பொது மாநாடு
கிறிஸ்துவண்டை வாருங்கள்—பிற்காலப் பரிசுத்தவான்கள் போல வாழ்ந்து
ஏப்ரல் 2020 பொது மாநாடு


2:3

கிறிஸ்துவண்டை வாருங்கள்—பிற்காலப் பரிசுத்தவான்கள் போல வாழ்ந்து

நேபியைப் போல, நாம் கடினமான காரியங்களை செய்து, பிறரும் அதேபோல செய்ய நாம் உதவ முடியும், ஏனெனில் யாரை நம்புவது என நாமறிவோம்.16

மூப்பர் சோயர்ஸ், மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய வல்லமையான உங்களுடைய தீர்க்கதரிசனமுடைய சாட்சியத்துக்காக உங்களுக்கு நன்றி. அண்மையில் மார்மன் புஸ்தகத்தின் முதல் கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கத்தை கையில் வைத்திருக்கும் தனித்துவமான சந்தர்ப்பம் பெற்றேன். இந்தக் குறிப்பிட்ட பக்கத்தில், இந்த ஊழியக்காலத்தில் முதல் முறையாக நேபியின் தடித்த எழுத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன: “நான் போய் கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களைச் செய்வேன், ஏனெனில் மனுபுத்திரருக்கு தாம் கட்டளையிட்ட காரியத்தைச் செய்து முடிக்கக்கூடிய ஒரு வழியை ஆயத்தப்படுத்தினாலொழிய, கர்த்தர் எந்தக் கட்டளைகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”1

மார்மன் புஸ்தக மூல கைப்பிரதிப் பக்கம்

நான் இந்த பக்கத்தை வைத்திருந்தபோது, தேவ வரத்தாலும் வல்லமையாலும், மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்த்த, 23 வயது ஜோசப் ஸ்மித்தின் முயற்சிகளுக்காக நான் ஆழ்ந்த பாராட்டால் நிரப்பப்பட்டேன். 2 லாபானிடமிருந்து பித்தளைத் தகடுகளைப் பெற ஒரு கடினமான வேலையைச் செய்ய கேட்கப்பட்ட, இளம் நேபியின் வார்த்தைகளுக்கும் நான் பாராட்டை உணர்ந்தேன்.

ஜோசப் போல, அவன் கர்த்தரில் தொடர்ந்து கவனம் செலுத்தினால் அவனுக்கு கர்த்தர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் அவன் வெற்றி பெறுவான் என நேபி அறிந்திருந்தான். சோதனைகள், சரீர பாடுகள், அவன் சொந்த குடும்பத்தினர் சிலரின் துரோகத்தினால் அவன் பாடனுபவித்தாலும், தன் வாழ்நாள் முழுவதும் இரட்சகர் மீது நேபி கவனமாயிருந்தான்.

அவன் யாரை நம்ப முடியும் என நேபி அறிந்திருந்தான்.3 வியப்படைந்த சிறிது நேரத்துக்குப்பிறகு சொன்னான், “நிர்ப்பந்தமான மனுஷனாக இருக்கிறேனே! ஆம், என் மாம்சத்தினிமித்தம் என் ஆத்துமா ஓலமடைகிறது,”4 நேபி சொன்னான், “என் தேவன் எனக்கு ஆதரவாய் இருந்திருக்கிறார், அவர் வனாந்தரத்தில் என் உபத்திரவங்களினூடே என்னை வழிநடத்தினார், அவர் மகா ஆழத்தின் தண்ணீர்கள் மேலே என்னைப் பாதுகாத்தார்.”5

