“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: முன்னோருக்கான ஞானஸ்நானம், ‘மகிமையான கோட்பாடு,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“முன்னோருக்கான ஞானஸ்நானம், ‘மகிமையான கோட்பாடு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
முன்னோருக்கான ஞானஸ்நானம், “மகிமையான கோட்பாடு”
பெப் மற்றும் வில்போர்ட் உட்ரப்
ஜோசப் ஸ்மித் முன்பு வாழ்ந்தவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கற்பிக்கத் தொடங்கியபோது, பெப் உட்ரப் நாவூவுக்கு அருகில் வசித்து வந்தார். இங்கிலாந்தில் ஒரு ஊழியத்தில் சேவையாற்றி வந்த தனது கணவர் வில்போர்டுக்கு அவர் இதைப்பற்றி எழுதினார்:
“சகோதரர் ஜோசப்… இந்த சபையில் உள்ளவர்களின் மரித்த உறவினர்கள், இந்த சுவிசேஷத்தைக் கேட்கும் சிலாக்கியம் இல்லாத, அவர்களின் பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகள் எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கலாம் என வெளிப்படுத்தல் மூலம் அறிந்திருக்கிறார். … அவர்கள் தங்கள் நண்பர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றவுடன் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் உயிர்த்தெழுதலில் உரிமை கோரலாம் மற்றும் அவர்களை சிலஸ்டியல் ராஜ்யத்திற்குள் கொண்டு வரலாம், இந்த கோட்பாடு சபையால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது, மேலும் அவர்கள் திரண்டு செல்கின்றனர், சிலர் ஒரே நாளில் 16 முறை ஞானஸ்நானம் பெறப் போகிறார்கள்.”
வில்போர்ட் உட்ரப் பின்னர் இந்த கொள்கையைப்பற்றி கூறினார்: “நான் அதைக் கேள்விப்பட்ட தருணத்தில் என் ஆத்துமா மகிழ்ச்சியுடன் குதித்தது. … நான் சென்று, என்னால் நினைவுகொள்ள முடிந்த, என் மரித்த உறவினர்கள் அனைவருக்காகவும் ஞானஸ்நானம் பெற்றேன். … மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல் வந்தபோது அல்லேலுயா என்று நான் சொல்ல வேண்டுமென உணர்ந்தேன். பரலோக ஆசீர்வாதங்களில் சந்தோஷப்படுவதற்கு நமக்கு உரிமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.“
விலட் கிம்பல்
சகோதரி உட்ரப்பைப் போலவே, விலட் கிம்பலும் மரித்தவர்களுக்கு பதிலி ஞானஸ்நானம்பற்றி கேள்விப்பட்டார், அப்போது அவருடைய கணவர் ஹீபர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க சென்றிருந்தார். அவர் அவருக்கு எழுதினார்:
“தலைவர் ஸ்மித் ஒரு புதிய மற்றும் மகிமையான விஷயத்தைத் திறந்துள்ளார் … இது சபையில் மிகவும் எழுச்சி உண்டாக்கியுள்ளது. அதாவது, மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவது. ஒன்று கொரிந்தியர் 15வது அதிகாரம் 29வது வசனத்தில் இதுபற்றி பவுல் பேசுகிறான். ஜோசப் அதைப்பற்றி இன்னும் முழு விளக்கத்தை வெளிப்படுத்துதல் மூலம் பெற்றுள்ளார். … இந்த சுவிசேஷம் வெளிவருவதற்கு முன்பே மரித்த எல்லா உறவினர்களுக்கும் ஞானஸ்நானம் பெறுவது இந்த சபையோரின் சிலாக்கியம்; அவர்களின் கொள்ளு தாத்தா மற்றும் அம்மா வரைக்கும் கூட. … அவ்வாறு செய்வதன் மூலம், நாம் அவர்களுக்கு பிரதிநிதிகளாக செயல்படுகிறோம்; முதல் உயிர்த்தெழுதலில் வருவதற்கான சிலாக்கியத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்… ஆனால் ஆவிகள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுவது போன்ற எதுவும் இல்லை. … இந்த உத்தரவு இங்கு பிரசங்கிக்கப்பட்டதிலிருந்து, நீர் தொடர்ந்து கலக்கப்படுகிறது. மாநாட்டின் போது சில நேரங்களில் ஆற்றில் எட்டு முதல் பத்து மூப்பர்கள் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தனர். … நான் என் அம்மாவுக்காக ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன். நீங்கள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க நான் கணக்கிட்டேன், ஆனால் கடந்த முறை ஜோசப் இந்த விஷயத்தைப் பற்றி பேசியபோது, ஒவ்வொருவரும் இதைச் செய்து, மேலும் தங்களது நண்பர்களை முடிந்தவரை விரைவாக அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறிவுறுத்தினார். எனவே, இந்த வாரம் நான் செல்வேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அண்டை வீட்டார் பலர் செல்கிறார்கள். சிலர் ஏற்கனவே பல முறை ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். … இதனால் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது ஒரு மகிமையான கோட்பாடு அல்லவா?”
