பொது மாநாடு
ஜீவிக்கிற கிறிஸ்துவைக் குறித்து ஒரு ஜீவிக்கிற சாட்சி
ஏப்ரல் 2020 பொது மாநாடு


10:42

ஜீவிக்கிற கிறிஸ்துவைக் குறித்து ஒரு ஜீவிக்கிற சாட்சி

மனுக்குலத்தின் இரட்சிப்பிலும் மேன்மையடைதலிலும் இயேசு கிறிஸ்துவின் அத்தியாவசிய பங்கைப்பற்றி, உண்மையான அறிவை மறுஸ்தாபிதப்படுத்துவதே மார்மன் புஸ்தகத்தின் மையச் செய்தி.

2017ல் ஒரு வெப்பமான வசந்த நாளில், பாரிஸ் பிரான்ஸ் ஆலயத்தின் திறந்த வீடு நிகழ்ச்சி நன்றாக நடந்துகொண்டிருக்கும்போது, உலா வழிகாட்டிகளில் ஒருவரை ஒரு துக்கமான முகத்துடன் ஒருவர் அணுகினார். அவர் ஆலயத்திற்கு அருகில் வசிப்பதாகவும், அதன் கட்டுமானத்தை தீவிரமாக எதிர்ப்பவராக இருந்தார் என்றும் ஒப்புக்கொண்டார். ஒருநாள் அவர் தன்னுடைய அடுக்குமாடி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தபோது, வானத்திலிருந்து, இயேசுவின் ஒரு சிலையை ஆலய தரைமீது ஒரு பெரிய கிரேன் இயந்திரம் மெதுவாக இறக்கிக்கொண்டிருந்ததை அவர் கவனித்ததாக அவர் சொன்னார். இந்த அனுபவம் நமது சபையைப்பற்றிய அவருடைய உணர்வுகளை முற்றிலுமாக மாற்றியதாக அந்த மனிதர் அறிவித்தார். நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்பதை அவர் உணர்ந்து, முன்பு அவர் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தீங்குகளுக்காக நமது மன்னிப்புக்காக கெஞ்சினார்.

பாரிஸ், பிரான்ஸ் ஆலயத்தில் சிலை வைக்கப்படுதல்

பாரிஸ் ஆலயத்தையும் சபையின் பிற சொத்துக்களையும் அலங்கரிக்கிற கிறிஸ்தஸ் சிலை இரட்சகர் மீது நமது அன்பை சாட்சியளிக்கிறது. முதல் தரிசனத்தின் அதே ஆண்டான, 1820ல் அசல் பளிங்கு சிலையை செதுக்கிய டானிஷ் சிற்பியான பெர்டல் தோர்வல்ட்சென்னின் வேலைப்பாடு ஆகும். சிலுவையில் பாடனுபவித்த கிறிஸ்துவை பெரும்பான்மையாக சித்தரிக்கிற இந்த சிலை அந்தக் காலத்தின் அதிக கலை விளக்கங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக நிற்கிறது. மரணத்தை வெற்றி சிறந்த, திறந்த கைகளுடன் அவரிடம் வர அனைவரையும் அழைக்கிற ஜீவிக்கிற கிறிஸ்துவை தோர்வல்ட்சென்னின் வேலைப்பாடு முன்வைக்கிறது. அவருடைய கைகளிலும் கால்களிலுமுள்ள ஆணிகளின் தழும்புகள் மற்றும் அவருடைய இடுப்பிலுள்ள காயமும் மட்டுமே முழுமனுக்குலத்தையும் இரட்சிக்க அவர் சகித்த விவரிக்கமுடியாத வியாகுலத்தை சாட்சியளிக்கிறது.

கிறிஸ்டஸில் சித்தரிக்கப்பட்டதைப்போல இரட்சகரின் கை

மார்மன் புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற விவரிப்பான, அமெரிக்க கண்டத்தில் இரட்சகரின் தோற்றத்தை இது நமக்கு நினைவுபடுத்துவதால், ஒருவேளை, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக இந்த சிலையை நாம் நேசிப்பதன் ஒரு காரணமாக இருக்கலாம்:

அமெரிக்காவுக்கு இயேசு கிறிஸ்து வருகை புரிதல்

“இதோ, வானத்திலிருந்து ஒரு மனுஷன் இறங்குவதைக் கண்டார்கள்; அவர் ஒரு வெண்ணிற அங்கியை அணிந்திருந்தார். அவர் கீழே வந்து அவர்கள் மத்தியில் நின்றார். …

“அந்தப்படியே, அவர் தம்முடைய கரத்தை நீட்டி ஜனங்களிடத்தில் பேசிச் சொன்னதாவது:

“இதோ, இயேசு கிறிஸ்து நானே, . .

