மகா திட்டம்
தேவனின் திட்டத்தைப்பற்றி அறிந்தவர்களாகிய,, பங்கேற்க உடன்படிக்கை செய்தவர்களாகிய நாம் இந்த சத்தியங்களைக்குறித்து போதிக்க ஒரு தெளிவான பொறுப்பைக் கொண்டிருக்கிறோம்.
தனித்துவமான சோதனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், நாம் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இந்த பொது மாநாடு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் செழிப்பின், மகிழ்ச்சியின் வெளிப்பாடை நமக்குக் கொடுத்திருக்கிறது. மறுஸ்தாபிதத்தை தொடங்கிய பிதா மற்றும் குமாரனின் தரிசனத்தில் நாம் களிகூர்ந்தோம். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய கோட்பாட்டையும் சாட்சியளிப்பது முக்கிய நோக்கமாயிருந்த மார்மன் புஸ்தகத்தின் அற்புதமான வெளிவருதல் நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளுக்கும், தனிப்பட்ட முறையில் நமக்கும் கொடுக்கப்படுகிற வெளிப்பாட்டின் மகிழ்ச்சியான யதார்த்தத்துடன், நாம் புதுப்பிக்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற பாவநிவர்த்தி மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய விலைமதிப்பற்ற சாட்சிகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். “இவர் என் நேசகுமாரன், அவருக்கு செவி கொடு! என புதிதாக அழைக்கப்பட்ட தீர்க்கதரிசிக்கு பிதாவாகிய தேவன் அறிவித்தபின், ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்திய அவருடைய சுவிசேஷத்தின் முழுமையின் பிற சத்தியங்கள் நமக்கு போதிக்கப்பட்டுள்ளன. (Joseph Smith—History 1:17).
ஆசாரியத்துவம் மற்றும் அதன் திறவுகோல்களின் மறுஸ்தாபிதத்தைப்பற்றிய நமது அறிவில் நாம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளோம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற அதன் சரியான பெயரில் கர்த்தருடைய மறுஸ்தாபிக்கப்பட்ட சபை அறியப்பட நமது தீர்மானத்தில் நாம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறோம். உலகளாவிய தொற்றுநோயின் பேரழிவின் தற்போதைய மற்றும் வருங்கால பாதிப்புகளை குறைக்க உபவாசம் மற்றும் ஜெபத்தில் சேர நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த காலையில் கர்த்தருடைய ஜீவனுள்ள தீர்க்கதரிசி மறுஸ்தாபிதத்தின் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை முன்வைத்ததில் நாம் உணர்த்தப்பட்டோம். “மறுஸ்தாபிதத்தின் செய்தியை ஜெபத்துடன் படித்து விசுவாசத்தில் செயல்படுபவர்கள், நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு, உலகத்தை ஆயத்தப்படுத்த, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் அதன் நோக்கத்தில் தங்களுடைய சொந்த சாட்சியைப் பெற, ஆசீர்வதிக்கப்படுவார்கள்”1என்ற அதன் பிரகடனத்தை நாங்கள் உறுதி செய்கிறோம்.
திட்டம்
இதன் நோக்கம் தேவனின் பிள்ளைகளை மேன்மைப்படுத்தவும் அவரைப் போல ஆகவும் சாத்தியமாக்க இவை அனைத்தும் ஒரு தெய்வீக திட்டத்தின் ஒரு பகுதியாகும், வேதங்களில் “சந்தோஷத்தின் மகா திட்டம்”, “மீட்பின் திட்டம்” மற்றும் “இரட்சிப்பின் திட்டம்” (ஆல்மா 42:8, 11, 5) என குறிப்பிடப்பட்டுள்ளது, பரலோகத்தில் ஒரு ஆலோசனையுடன் தொடங்கிய அந்த திட்டம் - மறுஸ்தாபிதத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆவிகளாக, நம்முடைய பரலோக பெற்றோரால் அனுபவிக்க்கப்பட்ட நித்திய ஜீவனை அடைய நாம் விரும்பினோம். அந்த நேரத்தில் மாம்ச சரீரத்தில் ஒரு அநித்திய அனுபவம் இல்லாமல் நம்மால் முடிந்தவரை நாம் முன்னேறினோம். அந்த அனுபவத்தை வழங்க, இந்த பூமியை சிருஷ்டிக்க பிதாவாகிய தேவன் திட்டமிட்டார். திட்டமிட்ட அநித்திய வாழ்க்கையில், நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான எதிர்ப்பை நாம் எதிர்கொண்டபோது, நாம் பாவத்தால் அழுக்கடைவோம். நாமும் மாம்ச மரணத்திற்கு ஆளாகுவோம். மரணம் மற்றும் பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க, நமது பரலோக பிதாவின் திட்டம் ஒரு இரட்சகரை வழங்கும். அவருடைய உயிர்த்தெழுதல் அனைவரையும் மரணத்திலிருந்து மீட்டுக்கொள்ளும், அவருடைய பாவநிவர்த்தியின் பிராயச்சித்தம் நம் வளர்ச்சியை ஊக்குவிக்க பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவருக்கும் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட தேவையான கிரயத்தை செலுத்தும். இயேசு கிறிஸ்துவின் இந்த பாவநிவர்த்தி, பிதாவின் திட்டத்தின் மையமாகும்.
