வரப்போகிற நேரத்திற்கு எதிராக ஒரு நல்ல அஸ்திபாரம்
வரவிருக்கும் ஆண்டுகளில், நம்மை நகர்த்தவும் உணர்த்தவும் சால்ட் லேக் ஆலயத்தில் செய்யப்பட்ட மேம்பாடுகளை நாம் அனுமதிப்போமாக.
சால்ட் லேக் ஆலயத்தின் வரலாறு
ஜூலை 24, 1847ல் ஒரு வெப்பமான மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு நாம் திரும்ப பயணிப்போமாக. மேற்கு நோக்கிச் சென்ற முதல் குழு அடங்கிய, சபையின் 148 அங்கத்தினர்களுடன் 111 நாள் ஒரு கடினமான பயணத்தைத் தொடர்ந்து, மலைக் காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டும் பெலவீனமுமாகவும் இருந்த, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அப்போதைய தலைவராயிருந்த பிரிகாம் யங் சால்ட் லேக் பள்ளத்தாக்கிற்குள் பிரவேசித்தார்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவருடைய சுகவீனத்திலிருந்து குணமாகிக்கொண்டிருந்தபோது, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் பல்வேறு அங்கத்தினர்களையும் மற்றவர்களையும் ஒரு ஆய்வுப் பயணத்தில் பிரிகாம் யங் வழிநடத்தினார். வில்லியம் க்லேடன் பதிவுசெய்தார்: “முகாமிற்கு வடக்கில் சுமார் முக்கால் மைல் தூரத்தில் மேற்கு நோக்கி நன்றாக சாய்வாயிருந்த ஒரு அழகான சமவெளிக்கு நாங்கள் வந்தடைந்தோம்.”1
குழுவுடன் இடத்தை ஆய்வுசெய்தபோது, திடீரென பிரிகாம் யங் நின்று அவருடைய கோலால் தரையைத் தட்டி, வியந்து சொன்னார்,“ நமது தேவனுடைய ஆலயம் இங்கே நிற்கும்.” அவருடைய கூட்டாளிகளில் ஒருவரான மூப்பர் வில்போர்ட் வுட்ரப் சொன்னார், “[அவர்] மின்னலைப்போல சென்று,” தலைவர் யங்கின் கோல் அடையாளமிட்ட இடத்தைக் குறிக்க அவர் அதன் ஒரு கிளையை தரையில் குத்தினார். ஆலயத்திற்காக நாற்பது ஏக்கர்கள் (16 ஹெக்டேர்) தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆலயம் மையப்பகுதியில் இருக்க, “வடக்கு& தெற்கு, கிழக்கு&மேற்கு என நகரம் சரியான சதுரவடிவத்தில்” அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.2
“கர்த்தருடைய நாமத்தில்”3 ஒரு ஆலயத்தைக் கட்டும்படியான தீர்மானத்தை ஆதரிக்க, ஏப்ரல் 1851 பொது மாநாட்டில் சபை அங்கத்தினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிப்ருவரி 14, 1853ல், பல ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள் பங்கேற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஹீபர் சி. கிம்பலால் அந்த இடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலய அஸ்திபாரத்திற்காக பூமி தோண்டப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், ஏப்ரல் 6ல் ஆலயத்திற்கான பிரம்மாண்டமான மூலைக்கல்கள் போடப்பட்டு வண்ண அணிவகுப்பும், வாத்தியங்களுடன் பழைய டாபர்னாக்கலிருந்து, ஆலய இடம் வரை சபைத்தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஊர்வலத்தையும் சேர்த்து, நான்கு கற்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்புக்கள் சொல்லப்பட்டு ஜெபங்களும் ஏறெடுக்கப்பட்டன.4
பள்ளத்தாக்கின் நிலத்தை அவர்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, தரையில் அவருடைய காலை அவர் பதித்தபோது, அவருக்கு ஒரு தரிசனம் உண்டாகி, எனக்கு முன்னாலிருக்கிற இந்த நிலம்தான் ஆலயம் கட்டப்படுவதற்கான இடமென “அப்போது நான் அறிந்திருந்தேன், இப்போதும் அறிந்திருக்கிறேன்”5 என பூமி தோண்டும் விழாவில் உரைத்து, தலைவர் யங் நினைவுகூர்ந்தார்
