ஆசாரியத்துவம் எவ்வாறு இளைஞர்களை ஆசீர்வதிக்கிறது
ஆசாரியத்துவத்தின் மூலம் நாம் உயர்த்தப்படலாம். ஆசாரியத்துவம் நமது உலகத்துக்கு ஒளியைக் கொண்டு வருகிறது.
இங்கு இருப்பதற்காக நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். இன்று உங்களிடம் பேச நான் சந்தர்ப்பம் பெறுவேன் என முதலில் கண்டுபிடித்தபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன், ஆனால் அதே நேரத்தில் மிகவும் தாழ்மையடைந்தேன். நான் என்ன பகிர முடியும் என்பது பற்றி எண்ணி அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன், என் செய்தி மூலம் ஆவி உங்களிடம் நேரடியாக பேசுகிறது என நான் நம்புகிறேன்.
மார்மன் புஸ்தகத்தில், லேகி மரிப்பதற்கு முன் தங்கள் பெலங்களையும் நித்திய திறமைகளையும் பார்க்க அவர்களுக்கு உதவுகிற ஆசீர்வாதத்தை அவனது குமாரர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறான். எட்டு பிள்ளைகளில் நான்தான் இளையவள், கடந்த ஆண்டில் முதல்முறையாக வீட்டிலிருந்த ஒரே பிள்ளை நான்தான். என் உடன்பிறந்தோர் அருகில் இல்லாதது எந்நேரமும் பேச ஒருவர் இல்லாதது எனக்கு கடினமாக இருந்திருக்கிறது. நான் தனிமையாக உணர்ந்த இரவுகள் இருந்திருக்கின்றன. எனக்கு உதவ தங்களால் முடிந்த அளவு முயன்ற என் பெற்றோருக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இதுபற்றிய ஒரு உதாரணம், குறிப்பாக ஒரு சவாலான நேரத்தில் ஆறுதலளிக்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதம் கொடுக்க என் அப்பா முன்வந்ததாகும். அவரது ஆசீர்வாதத்துக்குப்பிறகு காரியங்கள் உடனே மாறவில்லை, ஆனால் என் பரலோக பிதாவிடமிருந்தும் என் அப்பாவிடமிருந்தும், சமாதானத்தையும் அன்பையும் நான் உணர முடிந்தது. எனக்கு தேவைப்படும்போது, ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் கொடுக்கவும், தன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்போது லேகி செய்ததுபோல, என் பெலங்களையும் நித்திய திறமைகளையும் பார்க்க எனக்கு உதவவும் எனக்கு தகுதியுள்ள அப்பா கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
உங்கள் சூழ்நிலைகள் பொருட்டின்றி, நீங்கள் எப்போதும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் பெற முடியும். குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், ஊழியம் செய்யும் சகோதரர்கள், ஆசாரியத்துவ தலைவர்கள் மற்றும் ஒருபோதும் உங்களைக் கைவிடாத பரலோக பிதா மூலம், நீங்கள் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைப் பெற முடியும். மூப்பர் நீல் எல். ஆண்டர்சென் சொன்னார்: “அந்த வரத்தை நிர்வகிக்க கேட்டுக்கொள்ளப்பட்டவரை விட ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் அளவிட முடியாதபடி உயர்ந்தவை. … நாம் தகுதியுடையவர்களாய் இருப்பதால், ஆசாரியத்துவ நியமங்கள் நமது வாழ்க்கைக்கு வளமூட்டுகின்றன.”1
உங்களுக்கு கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்படும்போது, ஒரு ஆசீர்வாதம் கேட்க தயங்காதீர்கள். நமது கடினமான நேரங்களில் நமக்கு அதிகம் உதவி செய்ய நமக்கு ஆவி தேவை. ஒருவரும் பரிபூரணமானவர்களில்லை, நாமனைவரும் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். நம்மில் சிலர் தவிப்பு, மனஅழுத்தம், அடிமைத்தனம் அல்லது நாம் போதுமானவர்களல்ல என்ற உணர்வுகளுடன் கஷ்டப்படலாம். நாம் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும்போது, இந்த சவால்களை மேற்கொள்ளவும், சமாதானம் பெறவும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் நமக்கு உதவ முடியும். இந்த ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதியாக வாழ முயல்கிறோம் என நான் நம்புகிறேன்.
ஆசாரியத்துவம் நம்மை ஆசீர்வதிக்கிற மற்றொரு விதம், கோத்திர பிதா ஆசீர்வாதங்கள் மூலம் ஆகும். நான் சோகமாக அல்லது தனிமையாக உணரும்போது, என் கோத்திரபிதா ஆசீர்வாதத்தை பார்க்க நான் கற்றிருக்கிறேன். என் தகுதியையும் எனக்காக தேவன் வைத்திருக்கிற குறிப்பிட்ட திட்டத்தையும் பார்க்க என் ஆசீர்வாதம் எனக்கு உதவுகிறது. அது எனக்கு ஆறுதலளித்து, என் பூலோக பார்வைக்கு அப்பாலும் பார்க்க எனக்கு உதவுகிறது. நான் தகுதியாக வாழ்ந்தால் நான் பெறப்போகும் எனது வரங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் பற்றி எனக்கு நினைவூட்டுகிறது. தேவன் பதிலளிப்பார் மற்றும் எனக்கு அதிகம் தேவைப்படுகிற சரியான நேரத்தில் சரியாக எனக்காக கதவுகளைத் திறப்பார் என நினைவுகொள்ளவும் உணரவும் அது எனக்கு உதவுகிறது.
