“ஜூலை 7–13: ‘அவர்களுடைய பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய மகிமை நித்தியமாயிருக்கும்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76, ”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
ஜூலை 7–13: “அவர்களுடைய பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய மகிமை நித்தியமாயிருக்கும்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76.
“நான் இறந்த பிறகு எனக்கு என்ன நடக்கும்?” ஏறக்குறைய எல்லோரும் இந்த கேள்வியை ஏதோ ஒரு வடிவத்தில் கேட்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக, பல கிறிஸ்தவ மரபுகள், வேதாகம போதனைகளை நம்பி, பரலோகத்தையும் நரகத்தையும், நீதிமான்களுக்கு சொர்க்கத்தையும், துன்மார்க்கருக்கு வேதனையையும் கற்பித்தன. ஆனால் முழு மனித குடும்பத்தையும் உண்மையில் இவ்வளவு கண்டிப்பாக பிரிக்க முடியுமா? பிப்ருவரி 1832ல், ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் ஆகியோர் இந்த விஷயத்தில் அதிகம் தெரிந்து கொள்ள உள்ளதா என்று ஆச்சரியப்பட்டனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76, பாகத் தலைப்பு பார்க்கவும்).
நிச்சயமாக இருந்தது. ஜோசப்பும் சிட்னியும் இந்தக் காரியங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தர் “[அவர்களுடைய] புரிதல்களின் கண்களைத் தொட்டார், அவைகள் திறக்கப்பட்டன” ( வசனம் 19). அவர்கள் மிகவும் பிரமிக்க வைக்கும், மிகவும் விரிவான, ஒளிமயமான ஒரு வெளிப்பாட்டைப் பெற்றனர், பரிசுத்தவான்கள் அதை வெறுமனே “தரிசனம்” என்று அழைத்தனர். இது பரலோகத்தின் ஜன்னல்களை திறந்து, தேவனின் பிள்ளைகளுக்கு மனதுக்கு விரிவான நித்தியத்தைப்பற்றிய மனதைக் கவரும் காட்சியைக் கொடுத்தது. பெரும்பாலான மக்கள் முன்பு நினைத்ததை விட பரலோகம் மிகப் பெரியது, விசாலமானது, மேலும் அனைத்தையும் உள்ளடக்கியது என்று தரிசனம் வெளிப்படுத்தியது. தேவன், நாம் புரிந்துகொள்ளக்கூடியதை விட மிகவும் இரக்கமுள்ளவர் மற்றும் நீதிபரர். தேவனின் பிள்ளைகளுக்கு நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மகிமையான ஒரு நித்திய இலக்கு உண்டு.
Saints, 1:147–50; “The Vision,” Revelations in Context, 148–54 பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76
இரட்சிப்பு தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிறது.
பாகம் 76 நமது நித்திய இலக்கைப் பற்றிய முக்கியமான சத்தியங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் இந்த வெளிப்பாடு மகிமையின் மூன்று ராஜ்யங்களைப் பற்றியது அல்லது இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றியது என்று கூறுவது முழுமையடையாது. இன்னும் துல்லியமாக, பாகம் 76 இயேசு கிறிஸ்துவைப் பற்றியது, அவர் நம்முடைய இரட்சிப்பு மற்றும் நித்திய மகிமைக்கான தேவனின் திட்டத்தை சாத்தியமாக்குகிறார். நீங்கள் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவுக்கும் மகிமையின் வெவ்வேறு ராஜ்யங்களைச் சுதந்தரிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவை விவரிக்கும் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை நீங்கள் தேடலாம். நீங்கள் கண்டறிவதைப் பதிவுசெய்ய பின்வரும் அட்டவணை உங்களுக்கு உதவக்கூடும்.
