தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அநேகம்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, ஒரு பரிசுத்த தோப்பில் எந்த கேள்வியுமில்லாமல், பிதாவாகிய தேவனும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுத்த முதல் தரிசனத்தை நினைவுகூறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொதுமாநாட்டில் பேசுவதில் நான் பெருமையடைகிறேன். மார்மன் புஸ்தகத்திலிருந்து, ஆசாரியத்துவ அதிகாரம் மற்றும் திறவுகோல்களுக்குத் திரும்புதல், கர்த்தருடைய உண்மையான சபையை ஸ்தாபித்தல், தேவனுடைய ஆலயம், இந்த பிற்காலங்களில் பணியை நடத்துகிற தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள்வரை, அந்த தரிசனம் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்திற்கும், திறக்கப்பட்ட அனைத்துக்கும் மகத்துவமான ஆரம்பமாயிருந்தது.
தெய்வீக வடிவமைப்பால், தேவனின் பூர்வகால தீர்க்கதரிசிகள், பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டபோது, மறுஸ்தாபிதத்தைப்பற்றியும், நமது நாளிலும், கடைசி ஊழியக்காலத்திலும், காலங்களின் முழுமையிலும் என்ன வரப்போகிறது என தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆரம்பகால ஞானதிருஷ்டிக்காரர்களின் அந்தப்பணி “ஆத்துமாக்களை எரித்தன.”1 “அற்புதமும் ஆச்சரியமுமான பணி”2 என ஏசாயா அழைத்ததை பூமியிலுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் எதிர்காலத்தைப்பற்றி காலத்தின் பல தலைமுறைகளாக அவர்கள் முன்னறிவித்தனர், கனவு கண்டார்கள், கற்பனை செய்தார்கள், தீர்க்கதரிசனமுரைத்தார்கள்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையையும் உள்ளடக்கி, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையின் மறுஸ்தாபிதத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அநேகம். இன்று, எப்படியாயினும், எனக்குப் பிடித்த ஒரு சிலவற்றை மட்டுமே முக்கியப்படுத்துவேன். எனக்கான்பான ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களாலும், தூதனைப்போன்ற என்னுடைய தாயின் முழங்காலிலும் இவைகள் எனக்குப் போதிக்கப்பட்டன.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததன் மூலமும், தேவனின் தூதர்களின் பணிவிடை பரிந்துரையினாலும் சிங்கங்களைத் தடுத்து நிறுத்திய தானியல், நம்முடைய நாளை தரிசனத்தில் பார்த்தான். பாபிலோனிய இராஜா நேபுகாத்நேச்சருக்கு ஒரு சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்ன தானியேல், கர்த்தருடைய சபை கடைசி நாட்களில் “கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவரும்”3 ஒரு சிறிய கல் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். தெய்வீக தலையீட்டால், “ஒருபோதும் அழிக்கப்படாதபடி ஆனால் என்றென்றும் நிற்க” அது முழு உலகத்தையும் நிரப்பும்வரை கர்த்தருடைய சபை வளரும் என்பது “கைகள் இல்லாமல்,” என்பதன் அர்த்தம்.4
சபையின் அங்கத்தினர்களாக, உலகம் முழுவதிலுமிருந்து, இன்று மாநாட்டைக் பார்த்து வருகிறதில், செவிகொடுத்து வருகிறதில் தானியேலின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு இது ஒரு ஆழமான சாட்சி.
அர்ப்பணிப்புள்ள அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்தான், “உலகத்தோற்றமுதல் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள்.”5 “இயேசு கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருப்பதால்,”7 காலங்கள் நிறைவேறும்போது தேவன் “சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே கட்டுவாரென”6 அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். ரோம் இத்தாலி ஆலயத்தின் பிரதிஷ்டையில் நான் பங்கேற்றபோது இந்த தீர்க்கதரிசனங்களை நான் மிகவலிமையோடு உணர்ந்தேன். இந்த தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் யாவரும், பேதுருவையும் பவுலையும்போல, உலகத்தின் மீட்பரான இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளிக்க அங்கிருந்தனர். அந்த மறுசீரமைப்பில் சபை ஒரு ஜீவிக்கிற எடுத்துக்காட்டாயிருக்கிறது, நீண்ட காலத்திற்கு முன்பே, சகோதர, சகோதரிகளும் நமது அங்கத்தினர்களும் அந்த தெய்வீக தீர்க்கதரிசனங்களுக்கு சாட்சிகளாயிருக்கிறார்கள்.
