பொது மாநாடு
ஆசாரியத்துவம் இளைஞர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது
ஏப்ரல் 2020 பொது மாநாடு


2:3

ஆசாரியத்துவம் இளைஞர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது

பூமியின் சகல கண்டங்களுக்கும், சுவிசேஷத்தைப் போதிக்கவும், ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை வர உதவி செய்தும், நாம் தூதர்கள்போல ஊழியம் செய்ய சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளோம்.

சகோதர சகோதரிகளே, ஆசாரியத்துவத்தின் பரிசுத்த வரம் மற்றும் இந்த ஊழியக்காலத்தில் இளைஞரை ஆசீர்வதிக்க அது பெற்றுள்ள அற்புதமான வல்லமை பற்றியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாலையில் பேச நான் உண்மையாகவே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பரிபூரணமின்மை இருந்தாலும், சத்தியத்தை போதிப்பதில் ஆவியானவர் எனக்கு உதவ வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.

ஆரோனிய ஆசீர்வாதம் தரித்தவர்களுக்கு பிரதான தலைமை நினைவூட்டியிருக்கிறது, “மாபெரும் சந்தர்ப்பங்களும் சவால்களும் நிறைந்த, ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட நாளில் நீங்கள் வாழ்கிறீர்கள். ஆரோனிய ஆசாரியத்துவ நியமங்களை நிர்வகிக்க நீங்கள் அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள். அந்த அதிகாரத்தை நீங்கள் ஜெபத்துடனும் தகுதியுடனும் பயன்படுத்தும்போது, உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை நீங்கள் பெரிதும் ஆசீர்வதிப்பீர்கள்.” 1 சபையின் இளைஞராக நாம் “தேவனின் நேச [குமாரர்கள்] மற்றும் நாம் செய்ய அவரிடம் ஒரு பணி இருக்கிறது” எனவும், 2 “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டு வர அவரது பணியில் நாம் உதவி செய்கிறோம்” (மோசே 1:39) எனவும் நாம் நினைவூட்டப்பட்டிருக்கிறோம்.

அவற்றைப் பெற தகுதியுடையவர்களுக்கு இரட்சகரின் சுவிசேஷத்தின் நியமங்களையும் உடன்படிக்கைகளையும் நிர்வகிக்க ஆசாரியத்துவம்தான் அதிகாரமுடையதாகும். இந்த ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகள் மூலம் நமது தெய்வீக இலக்கை அடைய நமக்கு உதவுகிற இரட்சகரின் பாவநிவர்த்தியின் முழுமையான ஆசீர்வாதங்கள் வருகின்றன.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய தேவனால் அழைக்கப்பட்ட இளைஞன் ஜோசப் ஸ்மித்துக்கு, அந்த நோக்கத்துக்காக அனைத்து மனுக்குலத்தையும் ஆசீர்வதிக்க அவர் பயன்படுத்திய ஆசாரியத்துவம் கொடுக்கப்பட்டது. கோட்பாடுகளும் உடன்படிக்கைகளும் 135 இந்த ஊழியக்காலத்தில் இளைஞர்களுக்கு ஜோசப் கொடுத்த அநேக ஆசீர்வாதங்களை குறிப்பிடுகிறது. நாம் வாசிக்கிறோம், “இந்த உலகில் மனுஷரின் இரட்சிப்புக்காக, அதில் எப்போதும் வாழ்ந்த எந்த மனுஷனையும் விட, இயேசுவை மாத்திரம் தவிர, ஜோசப் ஸ்மித் … அதிகம் செய்திருக்கிறார். … அவர் மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டு வந்தார் …; நித்திய சுவிசேஷத்தின் முழுமையை …பூமியின் நான்கு திசைகளுக்கும் அனுப்பியிருக்கிறார்; கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் அடங்கியுள்ள வெளிப்படுத்தல்களையும் கட்டளைகளையும் வெளிக்கொண்டு வந்தார் … ; ஆயிரக்கணக்கான பிற்காலப் பரிசுத்தவான்களை கூட்டிச் சேர்த்தார், … சங்கரிக்கப்பட முடியாத பெயரையும் புகழையும் விட்டுச் சென்றார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3).