நமது பரலோக பிதாவுடன் வாழ திரும்பிச்செல்ல நம்மை ஆயததப்படுத்த கோத்திரபிதா ஆசீர்வாதங்கள் உதவுகின்றன. கோத்திர பிதா ஆசீர்வாதங்கள் தேவனிடமிருந்து வருகின்றன மற்றும் நமது பெலவீனங்களை பெலமாக மாற்ற நமக்கு உதவ முடியும். இவை குறி சொல்பவர்களின் செய்தி அல்ல, நாம் எதற்கு செவிகொடுக்க வேண்டும் என இந்த ஆசீர்வாதங்கள் கூறுகின்றன. அவை நம் ஒவ்வொருவருக்கும் லியஹோனா போன்றவை. நாம் தேவனை முதலில் வைத்து அவரில் விசுவாசிக்கும்போது, நமது சொந்த வனாந்திரத்தைக் கடக்க அவர் நமக்கு வழிகாட்டுவார்.
சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்கள் மறுஸ்தாபிதம் செய்யப்படும்படிக்கு, ஆசீர்வாதத்தால் தேவன் ஜோசப் ஸ்மித்தை ஆசீர்வதித்ததுபோல, ஆசாரியத்துவத்தின் மூலம் நாம் நமது வாழ்க்கையில் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும். ஒவ்வொரு வாரமும் திருவிருந்தைப் பெறும் சிலாக்கியமும் சந்தர்ப்பமும் நாம் பெறுகிறோம். இந்த ஆசாரியத்துவ நியமத்தின் மூலம், நம்மைக் கழுவி சுத்திகரிக்க முடிகிற ஆவியை நம்மோடு எப்போதும் பெற்றிருக்கலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து ஏதாவதொன்றை நீக்குகிற தேவையை நீங்கள் உணர்ந்தால், சரியான பாதையில் சேர, நம்பத்தகுந்த தலைவரிடம் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் முழு வல்லமையைப் பெற உங்களுக்கு உதவ முடியும்.
நாம் ஆலய நியமங்களின் ஆசீர்வாதங்களைப் பெற முடிவதால் ஆசாரியத்துவத்துக்கு நன்றி. நான் ஆலயத்தினுள் பிரவேசிக்க முடிந்ததிலிருந்து, ஒழுங்காக செல்ல அதை இலக்காகவும் முன்னுரிமையாகவும் ஆக்கினேன். அவரது பரிசுத்த வீட்டில், பரலோக பிதாவுக்கு நெருக்கமாக இருக்க தேவையான நேரத்தை எடுத்து, தியாகங்கள் செய்து, என் வாழ்க்கை முழுவதிலும் உண்மையாகவே எனக்கு உதவியிருக்கிற வெளிப்படுத்தல்களும் தூண்டுதல்களும் பெறுவதுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
ஆசாரியத்துவத்தின் மூலம் நாம் உயர்த்தப்படலாம். ஆசாரியத்துவம் நமது உலகத்துக்கு ஒளியைக் கொண்டு வருகிறது. மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ் சொன்னார்: “ஆசாரியத்துவ வல்லமை இல்லையானால், ‘பூமி முழுவதும் வீணாய்ப்போயிருக்கும்’ (கோ.&உ 2:1–3 பார்க்கவும்). ஒளியும் நம்பிக்கையும் இருக்காது—இருள் மட்டுமே இருக்கும்.” 2
தேவன் நம்மை உற்சாகப்படுத்துகிறார். நாம் அவரிடம் திரும்ப வேண்டுமென அவர் விரும்புகிறார். அவர் நம்மை தனிப்பட்ட விதமாக அறிகிறார். அவர் உங்களை அறிகிறார். அவர் நம்மை நேசிக்கிறார். நாம் தகுதியானவர்களில்லை என நாம் உணரும்போதுகூட, அவர் நம்மை எப்போதும் அறிந்து, நம்மை ஆசீர்வதிக்கிறார். நமக்கு என்ன தேவை, அது நமக்கு எப்போது தேவை என அவர் அறிகிறார்.
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்:
“ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்: தேடுகிறவன் கண்டடைகிறான்: தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7–8).
ஆசாரியத்துவம் பற்றி ஏற்கனவே உங்களுக்கு சாட்சியில்லையானால், அதன் வல்லமை பற்றி நீங்களே அறிய நீங்கள் ஜெபித்து கேளுங்கள், பின்பு தேவ வார்த்தைகளைக் கேட்க வேதங்களை வாசியுங்கள் என நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நமது வாழ்க்கையில் தேவனின் ஆசாரியத்துவத்தின் வல்லமையை அனுபவிக்க நாம் ஒரு முயற்சி செய்தால், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.