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அக்டோபர் 1863 பொது மாநாட்டில் பின்வரும் தீர்க்கதரிசன உள்ளுணர்வை பிரிகாம் யங் கொடுத்தார்: “ஆயிரம் வருஷம் இது நிலைத்திருக்கும்படியான வகையில் ஆலயம் கட்டப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். நாம் கட்டவிருப்பது இந்த ஒரு ஆலயம் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டு கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யப்படும். பிற்கால பரிசுத்தவான்களால் மலைகளில் கட்டப்பட்ட முதல் ஆலயமாக இந்த ஆலயம் அறியப்படும். … விசுவாசம், தேவனின் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் நினைவுச்சின்னமாக மலைகளில் ஆலயம் நிற்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.”6
இந்த சுருக்கமான வரலாற்றின் பரிசீலனையில், ப்ரிகாம் யங்கின் ஞானதிருஷ்டி என்னை பிரமிக்க வைக்கிறது— முதலில், அந்த நேரத்தில் மற்றும் இடத்தில் கிடைக்கக்கூடிய கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி, முடிந்தவரை, சால்ட் லேக் ஆலயம், ஆயிரம் வருஷம் முழுவதும் நீடிக்கும் வகையில் கட்டப்படும் என்ற அவருடைய மனஉறுதி, இரண்டாவதாக, உலகமுழுவதும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில், எதிர்கால ஆலயங்களின் வளர்ச்சியைப்பற்றி அவர் தீர்க்கதரிசனமுரைத்தது.
சால்ட் லேக் ஆலயம் புனரமைக்கப்படுதல்
பிரிகாம் யங்கைப்போலவே நமது இன்றைய தீர்க்கதரிசியும் சால்ட் லேக் ஆலயத்தையும் பிற ஆலயங்களையும் மிகுந்த கவனத்துடன் கண்காணித்துக்கொண்டிருக்கிறார். சால்ட் லேக் ஆலயத்தின் அஸ்திபாரம் உறுதியாயிருக்கிறதென்பதை உறுதி செய்ய, எல்லா ஆண்டுகளிலும் ஆயத்துவத்தின் தலைமைக்கு அவ்வப்போது பிரதான தலைமை ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். பிரதான தலைமையின் வேண்டுகோளின்படி, ஆயத்துவ தலைமையில் நான் சேவை செய்து கொண்டிருந்தபோது, நில அதிர்வு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நுட்பங்களில் மிக சமீபத்திய முன்னேற்றங்களின் மதிப்பீடு உட்பட, சால்ட் லேக் ஆலயத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டு அமைப்புகளைப்பற்றி நாங்கள் முழு ஆய்வுசெய்தோம்.
அந்த நேரத்தில் பிரதான தலைமைக்கு வழங்கப்பட்ட மதிப்பாய்வின் பகுதிகள் இங்கே: “சால்ட் லேக் ஆலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில், சிறந்த பொறியியல், திறமையான உழைப்பு, கட்டுமானப் பொருட்கள், அறைகலன் பொருட்கள் மற்றும் அக்காலத்தில் கிடைத்த பிற ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டன. 1893 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை பண்ணப்ட்டதிலிருந்து, இந்த ஆலயம் உறுதியுடன் நின்று, விசுவாசம் [மற்றும்] நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஜனங்களுக்கு ஒரு ஒளியாகவும் செயல்பட்டு வருகிறது. ஆலயம் நல்ல நிலையில் இயங்கவும், சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் மிகுந்த கவனம் எடுக்கப்பட்டுள்ளது. கிரானைட் வெளிப்புறம் மற்றும் உட்புற தரை குறுக்கு விட்டங்கள் மற்றும் தாங்குகிற உத்திரங்கள் நல்ல நிலையில் உள்ளன. ஆலயத்துக்கு பிரிகாம் யங் தேர்ந்தெடுத்த இடம் மிகச் சிறந்த மண்ணையும் சிறந்த இறுக்கமான தன்மைகளையும் கொண்டுள்ளது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.”7