பிற்காலங்களில், “என் சந்ததிக்கென்று தெரிந்துகொள்ளப்படத்தக்க ஒரு ஞானதிருஷ்டிக்காரனை கர்த்தராகிய என் தேவன் எழும்பப் பண்ணுவார்”8 என எகிப்தின் யோசேப்பு தீர்க்கதரிசனமுரைத்தான் “ஏனெனில் அவன் [கர்த்தரின்] பணியைச் செய்வான்”9 மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித்தே அந்த ஞானதிருஷ்டிக்காரர்.
“வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன், அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான்”10 என்ற இந்த வார்த்தைகளுடன் மறுஸ்தாபிதத்தின் முக்கியமான கூறுகளை சர்வவல்லவரின் தூதன் ஒன்றுசேர்த்து கொண்டுவருவதைப்பற்றி வெளிப்படுத்துபவனான யோவான் தீர்க்கதரிசனமுரைத்தான். மரோனி அந்த தூதனாயிருந்தான். மார்மன் புஸ்தகத்தில் பதிக்கப்படுள்ளதைப்போல நமது நாளை அவன் கண்டான். இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பாகிய மார்மன் புஸ்தகத்தையும் சேர்த்து, மீண்டும் மீண்டும் தோற்றமளித்து ஜோசப் ஸ்மித்தின் ஊழியத்தில் அவரை அவன் ஆயத்தப்படுத்தினான்.
பிற தீர்க்கதரிசிகள் நமது நாளைக்குறித்து முன்னறிவித்தனர். “பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும்”11 திருப்புகிற எலியாவைப்பற்றி மல்கியா பேசினான். எலியா வந்தான், அதன்விளைவாக பூமியில் இன்று நம்மிடம் 168 ஆலயங்களுள்ளன. தகுதியுள்ள அங்கத்தினர்கள், பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்வதற்கும், தங்கள் சார்பாகவும், தங்களுடைய மரித்த முன்னோர்கள் சார்பிலும் ஆசீர்வதிக்கப்பட்ட நியமங்களைப் பெறவும் ஒவ்வொரு ஆலயமும் பணியாற்றுகிறது. மல்கியாவால் விவரிக்கப்பட்டிருக்கிற இந்த பரிசுத்த பணி, “அவருடைய பிள்ளைகளின் நித்திய இலக்குக்கான சிருஷ்டிகரின் திட்டத்திற்கு மையமாயிருக்கிறது.”12
தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட அந்த நேரத்தில் நாம் வாழ்கிறோம், நாம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக பயன்படுத்தப்பட, பொறுப்பளிக்கப்பட்ட மக்கள், சத்தியங்களை, உடன்படிக்கைகளை, நித்திய சுவிசேஷத்தின் வாக்குறுதிகளை கேட்கப்போகிற, தழுவப்போகிற தேவனுடைய பிள்ளைகளை நாம் ஒன்றுகூட்டவேண்டும். இன்று பூமியில் “மிகப்பெரிய சவால், மிகப்பெரியகாரணம், மிகப்பெரிய பணி.”13 என இதை தலைவர் நெல்சன் அழைக்கிறார். அந்த அற்புதம்பற்றி நான் சாட்சி பகருகிறேன்.