கிறிஸ்துவைப் பின்பற்றுவர்களாக நமது வாழ்க்கையின் சவால்களிலிருந்து நாம் தப்புவிக்கப்படவில்லை. தனித்து முயற்சி செய்தாலே மிகையானதாயும், சாத்தியமில்லாததாகவும் இருக்கக்கூடிய கடினமான காரியங்களை செய்வது அடிக்கடி நமக்கு தேவையாகிறது. என்னிடத்தில் வாருங்கள்6 என்ற கர்த்தரின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நேபிக்கும் ஜோசப்புக்கும் செய்ததுபோல, தேவையான ஆதரவையும், தேறுதலையும், சமாதானத்தையும் அவர் கொடுப்பார். நமது அதிக பாடுகளிலும் கூட, நாம் அவரை நம்பி அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது அன்பின் அரவணைப்பை நாம் உணரலாம். கிறிஸ்துவே சந்தோஷம் என்பதால், அவரது விசுவாசமிக்க சீஷர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சந்தோஷத்தை நாம் அனுபவிக்கலாம்.7

2014ல், ஒரு முழு நேர ஊழியம் செய்யும்போது, எதிர்பாராமல் மாறிய நிகழ்வுகளை எங்கள் குடும்பம் அனுபவித்தது. நீண்ட பலகையில் செங்குத்தான குன்றிலிருந்து இறங்கியபோது, எங்கள் இளைய மகன் விழுந்து தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூளையில் காயமடைந்தான். அவனது சூழ்நிலை மோசமடைந்தபோது, மருத்துவ குழுவினர் அவனை அவசர அறுவைச் சிகிச்சைக்கு விரைந்து கொண்டு சென்றனர்.

காலியாக இருந்த மருத்துவ மனை அறையின் தரையில் எங்கள் குடும்பம் முழங்கால் படியிட்டது, நாங்கள் இருதயங்களை தேவனிடத்தில் ஊற்றினோம். இக்குழப்பமான வேதனை நிறைந்த தருணத்தினிடையே, நாங்கள் எங்கள் பரலோக பிதாவின் அன்பினாலும் சமாதானத்தினாலும் நிரப்பப்பட்டோம்.

எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது அல்லது எங்கள் மகனை திரும்பவும் உயிரோடு பார்ப்போமா என எங்களுக்குத் தெரியவில்லை. அவனது உயிர் தேவனின் கரங்களிலிருக்கிறது, ஒரு நித்திய பார்வையிலிருந்து, விளைவு அவனுக்கும் எங்களுக்கும் நன்மைக்கேதுவாக நடக்கும் என மிகத் தெளிவாக எங்களுக்குத் தெரியாது. ஆவியின் வரத்தினால், எந்த விளைவையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் முழுமையாக ஆயத்தப்பட்டிருந்தோம்.

அது எளிதாக இருக்கவில்லை! 400 முழுநேர ஊழியக்காரர்களுக்கு நாங்கள் தலைமைதாங்கியபோது, அந்த விபத்தால் இரண்டு மாதம் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. எங்கள் மகன் கணிசமாக நினைவை இழந்தான். அவனது குணமாகுதலுக்கு நீண்ட கஷ்டமான சரீர, பேச்சு, மற்றும் தொழில்முறை சிகிச்சைகள் இருந்தன. சவால்கள் இருந்தன, ஆனால் காலப்போக்கில் நாங்கள் ஒரு அற்புதத்தைப் பார்த்தோம்.

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பாடும் நாம் விரும்பும் விளைவைப் பெறாது என நாம் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். எனினும், நாம் கிறிஸ்துவில் கவனம் வைத்தால், அவரது நேரத்திலும் அவரது வழியிலும் அவை எதுவாயிருந்தாலும் நாம் சமாதானத்தை உணர்வோம் மற்றும் தேவனின் அற்புதங்களைப் பார்ப்போம்.

