“ஜனுவரி 6–12: ‘ஜனங்களே கேளுங்கள்’ கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
ஜனுவரி 6–12: “ஜனங்களே கேளுங்கள்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1
நவம்பர் 1831ல், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஒன்றரை வயதே ஆகியிருந்தது. வளர்ந்து வந்தாலும், இருபதுகளின் நடுப்பகுதியில் இருந்த ஒரு தீர்க்கதரிசியின் தலைமையில், ஒப்பீட்டளவில் சிறிய நகரங்களில் வாழும் அதிகம் அறியப்படாத விசுவாசிகளின் ஒரு சிறிய குழுவாக அது இருந்தது. ஆனால் தேவன் இந்த விசுவாசிகளை தனது ஊழியர்களாகவும், அவருடைய தூதுவர்களாகவும் கருதினார், மேலும் அவர் அவர்களுக்கு வழங்கிய வெளிப்பாடுகள் உலகிற்கு வெளியிடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 1 என்பது இந்த வெளிப்பாடுகளுக்கு கர்த்தரின் முன்னுரை அல்லது அறிமுகம். சபையின் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், தேவன் தம் பரிசுத்தவான்கள் பகிர்ந்து கொள்ள விரும்பிய செய்தியில் சிறியதாக எதுவும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. மனம்திரும்பவும் தேவனின் “நித்திய உடன்படிக்கை” நிலைவரப்படும்படிக்கும் அவர்களுக்கு போதித்த இது “பூமியின் குடிகளுக்கு” ஒரு “எச்சரிக்கையின் குரலாயிருந்தது” (வசனங்கள் 4, 8, 22). இந்த செய்தியை எடுத்துச் சென்ற ஊழியக்காரர்கள் “பெலவீனராயும் பேதையருமாயிருந்தனர்,” ஆனால் அவருடைய சபையை இருளிலிருந்தும் அந்தகாரத்திலிருந்தும், வெளியே கொண்டுவர, —அப்போதும் இப்போதும்—தாழ்மையான ஊழியக்காரர்களை தேவன் அழைக்கிறார்.” (வசனங்கள் 23, 30).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
“ஜனங்களே கேளுங்கள்”
ஒரு முன்னுரை ஒரு புஸ்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. புஸ்தகத்தின் கருத்துக்களையும் நோக்கங்களையும் இது அடையாளங்கண்டு வாசிக்க வாசகர்கள் ஆயத்தப்பட உதவுகிறது. பாகம் 1— கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் கர்த்தருடைய முன்னுரையை நீங்கள் (வசனம் 6) வாசிக்கும்போது அவருடைய வெளிப்படுத்தல்களுக்காக கர்த்தர் கொடுத்த தலைப்புக்களையும் நோக்கங்களையும் தேடவும். இந்த ஆண்டு கோட்பாடும் உடன்படிக்கைகளும் பற்றிய உங்கள் படிப்புக்கு உதவும் எதை நீங்கள் கற்கிறீர்கள்? உதாரணமாக, இந்த வெளிப்படுத்தல்களில் “கர்த்தருடைய சத்தத்தை கேட்க” என்பதன் அர்த்தமென்ன என சிந்திக்க (வசனம் 14) அல்லது “இந்த கட்டளைகளை ஆராய” நீங்கள் சிந்திக்கக்கூடும் (வசனம் 37).
கோட்பாடும் உடன்படிக்கைகளுமுக்கான முன்னுரையையும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:4–6, 23–24; 37–39
பிற்கால தீர்க்கதரிசிகள் உட்பட, கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்கள் மூலம் பேசுகிறார்.
அவர் தெரிந்துகொண்ட ஊழியக்காரர்கள் மூலமாக அவர் பேசுகிறார் என்ற கர்த்தரின் பிரகடனத்துடன் பாகம் 1 ஆரம்பமாகி முடிவடைகிறது (வசனங்கள் 4–6, 23–24, 38 பார்க்கவும்). இந்த வெளிப்படுத்தலிலிருந்து நீங்கள் கற்றவை பற்றி எழுதவும்:
-
கர்த்தரும் அவரது குரலும்
-
நம் நாளில் தீர்க்கதரிசிகள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
நீங்கள் கண்டுபிடித்ததன் விளைவாக செய்ய தூண்டப்படுகிற எதை நீங்கள் உணருகிறீர்கள்?