மகிமையின் ராஜ்ஜியங்கள் |
இயேசு கிறிஸ்துவுடன் உறவு |
நித்திய ஆசீர்வாதங்கள் |
---|---|---|
மகிமையின் ராஜ்ஜியங்கள் சிலஸ்டியல்: (வசனங்கள் 50–70, 92–96) | இயேசு கிறிஸ்துவுடன் உறவு
| நித்திய ஆசீர்வாதங்கள்
|
மகிமையின் ராஜ்ஜியங்கள் டிரஸ்ட்ரியல் (வசனங்கள் 71–79, 97) | இயேசு கிறிஸ்துவுடன் உறவு | நித்திய ஆசீர்வாதங்கள் |
மகிமையின் ராஜ்ஜியங்கள் டிலஸ்டியல் (வசனங்கள் 81–90, 98–106, 109–12) | இயேசு கிறிஸ்துவுடன் உறவு | நித்திய ஆசீர்வாதங்கள் |
இரட்சகருடனான உங்கள் உறவைப் பலப்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்?
இந்த தரிசனத்தை வில்போர்ட் உட்ரப் படித்தபோது, அவர் சொன்னார், “என் வாழ்க்கையில் முன்பை விட கர்த்தரை நேசிப்பதை உணர்ந்தேன்” (மறுஸ்தாபித்த்தின் குரல்கள்: தரிசனம் பற்றிய சாட்சிகள்” பார்க்கவும்). வசனங்கள் 1–5, 20–24, 39–43, 107–8 நீங்கள் அவரை அதிகமாக நேசிக்க , இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
See also 1 பேதுரு 3:18–19; 4:6; Dallin H. Oaks, “What Has Our Savior Done for Us?,” Liahona, May 2021, 75–77; “I Stand All Amazed,” Hymns, no. 193.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:5–10, 114–18
“பரிசுத்த ஆவியின் வல்லமையால்” நான் தேவ சித்தத்தை அறியமுடியும்.
சபையின் அனைத்து உறுப்பினர்களும் பாகம் 76ல் உள்ள வெளிப்பாட்டை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் மற்றும் ஓரளவு மகிமையைப் பெறுவார்கள் என்று அது கற்பித்தது. உதாரணமாக, ப்ரிகாம் யங் கூறினார்: “எனது பாரம்பரியங்கள் அப்படிப்பட்டவை, தரிசனம் எனக்கு முதலில் வந்தபோது, அது எனது முந்தைய புரிதலுக்கு நேர் எதிராகவும் எதிர்க்கவும் செய்தது. நான் சொன்னேன், கொஞ்சம் பொறுங்கள். நான் அதை நிராகரிக்கவில்லை; ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.” அதை எனக்கு நானே அறிந்து முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை “சிந்திக்கவும் ஜெபிக்கவும், வாசிக்கவும் சிந்திக்கவும் வேண்டியதாயிருந்தது”, ” (in “The Vision,” in Revelations in Context, 150) என்று அவர் விளக்கினார். உங்களுடைய தற்போதைய புரிதலிலிருந்து வேறுபட்ட விஷயங்களை தேவன் வெளிப்படுத்தும்போது உங்களுக்கு உதவக்கூடிய அவருடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:5–10, 114–18இல் தேவனைப் பற்றி என்ன கற்கிறீர்கள்? “[தேவனின்] நல் மகிழ்ச்சியின் சித்தத்தை” நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி இந்த வசனங்கள் என்ன கற்பிக்கின்றன? (வசனம் 7).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:39–44, 50–70
மேன்மையடைதல் என்பது இரட்சிப்பின் மிக உயர்ந்த வடிவம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:39–44 பொதுவாக இரட்சிப்பை விவரிக்கிறது. வசனங்கள் 50–70 மேன்மையை விவரிக்கிறது, ஒரு குறிப்பிட்ட வகையான இரட்சிப்பு. இரட்சிப்புக்கும் மேன்மையடைதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? இரண்டிலும் இரட்சகரின் பங்கு என்ன? இந்த வசனங்களில் மேன்மையடைதலைத் தேட உங்களுக்கு உணர்த்துவது என்ன?
யோவான் 3:16–17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:20–25ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:50–70, 92–95.