தற்போதைய சூழ்நிலை நன்கு முடியும் என எந்த வழியையும் நாம் பார்க்க முடியாத நேரங்கள் இருக்கும், “என் மாம்சத்தினிமித்தம் என் இருதயம் வருத்தமடைகிறது,” என நேபியைப்போல கூட சொல்லலாம்.8 நாம் பெறுகிற ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது என்ற நேரங்கள் இருக்கலாம். அவரில் அந்த நம்பிக்கையும், விசுவாசமும் பெறுவது எவ்வளவு ஆசீர்வாதம். தன் வாக்குத்தத்தங்களை எப்போதும் காத்துக்கொள்கிறவர் கிறிஸ்து ஒருவரே. அவரண்டை வருகிற அனைவருக்கும் அவரது இளைப்பாறுதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.9

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, அவரில் கவனம்கொள்ளுவதன் மூலம், வருகிற சமாதானத்தையும் ஆறுதலையும் அனைவரும் உணர வேண்டுமென நமது தலைவர்கள் மிகவும் வாஞ்சிக்கின்றனர்.

நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சன் உலகத்துக்கும், கிறிஸ்துவின் சபையாருக்கும் கர்த்தரின் நோக்கத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்: “உலகத்துக்கு நமது செய்தி எளிதும் உண்மையானதுமாகும், திரையின் இருமருங்கிலும் உள்ள தேவனுடைய எல்லா பிளைளைகளையும், இரட்சகரிடத்தில் வரவும், பரிசுத்த ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறவும், நீடித்த சந்தோஷத்துடன் நித்திய ஜீவனுக்குத் தகுதி பெற நாங்கள் அழைக்கிறோம்.”10

“கிறிஸ்துவண்டை வாருங்கள்” என்ற அழைப்பு, பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு குறிப்பிட்டஉள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது. 11 இரட்சகரின் சபையின் அங்கத்தினர்களாக, நாம் அவருடன் உடன்படிக்கை செய்துள்ளோம், அவருடைய ஆவிக்குரிய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆகியிருக்கிறோம்.12 அவரண்டை வர பிறரை அழைப்பதில் கர்த்தருடன் பிரயாசப்பட நமக்கு சந்தர்ப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் கிறிஸ்துவோடு பிரயாசப்படும்போது, நமது மிக ஆழ்ந்த கவனம் நமது வீடுகளுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் சவால்களை எதிர்கொள்கிற நேரங்கள் வரும். உலகத்தின் குரல்களும், அவர்களது சொந்த விருப்பங்களும் கூட, அவர்களை சத்தியம் குறித்து கேள்வி கேட்க செய்யும். இரட்சகரின் அன்பையும் நமது அன்பையும் அவர்கள் உணர நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். “ஒருவருக்கொருவர் மீது உங்களுக்கு அன்பிருந்தால் அதனிமித்தம் நீங்கள் என் சீஷர்கள் என மனுஷர் அறிவார்கள்,” என போதிக்கிற வசனம் “ஒருவரையொருவர் நேசியுங்கள்” என ஆகியிருக்கிற நமது பிடித்தமான பாடல் எனக்கு நினைவூட்டப்பட்டது.13

சத்தியத்தை கேள்வி கேட்பவர்கள் மீது நமது அன்பினால், நாமே தொடர்ந்து சுவிசேஷத்தின் முழுமையின்படி வாழ்ந்து அதன் சத்தியங்களைப் போதித்தால், நாம் நேசிப்பவர்களுக்கு நாம் துரோகம் செய்கிறோம் என நம்மை உணர வைக்க எல்லா மகிழ்ச்சியின் சத்துரு முயலலாம்.

கிறிஸ்துவண்டை வர அல்லது கிறிஸ்துவிடம் திரும்ப வர பிறருக்கு உதவும் நமது திறன், உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க நமது உதாரணத்தால் ஏற்படுத்தப்பட்ட நமது தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலால் பெரிதும் தீர்மானிக்கப்படும்.

நாம் நேசிப்பவர்களை மீட்பது நமது உண்மையான வாஞ்சையானால், அவரது சபையையும் அவரது சுவிசேஷத்தையும் தழுவிக்கொண்டு, நாமே கிறிஸ்துவோடு தங்கியிருக்க வேண்டும்.

