“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்
நமது குடும்ப வாழ்க்கையால் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம், ஜோசப் ஸ்மித் அதில் வேறுபட்டவரல்ல. மறுஸ்தாபிதத்தை சாத்தியமாக்கிய. அவருடைய பெற்றோரின் மத நம்பிக்கைகளும் நடைமுறைகளும் விசுவாசத்தின் விதைகளை விதைத்தன. இந்த புகழாரத்தை ஜோசப்பின் குறிப்பிதழ் பதிவுசெய்திருக்கிறது: “எனக்கு மிகவும் மரியாதைக்குரிய பெற்றோரை வழங்கியதற்காக தேவனுக்கு நான் செலுத்த வேண்டிய நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளும் மொழியும் போதுமானதாக இல்லை.”
அவருடைய தாய் லூசி மாக் ஸ்மித், அவருடைய சகோதரர் வில்லியம் ஸ்மித்தின் பின்வரும் மேற்கோள்கள், மற்றும் ஸ்மித் வீட்டிலிருந்த மத செல்வாக்கைப்பற்றி தீர்க்கதரிசியே நமக்கு ஒரு பார்வையைக் கொடுக்கிறார்.
லூசி மாக் ஸ்மித்
“[ஏறக்குறைய 1802],ல் நான் நோய்வாய்ப்பட்டேன். … கிறிஸ்துவின் வழிகளை நான் அறியாதிருப்பதால் மரிப்பதற்கு நான் ஆயத்தமாயில்லை என நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், எனக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் ஒரு இருண்ட மற்றும் தனிமையான இடைவெளி இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது, அதைக் கடப்பதற்கு முயற்சிக்க எனக்கு துணிவில்லை. …
“நான் கர்த்தரை நோக்கிப் பார்த்து, என் பிள்ளைகளை வளர்க்கும்படியாகவும், என் கணவரின் இருதயத்தை ஆறுதல்படுத்தும்படியாகவும் என் ஜீவனை அவர் காப்பாற்றும்படியாக கர்த்தரிடம் நான் கெஞ்சினேன் மன்றாடினேன்; அப்படியாக இரவு முழுவதும் நான் படுத்திருந்தேன். … நான் வாழ அவர் அனுமதித்தால், அது வேதாகமத்திலிருந்தாலும், அல்லது வேறெங்கும் காணப்பட்டாலும், ஜெபத்தினாலும் விசுவாசத்தினாலும் பரலோகத்திலிருந்து அது பெறப்பட்டாலும், சரியான முறையில் அவருக்குச் சேவை செய்ய எனக்கு சாத்தியப்படுத்துகிற, அந்த மதத்தில் சேர நான் முயற்சிப்பேன் [என] நான் தேவனிடம் உடன்படிக்கை செய்தேன். இறுதியாக ஒரு குரல் என்னிடம் பேசி, ‘தேடு, நீ கண்டடைவாய், தட்டு, உனக்குத் திறக்கப்படும். உன் இருதயம் ஆறுதலடைவதாக. தேவனில் நீ விசுவாசமாயிருக்கிறாய், என்னிலும் விசுவாசமாயிரு.’ … எனச் சொல்லிற்று.
“இந்த நேரத்திலிருந்து நான் தொடர்ந்து பெலன் பெற்றேன். ஆனால் மதம் என்ற விஷயம் என் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தாலும், அதைப்பற்றி நான் சிறிதே சொன்னேன், மற்றும் பரலோக விஷயங்களில் எனக்கு அறிவுறுத்துவதற்கு, தேவனின் வழிகளை அறிந்த ஒரு பக்தியுள்ள நபரைத் தேட முடிந்தவுடன், நான் எல்லா விடாமுயற்சியையும் செய்வேன் என்று நினைத்தேன்”
வில்லியம் ஸ்மித்
“மிகவும் பயபக்தியான பெண்ணான, இப்போதும் இப்போதிலிருந்தும் அவருடைய பிள்ளைகளின் நல்வாழ்வில் மிக ஆர்வமுள்ள என்னுடைய தாய், நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பைத் தேடுவதில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள, அல்லது (அப்போதிருந்த அந்த பதத்தைப் போலவே) ‘மதத்தைப் பெறுவதில்’ அவளுடைய பெற்றோரின் அன்பு பரிந்துரைக்கும் ஒவ்வொரு வழியையும் பயன்படுத்தினார். எங்களைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வைப்பதில் அவர் ஜெயித்தார், ஏறக்குறைய இந்த விஷயத்தில் முழு குடும்பமும் ஆர்வமாயிருந்து, சத்தியத்தைத் தேடுபவர்களாயிருந்தோம்.”
“நான் நினைவுகூர முடிந்ததிலிருந்து நாங்கள் எப்போதும் குடும்ப ஜெபம் செய்தோம். வழக்கமாக, அப்பா தனது கண்ணாடியை தனது சட்டைப் பையில் வைத்திருந்து, அவர் கண்ணாடியை தொடுவதை சிறுவர்களாகிய நாங்கள் பார்க்கும்போது, ஜெபத்திற்கு ஆயத்தப்படுவதற்கான அது ஒரு சமிக்ஞை என எங்களுக்குத் தெரியும், அதை நாங்கள் கவனியாதிருந்தால், ‘வில்லியம்’ அல்லது யார் கவனக்குறைவாயிருந்தாலும் ‘ஜெபத்திற்கு தயாராகுங்கள்’ என அம்மா சொல்வார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஜெபத்திற்குப் பின்னர் நாங்கள் பாடவேண்டிய ஒரு பாடல் எங்களுக்குண்டு”.
வேதங்களைப் படிக்க ஜோசப் மூத்தவரும் லூசி ஸ்மித்தும் தங்கள் குடும்பத்தினருக்குக் கற்றுக்கொடுத்தனர்.
ஜோசப் ஸ்மித்
“உயர் பண்பில்லாதது என சொல்லக்கூடிய ஒரு இழிவான செயலை, எனக்கு அறிவு தெரிந்தவரை, அவருடைய வாழ்க்கையில் என்னுடைய தகப்பன் ஒருபோதும் செய்ததில்லை, என இப்போது நான் சொல்வேன். என்னுடைய தகப்பனையும் அவருடைய நினைவுகளையும், நான் நேசித்தேன், அவரது உத்தம செயல்களின் நினைவு எனது மனதின்மேல் அற்புதமான பாரத்துடன் இருக்கிறது, அவரது அநேக அன்பான, எனக்குக் கொடுக்கப்பட்ட பெற்றோரின் வார்த்தைகள் என் இதயப் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றன. நான் போற்றுகிற அவருடைய வாழ்க்கை வரலாற்றின் சிந்தனைகள் எனக்குப் புனிதமானது, அவை என் மனதில் உருண்டு, நான் பிறந்ததிலிருந்து எனது சொந்த அவதானிப்பால் வைக்கப்பட்டுள்ளன. … எனது தாயும் உத்தமமானவர்களில் ஒருவர், எல்லா பெண்களிலும் சிறந்தவர்.”