இந்த ஆண்டு பிப்ருவரி மாதத்தில் தலைவர் ரசல் எம். நெல்சனால் பணிக்கப்பட்டதால், டர்பன் தென்ஆப்ரிக்கா ஆலயத்தை நான் பிரதிஷ்டை செய்தேன். என் வாழ்நாள் முழுவதிலும் அது என்னால் மறக்கமுடியாத நாள். “ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாக”14 என நீண்ட காலத்திற்கு முன்பு எரேமியா தீர்க்கதரிசனமுரைத்ததைப்போல, சுவிசேஷத்திற்கு வந்த அங்கத்தினர்களுடன் நானிருந்தேன். இயேசு கிறிஸ்துவின் கோட்பாடு உலகமுழுவதிலுமுள்ள நம் அனைவரையும் சுவிசேஷத்தில் தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக, சகோதரர்களாக சகோதரிகளாக ஒன்றுபடுத்துகிறது. நாம் எப்படி காணப்படுகிறோம், உடையணிகிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், பரிசுத்த ஆலய நியமங்களைச் செய்வதாலும் கைக்கொள்வதாலும் அவருடைய குடும்பம் ஒன்றிணைக்கப்படுவதற்காக ஆரமபத்திலிருந்து திட்டமாயிருந்த திட்டமாயிருக்கிற பரலோகத்திலிருக்கிற பிதாவுடன் நாம் ஒரு ஜனமாயிருக்கிறோம்.
1834ல், கர்த்லாந்து, ஒஹையாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருந்த ஒரு சிறு கூட்டத்திற்கு தீர்க்கதரிசி ஜோசப் தீர்க்கதரிசனமுரைத்தார், “இன்றிரவு ஒரு சிறிய கையளவேயுள்ள ஆசாரியத்துவத்தை மட்டுமே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள், ஆனால், இந்த சபை அமெரிக்காவின் வடக்கு, தெற்கு பகுதியை நிரப்பும், இது உலகத்தையே நிரப்பும்.”15
சமீப ஆண்டுகளில் சபை அங்கத்தினர்களை சந்திக்க, நான் உலகமுழுவதிலும் பயணப்பட்டிருக்கிறேன். பன்னிருவர் குழுமத்தின் என்னுடைய சகோதரர்களுக்கும் இதைப்போன்ற பணிகளிருந்தன. இருந்தும், “முப்பத்திரண்டு நாடுகளிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரதேசங்களிலுமுள்ள”16 பரிசுத்தாவன்களை சந்திக்கவும், ஜீவிக்கிற கிறிஸ்துபற்றி சாட்சியளிக்கவும், சபையின் தலைவராக முதல் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த நமது அன்பான தீர்க்கதரிசி தலைவர் நெல்சனின் பயண அட்டவணையை யாரால் கைக்கொள்ளமுடியும்.
ஒரு வாலிபனாக, என்னுடைய ஊழிய அழைப்பை நான் பெற்றுக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய தகப்பனைப்போல, சகோதரனைப்போல, மைத்துனனைப்போல ஜெர்மனியில் ஊழியம் செய்ய நான் விரும்பினேன். வீட்டிற்கு யாராவது வருவார்கள் என காத்திருக்காமல், அஞ்சல் பெட்டிக்கு விரைந்து சென்று அழைப்பை நானே திறந்தேன். நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு மாநில ஊழியத்திற்கு நான் அழைக்கப்பட்டதாக படித்தேன். நான் ஏமாற்றமடைந்து, உள்ளே போய் ஆறுதலுக்காக என்னுடைய வேதங்களைத் திறந்தேன். கோட்பாடும் உடன்படிக்கைகளுமை நான் வாசிக்க ஆரம்பித்தேன், “இதோ, இந்த இடத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னிடம் அநேக ஜனங்களிருக்கிறார்கள்; இந்த கிழக்கு தேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு அனுகூலமான கதவு திறக்கப்படும்.”17 1833ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கொடுக்கப்பட்ட அந்த தீர்க்கதரிசனம் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்படுத்தல். அப்போது எனக்குத் தெரிந்தது, நான் ஊழியம் செய்ய தேவன் விரும்பிய சரியான ஊழியத்துக்கு நான் அழைக்கப்பட்டேன். நமது பரலோகத்திலுள்ள பிதா ஜோசப் ஸ்மித்துடன் பேசியபோது, மறுஸ்தாபிதத்தையும் அதன் வியத்தகு ஆரம்பத்தையும் நான் போதித்தேன், “இவர் என் நேசக்குமாரன், அவருக்குச் செவிகொடு!”18
இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முழு சபைக்கும் மிக முக்கியத்துவமானது: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், … எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.”19
இன்று என் மனதில், தொலைக்காட்சி, இணையம் அல்லது பிற வழிகளில் மின்னணு முறையில் இந்த நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான நம்முடைய அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்களை நான் சித்தரிக்கிறேன். நாம் ஒன்றாக “பர்வதங்களின் கொடுமுடியில்”20இருப்பதைப் போல அமர்ந்திருக்கிறோம். “இது சரியான இடம்”21 என தீர்க்கதரிசன வார்த்தைகளில் பேசியது பிரிகாம் யங். “பூமியின் தேசங்களை ஆணையிடுகிறவரின் விருப்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும்”22 கன்மலைகளில் சீயோனை ஸ்தாபிக்க பணியாற்றிய பரிசுத்தவான்களில் சிலர் எனது சொந்த முன்னோடி மூதாதையர்கள்.