நேபியின் கதைக்குத் திரும்பினால், கர்த்தரை நம்ப நேபியின் எண்ணம் அவனது பெற்றோரின் மனப்போக்கு மற்றும் அவர்களது உடன்படிக்கையை காத்துக்கொள்ளும் உதாரணத்தால் செல்வாக்குப் பெற்றது. லேகியின் ஜீவ விருட்ச தரிசனத்தால் இது அழகாக தெளிவாக்கப்பட்டது. விருட்சத்தின் இனிப்பான, மகிழ்ச்சிதரும் கனியை புசித்த பிறகு, லேகி, “[அவன்] குடும்பத்தாரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்று [அவனது] கண்களைச் சுற்றுமுற்றிலும் ஏறெடுத்தான். 14 “அவர்கள் எங்கே போக வேண்டும் என தெரியாதவர்கள்போல” சராயாவும் சாமும் நேபியும் நிற்பதை அவன் பார்த்தான்.15 பின்பு லேகி சொன்னான், “நான் அவர்களிடத்தில் சைகை காட்டி, மேலும் அவர்கள் என்னிடத்தில் வந்து எல்லாக் கனிகளையும் விட விரும்பத்தக்க இந்தக் கனியைப் புசிக்க வேண்டும் என்று உரத்த குரலிலிலும் அவர்களிடத்தில் சொன்னேன்.”16 ஜீவவிருட்சத்தை விட்டு லேகி விலகவில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். அவன் ஆவிக்குரிய விதமாக கர்த்தரோடு இருந்தான், கனியை புசிக்க அவன் இருந்த இடத்துக்கு வருமாறு தன் குடும்பத்தை அழைத்தான்.

கிறிஸ்துவின் போதனைகளிலிருந்தும் அவரது சபையிலிருந்தும் பிரித்து, சுவிசேஷத்தின் மகிழ்ச்சியை விட்டு விலக சத்துரு சிலரை தூண்டுவான். அவரது சபையைச் சாராமல் நமது சொந்த ஆவிக்குரிய தன்மை மூலம், நாமாகவே உடன்படிக்கையின் பாதையில் உறுதியாக இருக்க முடியும் என அவன் நம்மை நம்ப வைப்பான்.

இந்த கடைசி நாட்களில் அவரது உடன்படிக்கையின் பாதையில் கிறிஸ்துவின் உடன்படிக்கையின் பிள்ளைகள் நிலைத்திருக்க உதவ, கிறிஸ்துவின் சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் நாம் வாசிக்கிறோம், “இதோ, இது எனது கோட்பாடு, யார் மனந்திரும்பி என்னிடத்தில் வந்தாலும், அவனே எனது சபையாக இருக்கிறான்.”17

கிறிஸ்துவின் சபை மூலம், பரிசுத்தவான்களின் சமூகமாக அனுபவங்கள் மூலம் நாம் பெலப்படுத்தப்படுகிறோம். அவரது தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் மூலம் நாம் அவரது குரலைக் கேட்கிறோம். மிக முக்கியமாக, அவரது சபை மூலமாக பரிசுத்த நியமங்களில் பங்கேற்பது மூலமாக மட்டுமே பெறப்படுகிற கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் அத்தியாவசிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியில் கிறிஸ்துவின் சபை, தேவனின் பிள்ளைகள் அனைவரின் ஆதாயத்துக்காக இந்த பிற்காலத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.

நாம் கிறிஸ்துவண்டை வந்து, பிற்காலப் பரிசுத்தவான்களாக வாழும்போது, அவரது அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தின் கூடுதல் அளவால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என நான் சாட்சியளிக்கிறேன். நேபியைப்போல, நாம் கடினமான காரியங்களை செய்து, பிறரும் அதேபோல செய்ய நாம் உதவ முடியும், ஏனெனில் யாரை நம்புவது என நாமறிவோம்.18 கிறிஸ்துவே நமது ஒளி, நமது ஜீவன், நமது இரட்சிப்பு.19 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.