அவருடைய ஊழியக்காரர்களின் சத்தத்தில் கர்த்தருடைய சத்தத்தை நீங்கள் எப்போது கேட்டீர்கள்? (வசனம் 38 பார்க்கவும்).
ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளைப் பற்றி அறியாத ஒரு நண்பர் உங்களுடன் பாகம் 1 வாசிக்கிறார் என்றும் நீங்கள் கற்பனை செய்யலாம். உங்கள் நண்பரிடம் என்ன கேள்விகள் இருக்கலாம்? நம் நாளில் தீர்க்கதரிசிகள்இருப்பதைப்பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவன் அல்லது அவளுக்கு உதவ உங்கள் நண்பரிடம் எந்த வசனங்களைப் பற்றி கலந்துரையாட விரும்புகிறீர்கள்?
ஜோசப் ஸ்மித்தின் வெளிப்பாடுகளை வெளியிடுவது பற்றி பேசுவதற்காக 1831 ஆம் ஆண்டில் மூப்பர்கள் குழு ஒன்று கூடியபோது, சிலர் அந்த யோசனையை எதிர்த்தனர் என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். எழுதுவதில் ஜோசப்பின் பலவீனத்தால், வெளிப்பாடுகளை வெளியிடுவது பரிசுத்தவான்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கவலைப்பட்டனர் ( Saints, 1:140–43 பார்க்கவும்). நீங்கள் இந்த குழுவில் உறுப்பினராக இருந்திருந்தால், இந்தக் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்திருப்பீர்கள்? பாகம் 1ல் என்னென்ன உள்ளுணர்வுகள் உங்களுக்கு உதவியிருக்கலாம் என காண்கிறீர்கள்? (உதாரணமாக, வசனங்கள் 6, 24, 38 பார்க்கவும்).
உங்கள் படிப்பிலும் ஆராதனையிலும் “Come, Listen to a Prophet’s Voice( Hymns, no. 21) சேர்ப்பதை கருத்தில் கொள்ளுங்கள். பாகம் 1ல் உள்ள வசனங்களைப் போன்ற அதே கொள்கைகளை பாடலில் உள்ள சொற்றொடர்களில் தேடுங்கள்.
கருத்துகளையும் கேள்விகளையும் பார்க்கவும், “Prophets,” Gospel Library.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:12–30, 34–36
மறுஸ்தாபிதம் பிற்கால சவால்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1ல், அவர் ஏன் தனது சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்தார் என்பதை கர்த்தர் விளக்குகிறார். 12–23 வசனங்களைப் வாசிக்கும்போது எத்தனை காரணங்களை பட்டியலிடலாம் என்பதைப் பாருங்கள். உங்கள் அனுபவத்தில், மறுஸ்தாபிதத்துக்கான கர்த்தரின் நோக்கங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன?
நம்முடைய நாளில் கடுமையான சவால்கள் இருக்கும் என்பதை கர்த்தர் அறிந்திருந்தார் ( வசனம் 17 பார்க்கவும்). இந்த சவால்கள் இருந்தபோதிலும் 17–30, 34–36ல் நீங்கள் சமாதானம் மற்றும் தன்னம்பிக்கையை உணர உதவுகிற எதைக் காண்கிறீர்கள்?
ரசல் எம்.நெல்சன், “Embrace the Future with Faith,” Liahona, Nov. 2020, 73–76 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:19–28.
கர்த்தர் தம் வேலையைச் செய்ய “பலவீனமானவர்களையும் எளியவர்களையும்” பயன்படுத்துகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:19–28 நீங்கள் வாசிக்கும்போது, கர்த்தரின் ஊழியன் என்றால் என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம். கர்த்தர் தன் ஊழியர்கள் என்ன குணாதிசயங்களைக் கொண்டிருக்க விரும்புகிறார்? கர்த்தர் தன் ஊழியர்கள் மூலம் என்ன சாதிக்கிறார்? இந்த வசனங்களில் உள்ள தீர்க்கதரிசனங்கள் உலகம் முழுவதும் மற்றும் உங்கள் வாழ்வில் எவ்வாறு நிறைவேறுகிறது?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:4; 37–39.
தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம், ஆவிக்குரிய ஆபத்தைப் பற்றி கர்த்தர் என்னை எச்சரிக்கிறார்.
