அவர்கள் காணும்படிக்கு
இயேசு கிறிஸ்துவிடம் வழியை மற்றவர்கள் காணும்படிக்கு உங்கள் ஒளியை பிரகாசிக்கச்செய்ய வாய்ப்புகளைத் தேடி, ஜெபிக்கவும்.
சகோதர சகோதரிகளே, இந்த மாநாட்டில் நாம் உணர்ந்த பரிசுத்த ஆவியினால் நமது இருதயங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன, புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இருநூறு ஆண்டுகளுக்கு முன், மரங்களடர்ந்த ஒரு தோப்பில் ஒரு ஒளிக்கற்றை ஒரு இளம் வாலிபனின்மேல் அமர்ந்தது. அந்த ஒளியில் பிதாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் ஜோசப் ஸ்மித் கண்டார். ஜோசப் ஸ்மித்துக்கும், நம் அனைவருக்கும் முன்னோக்கி செல்லும் பாதையை சுட்டிக்காட்டிய அவர்களின் ஒளி பூமியை மூடிய ஆவிக்குரிய இருளைத் திருப்பி அனுப்பியது. அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒளியினால், நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக கிடைக்கிற ஆசீர்வாதங்களின் முழுமையை நாம் பெறலாம்.
அவருடைய சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் நல்வாய்ப்பினால், நம் இரட்சகரின் ஒளியால் நாம் நிரப்பப்படலாம். ஆயினும் அந்த ஒளி உங்களுக்கும் எனக்குமானதல்ல. “அவர்கள் உங்களுடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, இந்த ஜனங்களுக்கு முன்பாக உங்கள் வெளிச்சம் பிரகாசிக்க”1 இயேசு கிறிஸ்து நம்மை அழைத்திருக்கிறார். “அவர்கள் காணும்படிக்கு” என்ற சொற்றொடரை நான் நேசிக்கிறேன். பாதையைப் பார்க்கவும், அதன் மூலம் கிறிஸ்துவண்டை வரவும் மற்றவர்களுக்கு உதவுவதில், மிகுந்த நோக்கத்துடன் இருக்கவேண்டுமென்பது கர்த்தரிடமிருந்து வருகிற நேர்மையான அழைப்பாகும்.
எனக்கு 10 வயதாயிருந்தபோது, என்னுடைய சொந்த ஊரில் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் எல். டாம் பெர்ரி எங்கள் ஊருக்கு பணிநிமித்தமாக வந்தபோது அவரை விருந்தினராகப் பெறும் மதிப்பை எங்கள் குடும்பம் பெற்றது.
நாள் முடிவில், எங்கள் குடும்பமும் பெர்ரி குடும்பமும் எங்கள் வீட்டின் நடு அறையில் அமர்ந்து என் தாய் தயாரித்த ருசியான ஆப்பிள் பையை ருசித்துக்கொண்டிருந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள பரிசுத்தவான்களைப்பற்றிய கதைகளை மூப்பர் பெர்ரி நினைவு கூர்ந்தார். நான் அடிமையானேன்.
தாமதமாகிக்கொண்டிருந்த போது என்னுடைய தாய் என்னை சமையலறைக்குள் வர அழைத்து ஒரு எளிய கேள்வியைக் கேட்டார்: “போனி, நீ கோழிகளுக்கு உணவளித்தாயா?”
என் இருதம் நின்றது, நான் உணவளிக்கவில்லை. கர்த்தருடைய அப்போஸ்தலர் முன்னிலையில் இருந்து வெளியேற விரும்பாததால், கோழிகள் காலை வரை உபவாசமிருக்கலாம் என்று நான் சொன்னேன்.
என் தாய் உறுதியுடன் பதிலலித்தாள், “இல்லை.” அப்போது பார்த்து மூப்பர் பெர்ரி சமையலறைக்குள் நுழைந்து, “யாராவது கோழிகளுக்கு உணவளிக்க வேண்டும் என சொன்னதை நான் கேட்டேனோ” என அவரது ஏற்றமான, உற்சாகமான குரலுடன் கேட்டார். “நானும் என் மகனும் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாமா?”
இப்போது கோழிகளுக்கு உணவளிப்பது என்ன ஒரு முழுமையான ஆனந்தமானது! எங்களுடைய பெரிய மஞ்சள் ஒளிரும் விளக்கை எடுத்துவர நான் ஓடினேன். உற்சாகமடைந்தவளாக, கோழி கூண்டுக்கு போகிற நன்றாக தேய்ந்த பாதையை தவிர்த்து நான் வெளியேறினேன். ஒளிர் விளக்கு என் கையில் தொங்கிக்கொண்டிருக்க, சோள கொல்லையைத் தாண்டி, கோதுமை வயலின்வழியே கடந்துசென்றோம்.