“… என் பிதா எனக்குக் கொடுத்த அந்த கசப்பான பாத்திரத்திலிருந்து பானம் பண்ணியிருக்கிறேன், உலகினுடைய பாவங்களை என்மேல் எடுத்துக்கொண்டதினிமித்தம் பிதாவை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.”1

பின்னர், எழுந்துவந்து தங்களுடைய கைகளை அவருடைய விலாவினுள் போட்டு, அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளை உணரும்படியாக அவர் ஒவ்வொரு மனுஷனையும் மனுஷியையும் பிள்ளையையும் அழைத்தார், இதன்மூலம் உண்மையிலேயே நீண்ட காலமாய் எதிர்பார்த்திருந்த மேசியா அவரே என ஒரு தனிப்பட்ட சாட்சியை பெற்றுக்கொண்டார்கள்.2

இந்த உன்னதமான காட்சி மார்மன் புஸ்தகத்தின் உச்சகட்டம். அவரண்டை வரவும், அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களைப் பெறவும் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் அழைக்க, அவருடைய “இரக்கத்தின் கரங்கள்” 3 மென்மையாக நீட்டப்பட்டிருக்கிற இரட்சகரின் இந்த உருவத்தில் சுவிசேஷத்தின் “நற்செய்தி” முழுவதும் அடங்கியிருக்கிறது.

மனுக்குலத்தின் இரட்சிப்பிலும் மேன்மையடைதலிலும் இயேசு கிறிஸ்துவின் அத்தியாவசிய பாத்திரத்தைப்பற்றி, உண்மையான அறிவை மறுஸ்தாபிதம் செய்வதே மார்மன் புஸ்தகத்தின் மையச் செய்தி. முன்னுரைப் பக்கத்திலிருந்து கடைசி அதிகாரத்தின் கடைசி வார்த்தைகள்வரை இந்த கருத்து எதிரொலிக்கிறது. கெத்சமனேயிலும் கொல்கதாவிலும் கிறிஸ்து செய்தவற்றின் ஆழ்ந்த அர்த்தம், நூற்றாண்டுகளாக மதமாறுபாடு மற்றும் ஆவிக்குரிய குழப்பத்தால் இழக்கப்பட்டது அல்லது கெட்டுப் போனது. 1 நேபியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, இந்த அற்புதமான வாக்குறுதியைக் கண்டுபிடித்தபோது ஜோசப் ஸ்மித் எவ்வளவு உற்சாகமாக உணர்ந்திருக்க வேண்டும்: “இந்தக் கடைசி பதிவேடுகள் [மார்மன் புஸ்தகம்], …முந்தினவைகளின் [வேதாகமம்] சத்தியத்தை நிலைநிறுத்தி, அவைகளிலிருந்து எடுத்துப் போடப்பட்ட, தெளிவான விலையேறப்பெற்ற காரியங்களைத் தெரியப்படுத்தும். எல்லா இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும், தேவ ஆட்டுக்குட்டியானவர் நித்திய பிதாவின் குமாரனென்றும், உலகத்தின் இரட்சகர் என்றும், எல்லா மனுஷரும் அவரிடம் வரவேண்டும், இல்லாவிடில், இரட்சிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரியப்படுத்தும்.”4

இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றிய தெளிவான மற்றும் அருமையான சத்தியங்கள் மார்மன் புஸ்தகம் முழுவதிலும் எதிரொலிக்கிறது. இந்த சத்தியங்களில் பலவற்றை நான் பட்டியலிடும்போது, அவைகள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றியது அல்லது மாற்றமுடியுமென சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன்.

