உதவிக்காக பரலோகங்களைத் திறத்தல்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்டுவோம்!
இது என்ன ஒரு தனித்துவமான அற்புதமான கூட்டம்! அன்பான லாடி, என்ஸோ உங்களுக்கு நன்றி. சபையின் மகத்துவமான இளம் பெண்களையும், இளம் ஆண்களையும் மிக நன்றாக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள்.
என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, அவருடைய பூலோக ஊழியத்தின் ஆரம்பத்தில் நமது இரட்சகரும், இயேசு கிறிஸ்துவுமானவர் ஸ்தாபித்த சபையான, சபையின் மறுஸ்தாபிதத்தைப்பற்றி இன்று நாம் அதிகமானவற்றைக் கேட்டோம். பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் இளம் ஜோசப் ஸ்மித்துக்கு தோன்றியபோது, அந்த மறுஸ்தாபிதம் இந்த வசந்தத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமானது.
இந்த தரிசனத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் பிற ஐந்து பேரும் கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஸ்தாபன அங்கத்தினர்களாக அழைக்கப்பட்டார்கள்.
ஏப்ரல் 6, 1830ல் கூடிய அந்த சிறிய குழுவிலிருந்து 16 மில்லியனுக்கும் அதிகமான அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு உலகளாவிய ஸ்தாபனம் உருவானது. மனித துன்பங்களைத் தணிக்கவும், மனுக்குலத்திற்கு முன்னேற்றத்தை வழங்கவும் இந்த சபை உலகம் முழுவதிலும் நிறைவேற்றும் நன்மை பரவலாக அறியப்படுகிறது. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகச்சிறந்ததான தேவனுடனும், அவர்களின் அன்புக்குரியவர்களுடனும் நித்திய ஜீவனை அடைவதற்கு தகுதியாகுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் உதவுவதே அதன் முக்கிய நோக்கமாகும்.
1820ல் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வை நாம் நினைவுகூரும் போது, ஜோசப் ஸ்மித்தை தேவனின் தீர்க்கதரிசி என்று நாம் மதிக்கும்போது, இது ஜோசப் ஸ்மித்தின் சபை அல்ல, மார்மனின் சபையும் அல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியமானது. இது இயேசு கிறிஸ்துவின் சபை. அவருடைய சபை எவ்வாறு அழைக்கப்படவேண்டுமென்பதை இரட்சகரே ஆணையிட்டார், “ஏனெனில் கடைசி நாட்களில் என்னுடைய சபை இப்படியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படும்.”
சபையின் பெயரை நாம் குறிப்பிடும் விதத்தில் தேவையான விதமான திருத்தத்தைப்பற்றி நான் முன்பே பேசியுள்ளேன். அந்த நேரத்திலிருந்து இந்த திருத்தத்தை நிறைவேற்ற அதிகமானவை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளை வழிநடத்த இவ்வளவு அதிகமாக செய்தவர்களான, அப்படியே, இன்று மாலை நான் அறிவிக்கப்போகும் அவைகளுக்கு சம்பந்தப்பட்ட மற்றொரு ஆரம்ப முயற்சிகளைச் செய்த, தலைவர் எம். ரசல் பாலர்டுக்கும் பன்னிரு அப்போஸ்தலரின் முழு குழுமத்திற்கும் நான் மிகுந்த நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
சபைத் தலைவர்கள், இலாகாக்கள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மில்லியன் கணக்கான அங்கத்தினர்கள் மற்றும் பிறர் இப்போது சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துகின்றனர். சபையின் அதிகாரப்பூர்வ பாணி வழிகாட்டி சரிசெய்யப்பட்டது. சபையின் முதன்மை வலைத்தளம் இப்போது ChurchofJesusChrist.org. மின்னஞ்சல், டொமைன் பெயர்கள் மற்றும் சமூக ஊடக சேனல்களுக்கான முகவரிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நமது அன்பான தேர்ந்திசைக் குழு இப்போது, ஆலய சதுக்கத்திலுள்ள டாபர்னாக்கல் தேர்ந்திசைக் குழு.
இந்த அசாதாரண முயற்சிகளுக்கு நாங்கள் சென்றுள்ளோம், ஏனென்றால் கர்த்தருடைய பெயரை அவருடைய சபையின் பெயரிலிருந்து நாம் கவனக்குறைவாக அகற்றும்போது, நம் வழிபாட்டிலும், நம் வாழ்க்கையிலும் மையக்கவனத்திலிருந்து அவரை நாம் அகற்றுகிறோம். ஞானஸ்நானத்தில் இரட்சகரின் பெயரை நம்மீது எடுத்துக்கொள்ளும்போது, இயேசுவே கிறிஸ்து என்பதை நம்முடைய வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் செயல்களால், சாட்சிகூற ஒப்புக்கொடுக்கிறோம்.