பாதையைத் தாண்டி, சிறிய நீர்ப்பாசன கால்வாயை அடைந்து, பல இரவுகளில் இயல்பாகவே நான் முன்பு செய்ததைப் போல அதன் மேல் குதித்தேன். இருட்டான, அந்நியமான இடத்தில் நடந்து செல்லும் மூப்பர் பெர்ரியின் முயற்சிகளை நான் மறந்துவிட்டேன். பள்ளத்தைப் பார்க்க, ஆடிக்கொண்டிருந்த என் விளக்கொளி அவருக்கு உதவவில்லை, பார்ப்பதற்கு நிலையான வெளிச்சம் இல்லாமல் அவர் நேரடியாக தண்ணீரில் இறங்கி உரக்க முனகினார். பீதியடைந்த, நான் என் புதிய நண்பர் பள்ளத்தில் இருந்து ஈரத்தில் ஊறவைத்த பாதத்தை அகற்றி, அவரது கனமான தோல் ஷூவிலிருந்து தண்ணீரை அசைத்து கொட்டுவதைப் பார்த்தேன்.
நனைந்த, மென்மையான ஷூவுடன் மூப்பர் பெர்ரி கோழிகளுக்கு உணவளிக்க எனக்குதவினார். நாங்கள் உணவளித்து முடித்தபோது, அன்புடன் எனக்கு அவர் சொன்னார், “போனி நான் பாதையைப் பார்க்கவேண்டும். நான் நடந்துகொண்டிருக்கும் பாதையில் எனக்கு வெளிச்சம் தேவை.”
நான் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது மூப்பர் பெர்ரிக்கு உதவிகரமாயில்லை. இப்போது, பாதையில் பாதுகாப்பாக செல்ல அவருக்கு எனது ஒளி தேவை என்பதை அறிந்த நான், அவரது காலடிகளுக்கு சற்று முன்னால் ஒளிரும் விளக்கின் ஒளியைச் செலுத்தினேன், நாங்கள் தன்னம்பிக்கையுடன் வீடு திரும்ப முடிந்தது.
என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, மூப்பர் பெர்ரியிடமிருந்து கற்றுக்கொண்ட கொள்கைகளை பல ஆண்டுகளாக நான் தியானித்துவருகிறேன். நம் ஒளியை பிரகாசிக்க அனுமதிக்க தேவனின் அழைப்பு என்பது தோராயமாக நமது ஒளிக்கதிரின் வெளிச்சத்தை அசைத்து, பொதுவாக உலகத்தை பிரகாசமாக்குவது என்பதல்ல. கிறிஸ்துவண்டை போக மற்றவர்கள் பாதையைப் பார்க்க அந்த ஒளியை கொடுப்பதாகும். தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து, கைக்கொள்ளுவதில் அடுத்த முன்னேறிச் செல்லும் படியைப் பார்க்க மற்றவர்களுக்கு உதவுவதில், இது, திரையின் இந்தப் பக்கத்தில் இஸ்ரவேலின் கூட்டிச்சேர்த்தல்.2
“இதோ, நானே ஒளியாயிருக்கிறேன்; நான் உங்களுக்காக மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறேன்”3 என இரட்சகர் சாட்சியளித்தார். அவருடைய எடுத்துக்காட்டுகளில் ஒன்றை நாம் பார்ப்போம்.