ஜோசப் செய்தது போல ஆற்றலுடன் சேவையாற்ற, நாம் கர்த்தரின் ஆசாரியத்துவ வல்லமையைப் பயன்படுத்த தகுதி பெற வேண்டும். மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்கும்போது, ஜோசப்பும் ஆலிவர் கௌட்ரியும் ஞானஸ்நானம் பெற விரும்பினர், ஆனால் முறையான அதிகாரம் அவர்களுக்கில்லை. மே 15, 1829ல், அவர்கள் ஜெபத்தில் முழங்கால் படியிட்டார்கள், யோவான் ஸ்நானனால் சந்திக்கப்பட்டார்கள், அவன் அவர்களுக்கு ஆரோனின் ஆசாரியத்துவ திறவுகோல்களையும் அதிகாரத்தையும் கொடுத்து, “என் சக ஊழியக்காரர்கள் மீது, மேசியாவின் நாமத்தில் ஆரோனின் ஆசீர்வாதத்தை நான் அருளுகிறேன், அது தேவ தூதர்களின் பணிவிடையையும், மனந்திரும்புதலின் சுவிசேஷத்தையும், பாவங்களை விட்டுவிடுவதற்காக மூழ்கடிக்கப்படுவதால் ஞானஸ்நானத்தையும் தரித்திருக்கிறது” என்றான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13).

பூமியின் சகல கண்டங்களுக்கும், சுவிசேஷத்தைப் போதிக்கவும், ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை வர உதவி செய்தும், நாம் தூதர்கள்போல ஊழியம் செய்ய சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளோம். இந்த சேவை நம்மை யோவான்ஸ்நானன், மரோனி, ஜோசப் ஸ்மித், தலைவர் ரசல் எம். நெல்சன் மற்றும் பிற கர்த்தரின் கருத்துள்ள ஊழியக்காரர்களுடன் இணைந்து பிரயாசப்பட நம்மை வைக்கிறது.

அவரது ஆசாரியத்துவத்திலும், அதனுடனும் நமது சேவை கறாராக கர்த்தரின் போதனைகளைப் பின்பற்றி வாழ்வது, அர்ப்பணிப்புடையவர்களை ஒன்றாக கொண்டு வருகிறது, இளமையின் சவால்களை நாம் எதிர்கொள்ளும்போது அது கடினமானது என நான் தனிப்பட்ட விதமாக அறிவேன். அவரது பணியை நிறைவேற்றுவதில் சக ஊழியர்களுடன் இணைவது சத்துருவின் தூண்டுதல்கள் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு எதிராக நம்மை பெலப்படுத்த உதவும். தங்களைப் பற்றி நிச்சயமில்லாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் கலங்கரை விளக்கத்தின் ஒளியாக இருக்க முடியும். உங்களுடன் நட்பில் இருப்பதால் மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படும்படியாக உங்களுக்குள் இருக்கும் ஒளி பிரகாசிக்கும். நமது ஆவிக்குரிய தோழமைகள் உடனிருப்பதை அங்கீகரிப்பது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் நான் ஒரு விசுவாசமிக்க ஆசாரியத்துவ குழுமத்தின் அங்கத்தினர் என அறிய நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு நெருக்கமாக வளர நான் அவர்களுடன் உழைக்க முடியும்.

நமது நண்பர்களுடனும் குடும்பத்துடனும், பரிசுத்த ஆவியானவர் நேர்மையான, நம்பத்தகுந்த தோழர்களில் ஒருவர். ஆனால் அவரது இடைவிடாத தோழமையை அழைக்க, அவர் இருக்க விரும்பும் சூழ்நிலைகளிலும் இடங்களிலும் நாம் நம்மை வைக்க வேண்டும். குடும்பமாக அன்றாட வேத படிப்பிலும் ஜெபத்திலும் பங்கேற்பதாலும், மிக முக்கியமாக வேதங்களை நாம் தனிப்பட்ட விதமாக படித்து நாமாகவே ஜெபிப்பதாலும் அதை ஒரு பரிசுத்த ஸ்தலமாக ஆக்க நாம் முயலும்போது, இது நமது சொந்த வீடுகளிலேயே தொடங்க முடியும்.