மில்லியன்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பரிசுத்த மண்ணிண்மீது இன்று நான் நின்றுகொண்டிருக்கிறேன். 2002ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சால்ட் லேக் சிட்டி நடத்தியது. தொடக்க விழாவில் டாபர்னாக்கல் தேர்ந்திசைக் குழுவினர் பாடினார்கள், பல, பல நாடுகளின் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்காக கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகளை சபை வழங்கியது. உலகளவில் இரவு செய்தி ஒளிபரப்பின் பின்னணியில் ஆலயத்தைப் பார்ப்பது எனக்கு எப்போதும் நினைவிலிருக்கும்.
பல ஆண்டுகளாக, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், பல நாடுகளைச் சேர்ந்த மன்னர்கள், நீதிபதிகள், பிரதமர்கள், தூதர்கள் மற்றும் அதிகாரிகள் சால்ட் லேக் சிட்டிக்கு வந்து நமது தலைவர்களைச் சந்தித்துள்ளனர். இனத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் சம உரிமைகளுக்கு, ஒப்புக்கொடுத்துள்ள ஒரு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிறமுள்ள மக்களின் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கத்தின் தலைவர்களுக்கு தலைவர் நெல்சன், விருந்தளித்தார், உலகத்தின் மிகுந்த நாகரீகத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும் அழைப்பு விடுவிக்க தலைவர் நெல்சன் சேர்ந்துகொண்டபோது இந்த நண்பர்களுடனும் தலைவர்களுடனும் தோளோடு தோளாக நின்றுகொண்டிருந்ததை நான் நினைவுகூருகிறேன்.23
இன்னும் அநேகர் ஆலய சதுக்கத்திற்கு வந்து சபைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். உதாரணமாக, ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டால், கடந்த ஆண்டு, உலகளாவிய கூட்டமான, நியூயார்க் நகரத்திற்கு வெளியே நடந்த முதல் நிகழ்ச்சியான, ஐக்கிய நாடுகள் சபையின் 68 வது சிவில் சொசைட்டி மாநாட்டை நாங்கள் வரவேற்றோம், வியட்நாமின் மத விவகாரக் குழுவை நாங்கள் சந்தித்தோம், கியூபா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, ருமேனியா, சூடான், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை நாங்கள் சந்தித்தோம். முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளரையும் நாங்கள் வரவேற்றோம்.
கடைசி நாட்களில், தேசங்கள் “கர்த்தருடைய ஆலயத்தின் மலைக்கு”24 பாயும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நான் விவரிக்கிறேன். மகத்தான சால்ட் லேக் ஆலயம் மகத்துவமும் மகிமையுமான மையத்தில் நின்றுகொண்டிருக்கிறது.