கிணற்றடியிலிருந்த சமாரிய ஸ்திரீ, இயேசு கிறிஸ்துவை அறியாதவளாகவும், தன்னுடைய சொந்த சமுதாயத்தில் அநேகரால் தள்ளப்பட்டவளாகவும் இருந்தாள். இயேசு அவளைச் சந்தித்து ஒரு உரையாடலைத் தொடங்கினார். தண்ணீரைப்பற்றி அவளிடம் அவர் பேசினார். “ஜீவ தண்ணீராக” இருப்பதாக அவர் தன்னையே அறிவித்து, பின்னர் அதிகரித்த ஒளிக்கு அவர் அவளை நடத்தினார்.4
அவளையும் அவளுடைய தேவைகளையும் இரக்கத்துடன் கிறிஸ்து அறிந்திருக்கிறார். அவளிருந்த இடத்தில் அவளை அவர் சந்தித்து, பிரசித்தமானதும் பொதுவானதுமான ஒன்றைப்பற்றி பேசுவதில் ஆரம்பித்தார். அங்கேயே அவர் நிறுத்தியிருந்தால், அது ஒரு நேர்மறையான சந்திப்பாயிருந்திருக்கும். ஆனால், “வந்து பாருங்கள் … அவர் கிறிஸ்துதானோ ?”5 என்றறிவிக்க அவள் பட்டணத்திற்கு சென்றது நடந்திருக்காது. படிப்படியாக, உரையாடலின் மூலம், அவள் இயேசு கிறிஸ்துவைக் கண்டுபிடித்தாள், அவளுடைய கடந்த காலம் எப்படியிருந்தபோதிலும், அவள் ஒளியின் கருவியாக மாறி, மற்றவர்களுக்குப் பார்க்க வழியை பிரகாசித்தாள்.6
இப்போது ஒளியைப் பகிர்ந்துகொள்வதற்கான இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றிய இரண்டு நபர்களைப் பார்ப்போம். சமீபத்தில் என் நண்பர் கெவின் ஒரு வணிக நிர்வாகிக்கு அருகில் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தார். இரண்டு மணி நேரம் எதைப்பற்றி பேசுவது என்று அவர் கவலைப்பட்டார். ஒரு உணர்த்துதலைத் தொடர்ந்து, கெவின் கேட்டார், “உங்கள் குடும்பத்தைப்பற்றி சொல்லுங்கள். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?”
அந்த மனிதர் தனது பாரம்பரியத்தைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, எனவே கெவின் தனது கைப்பேசியை வெளியே எடுத்து, “மக்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்கும் ஒரு செயலி என்னிடம் உள்ளது. நம்மால் என்ன கண்டுபிடிக்கமுடியுமென பார்ப்போம்” என்றார்.
ஒரு நீண்ட விவாதத்திற்குப் பின், கெவினின் புதிய நண்பர் கேட்டார், “உங்கள் சபைக்கு குடும்பம் ஏன் அவ்வளவு முக்கியமாயிருக்கிறது?”
கெவின் சாதாரணமாக பதிலளித்தார், “நாம் மரித்த பின்பும், நாம் தொடர்ந்து வாழுவோம் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் முன்னோர்களை நாங்கள் அடையாளங்கண்டால், ஆலயமென அழைக்கப்படுகிற ஒரு பரிசுத்தமான இடத்திற்கு அவர்களுடைய பெயர்களை எடுத்துப்போய், மரணத்திற்குப் பின்னும் நமது குடும்பங்களை ஒன்றுசேர வைத்திருக்கும் திருமண நியமங்களை நாம் நடப்பிக்கலாம்.”7
அவருக்கும் அவருடைய புதிய நண்பருக்கும் பொதுவான ஒன்றை கெவின் ஆரம்பித்தார். பின்னர், இரட்சகரின் ஒளியைப்பற்றியும் அன்பைப்பற்றியும் சாட்சியளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
இரண்டாவது கதை, எல்லா என்ற கல்லூரி கூடைப்பந்து வீராங்கனையைப் பற்றியது. அவள் பள்ளியிலிருந்து வெளியேயிருந்தபோது, அவளுடைய ஊழிய அழைப்பை அவள் பெற்றபோது, அவளுடைய எடுத்துக்காட்டு ஆரம்பமானது. அவளுடைய குழுவுக்கு முன்னால் தன் அழைப்பைத் திறக்க அவள் தீர்மானித்தாள். இயேசு கிறிஸ்துவின் சபையைப்பற்றி, கிட்டத்தட்ட அவர்களுக்கு எதுவுமே தெரியாது, ஊழியம் செய்ய எல்லாவின் விருப்பத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தனது குழு உறுப்பினர்கள் பரிசுத்த ஆவியை உணரக்கூடிய ஒரு வழியில் அவளுடைய ஊழிய அழைப்பை எவ்வாறு விளக்குவது என்பதை அறிந்துகொள்ள அவள் மீண்டும் மீண்டும் ஜெபித்தாள். அவளுடைய பதில்?