வெளிப்புற தளம் மற்றும் மேற்பரப்பு பகுதிகள், வழக்கற்றுப்போன பயன்பாட்டு அமைப்புகள், ஞானஸ்நான தொட்டி பகுதிகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்கவும், சாதாரண பழுதுநீக்கம் மற்றும் மேம்பாடுகள் தேவை என்று பரிசீலனை முடிவு செய்தது. இருப்பினும், ஆலய அஸ்திபாரத்திலிருந்து தொடங்கி மேல்நோக்கிய ஒரு தனியான விரிவான நில அதிர்வு மேம்பாட்டைப் பரிசீலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆலய அஸ்திபாரம்
127 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ஆலயத்துக்கு சேவை செய்திருக்கிற ஆலயத்தின் முதல் அஸ்திபாரத்தின் கட்டுமானத்தில் அதிகமாக தலைவர் ப்ரிகாம் யங் ஈடுபட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆலயத்துக்கு புதிதாக முன்மொழியப்பட்ட நில அதிர்வு மேம்படுத்தல் தொகுப்பு, அடிப்படை தனிமைப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும், இது கட்டுமானத்தின் போது கற்பனை கூட செய்யப்படவில்லை. இது பூகம்ப பாதுகாப்புக்கான சமீபத்திய, அதிநவீன பொறியியல் என்று கருதப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம், அதன் வளர்ச்சியில் சமீபத்தியது, ஆலயத்தின் அஸ்திபாரத்தில் தொடங்குகிறது, இது பூகம்பத்தால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. சாராம்சத்தில், பூமியையும் அதைச் சுற்றியுள்ள சூழலையும் ஒரு பூகம்ப நில அதிர்வு நிகழ்வுக்கு உட்படுத்தினாலும், அது ஆலயத்தை உறுதியுடன் நிற்க கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்துகிறது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆலயத்தின் புனரமைப்பு கடந்த ஆண்டு பிரதான தலைமையால் அறிவிக்கப்பட்டது. ஆயத்துவ தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் சில மாதங்களுக்கு முன்பு 2020 ஜனுவரியில் கட்டுமானம் தொடங்கியது. இது சுமார் நான்கு ஆண்டுகளில் நிறைவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுடைய தனிப்பட்ட அஸ்திபாரத்தை உறுதிசெய்தல்
இந்த அழகான, உன்னதமான, மேன்மையான, மற்றும் பிரமிக்க வைக்கும் சால்ட் லேக் ஆலயத்தின் ஆயுட்காலத்தின் அடுத்த நான்கு ஆண்டுகளைப்பற்றி நான் சிந்திக்கும்போது, அதை மூடும் நேரத்தை விட புனரமைக்கும் நேரமாக நான் அதைக் கற்பனை செய்கிறேன்! இதைப்போன்று, “சால்ட் லேக் ஆலயத்தின் இந்த விரிவான புனரமைப்பு நம்முடைய ஆவிக்குரிய புனரமைப்பு, புதுப்பித்தல் மறுபிறப்பு, புத்துயிர் பெறுதல் அல்லது மறுஸ்தாபிதத்துக்கு உட்படுத்த எப்படி நம்மைத் தூண்ட முடியும்? என நாம் நம்மையே கேட்கலாம்.”
தேவையான சில பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைச் செய்வதன் மூலம், நில அதிர்வு மேம்படுத்தலாலும்கூட, நாமும் நம் குடும்பங்களும் பயனடைவோம் என்பதை ஒரு சுயபரிசோதனை வெளிப்படுத்தக்கூடும்! பினவருபவற்றைக் கேட்பதால், இத்தகைய ஒரு செயல்முறையை நாம் ஆரம்பிக்கக்கூடும்:
“என்னுடைய அஸ்திபாரம் எவ்வாறு காணப்படுகிறது?”
“என்னுடைய சாட்சி தங்கியிருக்கிற என்னுடைய தனிப்பட்ட அஸ்திபாரத்தின் பகுதியாயிருக்கிற, தடிமனான சுவர், நிலையான வலுவான மூலைக்கற்கள் எதைக் கொண்டிருக்கின்றன?”