பரலோக ஆலோசனைக் குழுவில், தேவனின் அனைத்து ஆவி பிள்ளைகளும், அதன் அநித்திய விளைவுகள் மற்றும் சோதனைகள், அதன் பரலோக உதவிகள் மற்றும் அதன் மகிமையான இலக்கு ஆகியவற்றை உள்ளடக்கி, பிதாவின் திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆரம்பத்திலிருந்து முடிவைக் கண்டோம். இந்த பூமியில் பிறந்த எண்ணற்ற மனிதர்கள் அனைவரும் பிதாவின் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதைத் தொடர்ந்து நடந்த பரலோக போட்டியில் அதற்காக போராடினர். அநித்தியத்தில் நாம் என்ன செய்வோம் என்பதைப்பற்றி, நம்மில் அநேகர் பிதாவுடன் உடன்படிக்கை செய்துள்ளோம். வெளிப்படுத்தப்படாத வழிகளில், ஆவி உலகில் நம்முடைய செயல்கள் அநித்தியத்திற்கான நமது சூழ்நிலைகளை செல்வாக்கடையச் செய்திருக்கின்றன.
அநித்தியமும் ஆவி உலகமும்
அவை நம் அநித்திய பயணங்களின்போதும், அதைத் தொடர்ந்து வரும் ஆவி உலகத்திலும் நம்மைப் பாதிப்பதால், பிதாவின் திட்டத்தின் சில முக்கிய கூறுகளை இப்போது நான் சுருக்கமாகக் கூறுவேன்.
அநித்திய வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அதைப் பின்பற்றக்கூடிய அநித்தியத்திற்கு பிந்தைய வளர்ச்சி ஆகியவை தேவனின் சந்ததியினர் அவர் போலாக வேண்டும் என்பதற்கே. அவருடைய பிள்ளைகள் அனைவருக்கும் இது பரலோக பிதாவின் திட்டம். இந்த மகிழ்ச்சியான இலக்கை அடைய, நித்திய சட்டத்திற்கு இயேசு கிறிஸ்துவின் பிராயச்சித்தத்தின் மூலம் நாம் சுத்திகரிக்கப்பட்ட மனிதர்களாக மாற வேண்டும், எனவே நாம் பிதா மற்றும் குமாரனின் முன்னிலையில் குடியிருக்க முடியும், மேலும் மேன்மையடைதலின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். மார்மன் புஸ்தகம் போதிக்கிறதைப்போல, “அவர்கள் அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும், தம்மிடம் வரும் ஒருவரையும் வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் மறுப்பதில்லை. அவர் புற ஜாதியானையும், நினைவுகூருகிறார். அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே” (2 நேபி 26:33); ஆல்மா 5:49ஐயும் பார்க்கவும்) என்று அவர் அழைக்கிறார்.
நாம் எப்படியாகவேண்டுமென விதிக்கப்பட்டபடி மாற நமக்கான தெய்வீகத் திட்டம், தேவனின் கட்டளைகளுக்கும் அவருடைய திட்டத்திற்கும் முரணாக செயல்பட மனிதர்களைத் தூண்டும் தீய எதிர்ப்பை நிராகரிப்பதற்கான தேர்ந்தெடுப்புகளை எடுக்க வேண்டியதிருக்கிறது. மற்றவர்களின் பாவங்களிலிருந்து அல்லது பிறப்பின் சில குறைபாடுகளிலிருந்து போன்ற மற்ற அநித்திய எதிர்ப்புகளுக்கு உட்படுத்தப்படுவோம் என்பதும் இதற்கு தேவைப்படுகிறது. சில நேரங்களில் நமக்குத் தேவையான வளர்ச்சி ஆறுதல் மற்றும் அமைதியைவிட, துன்பம் மற்றும் துயரத்தினால் சிறப்பாக அடையப்படுகிறது. அநித்தியத்தின் எதிரான விளைவுகள் அனைத்திலிருந்தும் தெய்வீக தலையீடு நம்மை விடுவித்தால், இந்த அநித்திய எதிர்ப்பு எதுவும் அதன் நித்திய நோக்கத்தை அடையமுடியாது.
