ஓசன்னா சத்தமிடுதல்
இப்போது எனக்கன்பான சகோதர சகோதரிகளே, பிதா மற்றும் குமாரன் தோன்றிய ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனத்தை நாம் நினைவுகூரும்போது, ஓசன்னா சத்தமிடுதலில் பங்கேற்பதால் ஒன்றுகூடி களிகூருதல் பொருத்தமாயிருக்கும் என நாங்கள் உணர்ந்தோம்.
மார்ச் 27, 1836ல் கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையில், இந்த ஊழியக்காலத்தில் இந்த பரிசுத்த சத்தமிடுதல் முதலாவதாகக் கொடுக்கப்பட்டது. இப்போது, ஒவ்வொரு ஆலய பிரதிஷ்டையின்போதும் இது கொடுக்கப்படுகிறது. எருசலேமுக்குள் அவரது வெற்றிச்சிறந்த பிரவேசத்தை இரட்சகர் செய்தபோது, திரளான ஜனங்களின் எதிர்வினையை அடையாளப்படுத்துகிற இது ஒரு பரிசுத்த புகழாரம். அந்த நாளில் பரிசுத்த தோப்பில் இளம் ஜோசப் அனுபவித்ததையும்கூட இது மறுஉறுதிப்படுத்துகிறது, அதாவது, நாம் ஆராதிக்கிற, துதிக்கிற பிதாவும் குமாரனும் மகிமையான ஜீவன்கள்.
ஓசன்னா சத்தம் எவ்வாறு கொடுக்கப்படுகிறதென்பதை இப்போது நான் செய்துகாட்டுவேன். நான் செய்யும்போது, இந்த புனிதமான அனுசரிப்பை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த ஊடகங்களில் உள்ள நமது சகாக்களை நான் அழைக்கிறேன்.
பங்கேற்கிற ஒவ்வொருவரும் ஒரு சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதன் மூலையில் பிடித்து, தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா என மூன்று முறை சொல்லி, அதைத் தொடர்ந்து ஆமென், ஆமென், ஆமென் எனச் சொல்லி கைக்குட்டையை அசைக்கிறார்கள். ஆனால் வெள்ளை கைக்குட்டை ஒன்று உங்களிடம் இல்லையானால், நீங்கள் கையை மட்டும் அசைக்கலாம்.
சகோதர சகோதரிகளே, ஓசன்னா சத்தமிடுவதில் எழுந்து நின்று பங்கேற்க இப்போது நான் உங்களை அழைக்கிறேன், அதைத் தொடர்ந்து “Hosanna Anthem” மற்றும் “The Spirit of God”1 பாடல்கள் பாடப்படும்.
நடத்துனரிடமிருந்து ஒரு சமிக்ஞையின் பேரில் “The Spirit of God” என்ற பாடலைப் பாடுவதில் தயவுசெய்து சேரவும்.
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா.
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா.
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா, ஓசன்னா, ஓசன்னா.
ஆமென், ஆமென், ஆமென்.