“கர்த்தருடைய சபையின் சரியான பெயரை மீட்டெடுக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்தால்”, “ நாம் ஒருபோதும் பார்த்திராத இது போன்ற அவருடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள்மீது, அவர் ஊற்றுவார்“ என முன்னதாக நான் வாக்களித்திருக்கிறேன். அந்த வாக்களிப்பை இன்று நான் புதுப்பிக்கிறேன்.
அவரை நினைவில் வைத்துக் கொள்ளவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை கர்த்தருடைய சபை என அடையாளங்காணவும், அவருடைய சபையில் இயேசு கிறிஸ்துவின் முக்கிய இடத்தைக் குறிக்கும் ஒரு குறியீட்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஒரு மூலைக்கல்லுக்குள் அடங்கியிருக்கிற இந்த சின்னம் கிறிஸ்துவின் நாமத்தை அடக்கியிருக்கிறது. இயேசு கிறிஸ்து தலையான மூலைக்கல்லாயிருக்கிறார்.
சின்னத்தின் மையத்தில் தோர்வால்ட்சனின் கிறிஸ்டஸ் பளிங்கு சிலையின் பிரதிநிதித்துவம் உள்ளது. இது உயிர்த்தெழுந்த, ஜீவிக்கிற கர்த்தர், அவரிடத்தில் வரும் அனைவரையும் அரவணைக்க கரங்களை நீட்டுவதை சித்தரிக்கிறது.
அடையாளமாக, இயேசு கிறிஸ்து ஒரு வளைவின் கீழ் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய சிலுவையிலறைதலைத் தொடர்ந்து, மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த இரட்சகர் வெளிவருவதை இந்த வளைவு நமக்கு நினைவூட்டுகிறது.
ஜீவிக்கிற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடன் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை நாம் நீண்ட காலமாக அடையாளம் கண்டதால் இந்த சின்னத்தை பலர் பரிச்சயமானதாக உணர வேண்டும்.
அதிகாரப்பூர்வ பதிப்பு, செய்தி மற்றும் சபையின் நிகழ்வுகளுக்கான காட்சி அடையாளங்காட்டியாக இச்சின்னம் இப்போது பயன்படுத்தப்படும். இது இரட்சகரின் சபை என்பதையும், அவருடைய சபையின் அங்கத்தினர்களாக நாம் செய்கிற அனைத்தும் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் மையமாகக் கொண்டுள்ளது என்று அனைவருக்கும் இது நினைவூட்டும்.
இப்போது, எனக்கன்பான சகோதர சகோதரிகளே, மூப்பர் காங் மிக சரளமாக போதித்ததைப்போல, நாளை குருத்தோலை ஞாயிறு. பின்னர், ஈஸ்டருடன் நிறைவுபெறுகிற விசேஷித்த வாரத்துக்குள் நாம் பிரவேசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, கோவிட்-19 தொற்றுநோய், உலகத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிற ஒரு நாளில் வாழ்வதால், நாம் கிறிஸ்துவைப்பற்றி பேசவோ அல்லது கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிப்பதோ அல்லது கிறிஸ்துவைக் குறிக்கும் ஒரு சின்னத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதையோ செய்யாமலிருப்போமாக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நம்முடைய விசுவாசத்தை செயலில் காட்டுவோம்!
உங்களுக்கு தெரிந்ததைப்போல, ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள் சபை அங்கத்தினர்கள் உபவாச பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறார்கள்.
உபவாசத்தின் கோட்பாடு பழமையானது. ஆரம்ப காலங்களிலிருந்து வேதாகமத்தின் முக்கிய நாயகர்களால் இது செய்யப்பட்டது. மோசே, தாவீது, எஸ்றா, நெகேமியா, எஸ்தர், ஏசாயா, தானியேல், யோவேல், மற்றும் அநேகர் உபவாசித்து, உபவாசத்தைப்பற்றிப் பிரசங்கித்தார்கள். ஏசாயாவின் எழுத்துக்கள் மூலமாக கர்த்தர் சொன்னார், “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்?”
“உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடி இருக்க” கொரிந்துவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்தினான். சில காரியங்கள் “ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி போகாது” என இரட்சகரே அறிவித்தார்.