இந்த திட்டம் நித்தியத்தில் நமது இலக்கை, அநித்தியத்தில் நமது பயணத்தின் நோக்கம் மற்றும் நிபந்தனைகள், மற்றும் நாம் பெறும் பரலோக உதவியை வெளிப்படுத்துகிறது. தேவனின் கட்டளைகள் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பதத்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. உணர்த்துதலான தலைவர்களின் போதனைகள் நமது பாதையை வழிநடத்தி நமது நித்திய பயணத்தை முன்னேற்றும் உறுதிப்பாட்டைக் கொடுக்கிறது.
அநித்தியத்தில் நமது பயணத்திற்கு உதவ நான்கு மகத்தான உறுதிப்பாடுகளை தேவனின் திட்டம் நமக்குக் கொடுக்கிறது. திட்டத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக இவை அனைத்தும் நமக்குக் கொடுக்கப்படுகிறது. நாம் மனந்திரும்புகிற பாவங்களுக்காக அவருடைய பாடுகளின் மூலமாக, அந்தப் பாவங்களுக்காக நாம் கழுவப்படலாமென்கிறதை முதலாவது உறுதியளிக்கிறது. பின்னர், இரக்கமுள்ள இறுதி நியாயந்தீர்ப்பவர் “அவற்றை இனிமேலும் நினைவுகூரமாட்டார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42).
இரண்டாவது, நமது இரட்சகரின் பாவநிவர்த்தியின் பகுதியாக பிற அனைத்து அநித்திய குறைபாடுகளையும் அவர் அவர்மீது எடுத்துக்கொண்டார். யுத்தம், கொள்ளைநோய் போன்ற, தனிப்பட்ட மற்றும் பொதுவான அநித்தியத்தின் தவிர்க்கமுடியாத பாரங்களைச் சுமக்க, தெய்வீக உதவியையும் பெலனையும் பெற இது நம்மை அனுமதிக்கிறது. பாவநிவர்த்தியின் இந்த அத்தியாவசியமான வல்லமையின் நமது தெளிவான விளக்கத்தை மார்மன் புஸ்தகம் வழங்குகிறது. தம் ஜனங்களுடைய வேதனைகளையும், நோய்களையும் [மற்றும் பெலவீனங்களையும்] இரட்சகர் தம் மேல் ஏற்றுக்கொண்டார். … தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்ச தன்மைக்கேற்ப, ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்ச தன்மைக்கேற்ப தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்” (ஆல்மா 7:11–12).
மூன்றாவது இரட்சகர் அவருடைய எல்லையற்ற பாவவிவர்த்தியின் மூலம், மரணத்தின் இறுதித்தன்மையைத் திரும்பப் பெறுகிறது, மேலும் நாம் அனைவரும் உயிர்த்தெழுவோம் என்ற மகிழ்ச்சியான உறுதிப்பாட்டை நமக்குத் தருகிறது. “இந்த மறுபிணைப்பு முதியோருக்கும் வாலிபருக்கும், அடிமைகளுக்கும், சுயாதீனருக்கும், புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும், துன்மார்க்கருக்கும், நீதிமான்களுக்குமாக யாவருக்கும் ஏற்படும்; அவர்களின் சிரசிலிருந்து ஒரு முடிகூட தொலைந்துபோகாது. இப்பொழுது இருப்பதைப்போலவே பூரண அமைப்பாகிய சரீரத்திலே அனைத்தும் திரும்பியும் இணைக்கப்படும்” (ஆல்மா 11:44) என மார்மன் புஸ்தகம் போதிக்கிறது.
இந்த ஈஸ்டர் பருவத்தில் உயிர்த்தெழுதலின் யதார்த்தத்தை நாம் கொண்டாடுகிறோம். இது நம் ஒவ்வொருவராலும் நாம் நேசிப்பவர்களாலும் எதிர்கொள்ளும் அநித்திய சவால்களை சகித்துக்கொள்வதற்கான முன்னோக்கையும் பலத்தையும் நமக்கு அளிக்கிறது, அதாவது நம் அநித்திய வாழ்க்கையின் போது பிறப்பு அல்லது அனுபவத்தில் நாம் பெறும் உடல், மன, அல்லது உணர்ச்சி குறைபாடுகள் போன்றவை. உயிர்த்தெழுதலினால், இந்த அநித்திய குறைபாடுகள் தற்காலிகமானது மட்டுமே என்பதை நாம் அறிகிறோம்.
கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என நமது குடும்பத்துடனிருக்கிற வாய்ப்பை உயிர்த்தெழுதல் உள்ளடிக்கியிருக்கிறதென்பதை மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷம் நமக்கு உறுதியளிக்கிறது. அநித்தியத்தில் நமது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற நமக்கு இது ஒரு ஆற்றல்மிக்க ஊக்குவித்தல். அடுத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியான மறு இணைப்புகள் மற்றும் ஒன்றுசேருதல்களை எதிர்பார்த்து இந்த வாழ்க்கையில் அன்பில் ஒன்றாக வாழ இது நமக்கு உதவுகிறது.
நான்காவதும், இறுதியானதும், அநித்தியத்தின் முடிவுடன் நமது முன்னேற்றம் முடிவடையத் தேவையில்லை என நவீன வெளிப்படுத்தல் நமக்குப் போதிக்கிறது. இந்த முக்கியமான உறுதிப்பாட்டைப்பற்றி சிறிதே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வாழ்க்கையே தேவனை சந்திக்க ஆயத்தப்படும் நேரம் எனவும் நமது மனந்திரும்புதலை நாம் தள்ளிப்போடக்கூடாது எனவும் நமக்குக் கூறப்பட்டிருக்கிறது (ஆல்மா 34:32–33 பார்க்கவும்). இருந்தும், “துன்மார்க்கருக்கும், சத்தியத்தை நிராகரித்த கீழ்ப்படியாதவர்களுக்கும்கூட” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:29), இறுதி நியாயத்தீர்ப்புக்கு முன்கூட்டி மனந்திரும்புதலுக்கு திறன்கொண்டவர்கள் என போதிக்கப்பட்டவர்களுக்கும் ஆவி உலகத்தில் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது என நாம் போதிக்கப்பட்டோம்.(வசனங்கள் 31–34, 57–59 பார்க்கவும்)
நமது பரலோக பிதாவின் திட்டத்தின் சில பிற அடிப்படைகள் இங்கே:
கற்புடமை, திருமணம் மற்றும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரியங்களின் ஒரு தனித்துவமான முன்னோக்கை இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷம் நமக்குக் கொடுக்கிறது. தேவனின் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், அநித்திய பிறப்புக்கு தெய்வீகமாக நியமிக்கப்பட்ட அமைப்பை வழங்குவதற்கும், குடும்ப அங்கத்தினர்களை நித்திய ஜீவனுக்கு ஆயத்தப்படுத்துவதற்கும் திருமணம் அவசியம் என்று இது போதிக்கிறது. கர்த்தர் சொன்னார், “அதன் சிருஷ்டிப்பின் முடிவிலே பூமி அனைத்துக்கும், பதிலளிக்கும்படியாக, திருமணம் மனுஷனுக்கு தேவனால் நியமனம் செய்யப்பட்டுள்ளது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:15). இதில், அவருடைய திட்டம், நிச்சயமாக, சட்டம் மற்றும் வழக்கத்தில் சில வலுவான உலக சக்திகளுக்கு எதிராக இயங்குகிறது.
அநித்திய ஜீவனை உருவாக்கும் வல்லமை தேவன் தனது பிள்ளைகளுக்கு அளித்த மிக மேன்மையான வல்லமை. முதல் கட்டளையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும், அதன் பயன்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது, ஆனால் அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்க மற்றொரு முக்கியமான கட்டளை வழங்கப்பட்டது. திருமணத்தின் பிணைப்புகளுக்கு வெளியே, இனப்பெருக்க வல்லமையின் அனைத்து பயன்பாடுகளும் ஒன்று அல்லது மற்றொரு அளவிற்கு, ஆண்கள் மற்றும் பெண்களின் மிகவும் தெய்வீக பண்புகளை ஒரு பாவமான இழிவுபடுத்துதல் மற்றும் வக்கிரமாகும். தேவனின் திட்டத்தை நிறைவேற்றுவதில் நமது இனப்பெருக்க வல்லமைகளின் நோக்கத்தினால், இந்த கற்புடமை பிரமாணத்தில் மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தின் வலியுறுத்தல் வைக்கப்படுகிறது
அடுத்து என்ன?