எல்லா சொன்னாள், “நான் ஒரு பவர்பாயின்டை உருவாக்கினேன், ஏனெனில் நான் அவ்வளவு அமைதியானேன்.” 400-க்கும் மேற்பட்ட ஊழியங்கள் ஒன்றில் ஊழியம் செய்வதற்கான திறனைப்பற்றியும், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் சாத்தியத்தைப்பற்றியும் அவர்களுக்கு அவள் கூறினாள். ஏற்கனவே ஊழியம் செய்துகொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஊழியக்காரர்களைப்பற்றி அவள் சொன்னாள். இரட்சகரின் ஒரு படத்துடன், இந்த சுருக்கமான சாட்சியுடன் எல்லா முடித்தாள்: “என்னுடைய வாழ்க்கையில் கூடைப்பந்து மிக முக்கியமான காரியங்களில் ஒன்று. இந்த பயிற்சியாளருக்காகவும் இந்த அணியுடனும் விளையாட நான் நாடு முழுவதும் நகர்ந்து எனது குடும்பத்தினரை விட்டுப்போயிருக்கிறேன். என்னுடைய விசுவாசமும் எனது குடும்பமுமே கூடைப்பந்தாட்டத்தை விட எனக்கு மிக முக்கியமான இரண்டு காரியங்கள்.”8
“இவைகள் மிக அதிக 1000 வாட் எடுத்துக்காட்டுகள், ஆனால் நான் ஒரு 29 வாட் மின்விளக்கு” என ஒருவேளை நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், “நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன்”9 என இரட்சகர் சாட்சியளித்ததை நினைவுகூருங்கள். நாம் மற்றவர்களை அவரிடம் சுட்டிக்காட்டினால் அவர் ஒளியைக் கொண்டு வருவார் என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார்.
இப்போதே பகிர்ந்துகொள்ள உங்களிடமும் என்னிடமும் போதுமான ஒளி இருக்கிறது. இயேசு கிறிஸ்துவிடம் நெருக்கமாக செல்ல ஒருவருக்குதவ அடுத்த படிக்கு, பின்னர் அடுத்த படி, அடுத்த படி என நாம் ஒளியேற்றலாம்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், “அவர்களுக்குத் தேவையான பாதையைக் கண்டுபிடிக்க, ஆனால் பார்க்கமுடியாத, உங்களிடமுள்ள ஒளி தேவையாயிருப்பவர்கள் யார்?”
எனக்கன்பான நண்பர்களே, நம்முடைய ஒளியை பிரகாசிக்கப்பண்ணுவது ஏன் மிகமுக்கியமாயிருக்கிறது? “இன்னமும் பூமியில் எல்லா பிரிவுகளிலும் பலர் இருக்கிறார்கள் … ஏனெனில் அதை எங்கே காண்பதென அவர்கள் அறியாததால் அவர்கள் சத்தியத்திலிருந்து தடுக்கப்பட்டார்கள்.”10 என கர்த்தர் நமக்குக் கூறினார். நம்மால் உதவமுடியும். மற்றவர்கள் பார்க்கும்படியாக வேண்டுமென்றே நமது ஒளியை நாம் முன்வந்து பிரகாசிக்கமுடியும். நாம் ஒரு அழைப்பைக் கொடுக்கலாம். 11 எவ்வளவு நிறுத்தினாலும், இரட்சகரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுடன் நாம் பயணத்தை நடத்த முடியும். நம்மால் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க முடியும்.
ஒவ்வொரு சிறிய முயற்சியையும் கர்த்தர் பெரிதுபடுத்துவார் என்று நான் சாட்சியளிக்கிறேன். எதைச் சொல்லவேண்டும், எதைச் செய்யவேண்டுமென அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உணர்த்துவார். இத்தகைய முயற்சிகளுக்கு, நம்முடைய வசதியான பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டியதிருக்கலாம், ஆனால் நம்முடைய ஒளி பிரகாசிக்க கர்த்தர் உதவுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
வெளிப்படுத்தல் மூலமாக இந்த சபையை தொடர்ந்து வழிநடத்துகிற இரட்சகரின் வெளிச்சத்திற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், நம்மைச் சுற்றியுள்ளவர்களை இரக்கத்துடன் அறிந்து கொள்ளவும் நம் அனைவரையும் நான் அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவுக்கான வழியை மற்றவர்கள் காணும்படி உங்கள் ஒளி பிரகாசிக்க வாய்ப்புகளைத் தேடி, ஜெபிக்கவும். அவருடைய வாக்குத்தத்தம் பெரியது: “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”12 நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வழியும், சத்தியமும், ஜீவனும், ஒளியும், உலகத்தின் அன்பாயுமிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.