“என்னையும் என் குடும்பத்தையும் உறுதியாகவும் அசையாமலும் இருக்கவும், நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக நிகழும், பூமியதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பான நில அதிர்வு நிகழ்வுகளை தாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கும் என்னுடைய ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சித் தன்மையின் அஸ்திபாரக் கூறுகள் எவை?”
பூகம்பத்திற்கு ஒத்த நிகழ்வுகளை பெரும்பாலும் முன்கணிப்பது கடினம் மற்றும் பல்வேறு அளவுகளின் மட்டத்தில் வருகிற துன்பம் அல்லது துயரங்களை எதிர்கொண்டு, சபைத் தலைவர்கள், அங்கத்தினர்கள், கோட்பாடு அல்லது கொள்கையுடன் தனிப்பட்ட குற்றங்களோடு செயல்பட்டுக்கொண்டு கேள்விகள் அல்லது சந்தேகங்களுடன் போராடிக்கொண்டு வருகின்றன. இந்த பொய்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நமது ஆவிக்குரிய அஸ்திபாரத்தில் இருக்கிறது.
நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் எது ஆவிக்குரிய மூலைக்கற்களாக இருக்கக்கூடும்? அவை எளிய, தெளிவான, அருமையான, சுவிசேஷத்தின்படி வாழும் கொள்கைகளாயிருக்கக்கூடும்—குடும்ப ஜெபம், வேதப் படிப்பு, ஆலயத்திற்குச் செல்லுதல், மார்மன் புஸ்தகம் மற்றும் என்னைப் பின்பற்றி வாருங்கள் மூலமாகவும் இல்ல மாலை மூலமாகவும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல். உங்களுடைய ஆவிக்குரிய அஸ்திபாரத்தை பெலப்படுத்துவதற்கு பிற உதவிகரமான ஆதாரங்களில் விசுவாசப் பிரமாணங்கள், குடும்ப பிரகடனம் மற்றும் ஜீவிக்கிற கிறிஸ்து அடங்கக்கூடும்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆலய பரிந்துரையைப் பெறுவதன் ஒரு பகுதியாக விவாதிக்கப்பட்ட கேள்விகளில் சேர்க்கப்பட்டுள்ள கோட்பாடுகள் ஆவிக்குரிய அஸ்திபாரத்திற்கு வலுவான அடிப்படையாக செயல்படுகின்றன— குறிப்பாக முதல் நான்கு கேள்விகள். ஆவிக்குரிய மூலைக்கற்களாக நான் அவைகளைப் பார்க்கிறேன்.
கடந்த பொது மாநாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக தலைவர் ரசல் எம்.நெல்சன் அவைகளை நமக்குப் படித்ததைப்போல நாம் நிச்சயமாக இந்தக் கேள்விகளுடன் பரிச்சயமாயிருக்கிறோம்.
-
நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியுமுண்டா?
-
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, உங்களுடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவருடைய பாத்திரம் பற்றி உங்களுக்கு சாட்சியுண்டா?
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் பற்றி உங்களுக்கு சாட்சியுண்டா?
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் மற்றும் ஆசாரியத்துவத்தின் சகல திறவுகோல்களையும் கையாள பூமியில் அதிகாரம் பெற்ற ஒரே நபராகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?8
அதை கட்டவும் வலுப்படுத்தவும் உங்களுக்குதவ, இந்தக் கேள்விகளை எவ்வாறு உங்கள் தனிப்பட்ட அஸ்திபாரத்தின் மதிப்புமிக்க கூறுகளாகக் கருதக்கூடும் என்று உங்களால் பார்க்கமுடியுமா? “அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள், அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார், அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புகிற”9 ஒரு சபையாக எபேசியர்களுக்கு பவுல் போதித்தான்.
இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் விசுவாசமுள்ள ஜீவிக்கிற எடுத்துக்காட்டுகளான உலகமுழுவதிலுமுள்ள சபை அங்கத்தினர்களுடன் பரிச்சயமாகுதலும் உணர்த்தப்படுதலும் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்று. அவர்கள் வலிமையான தனிப்பட்ட அஸ்திபாரங்களைக் கொண்டுள்ளனர், அவை தங்களுடைய மனவேதனை மற்றும் வேதனையை மீறி, நில அதிர்வு நிகழ்வுகளை நிலையான புரிதலுடன் தாங்கி நிற்க அவர்களை அனுமதிக்கின்றன.
மிக தனிப்பட்ட மட்டத்தில் இதைக் காட்ட, சமீபத்தில் ஒரு அழகான, துடிப்பான இளம் மனைவி மற்றும் தாயின் இறுதிச் சடங்கில் நான் பேசினேன். அவள் தனது பல்மருத்துவ மாணவ கணவரை சந்தித்து திருமணம் செய்தபோது ஒரு ஸ்கிராப்பி முதல் பிரிவில் கால்பந்து வீராங்கனையாக இருந்தாள். ஒரு அழகான, முதிர்ச்சியான மகளுடன் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். ஆறு சவாலான ஆண்டுகளாக அவள் பல்வேறு வகையான புற்றுநோய்களுடன் துணிவுடன் போராடினாள். அவள் அனுபவித்த எப்போதுமிருந்த உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்பங்கள் இருந்தபோதிலும், அவள் தன்னுடைய அன்பான பரலோக பிதாவை நம்பினாள், மேலும் அவளுடைய பிரசித்தம்பெற்ற உரையான “தேவன் விளக்கங்களில் இருக்கிறார்” என்பது சமூக ஊடகத்தைப் பின்பற்றுபவர்களால் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது.
“உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மன வேதனையுடனும் இன்னமும் உங்களுக்கு எவ்வாறு விசுவாசமிருக்கிறது?” என அவளை ஒருவர் கேட்டதை தனது சமூக ஊடக பதிவுகள் ஒன்றில் அவள் எழுதினாள். இந்த வார்த்தைகளுடன் உறுதியாக அவள் பதிலளித்தாள், “ஏனெனில் இந்த இருளான நேரங்களில் விசுவாசமே என்னை நடத்துகிறது. விசுவாசம் வைத்திருப்பது என்பதற்கு, மோசமான எதுவும் நடக்கப்போவதில்லை என அர்த்தமாகாது. மீண்டும் அங்கே ஒளியிருக்கும் என்று நம்ப விசுவாசம் வைத்திருத்தல் என்னை அனுமதிக்கிறது. இருளின் வழியே நான் நடந்திருப்பதால் அந்த ஒளி இன்னமும் பிரகாசமாயிருக்கும். பல ஆண்டுகளாக நான் கண்ட இருள் அளவுக்கு இன்னும் அதிகமான ஒளியை நான் கண்டிருக்கிறேன். நான் அற்புதங்களைக் கண்டேன். நான் தூதர்களை உணர்ந்தேன். என்னுடைய பரலோக பிதா என்னைச் சுமந்ததை நான் அறிவேன். வாழ்க்கை எளிதாயிருந்திருந்தால் இதில் எதையும் அனுபவித்திருக்கமுடியாது. இந்த வாழ்க்கையின் வருங்காலம் அறியாததாயிருக்கலாம், ஆனால் என்னுடைய விசுவாசம் அப்படியல்ல. விசுவாசமில்லாமலிருக்க நான் தேர்ந்தெடுத்தால் இருளில் நடக்க மட்டுமே நான் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் விசுவாசமில்லாமல் இருள் மட்டுமே மிஞ்சும்.”10
அவளுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்தின் அசைக்க முடியாத சாட்சியம், மற்றவர்களுக்கு ஒரு உணர்த்துதலாயிருந்தது. அவளுடைய சரீரம் பெலவீனமாகஇருந்தபோதிலும் வலிமையுடன் இருக்கும்படியாக மற்றவர்களை அவள் உயர்த்தினாள்.