“கோவிட் -19 பரவுவவைத் தடுக்க, மருத்துவ வல்லுனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முழுநேரமும் பணியாற்றும் அனைவர் மீதும், ஒரு மருத்துவராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவும், எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு” என ஒரு சமூக ஊடக காணொலியில் சமீபத்தில் நான் சொன்னேன்.
தேவன், “சகல வல்லமையையும், சகல ஞானத்தையும், சகல அறிவையும் பெற்றிருக்கிறார். அவர் சகலத்தையும் அறிகிறார். மனந்திரும்பி, தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்புக்கேதுவாய் அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்” என இப்போது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸதலனாகவும் நான் அறிவேன்.
ஆகவே, ஆழ்ந்த துயர காலங்களில், நோய் தொற்றுநோய் விகிதத்தை எட்டும்போது, நாம் செய்ய வேண்டிய மிக இயல்பான விஷயம் என்னவென்றால், நம்முடைய பரலோக பிதாவையும் அவருடைய குமாரனாகிய தேர்ந்த குணமாக்குபவரை பூமியிலுள்ள, மக்களை ஆசீர்வதிப்பதற்காக அவர்களின் அற்புதமான வல்லமையைக் காட்ட அழைக்க வேண்டும்.
என்னுடைய காணொலி செய்தியில், மார்ச், 29, 2020 ஞாயிற்றுக்கிழமையில் உபவாசத்தில் சேர நான் அனைவரையும் அழைத்தேன். உங்களில் அநேகர் அந்த காணொலியைக் கண்டு, உபவாசத்தில் சேர்ந்திருப்பீர்கள். சிலர் சேர்ந்திருக்க மாட்டீர்கள். இப்போது இன்னமும் நமக்கு பரலோகத்திலிருந்து உதவி தேவை.
ஆகவே இன்றிரவு, என்னுடைய சகோதர சகோதரிகளே, அதிக உபவாசத்திலும், ஜெபத்திலும் தங்களைக் கொடுத்த மோசியாவின் குமாரர்களின் ஆவியிலும், நமது ஏப்ரல் 2020 பொது மாநாட்டின் ஒரு பகுதியாகவும் மற்றொரு உலகளாவிய உபவாசத்திற்கு நான் உங்களை அழைக்கிறேன். ஆரோக்கியம் அனுமதிக்கிற அனைவருமாக, நாம் உபவாசமிருந்து, ஜெபித்து, நமது விசுவாசத்தில் மீண்டும் ஒன்றுபடுவோம். இந்த உலகளாவிய தொற்றுநோயிலிருந்து நிவாரணத்திற்காக ஜெபத்துடன் நாம் வேண்டுவோமாக.
தற்போதைய தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படவும், பராமரிப்பாளர்கள் பாதுகாக்கப்படவும், பொருளாதாரம் பலப்படுத்தப்படவும் மற்றும் வாழ்க்கை இயல்பாக்கப்படவும், ஏப்ரல் 10, பெரிய வெள்ளிக்கிழமையில் நமது மதத்தைச் சேராதவர்களையும் சேர்த்து உபவாசிக்கவும் ஜெபிக்கவும் அனைவரையும் நான் அழைக்கிறேன்.
நாம் எவ்வாறு உபவாசிக்கிறோம்? 24 மணி நேரத்தில் இரண்டுநேர உணவுகளை உண்ணாதிருப்பது வழக்கத்திலுள்ளது. ஆனால், உங்களுக்காக இரட்சகர் செய்த மேலான தியாகத்தை நீங்கள் நினைவுகூரும்போது, உங்களுக்கு, தியாகம் என்பது என்னவாயிருக்கும் என நீங்கள் தீர்மானிக்கவேண்டும். உலகம் முழுவதும் குணமடைய வேண்டிக்கொள்வதில் ஒன்றுபடுவோம்.
நமது பரலோக பிதாவும் அவருடைய குமாரனும் நமக்கு செவிமடுக்க, பெரிய வெள்ளிக் கிழமை மிகச் சரியான நாளாயிருக்கும்.
அன்பான சகோதர, சகோதரிகளே, நாங்கள் ஈடுபட்டுள்ள வேலையின் தெய்வீகத்தன்மையைப்பற்றிய எனது சாட்சியத்துடன், உங்களுக்கான எனது ஆழ்ந்த அன்பை நான் வெளிப்படுத்துகிறேன். இதுதான் , பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை. அவர் அதன் தலைமையில் நின்று நாம் செய்கிற அனைத்தையும் வழிநடத்துகிறார். தம்முடைய ஜனங்களின் வேண்டுதல்களுக்கு அவர் பதிலளிப்பார் என நான் அறிவேன். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.