எங்கள் அமைப்பு மகத்தானதென்றாலும், மக்களை ஈர்த்தது நிலப்பரப்பு அல்ல; இது, ஆவி, வளர்ச்சி, நன்மை, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மக்களின் தாராள மனப்பான்மையில் காட்சிப்படுத்தப்பட்ட தூய மதத்தின் சாராம்சம்; மற்றும் தேவன் நேசிப்பதைப் போலவே நம்முடைய அன்பும், “கிறிஸ்துவுக்காக”25 என்று ஜோசப் ஸ்மித் அழைத்த உயர்ந்த காரணத்திற்காக எங்களுடைய ஒப்புக்கொடுத்தலாகும்.
இரட்சகர் எப்போது திரும்ப வருவாரென எங்களுக்குத் தெரியாது, ஆனால் இது எங்களுக்குத் தெரியும். இருதயத்திலும் மனதிலும் நாம் ஆயத்தமாயும், அவரை ஏற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாயும், நீண்ட காலத்திற்கு முன்பு தீர்க்கதரிசனமுரைத்த அனைத்திற்கும் ஒரு பகுதியாயிருக்கவேண்டும்.
தலைவர் ரசல் எம்.நெல்சன், பூமியில் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருக்கிறாரெனவும், தீர்க்கதரிசிகளாக, ஞானதிருஷ்டிக்காரர்களாக, வெளிப்படுத்துபவர்களாக ஆதரிக்கப்பட்ட தேவனால் அழைக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் அவருக்குப் பக்கத்திலிருக்கிறார்களெனவும் நான் சாட்சியளிக்கிறேன். என்னுடைய சகோதர, சகோதரிகளே மறுஸ்தாபிதம் தொடருகிறது.
நான் சாட்சியளிப்பது உண்மை என்ற ஜோசப் ஸ்மித்தின் வார்த்தைகளுடன் நான் முடிக்கிறேன்: “எந்தவொரு கைகளாலும் வேலை முன்னேறுவதைத் தடுக்க முடியாது; துன்புறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும், கும்பல்கள் ஒன்று சேரக்கூடும், படைகள் ஒன்று சேரக்கூடும், பழிசுமத்துதல் பெயரைக் கெடுக்கலாம், ஆனால் ஒவ்வொரு கண்டத்தையும் ஊடுருவிச் செல்லும்வரை, ஒவ்வொரு தட்பவெப்பநிலையையும் சந்திக்கும்வரை, ஒவ்வொரு தேசங்களையும் துடைத்துச்செல்லும்வரை, ஒவ்வொரு செவிகளிலும் கேட்கும்வரை, தேவனின் நோக்கங்கள் நிறைவேறும்வரை, பணி முடிந்தது என யேகோவா சொல்லும்வரை, தேவனின் சத்தியம், தைரியமாகவும், மேன்மையாகவும், சுதந்தரமாகவும் முன்னேறிச் செல்லும்.”26 ஜோசப் ஸ்மித்தின் இந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டன என நான் அப்படியே சாட்சியளிக்கிறேன்.
நமக்கன்பான தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம்.நெல்சன், அவருடைய ஆலோசகர்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் சபையின் பிறத் தலைவர்களின் உணர்த்துதலான ஆலோசனையை நீங்கள் பின்பற்றும்போது, நமது நாளைக் குறித்து முன்னறிவித்த பழங்கால தீர்க்கதரிசிகளுக்கு நீங்கள் செவிசாய்க்கும்போது, ஆவியினாலும் மறுஸ்தாபித பணியினாலும் உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீங்கள் நிரப்பப்படுவீர்களென்று நான் வாக்களிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் தேவனின் கரத்தை நீங்கள் காண்பீர்கள், அவருடைய உணர்த்துதல்களைக் கேட்பீர்கள், அவருடைய அன்பை உணருவீர்கள் என நான் வாக்களிக்கிறேன். அவருடைய சுவிசேஷம் மற்றும் அவருடைய சபையின் மறுஸ்தாபிதத்திற்காக, அவருடைய ஒப்பிடமுடியாத அன்பின் சான்றில் நன்றியுணர்வுடன், இயேசு கிறிஸ்துவி்ன் நாமத்தில், ஆமென்.