இந்த சகோதரியைப்போல, ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் நடக்கிற, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள அச்சமற்ற சீஷர்களாக இருக்க, அவளைப்போன்று வீராங்கனைகளான சபையின் பிற கணக்கிலடங்காத அங்கத்தினர்களைப்பற்றி நான் நினைக்கிறேன். அவர்கள் கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவைப்பற்றி பிரசங்கிக்கிறார்கள். அவரைப் பின்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் நாட்கள் சீரானதாயிருக்கிறதோ அல்லது நடுங்கும் தரையில் இருக்கிறதோ, அவர்களின் அஸ்திபாரம் வலுவானதும் அசைக்கமுடியாததுமாயிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.
“How firm a foundation, ye Saints of the Lord” and “who unto the Savior for refuge have fled.”11 என்ற பாடல்கள் வரிகளின் மகத்துவமான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிற அர்ப்பணிக்கப்பட்ட ஆத்துமாக்கள் இவர்களே. பரிசுத்தவான்கள் என்ற பெயருக்கு தகுதியாயிருக்க ஆவிக்குரிய அஸ்திபாரத்தை ஆயத்தப்படுத்திய, வாழ்க்கையின் பல குழப்பங்களைத் தணிக்கும் அளவுக்கு வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பவர்களிடையே நடப்பதற்கு நான் அளவுக்கு அப்பால் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இதைப்போன்ற ஒரு அஸ்திபாரத்தின் முக்கியத்துவத்தை நம் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகைப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த சத்தியங்களின் பாடலை அவர்கள் பாடும்போது, சிறு வயதிலேயே, எங்கள் ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் போதிக்கப்படுகிறார்கள்:
இந்த அஸ்திபார கோட்பாட்டை வேதம் வலுப்படுத்துகிறது. அமெரிக்க ஜனங்களிடத்தில் இரட்சகர் போதித்தார்.
“இவைகளை நீங்கள் எப்பொழுதும் செய்வீர்களானால் நீங்கள் பாக்கியவான்கள். ஏனெனில் நீங்கள் என் கன்மலையின்மேல் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.
“ஆனால் உங்களில் இவைகளுக்கு அதிகமாயோ அல்லது குறைவாகவோ செய்கிற எவனும் என் கன்மலையின்மேல் கட்டாதவன். மணலான அஸ்திபாரத்தின் மேல் கட்டியவன். மழைபொழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து, காற்று வீசி அவற்றின் மேல் அடிக்கும்போது, அவை வீழ்ந்து போகும்.”13
சால்ட் லேக் ஆலயத்தின் குறிப்பிடத்தக்க புனரமைப்புகள் “ஆயிரம் வருஷம் நீடிக்கும் வகையில் கட்டப்பட்ட ஆலயத்தைக் காண வேண்டும்” என்ற பிரிகாம் யங்கின் விருப்பத்தை நிறைவேற்ற பங்களிக்கும் என்பது சபைத் தலைவர்களின் நேர்மையான நம்பிக்கையாகும். வரவிருக்கும் ஆண்டுகளில், சால்ட் லேக் ஆலயத்திற்கு நாம் செய்யும் இந்த மேம்பாடுகள் தனிநபர்களாகவும் குடும்பங்களாகவும் நம்மை நாமும் உருவகமாக “ஆயிரம் வருஷத்தை தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும்” என்று நம்மை நகர்த்தும் உணர்த்தும் என்பது என்னுடைய ஜெபம்.
அப்போஸ்தலனாகிய பவுலின் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவதால், “நித்திய ஜீவனைப் பிடித்துக் கொள்ளும்படியாக, [நமக்காக] வைக்கப்பட்டிருக்கும் வரவிருக்கும் காலத்திற்கு எதிரான ஒரு நல்ல அஸ்திபாரம், அமைக்க நாம் அதைச் செய்வோம்.14 நம்முடைய ஆவிக்குரிய அஸ்திபாரம் நிச்சயமாகவும் உறுதியாயுமிருக்கும் என்றும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியைப்பற்றிய, நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவர் வகித்த பங்கைப்பற்றிய சாட்சியமும் நம்முடைய சொந்த மூலைக்கல்லாக மாறும் என்பதே என்னுடைய தீவிர ஜெபம். அவருடைய நாமமாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.