என்ஸோவும் அவரது சகோதரியும்
என்ஸோவும் அவரது குடும்பமும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஞானஸ்நானம் பெற அழைப்பை ஏற்று, சிலஸ்டியல் ராஜ்யத்தில் பிரவேசிக்க வறையறுக்கப்பட்ட ஒரு தேவையை நிறைவேற்ற உடன்படிக்கையின் பாதையில் முன்னேற என் இளைய சகோதரி ஓசியானுக்கு உதவ, ஒரு மகிழ்ச்சியான ஆனாலும் தாழ்மையான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டேன். நியமத்தை நிறைவேற்றும் சிலாக்கியத்தை எனக்கு கொடுக்கவும், எங்கள் பிற சகோதரிகள் ஆசாரியத்துவத்தால் பணிக்கப்படுவதின் கீழ் பணியாற்ற சிலாக்கியம் பெற்று சாட்சிகளாக நிற்கவும், ஆசாரியனாக நான் நியமிக்கப்படும் வரை தன் ஞானஸ்நானத்தை அவள் ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போட்டாள். நாங்கள் தொட்டியின் எதிர்பக்கங்களில் நின்று, தண்ணீரில் இறங்க ஆயத்தப்பட்டபோது, அவளது மகிழ்ச்சி என் மகிழ்ச்சிபோலிருந்ததால் நான் கவனித்தேன். அவள் சரியான முடிவை செய்கிறாள் என கண்டு, நான் அவளோடு ஒன்றிணைவதாக உணர்ந்தேன். ஆசாரியத்துவத்தைப் பிரயோகிக்க இந்த சந்தர்ப்பம் நான் அதிக கவனமாயிருக்கவும், என் சுவிசேஷ வாழ்க்கையில் கவனக்குறைவை குறைக்கவும் அதிக கவனம் எனக்கு தேவைப்பட்டது. ஆயத்தம் செய்ய மரித்தோருக்கு ஞானஸ்நானம் நிறைவேற்ற என் அம்மாவாலும் பாட்டியாலும், சகோதரியாலும் ஆதரிக்கப்பட்டு, அந்த வாரத்தில் நான் ஆலயத்துக்கு தினமும் சென்றேன்.

இந்த அனுபவம் ஆசாரியத்துவம் பற்றியும் அதை தகுதியாக நான் எப்படி பிரயோகிக்க முடியும் எனவும் எனக்கு அதிகம் கற்பித்தது. “சென்று செய்ய”(1 Nephi 3:7 பார்க்கவும்). நேபியின் உதாரணத்தை நாம் பின்பற்றினால் அனைத்து ஆசாரியத்துவம் தரித்தவர்களும் அதே காரியங்களை உணர முடியும் என நான் அறிகிறேன். நாம் சோம்பேறிகளாக இருந்து, அவரது மகத்தான பணியில் நம்மை கர்த்தர் பயன்படுத்த எதிர்பார்க்க முடியாது. நம்மைத் தேடும், நமது உதவி தேவைப்படுபவர்களுக்காக நாம் காத்திருக்கக்கூடாது, தேவனின் சாட்சிகளாக உதாரணமாக இருக்கவும் நிற்கவும் ஆசாரியத்துவம் தரித்தவர்களாக இது நமது கடமை. நமது நித்திய முன்னேற்றத்திலிருந்து நம்மை தடுக்கிற தீர்மானங்களை நாம் செய்வதாக இருந்தால், நாம் இப்போது மாற வேண்டும். அற்ப இன்பங்களை நாடும் மாம்ச நிலையில் நம்மை வைத்திருக்க சாத்தான் கடினமாக முயல்வான். எளிய இச்சைகளைத் தேடும் மாம்ச நிலையில் நம்மை வைத்திருக்க சாத்தான் கடுமையாக முயற்சிப்பான், ஆனால் நாம் முயன்றால், நம்மை ஆதரிப்பவர்களை கண்டால், ஒவ்வொரு நாளும் மனந்திரும்பினால், அதன் விளைவான ஆசீர்வாதங்கள் மதிப்புடையதாக இருக்கும், உடன்படிக்கையின் பாதையில் நாம் முன்னேறிச் செல்லும்போது நமது வாழ்க்கை என்றென்றுமாக மாறும் என நான் அறிவேன்.

இது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை, அவர் நமது இரட்சகர், ஆசாரியத்துவ திறவுகோல்களை தன் அப்போஸ்தலர்களுக்கு பொறுப்பளித்திருக்கிறார், விசேஷமாக இந்த சவால் நிறைந்த நாட்களில், அவர் திரும்பி வர உலகை ஆயத்தப்படுத்த நம்மை வழிநடத்த அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என நான் அறிவேன்.

ஜோசப் ஸ்மித் தேவனுடைய மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியாயிருந்தாரென்றும், இன்று, தலைவர் ரசல் எம். நெல்சன் நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியாக இருக்கிறாரென்றும் நான் சாட்சியளிக்கிறேன். இந்த மகத்தான ஆசாரியத்துவம் தரித்தவர்களின் வாழ்க்கையைப் படிக்கவும், நமது சிருஷ்டிகரை சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்கும்படிக்கும் தினமும் நம்மை முன்னேற்ற நாடவும் நாமனைவரையும் நான் அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. பிரதான தலைமை, Fulfilling My Duty to God (சிற்றேடு, 2010), 5.

  2. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 10.1.2, ChurchofJesusChrist.orgல், ஆரோனிய ஆசாரியத்துவ தலைப்பு.