்லது அவளது மகிழ்ச்சியை விரும்பினர். ஒருவருக்கொருவரின் நன்மையைப் பிறர் பார்த்து, அவன் அல்லது அவளது பெருமைக்காக வேலை செய்யவில்லை. தலைமை தாங்க முறை எடுத்தனர், போராடுபவருக்கு ஒத்தாசை புரிந்தனர். தங்கள் தாலந்துகளையும் ஆதாரங்களையும் அவர்கள் இணைத்தபோது, ஒவ்வொருவரும் அடுத்தவரின் பங்களிப்பை மதித்து, தங்கள் சவால்களுக்கு நல்ல பதில் பெற்றனர். கிறிஸ்து போன்ற அன்பினால் ஒருவருக்கொருவர் உண்மையில் கட்டப்பட்டிருக்கின்றனர்.
ஒற்றுமையாக ஒன்றாக உழைக்கும் தெய்வீக மாதிரியுடன் இசைந்திருப்பது, நம்மைச் சுற்றியுள்ள “நான்தான் முதல்” என்கிற இந்த நாளைக்கு முக்கியமானது. பெண்களும் குறிப்பிடத்தக்க தெய்வீக வரங்களைப் பெற்றிருக்கின்றனர்,14 தனித்துவமுள்ள பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவை ஆண்களின் வரங்கள் மற்றும் பொறுப்புக்களை விட அதிகமான அல்லது குறைவானது இல்லை. அனைத்தும் அவன் அல்லது அவளது தெய்வீக திறமைகளை நிறைவுசெய்ய, அவரது ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறந்த சந்தர்ப்பம் கொடுக்க, பரலோக பிதாவின் தெய்வீக திட்டத்தைக் கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தேவைப்படுகிறது.
கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களைக் கொண்டுவர, சகோதரருடன் இணைய,16 “நமது ஏவாள் தாயின் தைரியமும் பார்வையும் உடைய பெண்கள் நமக்குத் தேவை”.15 தாங்கள் முற்றிலும் பொறுப்புடையவர்கள் என கருதுவதைவிட, அதிக பணியை பெண்கள் செய்யும்போது, பங்குதாரர் போல பாசாங்கு செய்வதை விட ஆண்கள் உண்மையான பங்குதாரர்களாக வேண்டும். அனைத்தையும் தாங்களே செய்ய வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டுமென சொல்லப்பட வேண்டும் என நினைத்து காத்திருப்பதை விட பங்குதாரர்களாக 18 “[தங்களுக்கு] உரிமைப்பட்ட தேவையான இடத்தை பிடிக்க அடி வைக்க” தயாராக இருக்க வேண்டும்.17
பெண்களை முக்கிய பங்கேற்பவர்களாகப் பார்ப்பது, “சமநிலை” உருவாக்குவது அல்ல, ஆனால் கோட்பாட்டு சத்தியத்தை புரிந்து கொள்வதாகும். அதைக் கொண்டுவர ஒரு திட்டத்தை ஏற்படுத்துவதைவிட, இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணியில், முக்கிய பங்குதாரர்களாக, தேவன் போல பெண்களை மதிப்பிட நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்.
நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? நாம் கலாச்சார வெறுப்பை மேற்கொள்ள முயல்வோமா, மாறாக அடிப்படை கோட்பாட்டின் அடிப்படையிலான தெய்வீக மாதிரிகளையும் செயல்களையும் தழுவிக்கொள்வோமா? “கர்த்தரின் இரண்டாம் வருகைக்காக உலகை ஆயத்தம் செய்ய உதவ, இந்தப் பரிசுத்த பணியில் கரத்தோடு கரம் கோர்த்து நடக்க” தலைவர் நெல்சன் நம்மை அழைக்கிறார்.19 நாம் செய்யும்போது, நாம் ஒவ்வொருவரின் பங்களிப்புகளை மதிக்கக் கற்று, நமது தெய்வீக பங்கை நிறைவேற்றும் ஆற்றலை அதிகரிக்க வேண்டும். நாம் எப்போதும் அனுபவித்ததைவிட அதிக சந்தோஷத்தை உணர்வோம்.
அவரது பணி முன்நோக்கிச் செல்ல உதவ, கர்த்தரின் உணர்த்தப்பட்ட விதமாக, நாம் ஒவ்வொருவரும் ஒன்றாக தெரிந்து கொள்வோமாக. நமது நேசராகிய, இரட்சகர் இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.