பெபி சேஸ்
நாவூ ஆலயத்தில் ஞானஸ்நான தொட்டி கட்டி முடிக்கப்பட்டதும், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் ஆற்றுக்குப் பதிலாக அங்கு கொடுக்கப்பட்டது. நாவூவில் வசிக்கும் பெபி சேஸ், ஆலயத்தைப்பற்றி தனது தாய்க்கு எழுதினார், ஞானஸ்நான தொட்டியை “நமது மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சீயோன் மலையில் இரட்சகராகக்கூடிய” இடம் என்று விவரித்தார். இந்த தொட்டியில், அவர் தொடர்ந்து விளக்கினார், “என் அன்பான தந்தை மற்றும் மரித்த என் நண்பர்கள் அனைவருக்காகவும் நான் ஞானஸ்நானம் பெற்றேன். … உங்கள் தந்தையின் மற்றும் தாயின் பெயர்கள் என்ன என்பதை இப்போது நான் அறிய விரும்புகிறேன், அதனால் நான் அவர்களை விடுவிக்க முடியும், ஏனென்றால் நான் மரித்தவர்களை விடுவிக்க விரும்புகிறேன். … கர்த்தர் மீண்டும் பேசினார், பண்டைய முறையை மறுஸ்தாபிதம் செய்தார்.“
சாலி ரண்டால்
முன்பு வாழ்ந்த மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், சாலி ரண்டால் தனது மகன் ஜார்ஜ் காலமானதை நினைவு கூர்ந்தார்:
“இது என்ன ஒரு கஷ்டமான நேரம், நான் சமரசம் செய்ய முடியாது என்று இன்னும் தெரிகிறது, ஆனால்… அவனுடைய தந்தை அவனுக்காக ஞானஸ்நானம் பெற்றார், இது ஒரு மகிமையான விஷயம் என்னவென்றால், சுவிசேஷத்தின் பூரணத்தை நாம் இப்போது பிரசங்கித்துள்ளதைப் போல நம்புகிறோம், பெறுகிறோம், மேலும் நம் மரித்த நண்பர்கள் அனைவருக்காகவும் ஞானஸ்நானம் பெறலாம், அவர்களைப்பற்றி நாம் அறிந்தவரை அவர்களை நம்மால் முடிந்தவரை இரட்சிக்கலாம்.
“தாத்தா, பாட்டி என எந்த வகையிலும் மரித்த நமது எல்லா இணைப்புகளின் பெயர்களையும் நீங்கள் எனக்கு எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது நண்பர்களைக் காப்பாற்ற என்னால் முடிந்ததைச் செய்ய நான் விரும்புகிறேன், உங்களில் சிலர் வந்து எனக்கு உதவி செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டும், அது தனியாகச் செய்வதற்கு ஒரு மிகப்பெரிய வேலை. … இது ஒரு விசித்திரமான கோட்பாடு என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் அது உண்மை என்று நீங்கள் காண்பீர்கள்.”