  1. பூமியில் வாழ்ந்தவர்கள், தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், வாழப்போகிறவர்கள்அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி ஒரு இலவசமான பரிசாக வழங்கப்படுகிறது.5

  2. நமது பாவங்களின் பாரங்களை சுமப்பதற்கும் கூடுலாக, மனிதனின் அநித்திய நிலைமையின் உள்ளார்ந்த நமது துக்கங்களையும், குறைபாடுகளையும், பாடுகளையும், சுகவீனங்களையும், அனைத்து உபத்திரவங்களையும் கிறிஸ்து தன்மீது எடுத்துக்கொண்டார். நமக்காக அவர் பாடுபடாத எந்த வியாகுலமும், வேதனையும், துக்கமுமில்லை.6

  3. சரீர மரணம் உள்ளிட்ட ஆதாமின் வீழ்ச்சியின் எதிர்மறையான விளைவுகளை மேற்கொள்ள, இரட்சகரின் பாவநிவாரண பலி நம்மை அனுமதிக்கிறது. அவர்களுடைய நீதி பொருட்டின்றி, கிறிஸ்துவினாலேயே தேவ பிள்ளைகள் அனைவரும் இந்த பூமியில் பிறந்தார்கள், உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலமாக அவர்களுடைய ஆவிகளும் சரீரங்களும் மீண்டும் இணைந்து7 மற்றும் “{தங்களுடைய} கிரியைகளுக்குத்தக்கதாக நியாயம் விசாரிக்கப்பட”8 அவரிடத்திற்கு திரும்புகிற அனுபவத்தைப் பெறுவார்கள்.

  4. மாறாக, இரட்சகரின் பாவநிவர்த்தியின் முழு ஆசீர்வாதங்களைப் பெறுவது “கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி”10 வாழுவதில் நமது நேர்மையின்மேல் நிபந்தனையளிக்கப்பட்டது.9 ஜீவ விருட்டசத்திற்கு வழிநடத்திய “இடுக்கமும், நெருக்கமுமான பாதையை”11 லேகி அவனுடைய சொப்பனத்தில் கண்டான். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் நேர்த்தியான ஆசீர்வாதங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டபடி தேவனுடைய அன்பை பிரதிபலிக்கிற அக்கனி “மிகவும் விலையேறப்பெற்றதும், மிகவும் விரும்பப்படத்தக்கதும் தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிற்கும் மேலானதுமாயிருக்கிறது”12 இந்தக் கனியை பெறும்படியாக இயேசு கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைத்து, மனந்திரும்பி, “தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து” 13 நமது வாழ்நாள் முடிவுவரை அத்தியாவசியமான நியமங்களைப் பெற்று, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளவேண்டும்.”14

  5. அவருடைய பாவநிவர்த்தியின் மூலமாக நமது பாவங்களை மட்டும் இயேசு கிறிஸ்து கழுவுவது மட்டுமின்றி, அவர் சாத்தியப்படுத்தும் வல்லமையையும் வழங்குகிறார், அதன்மூலமாக, ஒரு நாள் அவருடைய சீஷர்கள் கிறிஸ்துவின் சாயலில் பரிபூரண மனிதர்களாக ஆகவும், “சுபாவமனிதனை [விட்டுவிட],”15 வரிவரியாக” முன்னேற, 16 பரிசுத்தத்தில் அதிகரிக்க17, கிறிஸ்துவின் சாயலில் ஒருநாளில் பூரணராய் ஆகும்படிக்கு,18 தேவனுடன் மீண்டும் வாழ தகுதியாயிருக்க,19 பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் சுதந்தரிப்பார்கள்.20

மார்மன் புஸ்தகத்தில் மற்றொரு ஆறுதலின் சத்தியம் அடங்கியிருக்கிறது, அது, அதன் அணுகுதலில் எல்லையற்றதும் உலகளாவியதாகவும் இருந்தாலும்கூட, கர்த்தருடைய பாவநிவர்த்தி தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாயிருக்கிற ஒரு விசேஷித்த தனிப்பட்ட நெருக்கமான வரமாயிருக்கிறது.21 அவருடயை காயங்களை தொட்டுணர நேபிய சீஷர்கள் ஒவ்வொருவரையும் இயேசு அழைத்ததைப்போல, நீங்கள் அல்லது நான் மட்டுமே பூமியில் இருக்கிறார்போல, தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் மரித்தார். அவரண்டை வரவும் அவருடைய பாவநிவர்த்தியின் அற்புதமான ஆசீர்வாதங்களை பெறவும் ஒரு தனிப்பட்ட அழைப்பை அவர் நமக்குக் கொடுக்கிறார். 22