என் பரலோக பிதா நான் சிலஸ்டியல் ராஜ்யத்தில் நித்திய ஜீவனைப் பெற விரும்புகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:50–70, 92–95 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் சிலஸ்டியல் மகிமையைப் பெறும் வகையான நபராக மாற முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது கவலைப்படுகிறீர்களா? தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிவது முக்கியம் என்றாலும், தேவன் நமக்காக என்ன செய்தார்—மற்றும் செய்துகொண்டிருக்கிறார்—அவரைப் போல் ஆக நமக்கு உதவ இந்த வசனங்களைப் பார்ப்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் முயற்சிகள் அவருக்கு முக்கியமானதாக நீங்கள் ஏன் உணர்கிறீர்கள்?
சிலஸ்டியல் மகிமையின் இந்த தரிசனம் நீங்கள் பார்க்கும் மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ விரும்பும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?
மோசே 1:39; J. Devn Cornish, “Am I Good Enough? பார்க்கவும். Will I Make It?,” Liahona, Nov. 2016, 32–34.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:24
நாம் அனைவரும் தேவனின் பிள்ளைகள்.
-
உங்கள் பிள்ளைகளின் தெய்வீக ஆற்றலைப் புரிந்துகொள்ள உதவ, பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் படங்களை அவர்களுக்குக் காட்டலாம். நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:24 ஐ வாசித்து, நாம் அனைவரும் “தேவனின் புத்திரரும் புத்திரிகளுமாயிருக்கிறோம்” என்பதை அறிந்துகொள்வதில் நீங்கள் ஏன் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.
-
“I Am a Child of God” (Children’s Songbook, 2–3) நீங்களும் சேர்ந்து பாடலாம், மேலும் உங்கள் பிள்ளைகள் “I,” நான் என்று பாடும் போது தங்களை சுட்டிக்காட்டும்படி அவர்களை அழைக்கவும். “நான்” என்பதற்குப் பதிலாக “நீ” என்று வேறு ஒருவரைக் காட்டி மீண்டும் பாடலைப் பாடுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:5, 41–42, 69
இயேசு கிறிஸ்து என் இரட்சகர்.
-
“இயேசு கிறிஸ்து எனக்காக என்ன செய்தார்?” என்று ஒருவர் கேட்கும் ஒரு சூழ்நிலையில் உங்கள் குழந்தைகளுடன் நடிப்பதைக் கருத்தில் கொள்ளவும். பாகம் 76இல் வசனங்கள் 5, 41–42, அல்லது 69 , நீங்களும் உங்கள் குழந்தைகளும் சாத்தியமான பதில்களைத் தேடலாம். “He Sent His Son,” Children’s Songbook, 34–35 ஐயும் நீங்கள் பாடலாம். இரட்சகர் நமக்காகச் செய்ததற்கு நாம் எப்படி நன்றியைக் காட்டலாம்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:62
பரலோக பிதா நான் அவருடன் என்றென்றும் வாழ திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் “அத்தியாயம் 26: பலோகத்தின் மூன்று ராஜ்யங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகளில், 97–103, அல்லது சுவிசேஷ நூலகத்தில் தொடர்புடைய காணொலி) மற்றும் ஜோசப் ஸ்மித்தின் தரிசனம் பற்றி நீங்கள் விரும்புவதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். பரலோக ராஜ்யத்தில் பரலோக பிதாவுடன் வாழ்வது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்கள் பிள்ளைகள் பகிர்ந்து கொள்ளட்டும்.
-
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:62 ஐ வாசித்து, பரலோக ராஜ்யத்தில் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் தங்கள் படங்களை வரைய உங்கள் குழந்தைகளை அழைக்கலாம் (இந்த வார நிகழ்ச்சிப் பக்கத்தைப் பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:12, 15–19, 114–16
வசனங்களைப் படிப்பது, “தேவனுடைய காரியங்களைப் புரிந்துகொள்ள” எனக்கு உதவும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76இல் ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் தரிசனத்தைப் பார்த்தபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதைக் கண்டறிய வசனங்கள் 15–19 வாசிக்க உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைக்கலாம். வசனங்களை வாசிக்கும்போது நீங்கள் உணர்த்துதல் பெற்ற காலத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததா என்று கேளுங்கள்.