-
கர்த்தரிடமிருந்து வரும் எச்சரிக்கைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடங்க, நம்மால் பார்க்க முடியாத ஆபத்துகளைப் பற்றி மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் எச்சரிக்கைகளைப் பற்றி நீங்கள் பேசலாம். சில எடுத்துக்காட்டுகளில் வழுக்கும் தரை, வரவிருக்கும் புயல் அல்லது நெருங்கி வரும் கார் ஆகியவை அடங்கும். ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் எச்சரிக்கை அறிகுறிகளின் உதாரணங்களைப் பார்த்து, இந்த எச்சரிக்கைகளை கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கைகளுடன் ஒப்பிடலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:4, 37–39ன்படி, கர்த்தர் நம்மை எவ்வாறு எச்சரிக்கிறார்? சமீபத்தில் அவர் எதைக் குறித்து நம்மை எச்சரித்தார்? ஒருவேளை சமீபத்திய பொது மாநாட்டின் செய்திகளின் பகுதிகளை நீங்கள் பார்த்து அல்லது வாசிக்கக்கூடுமானால், தேவனுடைய “எச்சரிக்கைக் குரலின்” எடுத்துக்காட்டுகளைத் தேடவும்.
-
“Follow the Prophet” (Children’s Songbook, 111)இன் கடைசி வரி போன்ற தீர்க்கதரிசிகளைப் பற்றிய பாடலை ஒன்றாகப் பாடுங்கள். தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையைப் பேசுகிறார் என்பதற்கு உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17
மறுஸ்தாபிதம் பிற்கால சவால்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகிறது.
-
.கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 1:17 பற்றிய கலந்துரையாடலை ஊக்குவிக்க, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒரு பயணத்திற்கு தயாராகி வருவதை கற்பனை செய்யலாம். நீங்கள் என்ன பேக் செய்வீர்கள்? மழை பெய்யும் அல்லது உங்கள் கார் அல்லது பேருந்தின் டயர் பஞ்சர் ஆகிவிடும் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தால், பயணத்திற்கு நீங்கள் தயாராகும் விதத்தை அது எவ்வாறு பாதிக்கும்? வசனம் 17ஐ ஒன்றாகப் படியுங்கள், நமக்கு என்ன நடக்கும் என்று கர்த்தர் அறிந்ததைப் பற்றி பேசுங்கள். அதற்கு அவர் எவ்வாறு தயார் செய்தார்? (தேவைப்பட்டால், “சீர்குலைப்பு” ஒரு பேரழிவு அல்லது பயங்கரமான விஷயம் என்பதை விளக்குங்கள்.) நம்முடைய காலத்தின் சவால்களைச் சமாளிக்க தேவனுடைய கட்டளைகள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17, 29
கர்த்தர் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக இருக்க அழைத்தார்.
-
இரட்சகரின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதில் ஜோசப் ஸ்மித்தின் பங்கைப் பற்றி அறிய, நீங்களும் உங்கள் குழந்தைகளும் இரட்சகரின் படத்தையும் ஜோசப் ஸ்மித்தின் படத்தையும் பார்த்து (இந்த குறிப்பில் உள்ள படங்களைப் பார்க்கவும்) ஜோசப் ஸ்மித் மூலம் இரட்சகர் நமக்குக் கொடுத்ததைப் பற்றி பேசலாம். உங்கள் பிள்ளைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17, 29 இல் உதாரணங்களைத் தேடலாம். தேவன் “எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை அழைத்து, பரலோகத்திலிருந்து அவனோடு பேசியதை,”நீங்கள் எப்படி அறிவீர்கள் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள் (வசனம் 17).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:30
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் கர்த்தரின்“உண்மையான ஜீவனுள்ள சபை.”
-
சபை “உண்மையாகவும் ஜீவனுள்ளதுமாயுமிருக்கிறது” என சொல்வதன் அர்த்தமென்ன? இந்தக் கேள்வியைப்பற்றி உங்கள் பிள்ளைகள் சிந்திக்க வைக்க, ஒருவேளை உயிருள்ள பொருட்களையும் உயிரற்ற பொருட்களையும் நீங்கள் அவர்களுக்குக் காட்டலாம்-உயிரோடிருக்கும் மற்றும் பட்டுப்போன செடியைப்போல ஏதோ ஒன்று உயிருள்ளது என்பதை எப்படி அறியலாம்? பின்னர் நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:30 ஐப் படித்து, சபை “உண்மையானது மற்றும் ஜீவனுள்ளது” என்றால் என்ன என்பதைப் பற்றி பேசலாம்.