மறுஸ்தாபிதத்தை தொடங்கிவைத்த முதல் தரிசனத்தின் 200வது ஆண்டுவிழாவின்போது, கர்த்தருடைய திட்டத்தை நாம் அறிவோம் மற்றும் அவருடைய மறுஸ்தாபித சபையின் மூலமாக இரண்டு நூற்றாண்டுகளாக அதன் ஆசீர்வாதங்களால் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். இந்த 2020வது ஆண்டில், கடந்த கால நிகழ்வுகளுக்கு 20/20 பார்வை என்று பிரசித்தமாக அழைக்கப்படுவது நமக்கிருக்கிறது.
ஆயினும், வருங்காலத்தைப் பார்க்கும்போது, நமது பார்வை நிச்சயமாக மிகக் குறைவானது. மறுஸ்தாபிக்கப்பட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஆவி உலகம் இப்போது அங்கு நிகழும் பிரசங்கத்தை நிறைவேற்ற பல அனுபவமுள்ள பணியாளர்களை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம். மனந்திரும்பி, மரணத்தின் திரையின் இருபுறமும் கர்த்தருடைய சுவிசேஷத்தை தழுவுபவர்களுக்கு நித்தியத்தின் நியமங்களை நிறைவேற்ற இன்னும் பல ஆலயங்கள் இப்போது உள்ளன என்பதையும் நாம் அறிவோம். இவை அனைத்தும் நமது பரலோக பிதாவின் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துகின்றன. தேவனின் அன்பு மிகவும் பெரியது, வேண்டுமென்றே கேட்டின் குமாரர்களாக மாறும் சிலரைத் தவிர, அவர் தனது பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு மகிமையின் இலக்கை வழங்கியுள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:43 பார்க்கவும்).
இரட்சகர் திரும்பி வருவார் என்பதையும், தேவனின் திட்டத்தின் அநித்திய பகுதியை மூடுவதற்கு சமாதானமான ஆட்சியின் ஒரு ஆயிரவருஷம் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். அவன் அல்லது அவளின் உயிர்த்தெழுதலை எப்போதும் பின்பற்றி நீதிமான்கள் மற்றும் அநியாயக்காரர்களான ஒவ்வொரு நபரின் இறுதித் தீர்ப்பான, வெவ்வேறு உயிர்த்தெழுதல்கள் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
நமது செயல்கள், நமது இருதயங்களின் வாஞ்சை, நாம் மாறிய வகையின் நபரின்படி நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். இந்தத் தீர்ப்பு தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் மகிமைமிக்க ராஜ்யத்திற்குச் செல்லச் செய்யும், அதற்காக அவர்களின் கீழ்ப்படிதல் அவர்களுக்குத் தகுதி அளித்துள்ளது, மேலும் அவர்கள் வசதியாக இருப்பார்கள். இதன் அனைத்திற்குமான நியாயாதிபதி நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, (யோவான் 5:22 பார்க்கவும்; 2 நேபி9:41 பார்க்கவும்). மனந்திரும்பாத அல்லது மாறாத மற்றும் மனந்திரும்பிய அல்லது நீதியுள்ள நம்முடைய எல்லா செயல்களையும் ஆசைகளையும்பற்றிய முழுமையான அறிவை அவருடைய சர்வ வல்லமை அவருக்கு அளிக்கிறது. ஆகவே, அவருடைய நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் “அவருடைய தீர்ப்பு நியாயமுள்ளது” (மோசியா 16:1) என நாம் அனைவரும் மனஸ்தாபமடைவோம்.
முடிவுரையாக, அநேக கடிதங்களிலும், பெயர் நீக்குதல் அல்லது மதமாறுபாட்டிற்குப் பின்னர் சபைக்குத் திரும்புவதற்கான பல கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலமும் எனக்கு வந்த நம்பிக்கையை நான் பகிர்ந்துகொள்கிறேன். மறுஸ்தாபித சபையின் கோட்பாடு மற்றும் ஈர்க்கப்பட்ட கொள்கைகளைப்பற்றிய பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த இரட்சிப்பின் திட்டத்தை நமது அங்கத்தினர்கள் அநேகர் புரிந்துகொள்ளவில்லை. தேவனின் திட்டத்தை அறிந்தவர்களாகிய மற்றும் பங்கேற்க உடன்படிக்கை செய்தவர்களாகிய நாம், இந்த சத்தியங்களை போதிப்பதற்கும், மேலும் அநித்தியத்தில் மற்றவர்களுக்காகவும், நம்முடைய சொந்த சூழ்நிலைகளிலும் அவற்றை மேலும் செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவும் நமக்கு தெளிவான பொறுப்பு உள்ளது, இது அனைத்தையும் சாத்தியமாக்குகிற நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவைக் குறித்து நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.