மார்மன் புஸ்தகத்தில் குறிப்பிடத்தக்க ஆண்களின் மற்றும் பெண்களின் எடுத்துக்காட்டுகளை நாம் கருத்தில்கொள்ளும்போது, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் தனிப்பட்ட தன்மை இன்னும் மிகவும் நிஜமாகிறது. அவர்களுக்கு மத்தியில் ஏனோஸ், சீசரோம், லாமோனி ராஜா, அவனுடைய மனைவி மற்றும் பென்யமீன் ராஜாவின் ஜனங்களிருந்தார்கள். அவர்களுடைய மனமாற்றத்தின் கதைகளும் துடிப்பான சாட்சிகளும், எவ்வாறு நமது இருதயங்களை மாற்றமுடியும், கர்த்தருடைய அளவில்லா நன்மைகள் மற்றும், இரக்கத்தின் மூலம் எவ்வாறு நம்முடைய வாழ்க்கை மாறமுடியுமென்பதன் ஒரு ஜீவனுள்ள சாட்சியை அவை கொடுக்கிறது23

இந்த எரிகிற கேள்வியை தீர்க்கதரிசி ஆல்மா தன்னுடைய ஜனங்களிடத்தில் கேட்டான். அவன் சொன்னான், “மனமாற்றத்தை அனுபவித்து, மீட்பின் அன்பைப்பற்றியதான பாடலை நீங்கள் பாட உணருவீர்களெனில், அவ்வாறு இப்பொழுது நீங்கள் உணரக்கூடுமா, என்று உங்களைக் கேட்கிறேன்?”24 கர்த்தருடைய சீஷர்களாக அவருடைய மீட்பின் வல்லமை நம்மோடு வரவும், நம்மை ஊக்குவித்து ஒவ்வொரு நாளும் நம்மை மாற்றவேண்டுமென்பதால், இந்தக் கேள்வி இன்று முக்கியமானது.

இரட்சகரின் பாவநிவர்த்தியின் இனிமையான செல்வாக்கை உங்களுடைய வாழ்க்கையில் எப்போது கடைசிமுறையாக உணர்ந்தீர்கள் என கேட்க ஆல்மாவின் கேள்வி மாற்றியமைக்கப்படலாம். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என உங்கள் ஆத்துமாவுக்கு சாட்சியளிக்கும்படியாக, அல்லது வேதனைதரும் சோதனைகள் திடீரென தாங்க இலகுவாகும்போது, அல்லது உங்கள் இருதயம் மிருதுவாகி உங்களைக் காயப்படுத்திய ஒருவரை மன்னிக்க உங்களால் முடியும்போது, “மிக அற்புதமான, இனிமையான ஒரு சந்தோஷம்” 25 உங்கள் மேல்வருவதை நீங்கள் உணரும்போது இது நடைபெறுகிறது. அல்லது, மற்றவர்களை நேசிக்கவும், சேவை செய்யவும் உங்களுடைய திறன் அதிகரித்ததை நீங்கள் காணும் ஒவ்வொருமுறையும், அல்லது, சுத்திகரித்தலின் நடைமுறை உங்களை ஒரு வித்தியாசமான நபராக்கி, இரட்சகரின் எடுத்துக்காட்டின் மாதிரியாக்கியபோது இது நடைபெறலாம்.26

இந்த அனுபவங்கள் அனைத்தும் உண்மையென்றும், இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியின்மீதும் விசுவாசத்தின் மூலமாக வாழ்க்கை மாறமுடியுமென்பதற்கு சான்றுகள் என நான் சாட்சியளிக்கிறேன். இந்த மேலான வரத்தைப்பற்றிய நமது அறிவை மார்மன் புஸ்தகம் தெளிவுபடுத்தி விரிவுபடுத்துகிறது. இந்த புஸ்தகத்தை நீங்கள் படிக்கும்போது, அவரண்டை வர ஜீவிக்கிற கிறிஸ்து உங்களை அழைக்கிற குரலை நீங்கள் கேட்பீர்கள். இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அவருடைய எடுத்துக்காட்டை உங்கள் வாழ்க்கையில் மாதிரியாக்கினால் அவருடைய மீட்பின் செல்வாக்கு உங்கள் வாழ்க்கையில் வரும் என்று நான் வாக்களிக்கிறேன். “என்னுடைய முகத்தைக் கண்டு நானே என்றறியும்”28 என அறிவித்ததைப்போல நீங்கள் காணும்போது, “பரிபூரண நாள் வரும்வரை”27 நாளுக்கு நாள், பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக இரட்சகர் உங்களை மாற்றுவார், இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.