“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ‘தரிசனம்’ பற்றிய சாட்சியங்கள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக:: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“‘தரிசனம்’ பற்றிய சாட்சியங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: “தரிசனம்” பற்றிய சாட்சியங்கள்
வில்போர்ட் உட்ரப்
வில்போர்ட் உட்ரப், டிசம்பர் 1833ல் சபையில் சேர்ந்தார், ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் தரிசனம் பெற்ற ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76ல் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நியூயார்க்கில் வசித்து வந்த அவர், அப்பகுதியில் பணியாற்றும் ஊழியக்காரர்களிடமிருந்து “தரிசனம்” பற்றி அறிந்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்த வெளிப்பாட்டைப்பற்றிய தனது எண்ணங்களைப்பற்றி பேசினார்:
“என் குழந்தை பருவத்திலிருந்தே ஒரு பரலோகமும் ஒரு நரகமும் இருப்பதாக நான் கற்பிக்கப்பட்டேன், பொல்லாத அனைவருக்கும் ஒரே தண்டனையும் நீதிமான்களுக்கு ஒரு மகிமையும் இருப்பதாக நான் போதிக்கப்பட்டேன்.”
“… நான் தரிசனத்தை வாசித்தபோது … , அது என் மனதை தெளிவாக்கியது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, அந்த கொள்கையை மனிதனுக்கு வெளிப்படுத்திய தேவன் ஞானமுள்ளவர், நியாயமானவர், உண்மையானவர், சிறந்த பண்புகளையும் நல்ல புத்தியையும் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. மற்றும் அவர் அறிவு, அன்பு, இரக்கம், நீதி மற்றும் தீர்ப்பு ஆகிய அனைத்துக்கும் உறுதியாயிருக்கிறார் என்று நான் உணர்ந்தேன், என் வாழ்க்கையில் முன்பை விட கர்த்தரை நேசிப்பதை உணர்ந்தேன்.”
“தரிசனம்’ என்பது நாம் வாசித்த வேறு எந்த புத்தகத்திலும் உள்ள எந்த வெளிப்பாட்டையும் விட அதிக ஒளி, அதிக உண்மை மற்றும் அதிக கொள்கையை வழங்கும் ஒரு வெளிப்பாடு ஆகும். இது நம்முடைய தற்போதைய நிலை, நாம் எங்கிருந்து வந்தோம், ஏன் இங்கே இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதை இது தெளிவுபடுத்துகிறது. எந்தவொரு மனிதனும் அந்த வெளிப்பாட்டின் மூலம் அவனது பங்கும் நிலையும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.”
“நான் ஜோசப்பைப் பார்ப்பதற்கு முன்பு, அவர் எவ்வளவு வயதானவர், அல்லது அவர் எவ்வளவு இளமையாக இருக்கிறார் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னேன்; அவர் எப்படி இருக்கிறார் என்று எனக்கு கவலையில்லை, அவரது தலைமுடி நீளமாக இருந்தாலும் குறுகியதாக இருந்தாலும் சரி; அந்த வெளிப்பாட்டை முன்வைத்த [பாகம் 76ல் பதிவு செய்யப்பட்ட தரிசனம்] மனிதன் தேவனின் தீர்க்கதரிசி. அதை நானே அறிந்தேன்.“
பெபே கிராஸ்பி பெக்
பெபே பெக் ஜோசப் மற்றும் சிட்னி “தரிசனம்” பற்றி போதிப்பதைக் கேட்டபோது, அவர் மிசௌரியில் வசித்து வந்தார், ஐந்து குழந்தைகளை தனிமையான தாயாக வளர்த்தாள். அந்த தரிசனம் அவளை மிகவும் கவர்ந்தது மற்றும் ஊக்கப்படுத்தியது, அவள் கற்றுக்கொண்டவற்றை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள பின்வருவனவற்றை எழுதினாள்:
“கர்த்தர் பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை தன் பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார். … ஜோசப் ஸ்மித் மற்றும் சிட்னி ரிக்டன் ஆகியோர் கடந்த வசந்த காலத்தில் எங்களை சந்தித்தனர், அவர்கள் இங்கு இருந்தபோது நாங்கள் பல மகிழ்ச்சியான சந்திப்புகளை நடத்தினோம், எங்கள் பார்வைக்கு பல இரகசியங்கள் திறக்கப்பட்டன, இது எனக்கு மிகுந்த ஆறுதலளித்தது. அவருடைய குழந்தைகளுக்கு சமாதான மாளிகைகளை ஆயத்தம் செய்வதில் தேவனின் இரக்கமான அன்பை நாம் காணலாம். சுவிசேஷத்தின் முழுமையைப் பெறாத, கிறிஸ்துவின் நோக்கத்திற்காக பராக்கிரமம் மிக்க வீரர்களாக நிற்காத யாரும், பிதா மற்றும் குமாரனின் முன்னிலையில் வாசம் பண்ண முடியாது. ஆனால் பெறாத அனைவருக்கும் ஒரு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது சிலஸ்டியல் ராஜ்யத்தில் வசிப்பதை விட மிகக் குறைவான மகிமைக்குரிய இடமாகும். இந்த விஷயங்கள் இப்போது அச்சிடப்பட்டு உலகுக்குச் செல்வதால் அவற்றைப்பற்றி நான் அதிகம் சொல்ல முயற்சிக்க மாட்டேன். நீங்களே வாசிப்பதற்கான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள், நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் கவனமாகவும் ஜெபமுள்ள இருதயத்துடனும் வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் இந்த விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. நீங்கள் அவற்றைத் தேட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் இந்த உலகத்திலும் வரவிருக்கும் உலகத்திலும் நமது மகிழ்ச்சிக்கு இது உதவுகிறது. “